Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆச்சரியம் ஆனால் உண்மை ராஜபக்சவினருக்கு நன்றி

Featured Replies

ஆச்சரியம் ஆனால் உண்மை ராஜபக்சவினருக்கு நன்றி – குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்த தேசப்பிரிய:-

30 மார்ச் 2012

Mahintha%20brathers_CI.JPG

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இலங்கை மக்களுக்கு இருக்க வேண்டிய உரிமைகள் தொடர்பாக தனது பரிந்துரைகளில் எழுத்தியிருந்தது. தற்போது அந்த அறிக்கையின் பரிந்துரைகள் வீதிக்கு கொண்டு வரப்பட்டு, எரியூட்டப்பட்டுள்ளது. ஐயகோ என்றுக் கூறக் கூட எவருமில்லை.

கடந்த ஜனவரி 17 ஆம் திகதி கண்டி- யாழ்வீதியான ஏ.9 வீதியிலும், ஜனவரி 25 ஆம் திகதி கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு எதிரிலும், ராஜபக்ஷ அரசாங்கம், மக்கள் சக்திக்கு எதிராக தனது அரச சக்தியை இரண்டு முறை பயன்படுத்தியது.

ஜனவரி 17 ஆம் திகதி பலவந்தமாக காணாமல் போக செய்த சம்பவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவாறு பேரணியாக ஏ 9 வீதியில் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற, ஆயிரக்கணக்கான மக்களை தடுத்து நிறுத்தி, பொய்யான காரணங்களை கூறி, இராணுவத்தினர் தொடர்ந்தும் தடையேற்படுத்தினர்.

இவ்வாறான சம்பவம் குறித்து, இலங்கையில் முதல் முறையாக கேள்விப்பட நேர்ந்தது. மக்களின் எதிர்ப்புகளுக்கு இருக்கும் அச்சம் மாத்திரமல்ல, இப்படியான ஆர்ப்பாட்டங்களை அடக்க வெட்கம் இல்லை என்பதையும் ராஜபக்ஷ அரசாங்கம் வெளிப்படுத்தியது. யுத்தம் நடைபெற்ற காலத்தில், மக்களுடன் கோஷங்களை எழுப்பி, பாத யாத்திரை போன்றவற்று தலைமையேற்ற மகிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் நடக்கும் ஆட்சியில் இவ்வாறு நடைபெறுவதே ஆச்சரியமான விடயமாகும்.

முதலில் என்னை தேடி வரும் அழுத்தம் கொடுக்கும் நபர்கள் இரண்டவதாக உங்களை தேடி வரும் என மார்ட்டின் நிலோமர் எழுதியதை நிஜமாக்கும் வகையில், ஏ 9 வீதியில், செயற்படுத்தப்பட்ட அடக்குமுறை அடுத்த வாரத்தில், கொழும்பு நோக்கி நகர்ந்தது. ஊடக அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் நடத்தப்படவிருந்த கறுப்பு ஜனவரி எதிர்ப்பு நடவடிக்கைகளை அடக்கியததன் மூலம் அச்சம், குரோதம் என்பன முடியாதளவு கடுமையானது என ராஜபக்ஷ நிர்வாகம் வெளிகாட்டியது. ராஜபக்ஷ நிர்வாகம், கறுப்பு ஜனவரிக்கு எதிராக சட்டத்தையும், அடக்குமுறையையும், தமக்கு ஆதரவான ஊடகங்களையும் குறைவின்றி பயன்படுத்தியது.

என்றுமில்லாத வகையில், ஊடக சுதந்திரத்திற்காக ஆர்ப்பாட்டத்தை நிறுத்த, இந்த சந்தர்ப்பத்pல், நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையை கொழும்பு கோட்டை காவற்துறையினர் மேற்கொண்டிருந்தனர். தனக்கு வால்பிடிக்கும் சிலரை பயன்படுத்தி, அரச ஊடகங்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பாரிய பிரசாரங்களை மேற்கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளவர்களை அச்சுறுத்துவதற்காக அரசாங்க ஊடகங்கள் வாயிலாக விடுதலைப்புலிகள் என்ற பூச்சாண்டி காட்டப்பட்டது. இறுதியில், காவற்துறையினர் பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தை பல நிபந்தனைகளுக்குள் கொண்டு வந்து, நீதிமன்ற உத்தரவையும் பெற்றுக்கொண்டது.

