Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் முதலமைச்சர் வேட்பாளராக “வரதர்”; சுரேஷ் அணியையும் ஒன்றிணைக்க முயற்சி – உதயன் செய்தி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Varatharaja_perumal-100x100.jpg

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் களத்தில் குதிக்கும் பரபரப்பிலும் பேரப்பேச்சுகளிலும் தமிழ் முஸ்லிம் கட்சிகள் பம்பரமாகச் சுழன்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் களத்தில் குதிக்க ஆயத்தமாகி வருகிறார் என்று யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐ.ம.சு.மு. அரசின் பங்காளிக்கட்சியாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் குதிக்கவே முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்கிறார் எனத் தெரியவருகின்றது.

இது தொடர்பில் அவரும், அவரது இயக்கப் பிரமுகர்களும் பல்வேறுபட்ட பேச்சுகளில் மிக இரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர் என மிக நம்பகமான தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்தவாரம் இலங்கையிலிருந்து சென்னைக்குச் சென்ற கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் இது தொடர்பில் பேச்சு நடத்தியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் ஆலோசனைக்கமைய டில்லியிலிருந்து வந்த விசேட கட்சிப் பிரமுகர்கள் ஐவரே இப்பேச்சில் கலந்துகொண்டுள்ளனர்.

சென்னை வட பழனி முருகன் கோயிலுக்கு அருகிலுள்ள “பீமாஸ்’ ஹோட்டலில் தங்கியிருந்த குறித்த இலங்கைப் பிரமுகரைச் சந்தித்த குழுவில் வடக்கு, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் இரு உறுப்பினர்களும் அங்கம் வகித்துள்ளனர்.

வரதராஜப் பெருமாள் இலங்கைக்கு அரசியல் நீரோட்டத்தில் மீண்டும் ஈடுபடுவதற்கான சூழ்நிலை மற்றும் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டால் அத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கள நிலைவரம் என்பவை தொடர்பிலேயே இப்பேச்சின்போது முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை அரசுடன் நல்லுறவைப் பேணி இந்தியாவிலிருக்கும் வரதர் அணி குடும்பத்தினர் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது என நம்பகரமாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 25, 30 வருடங்களாக வரதர் அணியைச் சேர்ந்தோரும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவிலேயே உள்ளனர். தற்போது தாயகத்துக்கு மீள வர ஆர்வம் காட்டுகின்றனர்.

இதற்கான களத்தை ஏற்படுத்தி, கிழக்குத் தேர்தலிலும் போட்டியிடும் சூழலை ஏற்படுத்திக்கொடுத்தல் ஆகிய பொறுப்புகள் கட்சியின் குறித்த இலங்கைப் பிரமுகரிடம் பேச்சின் இறுதியில் ஒப்படைக்கப்பட்டது எனப் பேச்சில் கலந்துகொண்ட முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார் என அறியமுடிகின்றது.

இதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எவ். வரதர் அணி மற்றும் சுரேஷ் அணியை ஒன்றுபடுத்தும் வேலைத்திட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. சுரேஷ் அணித் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம்செய்து கிழக்கு மாகாணசபையில் அங்கம்வகிக்கும் வரதர் அணியின் உறுப்பினர் துரைரெட்ணத்தைச் சந்தித்துப் பேச்சுநடத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

http://www.saritham.com/?p=57874

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மகள் சினிமாவில் நடிப்பாராம், இவர் இங்கு ஸ்ரீலங்காவில் அரசியல் செய்வாராம். :(

அதுசரி .......... இந்திய அமைதிப்படை (கொலைகாரப்படை) பாதுகாக்கும் பணிக்கு வந்திருக்கினமோ ? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் மகளை கூட்டிவந்து கட்சி கோடியை பறக்கவிட்டால்.............

நாங்கள் ஒரு இலட்ச நட்ட இழப்பில் (விமான டிக்கெட் காசு) அந்த வாக்கு சாவடிக்கு வந்து எமது வாக்கை குத்துவோம் என்பதை இத்தால் அறிய தருகிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.