Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜே.வி.பி. மாற்றுக்குழுவின் தலைவர் பிரேம்குமார் குணரட்னம் கைது

Featured Replies

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த குழுவின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் மற்றும் ஜே.வி.பி. அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஜே.வி.பி. மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியுமான திமுது ஆட்டிகல ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரேம்குமார் குணரட்னம் கிரிபத்கொடையில் வைத்தும், திமுத்து ஆட்டிகல தலவத்துகொடயில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக முற்போக்கு சோசலிசக் கட்சியின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஜனக சுதார தெரிவித்தார். இது தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது இக்கைது குறித்து தமக்குத் தெரியாது எனக் கூறினர்.

பிரேம்குமார் குணரட்னம் தலைமையிலான ஜே.வி.பி மாற்றுக்குழுவினர் மக்கள் பேராட்ட இயக்கத்தையும் முற்போக்கு சோசலிசக் கட்சியையும் ஸ்தாபித்தனர். அதேவேளை திமுத்து ஆட்டிகல, சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் எனும் புதிய அமைப்பின் தலைவியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://akkinikkunchu.com/new/index.php

'மக்கள் போராட்டக்குழு தலைவர்கள் கடத்தப்பட்டனர்'

இலங்கையில் ஜேவிபி கட்சியிலிருந்து பிரிந்து நான்கு மாதங்களுக்கு முன்னர் மக்கள் போராட்ட இயக்கம் என்ற குழுவை ஆரம்பித்த பிரேமகுமார் குணரட்ணம் என்பவரும் அந்த அமைப்பின் மகளிர் பிரிவு தலைவியான திமுது ஆட்டிகல என்பவரும் காணாமல்போயிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்று அந்த இயக்கத்தின் பேச்சாளர்கள் தமிழோசையிடம் கூறினர்.

பிரேமகுமார் குணரட்ணம், கொழும்பின் புறநகர்பகுதியான கிரிபத்கொடையில் தங்கியிருந்த வீட்டிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு அல்லது இன்று சனிக்கிழமை அதிகாலை பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் பேச்சாளர் புபுது ஜயகொட தமிழோசையிடம் கூறினார்.

வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இயக்கத்தின் மகளிர் பிரிவுக்கும் சர்வதேச நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்த திமுது ஆட்டிகல, பஸ்ஸொன்றில் வீடுநோக்கிச் சென்றதாகவும் அதன்பின்னர், தகவல்கள் எதுவும்

இல்லை என்றும் உறவினர்கள் காவல்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

மக்கள் போராட்ட இயக்கத்தின் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள முன்னணி சோசலிஸக் கட்சி என்ற புதிய கட்சியின் மாநாட்டை வரும் திங்கட்கிழமை நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையிலேயே இந்தக் கடத்தல்கள் நடந்துள்ளதாக அந்த இயக்கத்தின் பேச்சாளர் கூறினார்.

யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் சார்பில் யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்றை ஒழுங்கு செய்ய சென்றிருந்தபோது லலித் வீரராஜ் என்பவரும் குகன் முருகானந்தன் என்பவரும் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் காணாமல்போனமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk...dissident.shtml

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரபசர் சேரன் ஐஸ்குச்சி வாங்க அவையள கூட்டிக்கொண்டு  போனாரோ?

தலை மறைவாகிவிடுவார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.