Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயிறு படுத்தும்பாடு

Featured Replies

டாக்டர். க.வெள்ளைச்சாமி RHMP., RSMP., செவ்வாய், 06 அக்டோபர் 2009 06:14

emailButton.png printButton.png pdf_button.png பயனாளர் தரப்படுத்தல்:rating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.png / 7

குறைந்தஅதி சிறந்த

குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஆண் - பெண் பாகுபாடின்றி அனைவரும் செரிமானக் கோளாறுகளுக்கு ஆட்படாமல் தப்பித்து இருக்க முடியாது. நாம் உண்ணும் உணவிலுள்ள மாவுச்சத்து, புரதச்சத்துக்களை பிரித்து இரத்தத்தில் சேர்ப்பதற்காக இரைப்பையில் சுரக்கும் அமிலநீர் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் சுரப்பதால் இரைப்பையில் உள்ள உணவு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாய் வழியாக மேல் நோக்கி எதுக்களித்து வருவதால் நெஞ்சுஎரிச்சல், புளித்தஏப்பம் ஏற்படுகிறது.

காரணம் :

உணவில் மசாலா மற்றும் காரமான, நறுமணமுள்ள உணவுப் பொருட்கள் அதிகளவில் சேர்ப்பதாலும், மிளகாய், ஊறுகாய், உணவின் சுவையை அதிகரிப்பதற்காக அதிகளவில் பயன்படுத்துவதாலும் இடைவிடாது புகைப்பதாலும், அதிக கவலை, மன அழுத்தம், மனஇறுக்கம் அதிக உணர்ச்சிவசப்படுவதாலும், அடிவயிறு அறுவை சிகிச்சையின் காரணமாக கிருமி தொற்று ஏற்படுவதாலும், ஆஸ்பிரின், கிருமி கொல்லி வலி நிவராணி மருந்து மாத்திரைகள் போன்றவைகளை நீண்ட காலம் உட் கொள்வதாலும், விருப்பமான உணவுகளை விருப்பமான நேரங்களிலெல்லாம் வயிறு புடைக்க சாப்பிடுவதாலும், மனிதன் உயிர்வாழ்வதற்காக உணவு சாப்பிடுவது என்பதற்கு பதிலாக உணவு சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ்வது என்ற கொள்கையில் உறுதியாய் உடையோர்கள் Fast food அதிகளவில் உண்போர்கள் வயிறு பசிக்காத நேரங்களில் கடிகார நேரப்படி உணவு விசயத்தில் தாரளமாய் நடந்து கொள்பவர்கள். பணம் செலவு செய்து தயார் செய்த உணவுகளை பயன்படுத்தியது போக மீதமுள்ள உணவுகளை கெட்டுப் போய்விட்டால் குப்பையில் கொட்ட வேண்டுமே என்று இரைப்பையை குப்பைத் தொட்டியாக ஆக்கி கொள்வதாலும், அஜீரணமும், இரைப்பை அழற்சியும், வாய்ப்புண்களும், an style="font-family:Latha;mso-bidi-language:TA" lang="TA">இரைப்பை, சிறுகுடல் புண்களும் ஏற்படும் இரத்தசோகை உள்ளவ ர்களுக்கு இயற்கையாகவே குடல்புண் வரும் வாய்ப்புக்கள் அதிகம்.

இரைப்பை அமிலநீர் சுரப்பின் ஆரம்ப அறிகுறிகள் (Primary Hyper Acidity):

உணவு உண்டவுடன் மேல் வயிற்று பகுதியில் மந்தமானதொரு நிலையான வலியேற்படுதல். அதிகளவு உணவு மற்றும் வேறு காரணங் களுக்காக உட்கொள்ளும் ஆங்கில மாத்திரை களாய் குமட்டலும், வாந்தியும் தோன்றுதல், நன்றாக சாப்பிட்டு வரும் காலங்களில் இடையிடையே பசிமந்தம் அல்லது பசி இல்லாத நிலை, புளித்த ஏப்பம். நெஞ்சுஎரிச்சல், சிறிது சாப்பிட்டாலும் வயிறு நிறைதல் அல்லது சாப்பிட்ட அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் சாப்பிட தோன்றுதல் வயிறு உப்புசம், வாயு தொந்தரவுகள், இரைப்பையிலிருந்து இரத்த வாந்தி அல்லது மலத்தில் ரத்தம் வருதல் மிகை அமிலச்சுரப்பு நீடித்தால் இரத்த சோகை ஏற்பட்டு முற்றிய நிலையை நோக்கி முன்னேறும். இந்நோயை குணப்படுத்தாமல் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் விட்டு விட்டால் இரைப்பையில் புண் உண்டாகி இரைப்பையில் துளையை ஏற்படுத்தி விடும்.

Secondary Hyper Acidity:

இந்நோய் இரண்டாவது நிலையை அடையும் போது உண்ட உணவு உணவுக்குழாய் வழியாகபுளிப்பு, எரிச்சலுடன் எதிர்த்து வருதல். இவ்வாறு எதிர்களித்து வருவதால் உணவுக் குழாயின் உட்புற தசைகள் சேதமடையும்.

