Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடலுப்பு, மேசையுப்பில் சிறந்தது எது? மற்றும் ஒரு நாளில் நுகரக்கூடிய உப்பின் அளவு.

Featured Replies

சோடியமும் குளோரினும் சேர்ந்தால் உருவாகுவது நம் வாழ்வின் முக்கியமான உணவு பொருளான உப்பு.

சோடியம் (Sodium) + குளோரின் (Chlorine) --> சோடியம் குளோரைட் (sodium chloride)

  • 2 Na + Cl2 --> 2 NaCl

இவ் உப்பில்லாமல் ஒரு வேளை உணவை கூட நாம் சாப்பிட முடியாது.

உப்பில் மொத்தம் பன்னிரண்டு வகை உண்டு. அதில் நான்கு தான் மிக பிரபலமானவை. அவற்றிலும் இரண்டு தான் நம் வீட்டின் உபயோகித்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. அவை கடல் உப்பு(sea salt), மேசையுப்பு(table salt).

வழக்கம் போல் கால மாற்றத்தில் நாம் நம்முடைய பாரம்பரிய "கல் உப்பு" எனும் கடல் உப்பை மறந்து மேசையுப்புக்கு மாறி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் கடல் உப்புத்தான் இன்று வரை டாக்டர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை பரிந்துரை செய்யும் ஒரு அற்புதமான உப்பு.

கடலுப்புக்கும் மேசையுப்புக்கும் என்ன வித்தியாசம்.

கடல் உப்பு.

இவ் உப்பு கடல் நீரை பாத்தி கட்டி, நல்ல வெயிலில் நீர் ஆவியாக்கப்பட்டு, பூமியின் சத்தோடு வெளிவருகிறது. இது இயற்கையாகவே அயடினை (iodine) கொண்டுள்ளதோடு சில நல்ல இரசாயன கலவையை கொண்டுள்ளது.

மேசையுப்பு.

இவ் உப்பு மண்ணுக்கு கீழ் இருந்து தான் எடுக்கப்படுகிறது. பின் அது processing செய்யப்பட்டு வெள்ளையாக மாற்றபடுகிறது, பின் இரசாயன கலவைகளை பயன்படுத்தி அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டாத தன்மை பெறப்படுகிறது. இறுதியாக செயற்கை அயடின் (iodine) கலக்கப்பட்டு ஒரு செயற்கையான ஓர் இரசாயன கலவையாகவே வெளிவருகிறது.

எனவே கடல் உப்பு கடலில் இருந்து இயற்கையாக தயாரிக்கப்டுவதால் அதையே பயன்படுத்துவது சிறந்தது. (கடல் நீர் எப்படிப்பட்ட காயத்தை கூட எளிமையாக ஆற்றும் ஒரு அற்புத நிவாரணி). மேசையுப்பை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இப்பொழுதெல்லாம் வெளிநாடுகளில் மேசையுப்பை விட கடலுப்பு அதிக விலையாக இருப்பினும் அதனையே மக்கள் விரும்பி வாங்கி உபயோகிக்கிறார்கள்.

ஒரு நாளிட்கான உப்பின் அளவு.

ஒரு நாளில் பயன்படுத்தக்கூடிய உப்பின் எல்லை ஒரு ஸ்பூன் அதாவது 2000mg. அதிகபட்சமாக 2300mg. அதிலும் 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 1500mg இற்கு மேல் கூடவே கூடாது.

இவ் அளவுகளை விட அதிகம் உபயோகிப்பின் அது மெதுவாக கொல்லும் விஷமாக (slow poison) மாறி விடும்.

  • ரத்த கொதிப்பு (blood pressure),
  • பக்கவாதம் (stroke),
  • வாதம்,
  • முடக்குவாதம் (paralysis),
  • மாரடைப்பு (heart attack),
  • மூளை சாவு

போன்ற பல நோய் உருவாக காரணமாகி விடும்.

சிலர் ஊறுகாயை அடிக்கடி, இல்லையெனில் தினமும் உணவில் சேர்ப்பார்கள். இது மிக மோசமான பழக்கம். ஒரு ஸ்பூன் ஊறுகாயில் 2300 - 2500mg அதாவது ஒரு நாள் பயன்படுத்தக்கூடிய அளவு உள்ளது. எனவே ஒரு நாள் அளவை ஒரு வேளை உணவில் எடுத்து விடுகிறோம்.

இது போலவே

  • சிப்ஸ்,
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள்,
  • சில ஜூஸ் கலவைகள்,
  • சில தயாரிக்கப்பட்ட நிலையிலுள்ள உணவுகள்,
  • frozen foods

போன்றவற்றிலும் அதிகளவு உப்பு உள்ளது. எனவே இவற்றை முடிந்தவரை தவிருங்கள்.

