Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேம்குமார் கொழும்பு திரும்பிய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு கோத்தாபய அவுஸ்ரேலியாவுக்கு சவால்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gota%204_CI.jpg

ஜே.வி.பி. கிளர்ச்சிக்குழு உறுப்பினர் பிரேம் குணரட்னம் அவுஸ்திரேலியாவிலிருந்து கொழும்பு திரும்பியமைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலியாவிடம் கோரியுள்ளது.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடியிடம், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜக்ஷ இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பிரேம்குமார் குணரட்னம் ஓர் அவுஸ்திரேலிய பிரஜை என ரொபின் மூடி சுட்டிக்காட்யுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் இலங்கையில் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டால் அவர் இலங்கை திரும்பியமைக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

பிரேம்குமார் குணரட்னம் என்ற பெயரில் அவுஸ்திரேலியாவிலிருந்து அந்நாட்டு பிரஜைகள் யாரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தகவல்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரேம்குமார் குணரட்னம் தொடாபில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் தகவல்களுக்காக காத்திருப்பதாக இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரேம்குமார் குணரட்னத்தின் மனைவி, தனது கணவரைக் காணவில்லை என அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பிரேம்குமார் குணரட்ணத்தை கண்டுபிடிக்க கோத்தாபயவிடம் அவுஸ்ரேலிய தூதுவர் றொபின் முடி வலியுறுத்தல்:-

கடந்த சனிக்கிழமை கிரிபத்கொடவில் வைத்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஜே.வி.பி மாற்றுக் குழுவின் தலைவரான பிரேம்குமார் குணரட்ணத்தை, கண்டுபிடிப்பதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறு இலங்கைக்கு, அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுத்துள்ளதுடன் கவலையும் வெளியிட்டுள்ளது.

பிரேம்குமார் குணரட்ணம் அவுஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றவர். பிரேம்குமாரின் மனைவி சம்பா குணரட்ணம் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். தனது கணவன் இலங்கையில் காணாமல்போயுள்ளதாகவும், அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

அக்கோரிக்கைக்கு அமைவாக பிரேம்குமார் குணரட்ணத்தை கண்டுபிடிப்பதற்குரிய நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு, கொழும்புக்கான அவுஸ்ரேலிய தூதுவர் றொபின் முடி, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தான் நாடு திரும்பியபோது, கொழும்பு விமான நிலையத்தில் வைத்து, தனது கணவரான பிரேம்குமார் குணரட்ணத்தின் இருப்பிடம், செயற்பாடு தொடர்பில், சுமார் 18 மணித்தியாலங்கள் தடுத்துவைக்கப்பட்டு தீவீரமாக விசாரிக்கப்பட்டதாக சம்பா குணரட்ணம் தெரிவித்திருந்தார்.

http://www.globaltam...IN/article.aspx

இனிமேல் சிறிலங்காவுக்கு யார் தமிழர் போனாலும் இதுதான் நிலை.இதை எல்லா (அ)எருமை தமிழர்களும் புரிந்துகொண்டால் சரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.