அறிகுறிகள் :

நெஞ்சுஎரிச்சல் நடுமார்பின் அடிப்பகுதியில் பின்பகுதியில் ஏற்படும் எரிச்சல் வலி மேலேறிவரும் பெரும்பாலும் வலி உண்டபின் வரும் இரவுபடுத்தவுடன் வலி அவ்வப்போது தலைகாட்டுவதால் இரவுதூக்கத்தை கலைக்கும். மீண்டும் தூங்குவதற்கு சில மணி நேரங்கள் ஆகும். தூங்க முடியாமல் அவதிப்படுவார், தொடர்ந்து எதுக்களித்தல் இருப்பதால் தொண்டையில் புண் ஏற்படும். சிலருக்கு குனிந்தாலே எதிர்களிப்பு வாய்வரைவரும். தொடர்ந்து எதிர்களிப்பு இருப்பதால் தொண்டையில் சிறு பந்து அடைத்து கொண்டது போன்ற உணர்வு ஏற்படும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு நிறைய எதிர்களித்து வரும். இவர்களிடம் புகை பழக்க மிருந்தால் உடனே நிறுத்தி உண்ணும் உணவின் அளவை குறைக்க வேண்டும். சிறிது சாப்பிட் டாலும் எதிர்களிப்பு வரும் நபர்கள் மது, கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். முற்பகலிலும், மாலையிலும் கண்டிப்பாக சிற்றுணவு கூடாது. இது போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் குனிந்து செய்யும் வேலையை தவிர்க்க வேண்டும். தலையணையை சற்று உயரமாக 15 to 30 செ.மீ உயரமாக வைத்து படுக்கலாம்.

Dueodinal ulcer:

முன்சிறு குடலில் புண் இருந்தால் பசி நேரத்தில் வயிற்றில் வலியேற்படும். அப்போது ஏதாவது சாப்பிட்டால் வயிறு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். சாப்பிடாவிட்டால் முன் சிறுகுடலில் உற்பத்தியாகும் அமிலநீர் மேலேறி வந்து இரைப்பையை புண்ணாக்கும். எனவே இந்நோயாளிகள் பிஸ்கட், பழங்கள் கைவசம் எப்பொழுதும் வைத்திருப்பார்கள்.

இரைப்பைபுண் (Peptic ulcer) :

உண்ட உணவு இரைப்பையில் உள்ள புண்ணை தாக்கும் போது சாப்பிடமுடியாது. நாளுக்கு நாள் உடல் மெலியும், ஆரம்பநிலையில் எரிச்சல் இருக்கும். புண்ணாகிப் போனால் வலி ஏற்படும். சில சமயங்களில் இரைப்பையின் மேல்பாகத்தில் புண் ஏற்பட்டு வலி தோன்றும் போது இருதய வலியாக இருக்குமோ என்றும் தனக்கு மாரடைப்பு தோன்றிவிடுமோ என்ற பயம் நோயாளிக்கு தோன்றும் இச்சந்தேகங்களுக்குரிய பரிசோதனைகள் மூலம் விடை காண முடியும்.

நவீன மருத்துவம் என்று தனக்குதானே பெயர் சூட்டி மகிழ்ந்து கொள்ளும் ஆங்கிலம் மருத்துவ முறை செரிமானக் கோளாறுகளுக்கு உடனடி நிவாரணம் என்ற பெயரில் அமில முறிவு மருந்துகளால் தற்காலிக நிவாரணம் மட்டுமே வழங்க முடியும், கூடவே பக்கவிளைவுகளாக அதிக உணர்ச்சி வசப்படும் தன்மை, சின்ன விசயத்தையும் பெரிதாக்கும் அதிகப்படியான உணர்ச்சிகளை உடலளவிலும் மனதளவிலும் உருவாக்குவதோடு சில சமயங்களில் தற்கொலை எண்ணங்களும் தோன்றும். செரிமானக் கோளாறுகள், எதுக்களித் தல், நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகள் துவக்க நிலையிலே தென்படும்போது புகை, மது, நிறுத்திவிட்டு, அடிக்கடிமன அழுத்தம் ஏற்படாத வாறு பார்த்துக்கொண்டு தேவையற்ற ஆங்கிலம் மாத்திரைகளை தவிர்த்திட முயல வேண்டும்.

ஹோமியோபதி சிகிச்சை :

யோமியயோபதி மருத்துவ முறையில் நோய் வாய்ப்பட்டவரின் நோய்க்கான மூலக் காரணத்தை கண்டறிவதோடு. அச்சமயத்தில் நோயாளிக்கு ஏற்படும் மன உணர்ச்சிகளையும் கவனத்தில் கொண்டு முழுமனிதனையும் ஆய்வு செய்து மருந்து தேர்வு செய்யப்படுவதால் உடனடி நிவாரணமும் விரைவில் முழுநலமும் கிடைக்கும்.