உணவில் உப்பு கொஞ்சம் அதிகமாகி போனால் உடனே நீர் சேர்த்து சரி செய்வோம். அதனால் கலந்த உப்பின் அளவு குறைவது இல்லை. சுவை மட்டும் தான் மாறுகிறது.

உப்பு இல்லா பண்டம் வேண்டுமானால் குப்பையிலே ஆனால் அதிக உப்பு எடுத்தால் நம் சுடுகாடு செல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை. எனவே உப்பிலாத பண்டமாக நிறைய சமையல்கள் இருக்கிறது அதை கற்று கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள். மறக்காமல் கடல் உப்பு தேடி பிடித்து வாங்குங்கள்.

- facebook இன் உதவியுடன் -

Edited by காதல்

சோடியமும் குளோரினும் சேர்ந்தால் உருவாகுவது நம் வாழ்வின் முக்கியமான உணவு பொருளான உப்பு.

இவ் உப்பில்லாமல் ஒரு வேளை உணவை கூட நாம் சாப்பிட முடியாது.

கடலுப்புக்கும் மேசையுப்புக்கும் என்ன வித்தியாசம்.

கடல் உப்பு.

இவ் உப்பு கடல் நீரை பாத்தி கட்டி, நல்ல வெயிலில் நீர் ஆவியாக்கப்பட்டு, பூமியின் சத்தோடு வெளிவருகிறது. இது இயற்கையாகவே அயடினை (iodine) கொண்டுள்ளதோடு சில நல்ல இரசாயன கலவையை கொண்டுள்ளது.

மேசையுப்பு.

இவ் உப்பு மண்ணுக்கு கீழ் இருந்து தான் எடுக்கப்படுகிறது. பின் அது processing செய்யப்பட்டு வெள்ளையாக மாற்றபடுகிறது, பின் இரசாயன கலவைகளை பயன்படுத்தி அவை ஒன்றுடன் ஒன்று ஒட்டாத தன்மை பெறப்படுகிறது. இறுதியாக செயற்கை அயடின் (iodine) கலக்கப்பட்டு ஒரு செயற்கையான ஓர் இரசாயன கலவையாகவே வெளிவருகிறது.

எனவே கடல் உப்பு கடலில் இருந்து இயற்கையாக தயாரிக்கப்டுவதால் அதையே பயன்படுத்துவது சிறந்தது. (கடல் நீர் எப்படிப்பட்ட காயத்தை கூட எளிமையாக ஆற்றும் ஒரு அற்புத நிவாரணி). மேசையுப்பை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இப்பொழுதெல்லாம் வெளிநாடுகளில் மேசையுப்பை விட கடலுப்பு அதிக விலையாக இருப்பினும் அதனையே மக்கள் விரும்பி வாங்கி உபயோகிக்கிறார்கள்.

- facebook இன் உதவியுடன் -

உப்பு பற்றிய பயனுள்ள தகவல்.

மேசை உப்பு-

கடலுப்பை சுத்திகரிப்பு செய்தும் பெறப்படலாம். அல்லது நிலத்துக்கு அடியில் இருக்கும் சுரங்க உப்பை சுத்திகரித்தும் பெறப்படலாம்.

இயற்கை கடலுப்பு பெறப்படும் இடத்தைப்பொறுத்து அதில் கலந்துள்ள கனிம உப்புகளின் அளவு வேறுபாடும்.

ஆனால் உப்பளங்களில் உப்பு விளைவிக்கும் பொது, வேறு வகையான கனியுப்புக்கள் உப்புடன் கலப்பதை தவிர்க்க குறித்த செறிவு வரை சூரிய ஒளியில் கடல் நீரை ஆவியாக்கி உப்பு படிந்ததும் மிகுதி யாக உள்ள நீரை வெளியேற்றி விடுவார்கள். இதனை மூலம் உப்பு (NaCl) அல்லாத ஏனைய கனியுப்புகள் உடலுக்கு தீமை தரக்கூடிய கனியுப்புகள் நீக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உப்பிலே சிறந்த உப்பு எமது தாயகத்தில் விளையும் ஆனையிறவு உப்பளத்தில் விளையும் உப்பில் அதிகம் அயடின் உள்ளது உடலுக்கு நல்லது. :)

  • தொடங்கியவர்

நன்றி

உப்பிலே சிறந்த உப்பு எமது தாயகத்தில் விளையும் ஆனையிறவு உப்பளத்தில் விளையும் உப்பில் அதிகம் அயடின் உள்ளது உடலுக்கு நல்லது. :)

ஆனையிறவு உப்பளங்களை தான் தற்போது அரசாங்கம் சுரண்டி உப்புகள் அனைத்தையும் எடுக்கிறதே. அதுவும் சிங்களவர்களுக்கு தான் போகப்போகுது.... :(

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

ஆனையிறவு உப்பளங்களை தான் தற்போது அரசாங்கம் சுரண்டி உப்புகள் அனைத்தையும் எடுக்கிறதே. அதுவும் சிங்களவர்களுக்கு தான் போகப்போகுது.... :(

சகோதரா!

