Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்

Featured Replies

fb+spam.jpg

சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.

Dailymotion

fb+spam.png

Yahoo

fb.png

மேலே உள்ளது நண்பர்கள் பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும் பேஸ்புக்கில் வந்த செய்தி. இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும். இதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்.

daily+spam.png

எந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் இது போல காட்டும். அதாவது உங்கள் பேஸ்புக் கணக்கை அந்த அப்ளிகேசன் அணுகுவதற்கு அனுமதி கேட்கும். மேலுள்ள படத்தை நன்றாக பாருங்கள்.

This app may post on your behalf, including videos you watched, films you watched and more.

அதாவது நீங்கள் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்கள் கணக்கில் இருந்து செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும். இதன் மூலம் Spam செய்திகளை அனுப்புவதற்கு நீங்களே அனுமதி அளிக்கிறீர்கள்.

அவ்வாறு க்ளிக் செய்த பின் அது அந்த தளத்திற்கு சென்றுவிடும். அங்கு நீங்கள் எதை க்ளிக் செய்கிறீர்களோ அவையும், சில சமயம் க்ளிக் செய்யாதவைகளும் நீங்கள் பார்த்ததாக உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிடும்.

இதனை தவிர்ப்பது எப்படி?

இவற்றிலிருந்து தவிர்க்க வேண்டுமெனில் இது போன்ற சுட்டிகளை க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். தவறுதலாக க்ளிக் செய்தாலும் Dailymotion, Yahoo போன்ற Third-Party Applications களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே நீங்கள் க்ளிக் செய்து அனுமதி கொடுத்துவிட்டீர்கள் என்றால் அந்த அப்ளிகேசன்களை உங்கள் கணக்கிலிருந்து நீக்கிவிடுங்கள்.

அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?

உங்கள் பேஸ்புக் கணக்கில் Account settings என்பதை க்ளிக் செய்து, இடது புறம் உள்ள Apps என்பதை க்ளிக் செய்தால், நீங்கள் பயன்படுத்திவரும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும்.

spam2.png

மேலே உள்ள Dailymotion / Yahoo என்பதற்கு பக்கத்தில் உள்ள X குறியீடை க்ளிக் செய்து அதனை நீக்கிவிடுங்கள். இது போன்ற அனைத்து அப்ளிகேசன்களையும் நீக்கிவிடுவது சிறந்தது.

என் பரிந்துரை:

எக்காரணம் கொண்டும் Third Party Application களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சிறு வேண்டுகோள்:

இது பேஸ்புக்கில் தற்போது பரவிவரும் முக்கிய பிரச்சனை என்பதால் தாங்கள் பேஸ்புக்கில் இதனை பகிர்ந்தால் பலர் இதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.

- நன்றி : S. Kumarathas -

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

Allow Access என்று வருகிற எதையுமே நான் ஒத்துக்கொள்வதில்லை.. :unsure: சிலது வைரஸ் மாதிரி பரவிவிடும். :rolleyes:

சிலதில் ஏதாவது கிளுகிளுப்பா வரும்.. கிளிக் பண்ணிப் பார்த்தால் தெரியாத மொழியில் ஏதோ எழுதியிருக்கும். அதையும் கிளிக் பண்னினால் உங்கள் சுவரில் பதிந்துவிடும். :unsure: பிறகு உங்கள் நண்பர்கள் நீங்கள் எல்லோரும் கெட்ட படத்தைப் போட்டிருப்பதாக அறிவார்கள்..! :D அவர்களும் கிளிக் பண்ணி அப்படியே போய்க்கொண்டிருக்கும்..! :lol:

இதனால் ஒரு நன்மை இருக்கு. யார் யார் கள்ளமா பார்க்க விரும்பினவை என்று தெரியவரும்.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் என்னட்டை பேஸ்புக் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் என்னட்டை பேஸ்புக் இல்லை.

ஒண்டை திறந்தாப் போச்சு குமாரசாமி அண்ணை.....தனி ஒருவருக்கு பேஸ்புக் இல்லையேல் இணையத்தையே அழித்திடுவம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒண்டை திறந்தாப் போச்சு குமாரசாமி அண்ணை.....தனி ஒருவருக்கு பேஸ்புக் இல்லையேல் இணையத்தையே அழித்திடுவம்...

நோ...தந்தி,கடிதம்,தொலைபேசி எப்பவும் ஓரளவுக்கு பாதுகாப்பானது......இது இன்ரநாஷனல் லெவலிலை எல்லாரும் ஒருத்தன்ரை தனிப்பட்ட விசயத்தை கண்டுகளிக்கிறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நோ...தந்தி,கடிதம்,தொலைபேசி எப்பவும் ஓரளவுக்கு பாதுகாப்பானது......இது இன்ரநாஷனல் லெவலிலை எல்லாரும் ஒருத்தன்ரை தனிப்பட்ட விசயத்தை கண்டுகளிக்கிறாங்கள்.

