Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன அழிப்பின் சூத்திரதாரிகள் யார்?

Featured Replies

இன அழிப்பின் சூத்திரதாரிகள் யார்?

ஆக்கம்: பண்டாரவன்னியன்

தமிழனை தமிழ் இனத்தை அழிப்பதற்கு அல்லது அந்த இனத்தை அடக்கி ஒடுக்குவதற்கு வெளியிலிருந்து யாரும் எதுவும் செய்யத் தேவையில்லை. இந்தக் கைங்கரியத்தை தமிழர்கள் தாங்களே செய்து கொள்வார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளல்லர் என்ற குரல் முன்பு வடக்கில் கேட்டது. பின்னர் கொழும்பிலிருந்தது. தொடர்ந்து கிழக்கிலும் பரவியது. இப்போது உலக நாடுகளிலும் ஆட்சியாளர்களினாலும் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

இப்பொழுது இலங்கையின் இனப்பிரச்சினை இலங்கைக்குள் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில் இது உலகப் பிரச்சினையாக மாறிவிட்டது. 2005இல் 22 தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோது தமிழ் பிரதிநிதிகளாக ஏற்க மறுத்த அரசு, இன்று 14 ஆசனங்களாக குறைக்கப்பட்ட போது தமிழர் பிரதிநிதிகளாக ஏற்று நிற்கின்றது. இதன் மூலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு எவ்வாறான காய்நகர்த்தல்களை மேற்கொள்ள முடியும் என்பதில் அரசு தெளிவாயிருக்கின்றது. அவற்றில் ஒன்றாக தமிழர்கள் தமக்குள்ளேயே முட்டிமோதிக் கொள்வார்கள். இதனால் பிரச்சினை சுலபமாகிவிடும் எனக் கருதுவதும் ஒன்றாக இருக்கலாம்.

இலங்கை சுதந்திரமடைந்து இன்றுவரை தமிழருக்கு உரிமைகள் வழங்கப்படவில்லை. அதற்கு இன்றைய ஜனாதிபதியவர்களும் விதிவிலக்கல்ல. விடுதலைப் புலிகளை அழித்ததாகக் கூறிவரும் அரசு மட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஏகப் பிரதிநிதிகளாக கூறிவருவதுடன் அவர்களுடன் மட்டுமே பேச்சுகளை நடத்தி வருகின்றது. இது ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் திரும்பி வரமாட்டர் என்பது போல ஆண்டாண்டு காலமாக ஆட்சி மாறினாலும் தமிழனுக்கு ஆட்சியாளர் ஏதும் வழங்கமாட்டார்கள் என்பது வரலாறு.

இலங்கை அரசு, அமெரிக்கா, தமிழ்நாட்டிற்கு எதிரான கருத்துகளையும் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக கருத்துத் தெவிக்காமையானது இலங்கை அரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு இடையிலான நல்லுறவை வெளிப்படுத்துகின்றது.

தற்போது சர்வதேசத்திற்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்திய மத்திய அரசு என்றுமே தமிழருக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதில் கபடத்தனமாகவே செயற்பட்டு வருகின்றது.

இலங்கை அரசிற்கு இந்த யுத்தத்தை செப்பனிட்டு, வழிநடத்தி, செதுக்கி வெற்றியை இந்திய அரசே ஈட்டியிருந்ததாக இலங்கையின் பிரதான அமைச்சர்கள் தற்போது கூறி வருகின்றனர். தமிழின அழிப்பை மேற்கொள்ள இந்தியா பங்காளியாக இருந்துள்ளது என்ற உண்மை கசியத் தொடங்கிய நிலையில் இதை மறைத்து விட இந்தியா பல உதவிகளை இலங்கையில் மேற்கொண்டு வருகின்றது. இது இன்று தமிழர்களுக்கு புரிந்துள்ளது.

ஜெனீவா தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாடும் இலங்கை அரசு மட்டுமே குற்றவாளியாக்கப்பட்டமையினாலும் குமுறுகின்ற இலங்கை அரசு யுத்தத்தினுடைய, இன அழிப்பினுடைய பங்குதாரர்களை தற்போது அறிமுகம் செய்து வருகின்றது. அண்ணன், தம்பியைக் காட்டிக் கொடுத்தான் என குமுறுகிறார்கள் என்றால் யுத்தத்தில் உறவுகள் பேணப்பட்டுள்ளன. இந்திய மத்திய அரசையும் இலங்கை அரசினையும் சிக்கலுக்குள் மாட்டிவிட்டு அவற்றை தமிழின அழிப்புக்கு பொறுப்புக் கூற வைத்த பெருமை தமிழக மக்களுக்கும் தமிழகக் கட்சிகளையுமே சார்ந்ததாகும்.