அத்துடன் மாலை 3 மணிக்கு ஊடக அமைப்புகளின் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள பகுதிகளை ராஜபக்ஷவினர் குண்டர்கள் உட்பட அரசசார்பான ஆர்ப்பாட்டக்கார்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது, கறுப்பு ஜனவரி ஆர்ப்பாட்டத்தை தடுக்க நீதிமன்ற ஆணையை பெற்ற கோட்டை காவற்துறையினர், கல்லை விழுங்கியவர்களை போல் காணப்பட்டதுடன், அவர்கள் பெற்ற நீதிமன்ற ஆணை குப்பைக் கூடையில் எறிந்திருந்தனர்.

இந்த கறுப்பு ஜனவரி போராட்டத்தில் முன்னோடியாக இருந்த சுதந்திர ஊடக அமைப்பின் 20 வருட வரலாற்றில், எப்போது, இவ்வாறான தடைகளை அந்த அமைப்பு எதிர்க்கொண்டிருக்கவில்லை. ராஜபக்ஷவினரால், சுதந்திரம் மற்றும் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக கூறும் இன்று மாத்திரமல்ல, இதனை விட மிகவும் நெருக்கடிகள் இருந்த காலத்தில், சுதந்திர ஊடக அமைப்பு பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தது. அப்போது நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கலந்துக்கொள்வதற்காக மகிந்த ராஜபக்ஷவும் வந்திருந்தார். எனினும் இப்படியான துஷ்டத்தனமாக அடக்குமுறைகள் அந்த சந்தர்ப்பங்களில் ஏற்படவில்லை. ஆச்சரியம் ஆனாலும் உண்மை.

எனினும் ஆர்ப்பாட்டங்களை அடக்கும் தேவையானது, தர்க்க ரீதியாகவும் அத்தியவசியமாகவும் இல்லாத இந்த நிலைமையில் கீழ், அரச பலத்தை பயன்படுத்தி, அமைதியான மக்களின் செயற்பாடுகளை அடக்கும் செயற்பாடுகளை தற்போதைய மகிந்த ராஜபக்ஷ அரசு மேற்கொண்டு வருகிறது.

முதலாவதாக யுத்தம் முடிவடைந்து, மூன்று வருடங்கள் கழிந்துள்ளது. கடந்த மூன்று வருடங்களில், நாட்டில், எந்த ஆயுத போராட்ட அரசியல் செயற்பாடுகளுமோ, அவ்வாறான அமைப்புகளோ, ஏற்படவில்லை என்பதுடன், நாட்டில் குழப்பமான சூழ்நிலைகளும் காணப்படவில்லை. இரண்டாவதாக போர் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால், நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு, இவ்வாறான அடக்குமுறைகளுக்கு இடமளிக்க கூடாது என வேறு வார்த்தைகளில் மிகவும் தெளிவாக பரிந்துரை செய்திருந்தது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்ட போது, இலங்கையில் உள்ள நபர்களின் நிர்வாகத்திற்கு பதிலாக, சட்டத்தின் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அறிக்கையின் பரிந்துரை கவர்ச்சிகரமான பத்திரிகைகளின் ஆசிரியர் தலையங்களாக ஒரே இரவில் மாறியது. ஆணைக்குழுவினால், இலங்கை அரசியலில் மறுசீரமைப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பான பரிந்துரைகளை பலர் வர்ணித்திருந்தனர். நாட்டின் மனித உரிமை துறையில் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில், அவர்கள் இருந்தனர். காவற்துறையை சுதந்திரமான நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற ஆணைக்குழுவின் பரிந்துரை இவ்வாறான கவரும் தன்மையை கொண்டிருந்தது. வடக்கு கிழக்கில் இராணுவமயப்படுத்தலை நிறுத்த வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

