Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவா தீர்மானம் - இலங்கை அரசாங்கம் அச்சமடைந்து, பாதிப்பான மனநிலையில் இருக்கிறது – சம்பந்தன்

Featured Replies

ஜெனிவா, ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்பட்ட யோசனை காரணமாக இலங்கை அரசாங்கம் அச்சமடைந்து, பாதிப்பான மனநிலையில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜெனிவா யோசனை தொடர்பில், அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் ஒரு நிலைப்பாடின்றி, அவசரமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அரசாங்கம், தமக்கு வழங்கிய, உறுதிமொழிகளை நிறைவேற்றினால், தமது கட்சி எதிர்காலத்தில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு பற்றுவது குறித்து தீர்மானிக்கும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/75606/language/ta-IN/article.aspx

அது நல்ல அறிகுறி இல்லையே சம்பந்தர் ஐயா. நீங்கள் எந்த பக்கம்?

நீர் நல்லவரா..........?

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ....அய்யாவின் கதையை பார்க்க பயமாகக் கிடக்கு...கடைசி னேரத்திலை ..சட்டி உடைத்தாலும் உடைதிடுவர் போலகிடக்கு.....

இதுவரை கூட்டமைப்பு வெளிப்படையாக பிழைகளை விடவில்லை, ஆனால், அவர்கள் தாயக மக்களுக்காக இன்னும் கூடுதலாக செய்யலாம். குறிப்பாக இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்தலாம். மேலும், தமிழக தலைவர்களுடன் நெருக்கத்தை வளர்க்கவேண்டும்.

ஒரு முறை அமெரிக்காவில் வெள்ளத்தினால் உணவு திண்டாட்டம் ஏற்பட்ட போது அமெரிக்க கடைகள் பல சூறையாடப்பட்டன, பொருள்களை அள்ளிச் சென்றவர்கள் பற்றிய பல்வேறு ஊடக செய்திகள் படங்களுடன் வெளியாகி இருந்தனவாம், அதில் வெள்ளையர்கள் அள்ளிச் சென்றதைப் பற்றிய செய்திகளில் "உணவுக்காக பொருள்களை எடுத்துச் சென்றனர்" என்றும் கருப்பர்கள் அள்ளிச் சென்றது பற்றிய படச் செய்திகளில் "உணவுக்காக பொருள்களைச் திருடிச் சென்றனர்" என்றும் வெளியாகி இருந்தனவாம்.

நம்மை அளிக்க நினைக்கும் எதிரிகளும் துரோகிகளுக்கும் இருக்கும் ஒற்றுமை கூட அழிவை சந்தித்து கொண்டு இருக்கும் எமக்குள் இல்லையே

எதிர்த்து நிற்கும் எம்மோடு என்று எம்மினம் ஒன்றாக எழுந்து நிற்குமோ அன்று எம்தேசமும் எம்மினமும்

அவலங்கள் இல்லாத விடியலை காணும்::::

இதுவரை கூட்டமைப்பு வெளிப்படையாக பிழைகளை விடவில்லை, ஆனால், அவர்கள் தாயக மக்களுக்காக இன்னும் கூடுதலாக செய்யலாம். குறிப்பாக இந்தியாவுடனான உறவுகளை பலப்படுத்தலாம். மேலும், தமிழக தலைவர்களுடன் நெருக்கத்தை வளர்க்கவேண்டும்.

ஜெனிவா யோசனை தொடர்பில், அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் ஒரு நிலைப்பாடின்றி, அவசரமாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இது அரசாங்கத்தின் குழப்பத்தைக்காட்டவில்லை. இது அவர்கள் எப்போதுமே செய்துவந்த தந்திர நடவடிக்கை. இதை சம்பந்தர் பேச்சுவார்தையை முன்னெடுக்க தூண்ட பாவிக்க கூடாது.

அரசாங்கம் உண்மையில் கவலைப்படுகிறதென்றால் இதை தானே செய்ய வேண்டும்.

அரசாங்கம், தமக்கு வழங்கிய, உறுதிமொழிகளை நிறைவேற்றினால், தமது கட்சி எதிர்காலத்தில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கு பற்றுவது குறித்து தீர்மானிக்கும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அப்போதுமட்டும்தான் சம்பந்தர் பேரம் பேசமுடியும். இனிமேலைய காலத்தில் அரசாங்கத்தை பேச்சுக்கு வலிய இழுத்து எதையாவது அரைகுறையாக வாங்கி வந்து பிரேரணையை தோற்கடிக்க பண்ணக்கூடாது. அரசாங்கம் சமாதானமான தீர்வை பிரேரணைக்கு முன் வைத்திருக்க வேண்டும். சம்பந்தர் பிரேரணை வெல்ல மட்டும்தான் இனி வேலை செய்ய வேண்டும். அரசாங்கத்தை நோகவிடாமைல் இருக்கத்தக்கதாக கதைக்க கூடாது. பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்தால் நிபந்தனைகளுடந்தான் பங்குபற்ற வேண்டும். நோர்வே புலிகள் தோற்கும் போது கூறிய வாசகம். " தோற்பவர்கள் நிபந்தனை இன்றி சமாதானத்திற்கு போகவேண்டும். வெல்பவர்கள் நிபந்தனை விதிப்பார்கள். அதை தடுக்க முடியாது"

இந்த வசனம் உண்மையில் சம்பந்தரால் கூறப்பட்டதாயின் அது தவறு. இது அசாங்கத்தின் மீது மற்றவர்களை கருணை காட்டி உதவி செய்ய தூண்டும் வசனம்.

ஜெனிவா, ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவினால் நிறைவேற்றப்பட்ட யோசனை காரணமாக இலங்கை அரசாங்கம் அச்சமடைந்து, பாதிப்பான மனநிலையில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு பிழைகள் விடவில்லை என்பது உண்மையாக இருக்கலாம்.எதுவும் செய்ய இல்லாததால் கூட்டமைப்பு அங்கத்தவர்கள் விரக்தியின் விளிம்பில் இருக்கிறர்கள். அவர்கள் முன் சென்று செயலாற்ற திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். சுமந்திரனால் கட்சி உடைவதை அவரை உள்ளே கொண்டுவந்த சம்பந்தர் முன்னின்று தடுக்க வேண்டும்.

அதனாலேதான் எனது முதல் கருத்தை இப்படி எழுதினேன்.

அது நல்ல அறிகுறி இல்லையே சம்பந்தர் ஐயா. நீங்கள் எந்த பக்கம்?

நீர் நல்லவரா..........?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.