1. ஆங்கில மாத்திரைகளால் வாயும், வயிறும் புண் ஏற்பட்டால் - போராக்ஸ்

2. அல்சர் வரும் உடல் வாகு உள்ளவர்களுக்கான மருந்து - யுரேனியம் நைட்.6.

3. அஜீரணம், பசியற்ற தன்மைகளுக்கு பொதுவான மருந்து அசைவ பிரியர்களுக்கும் ஏற்றது. - அல்லியம் சட்டிவம் 30.

4. புகைப்பதால் ஏற்படும் நெஞ்சுஎரிச்சல் - செபியா 30.

5. இரைப்பை புண், வாய்ப்புண், வாய் துர்நாற்றம் - காலிகுளோரிகம் 30.

6. இரைப்பையிலிருந்து வாய்வரை எதுக்களித்து பற்களில் கூச்சத்தை ஏற்படுத்துதல் - ரொபினியா 30.

7. வயிறு உப்புசம் கடுமையான வலி, இரைப்பை வேக்காடு ஜீரணம் ஆகாத உணவுப்பொருட்கள் வாந்தியாதல் - லாக்டிப்ளரோட்டம்

8. பசியின் போது வயிற்றில் கடிக்கும் தன்மையுடன் வலி ஏற்பட்டால்- அனகார்டியம்

9. பசியில்லாமல் வயிற்றில் கடிக்கும் தன்மையுடன் வலி ஏற்பட்டால்- நக்ஸ்வாமிகா

10. இரைப்பை புண்களுக்கான இடை மருந்தாகவும், புண் பெரியதாகிய நிலையில் இருந்தால் - ஆந்திராசினம் 1ங

11. .இரைப்பையிர் எரிச்சலுடன் பிசையும் வலி. சாப்பிடும் போது, பின்பும் குமட்டல் வாந்தி வலி சிறிய இடத்தில் மட்டும் இருக்கும் - காலிபைக்ரோமிகம்

12. வயிறு வலியினால் இரவில் விழித்துக் கொள்ளுதல் பித்தமோ, ஜீரணமாகாத உணவுப்பொருட்கள் வாந்தியாதல் குளிர்ந்த நீர் குடித்தால் வலி குறையும். - அர்ஜெண்டம்நைட்

13. உண்டபின் வயிற்றில் கனம், வலி, எரிச்சல், குளிர்ச்சியாக குடித்தால் ஒத்துக்கொள்வதில்லை - கல்கேரியா ஆர்ஸ்

14. உணவுக்குழாய் முழுவதும் எரிச்சல், வெந்நீரை ஊற்றி வெந்து போனது போலிருத்தல். இரைப்பையில் எரிச்சல், புளிப்பான, கசப்பான வாந்தி. - ஐரீஸ்வெர்சிகலர்

அல்சர் நீங்க அருமையான ஆலோசனைகள் :

 உணவில் ஜீரண சக்தியை தூண்டும் புதினா, கொத்தமல்லி சேர்க்க வேண்டும்

 இஞ்சியை தேனில் கலந்து ஊற வைத்து சாப்பிட்டால் ஜீரணம் சீரடையும் கல்லீரல் கோளாறுகள் சரியாகும். தினமும் உணவில் இஞ்சியை சேர்த்தால் செரிமானக் கோளாறுகள் வாரது.

 கடிகார நேரப்படி சாப்பிடுவதை தவிர்த்து பசித்து புசிப்பது சிறந்தது.

 சிறிதளவு உணவையும் 27 முறை மென்று கூழாக அரைத்து விழுங்குவது நல்லது.

 அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் தேங்காய் எண்ணைப் பயன்படுத்தி கொண்டால் விரைவில் குணம் பெறலாம்.

 துவர்ப்பு சுவையுள்ள வாழைப்பூ, நாவல்பழம் போன்றவை ஏதாவது ஒரு வடிவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 இறைச்சியும், மதுவும், அல்சருக்கு கொண்டாட்டம் உடலுக்கு திண்டாட்டம்.

 வறுத்த, பொரித்த உணவுகளும், இரவில் தோசையும் ஆகாது.

 வெயில் காலங்களில் இளநீர், மோர், பதநீர், தாகத்தை தணிக்கும் ஜீரணத்தை தூண்டும்.

 வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை குடித்து வெந்தயத்தை மென்று தின்ன வேண்டும்.

 அல்சருக்கு செவ்வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், சப்போட்டபழம், மாதுளையும் நல்லது.

 லெமன், அண்ணாச்சிப்பழம், பப்பாளி கூடவே கூடாது.

 மலச்சிக்கலும், மனசிக்கலும் தீர்க்கப்படவில்லை என்றால் குடலின் உட்சுவர்கள் பாதிப்புக்குள்ளாகும்.

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்

lg-share-en.gif



http://www.keetru.co...25:09&Itemid=85

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.