மற்றுமொரு முக்கியமான பரிந்துரையாக, ஊடகங்களின் சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்குமாறும், ஊடகவியலாளர் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பல்வேறு வகையான தாக்குதல் சம்பவங்கள் வினைத்திறனான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் தெரிவித்திருந்தது. இவ்வாறான விசாரணைகளை நடத்துமாறு வீதியில் இறங்கி போராடிய ஊடக சுதந்திர சக்திகளை ராஜபக்ஷ அரசாங்கம் தூரத்தி துரத்தி அடித்தது.

இலங்கை அரசியல் கலாசாரத்தில், கரும்புள்ளியாக மாறியுள்ள, பலவந்தமாக காணாமல் போக செய்தல் என்ற விடயமும் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டிருந்தது. காணாமல் போகும் சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக விசேட ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது. அவ்வாறில்லாது போனால், கடத்தல்கள், காணாமல் போகும் சம்பவங்களுக்கு முடிவிருக்காது. இவ்வாறான முக்கியமான பரிந்துரைகள் அந்த அறிக்கையில் நிறைந்திருந்தன.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட நவம்பர் 19 ஆம் திகதி முதல், இன்று வரை இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயும் எவருக்கும், அந்த அறிக்கையை இலங்கையின் ஆட்சியாளர்கள் ஒரு சதத்திற்கு கூட கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்பது புலப்படும். இதனை வெளிகாட்டி நிற்கும் பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. அதில், அரச அதிகாரத்தை பயன்படுத்தி ஆர்ப்பாட்டங்களை அடக்குவது முதன்மை பெறுகிறது.

கடந்த பல வருடங்களாக இலங்கையின் ஊடகங்கள் அனுபவித்து வருவது, அரசங்கத்தின் தணிக்கை, அடக்குமுறை என்பவற்றை மாத்திரமல்ல. அரசசார்பானவர்களின் விலை கொடுத்து வாங்கும் ஆபத்தையும் தான். இது மூன்று வகையான தாக்குதல்களாகும். இந்த தாக்குதல்களை ஒன்றாக வைத்து பார்போமேயானால், ஊடக அடக்குமுறையின் மாதம் ஜனவரி என்பது புலனாகும். இந்த வருடம் ஜனவரி மாதம் ராஜபக்ஷ நிர்வாகத்தினால், இலங்கை மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அமைதிக்கும் விரிக்கப்பட்ட கறுப்புக்கொடி காரணமாக கறுப்பு ஜனவரி மேலும் கறுப்படைய செய்துள்ளது.

இதுவரை காலமும், அரச சட்டம் பாயாது இருந்த இணையத்தளங்கள் மீது ஜனவரி மாதம் சட்டம் பாய்ந்தது. இதன் மூலம் 30 இணையத்தளங்கள் தடைசெய்யப்படடன. யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஆர்ப்பாட்டக்கார்களின் கருத்து சுதந்திரத்தை பறித்து, கறுப்பு ஜனவரிக்கு செய்யப்பட்ட தடையானது கறுப்பு ஜனவரின் ஊடக உடக்குமுறை பட்டியலில் இணைந்து கொண்டது. அத்துடன் அரச ஊடகங்களை பயன்படுத்தி சுதந்திர ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் கறுப்பு ஜனவரியின் பட்டியலில் இணைந்து கொண்டது. அத்துடன் அரச வர்த்தகரினால், லீடர் பத்திரிகையும் ஜனவரியிலேயே கொள்வனவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. தமிழ் மொழியில் வார ஏடுகள் பலவற்றை வெளியிட்டு வரும் விழுது என்ற மனித உரிமை அமைப்பின் பிரதான அலுவலகத்திற்குள் நுழைந்து, ஆவணங்கள் கடந்த ஜனவரியிலேயே பரிசோதிக்கப்பட்டன. இந்த அலுவலகம், நான்கு தூதரங்களுக்கு அருகில் இயங்கி வருகிறது. அரசாங்கத்தின் அணுசரனையின்றி எவரும் அவ்வாறான காரியத்தை செய்ய முடியாது. அரச ஆதரவின்றி, அவ்வாறு செய்க் கூடிய வன்முறை குழுக்கள் இருக்கின்றனவா?.