நீங்கள் ஏன் அண்ணை சொந்தப் பேரிலை திறக்கிறியல்...? ஒரு கிரிக்கெற் பிளேயறின்ர பேரிலை திறந்து ஒரு நடிகற்ரை படத்தை போட்டு நாலைஞ்சு வெள்ளையளை அட் பண்ணி இன்றேர்நாசனல் லெவலிலை கடலை போடுறதை விட்டிட்டு இப்பிடி சின்னப் பிள்ளையாட்டம் மாட்டன் எண்டு அடம்பிடிச்சா எப்புடி...? :lol:

Edited by சுபேஸ்

அட....கடலை கச்சான் போடுறதுக்கே பேஸ்புக்கு...நானும் விஞ்ஞானம் விண்ணை நோக்கி போகுதெண்டெல்லே யோசிச்சன் :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அட....கடலை கச்சான் போடுறதுக்கே பேஸ்புக்கு...நானும் விஞ்ஞானம் விண்ணை நோக்கி போகுதெண்டெல்லே யோசிச்சன் :D :D

விஞ்ஞானம் விண்ணை நோக்கிப் போனாலும் அதில இருந்து இட்டிலி தோசையை இன்னும் ஈசியாய் எப்பிடிச் சுடலாம் எண்டு கண்டுபிடிச்சாத்தான் தமிழனுக்கு பெருமை அண்ணை...... :lol::D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஞ்ஞானம் விண்ணை நோக்கிப் போனாலும் அதில இருந்து இட்டிலி தோசையை இன்னும் ஈசியாய் எப்பிடிச் சுடலாம் எண்டு கண்டுபிடிச்சாத்தான் தமிழனுக்கு பெருமை அண்ணை...... :lol::D

எதையும் ஈசியாய் யோசிக்க செய்ய வெளிக்கிடேக்கைதான்......கன தெரியாத வருத்தங்களும்...புரியாத பிரச்சனைகளும் வருது....உந்த குளிர்சாதன பெட்டிகளை முதலில் இல்லாதொழிக்கவேண்டும். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு சில சனம் FB யில் பண்ணும் கூத்தை பார்த்தா கடுப்பாகிறது..என்ன பண்ணுவது? பார்த்து தானே ஆக வேண்டும்..நீங்க தப்பிட்டீங்க கு.சா தாத்தா!!

நோ...தந்தி,கடிதம்,தொலைபேசி எப்பவும் ஓரளவுக்கு பாதுகாப்பானது......இது இன்ரநாஷனல் லெவலிலை எல்லாரும் ஒருத்தன்ரை தனிப்பட்ட விசயத்தை கண்டுகளிக்கிறாங்கள்.

கருணாநிதி இது மாதிரி தான். தந்தி,கடிதம் மட்டும் தான்.

  • தொடங்கியவர்

இதனால் ஒரு நன்மை இருக்கு. யார் யார் கள்ளமா பார்க்க விரும்பினவை என்று தெரியவரும்.. :icon_mrgreen:

:lol::D

எனக்கு சில சனம் FB யில் பண்ணும் கூத்தை பார்த்தா கடுப்பாகிறது..என்ன பண்ணுவது? பார்த்து தானே ஆக வேண்டும்..நீங்க தப்பிட்டீங்க கு.சா தாத்தா!!

பேசாம அவர்களை remove பண்ணி விடுங்கோ. பிரச்சினை முடிஞ்சுது.

விஞ்ஞானம் விண்ணை நோக்கிப் போனாலும் அதில இருந்து இட்டிலி தோசையை இன்னும் ஈசியாய் எப்பிடிச் சுடலாம் எண்டு கண்டுபிடிச்சாத்தான் தமிழனுக்கு பெருமை அண்ணை...... :lol::D

தமிழேண்டா........ :D

கருணாநிதி இது மாதிரி தான். தந்தி,கடிதம் மட்டும் தான்.

அவருக்கு கடிதம் எழுத தெரிஞ்ச அளவுக்கு facebook பாவிக்க தெரியாது. :lol::D

பாவிக்க தெரிஞ்சாலும் கடிதத்தோட தான் இருப்பார். கடிதம் அனுப்பினால் தான் காலத்தை கடத்தலாம் என்று நல்லா தெரிந்து வைத்திருப்பவர் தானே.... :D:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.