தமிழர்களுக்கு இடையிலான இந்த தொப்புள் கொடி உறவைப் பிரித்தெடுப்பதற்காகவே இலங்கை அரசு முயற்சிக்கின்றது. இதன் வடிவங்களில் ஒன்றாகவே கூட்டமைப்பைச் சேர்ந்தோர் “எமது பிரச்சினையை நாமே பார்த்துக் கொள்ளுகின்றோம், யாரும் தலையிட வேண்டாம்” என்ற தொனிப் பொருளில் கூறுகின்றனர். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை மிகவும் புகழ்ந்து கூறுகின்றனர். சர்வதேச விசாரணை தேவையில்லை என்ற விடயத்தினைத் தவிர, அற்புதமான பல விடயங்கள் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் இருப்பதாகக் கூட்டமைப்பின் சார்பில் கூறப்படுகின்றது.

நிபுணர் குழு அறிக்கையினை திசை திருப்புவதற்காகவே நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை அரசினால் தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்ற கூட்டமைப்பினர் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் மிகப்பிரயோசனமான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.

இதேவேளை, இறுதியாக உள்ளக சுய நிர்ணய உரிமை தொடர்பிலான தீர்மானத்தின் அடிப்படையிலேயே தீர்வினை வலியுறுத்த வேண்டும் என்பதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். ஒரு நாடு இரு தேசம் என்ற கோரிக்கையினை முன் வைத்த ஒரு கட்சியினை மக்கள் புறக்கணித்ததாகவும் அவர்களால் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக்கொள்ள வில்லை என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைச் சுட்டிக்காட்டி கூட்டமைப்பினர் கருத்து வெளியிட்டிருக்கின்றனர். அதனைவிடவும் உள்ளக சுயநிர்ணய உரிமை ஊடான தீர்வு எட்டப்படத் தவறினால் வெளியக சுயநிர்ணய உரிமையினை நோக்கி நகர்ந்து கருத்துக்கணிப்பு ஒன்றின் ஊடாகவே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கான பணியினையும் நாங்கள் தான் செய்ய வேண்டும். அதற்கான வேலைகளை யாரும் செய்து தரமுடியாது என்றும் கூட்டமைப்பின் சார்பில் கூறப்படுகின்றது. தற்போது மனித உரிமைகள் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினையும் நீங்கள் தானே செய்திருக்க வேண்டும். அவ்வாறு என்னதான் செய்தீர்கள். இவ்வாறு செய்வதற்காக ஜெனீவா செல்வதாக இருந்தால் இனக்கலவரம் வெடிக்கும் என அஞ்சிய நீங்கள் தீர்வு பெற்றுத் தருவதற்கு சர்வஜன வாக்கெடுப்பிற்காக சர்வதேசத்தினை நாடும் போது சிங்களச் சகோதரர்கள் உங்களுக்கு செங்கம்பளம் விரிப்பார்களா?

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்களிப்பு எந்தவகையில் அமைந்திருக்கின்றது என்பதை விளக்கமாக கூட்டமைப்புபுரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கின்றது. ஒன்று கொள்கை அடிப்படையில் வாக்களிப்பது, மற்றையது உணர்வின் அடிப்படையில் வாக்களிப்பது. இங்கு உணர்வின் அடிப்படையில் வாக்களிக்கும் வீதம் தான் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் நிலைப்பாடாக இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும் என்ற நிலைப்பாடு தமிழ் மக்களிடம் இருந்ததே தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் உரிமையினை மீட்டுத்தரப் போகின்றது என்ற எண்ணப் பாட்டில் வாக்களிக்கவில்லை. அதனை விடவும் கூட்டமைப்பு சமர்ப்பித்த உள்ள சுயநிர்ணயம் தொடர்பிலான தீர்வினை உள்ளடக்கிய தேர்தல் விஞ்ஞாபனத்தை உட்கார்ந்து, வாசித்து, பகுத்தறிந்து, சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து வாக்களிக்கவும் இல்லை.

ஒரு நாடு இரு தேசம் என்ற விடயத்தினை தமிழ் மக்கள் புறக்கணிப்பதாகத் தெரிவிக்கின்ற கூட்டமைப்பினர் இன்னொரு ஆபத்தான விடயத்தினையும் வெளிப்படுத்தி நிற்கின்றனர்.

இனிவருகின்ற நெருக்கமான காலப்பகுதி ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுத் தருவதற்கான உந்துதலான காலப் பகுதியாக அமையவிருக்கின்றது.

இந்நிலையில் தீர்வினை வழங்குகின்ற அரசு, தீர்வினைப் பெற்றுக்கொள்பவர்கள் கேட்கின்ற தீர்வில் இருந்து முடிந்தவரையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவான தீர்வினையே வழங்குவதற்கான முயற்சியினை மேற்கொள்ளும் என்பது அனைவரும் விளங்கிக்கொள்ளக் கூடிய விடயமாகும்.

இந்நிலையில் அதிகாரம் கூடிய தீர்வினை முன் வைத்து அதனைத் தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறுவதுபோல் புகழாங்கிதம் அடைந்து கூறுவது சில தமிழ் அரசியல்வாதிகளுக்கு பாரிய இனிப்பான செய்தியாக இருக்கலாம். ஆனால், சிந்திய உயிர்கள் தியாகங்களை எல்லாவற்றுக்கும் சேர்த்து சவப்பெட்டி அடிக்கின்ற நடவடிக்கையாகத் தான் அது அமையும்.