நல்லிணக்க ஆணைக்குழுவினால், காணாமல் போகும் சம்பவங்களை ஆராய விசேட ஆணையாளர் நியமிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தின் மொழிபெயர்ப்பாளர் சத்தியசீலன் பாக்கியராஜா கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி திருகோணமலையில் வைத்து கடத்திச் செல்லப்பட்டார். ஜனவரி முதலாம் திகதி முதல் 4 ஆம் திகதி அனைத்து தினங்களில், தலா ஒருவர் கடத்தப்பட்டார். ஜனவரி 7 ஆம் திகதி அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் தொடர்புடைய டொனாட் என்பவர் கடத்தப்பட்டார். அத்துடன் எம்பிலிப்பிட்டியவில் 23 மாணவர்கள் காணாமல் சம்பவத்தை நினைவுக் கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தூபி, நகர அலங்காரம் என்ற பெயரில் ராஜபக்ஷவினரால், கடந்த ஜனவரி மாதமே அகற்றப்பட்டது. இதுவும் கறுப்பு ஜனவரியின் வடு.

நபர்களின் நிர்வாகத்திற்கு பதிலாக சட்டத்தின் நிர்வாகத்தை ஏற்படுத்துமாறு நல்லிணக்க ஆணைக்குழு கூறியுள்ள நிலையில், அரசாங்கத்தின் சிங்கள பத்திரிகை, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால், பாதிக்கும் மேற்பட்ட பாதாள உலக குழுவினர் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. எனினும் இந்த அழிப்புக்காக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து அறிய கிடைக்கவில்லை.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, சுயாதீன ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வர வேண்டும் என பரிந்துரை காலற்துறையினர், என்றுமில்லாத வகையில், ஊடக ஆர்ப்பாட்டங்களை தடைசெய்ய நீதிமன்றத்திற்கு சென்றது. அத்துடன், ராஜபக்ஷவினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களை கைகட்டி வேடிக்கை பார்த்தது, லக்ஷமன் பிரேமச்சந்திரவின் கொலையில் பெயர் குறிப்பிடப்படும் காவற்துறை அத்தியட்சகர் ஒருவருக்கு, ஜனவரி மாதமே, பதவி உயர்வு வழங்கப்பட்டது.

நல்லிணக்க ஆணைக்குழு, தகவல் அறியும் சுதந்திரத்தை உறுதிப்பத்துமாறு கேட்டுக்கொண்டது. எனினும் ஆயிரக்கணக்கான உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் பரீட்சைகள் தொடர்பாக நடந்த குளறுப்படி குறித்து விசாரணை நடத்தப்பட்டு கையளிக்கப்பட்ட அறிக்கை, இன்னும் ஜனாதிபதியின் பெட்டியிலேயே உள்ளது. அதனை வெளியிடுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியுள்ளது.

இந்த பட்டியல் இன்னும் நீளமானது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வீதிக்கு கொண்டு வரப்பட முன்னர், எரிக்கப்பட்டமை இந்த பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியது. அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்கள் வழங்கும் பரிந்துரைகளை நிறைவேற்றாதில், இலங்கை சாதனை படைத்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு கிடைக்கும் இடத்தை செயற்பாட்டு ரீதியாக மிக விரைவில், வெளிகாட்டியதற்காக ராஜபக்ஷ நிர்வாகத்தினருக்கு நன்றிக் கூறவேண்டும்.

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக சுனந்த தேசப்பிரிய:-

ஏமாற்ற நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள். இவ்வளவுதான் சொல்லலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.