Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகரித்துவரும் தற்கொலைகளும் அவை ஏற்படுத்தும் தாக்கங்களும்

Featured Replies

அதிகரித்துவரும் தற்கொலைகளும் அவை ஏற்படுத்தும் தாக்கங்களும் - ஒரு உளவியல் பார்வை

ஆக்கம்: நதிபரன்

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் தமிழர் பிரதேசங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கையானது என்றுமில்லாதவாறு அதிகரித்து இருப்பதானது தமிழ்ச் சமூகத்தின்மீது விழுந்திருக்கும் அடுத்த பேரிடியாகும்.

யுத்தம் இடம்பெற்றபோது ஏற்பட்ட துன்பங்களை விட யுத்தத்திற்குப் பின்னரான காலத்திலேயே அதன் வலிகளை, ரணங்களை உணரக்கூடியதாக அனுபவிக்கக்கூடியதான நிலை இருக்கும் என்ற யதார்த்தத்தின்படி யுத்தத்திற்குப் பின்னர் சடுதியாக தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

அதுமட்டுமன்றி சமூக ஆதரவு என்பது தற்போது இல்லாமற் போனமையினாலும் உள ரீதியாகப் பாதிப்படைந்தவர்கள் தமது பிரச்சினைகளை வெளியே கொட்டிவிட பொருத்தமான வடிகால்கள் இன்றியும் அவஸ்தைப்படுகின்றனர்.

இறுதியில் முடிவெடுக்கும் திறனில் ஏற்படும் இடர்பாடுகளால் தற்கொலையேபிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு என்று கருதுவதால் அவர்களை தற்கொலை வரை இட்டுச் செல்வதைத் தடுக்கமுடியாமல் போகிறது. தற்கொலை செய்வோர் பெரும்பாலும் இளவயதினராகவே இருக்கின்றனர்.

இவ்வயதுப்பிரிவினர் உணர்வுத் தூண்டலுக்கு அதிகம் பலியாகும் வயதினர். இவர்களுக்கு முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும். அதிலும் உளரீதியான விரக்தி நிலைக்குட்பட்டவர்களுக்கு முடிவெடுக்கும் திறன் அற்றுப்போயிருக்கும். இவர்களை வழிப்படுத்துவதற்கு பொருத்தமான சமூகக் கட்டமைப்பு இன்மையே தற்கொலை செய்வோரின் தொகை அதிகரித்து வருகின்றமைக்கு முக்கிய காரணமாகும்.

போருக்குப் பின்னர் தமிழர்களின் பொருளாதார வளங்கள் மாத்திரமன்றி சமூகக் கட்டமைப்புக்களும் அழிவடைந்து விட்டன. தாய், தந்தையை இழந்த பிள்ளைகள். பிள்ளைகளை இழந்த பெற்றோர், சகோதரர்களை இழந்து தவிப்போர், அங்கவீனமடைந்தவர்கள், உறவினர்களில் ஒருவரையோ அல்லது பலரை இழந்த இரட்டிப்பு துயரத்தில் உழல்வோர் என யுத்தத்தின் நேரடிப் பாதிப்புக்குட்பட்டவர்களின் வாழ்வியல் துயர்கள்வார்த்தைகளில் அடக்கி விடமுடியாதவையாகும்.

அதுமட்டுமன்றி யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை இளம் வயதுப் பிரிவினரின் தற்கொலைகளுக்கு குடும்ப ஆதரவின்மையே முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது. சமூக பொருளாதார மாற்றங்களின் விளைவாக குடும்பங்களிலிருக்கும் பலமான பிணைப்பு அறுந்துபோனமையினால் குடும்ப ஆதரவை பாதிப்படைந்தவர்கள் பெறமுடியாமல் போயிருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்களின்படி உலகில் தினமும் 3 ஆயிரம் பேர்வரை தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதன் காரணமாக வருடாந்தம் 10 இலட்சம் பேர்வரை தற்கொலைகளினால் இறப்பதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அத்துடன் 2020ஆம் ஆண்டளவில் தற்கொலை செய்தோரின் எண்ணிக்கை 1.5 மில்லியன்வரை எட்டும் என உலக சுகாதார நிறுவனம் எதிர்வு கூறியிருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை 1950 களில் ஒரு இலட்சம் பேருக்கு 06 பேர் என்ற ரீதியில் இருந்த தற்கொலை செய்வோவாரின் தொகை 1964 இல் 12 பேர், 1969 இல் 19 பேர், 1996 இல் 37 பேர் என்ற ரீதியில் அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு தற்கொலை இறப்பிற்குப் பின்னரும் 1020 பேர், தற்கொலை செய்து கொள்ளக்கூடிய ஏது நிலைகளும் பலமாகக் காணப்படுகிறது. ஒரு சமூகத்தில் ஒருவர் தற்கொலை செய்தால் அவரைப் பின்பற்றி குடும்பத்திலுள்ளவர்களோ அல்லது அச்சமூகத்திலுள்ளவர்களோ தற்கொலை செய்வதற்குத் தூண்டப்படக்கூடிய உளவியற் பின்னணிகளைக் கொண்டிருப்பர்.

தற்போது இலங்கையின் வடக்குப் பகுதியில் அதாவது தமிழர் வாழும் பிரதேசத்தில் தற்கொலை செய்வோன் தொகையானது சடுதியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக போர் நடைபெற்ற வன்னிப் பிராந்தியத்தில் தற்கொலை அதிகரிப்பு வீதம் உயர்வாக உள்ளமையைக் காணலாம்.

முன்னர் தற்கொலை முயற்சியில் பெண்களே அதிகளவு ஈடுபட்டாலும் தற்போது பெண்களை விட ஆண்களே தற்கொலையில் ஈடுபடுவதாக புள்ளி விபரத் தரவுகளிலிருந்து அறியமுடிகின்றது.

அது மட்டுமன்றி இளம் பராயத்தினரே தற்கொலைகளில் அதிகம் ஈடுபடுவதனையும் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக 14 - 34 வயதிற்குட்பட்டவர்களே அதிகளவுக்கு தற்கொலை செய்கின்றனர்.

தமிழர் பிரதேசத்தில் அதாவது வடக்கில் அதிகளவானவர்கள் தற்கொலைகளில் ஈடுபடுவதற்குப் பல காரணிகள் இருந்தாலும் உளவியல் ரீதியான காரணிகள், யுத்தசூழ்நிலைகளால் உண்டான அவலமான வாழ்க்கை முறை, இடப் பெயர்வு, இழப்புக்கள்முதலியசில காரணங்கள் முக்கியமாகக் காணப்படுகின்றன.

மூலம்: யாழ் மண் - சித்திரை 6, 2012

பிரசுரித்த நாள்: Apr 11, 2012 16:28:53 GMT

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.