நிச்சயமாக அது நிரந்தரம் கிடையாது எமது தேசம் ஒருநாள் விடுதலை பெறும் அன்று எமது நிலத்தை நாமே ஆழும் நாள் வரும். :)

  • கருத்துக்கள உறவுகள்

எனது பாட்டி, சொல்லக்கேட்டது.

உப்பை காசுக்கு, விற்றால்... பாவமாம், என்று.. தான் சின்னப் பிள்ளையாக இருக்கும் காலங்களில், கடைகளில் சாமான் வாங்கும் போது... சும்மா, கொடுப்பார்களாம்.

இப்ப... ஆர், பாவ புண்ணியம் பார்க்கிறார்கள். வந்ததை, சுருட்ட, வேண்டியது தான்.

  • தொடங்கியவர்

சகோதரா!

நிச்சயமாக அது நிரந்தரம் கிடையாது எமது தேசம் ஒருநாள் விடுதலை பெறும் அன்று எமது நிலத்தை நாமே ஆழும் நாள் வரும். :)

நான் சகோதரி............ :)

தமிழர்கள் அன்றும் ஏமாந்தார்கள், இன்றும் ஏமாறுகிறார்கள், நாளை என்ன நிலை என்று தெரியவில்லை. ஆனால் மற்ற நாட்டவரிடம் இருக்குமளவு நாட்டுப்பற்று எம்மவர்களிடம் இல்லை. ஒரு சிலரிடம் உண்டு. ஆனால் அவர்களின் பிள்ளைகள் அதை தொடர மாட்டார்கள்.

தமிழர்களை தமிழர்களே ஏமாற்றும் நிலை உள்ளதாலேயே சில புலம்பெயர் தமிழ் பெற்றோர் தமது பிள்ளைகளை தமிழர்களுடன் பழக அனுமதிப்பதில்லை. எம் நாட்டில் தெற்கு பகுதியிலுள்ள பல தமிழ் மக்களின் பிள்ளைகளும் சிங்களத்தையும் ஆங்கிலத்தையுமே கற்றுக்கொள்கிறார்கள். வடக்கு கிழக்கிலும் தற்போது சில வேலையிடங்களில் சிங்கள மொழி கட்டாயம் கற்குமாறு கூறப்பட்டிருக்கிறது. இவை தொடரின் காலப்போக்கில் தமிழ் சமுதாயம் அழிந்து விடுமோ என்று தோன்றுகிறது.

மீறி நீங்கள் கூறுவது நடந்தாலும் நடக்கும் காலத்தில் நாம் உயிருடன் இருப்போமா தெரியாது.

எனது பாட்டி, சொல்லக்கேட்டது.

உப்பை காசுக்கு, விற்றால்... பாவமாம், என்று.. தான் சின்னப் பிள்ளையாக இருக்கும் காலங்களில், கடைகளில் சாமான் வாங்கும் போது... சும்மா, கொடுப்பார்களாம்.

இப்ப... ஆர், பாவ புண்ணியம் பார்க்கிறார்கள். வந்ததை, சுருட்ட, வேண்டியது தான்.

முன்பு பழைய பிளாஸ்டிக், கிழிந்த துணிகளை கொடுத்தும் உப்பு வாங்குவார்களாம்......

  • கருத்துக்கள உறவுகள்

நான் சகோதரி............ :)

நீங்கள் அலேட்டாத்தான் இருக்கிறியள் காதல்... :D

நான் சகோதரி............ :)

நீங்கள் அலேட்டாத்தான் இருக்கிறியள் காதல்... :D

  • தொடங்கியவர்

நீங்கள் அலேட்டாத்தான் இருக்கிறியள் காதல்... :D

நீங்கள் அலேட்டாத்தான் இருக்கிறியள் காதல்... :D

என்ன செய்ய சுபேஸ் அண்ணா, ஆண்கள் போல் எழுதி பழகுவம் என்றால் எல்லோரும் என்னை ஆண் என்றே நினைத்து விடுவார்கள் போலிருக்கு :( (நீங்கள் உட்பட :)). அதனால் இடைக்கிட நினைவுபடுத்த வேண்டியிருக்கு.... :)

நீங்களும் ஒரு தடவை எழுதினால் 2 தடவை எழுதின மாதிரியோ? :lol::D (ஒரே வரியே 2 தரம் எழுதப்பட்டிருப்பதால் கேட்கிறன்... :))

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.