அண்மையில் தென்னிலங்கை தொலைக்காட்சியொன்றிற்கு கருத்துத் தெரிவித்திருந்த கூட்டமைப்பு எம்.பி.ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் எனவும் தெரிவித்திருந்தார். யுத்தத்தின்போது பெரும்பாலான பொதுமக்களை புலிகளே சுட்டுக் கொன்றனர் என கொழும்பில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அந்த அரசியல்வாதி தெவித்துள்ளார்.

புலிகளை நாங்கள் ஒரு போதும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதி யுத்தத்தின்போது புலிகளும், இராணுவமும் பொது மக்களைக் சுட்டுக் கொன்றனர். இராணுவத்தின் மீதும் போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட்டால் விடுதலைப் புலிகள் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். இரு தரப்பும் போர்க்குற்றங்களை புரிந்தனர். எனவே போர்க்குற்ற விசாரணை வேண்டும் எனக் கோருவதில் அர்த்தம் இல்லை என்றும் தமிழ் அரசியல்வாதி ஒருவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக ஒலித்துக் கொண்டிருப்பதை தடுத்து விடுமோ என்று தமிழ் மக்களின் மீது அக்கறை கொண்ட புத்திஜீவிகளும் தமிழ் தேசிய உணர்வு கொண்ட ஆர்வலர்களும் தமிழரின் விடுதலைக்கான தமது உயிரை அர்பணித்த இளைஞர், யுவதிகளும் கலங்குகிறார்கள். இவர்களும் இப்படி மாறிவிட்டால் அன்னையர் மடிதனில் பற்றி எரியும் தீயினை அணைப்பது யார்?

மூலம்: வீரகேசரி – சித்திரை 1, 2012

பிரசுரித்த நாள்: Apr 02, 2012 16:36:36 GMT

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்சி கொங்கிரஸ், சிங்கள்ள  மொட்டை கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனும், இந்தியனும்.

இந்தியன் ஒழுங்காய் இருந்திருந்தால்.... சிங்களவன், வாலைச் சுருட்டிக் கொண்டிருந்திருப்பான். ஒரு, அழிவும் நடந்திருக்காது.

மாமா... வேலை, பாக்கப் போனதாலை..., மூக்கறுபட்டுக் கிடக்குது இந்தியா.

532298_2916933528751_1423116401_32358009_697150731_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

சின்ன குழந்தைக்கு கூட தெரியும் இந்தியாதான் குறிப்பாக சோனியா காந்தி என்று கூறுவார்கள்.

மிக கவனமாக எழுதப்பட்ட ஆக்கம். இருக்கிற பிளவெல்லாவறையும் சரியா பயன் படுத்துகிறது.

இந்தியா- தமிழ்நாடு.

இந்தியா-ஈழத்தவர்.

இலங்கைக்கு புதிதாக ஏற்பட்ட இந்தியா மீதான கோபம்.

கூட்டமைப்பு- கஜேந்திரன்

ஈழத்தவர்- சுமந்திரன்.

இருந்தாலும் ஆசியர் தான் யார் என்பதை இதில் கூறிவிட்டார்.

ஒரு நாடு இரு தேசம் என்ற விடயத்தினை தமிழ் மக்கள் புறக்கணிப்பதாகத் தெரிவிக்கின்ற கூட்டமைப்பினர் இன்னொரு ஆபத்தான விடயத்தினையும் வெளிப்படுத்தி நிற்கின்றனர்.இனிவருகின்ற நெருக்கமான காலப்பகுதி ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுத் தருவதற்கான உந்துதலான காலப் பகுதியாக அமையவிருக்கின்றது.இந்நிலையில் தீர்வினை வழங்குகின்ற அரசு, தீர்வினைப் பெற்றுக்கொள்பவர்கள் கேட்கின்ற தீர்வில் இருந்து முடிந்தவரையில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவான தீர்வினையே வழங்குவதற்கான முயற்சியினை மேற்கொள்ளும் என்பது அனைவரும் விளங்கிக்கொள்ளக் கூடிய விடயமாகும்.இந்நிலையில் அதிகாரம் கூடிய தீர்வினை முன் வைத்து அதனைத் தமிழ் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறுவதுபோல் புகழாங்கிதம் அடைந்து கூறுவது சில தமிழ் அரசியல்வாதிகளுக்கு பாரிய இனிப்பான செய்தியாக இருக்கலாம். ஆனால், சிந்திய உயிர்கள் தியாகங்களை எல்லாவற்றுக்கும் சேர்த்து சவப்பெட்டி அடிக்கின்ற நடவடிக்கையாகத் தான் அது அமையும்.

இவரிடமோ அல்லது இவர் சேவகம் செய்யும் அரசிடமோ நாம் தீர்வுக்கு செல்லவில்லை. தீர்வு நாம் இப்போது பேச விரும்புவது சரவதேச அமைபுக்களிடம் நமது போராட்டத்தை இப்படி ஏமாற்றுக்களினால் இனி மூட முடியாது. சூத்திரதாரிகள் இப்படி முழுமை இல்லாத எழுத்தாளர்கள்தான். வேறுயாருமில்லை.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.