Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் மகிந்தரின் கொடும்பாவி எரிப்பு 100ற்கும் அதிகமானோர் கைது. (படங்கள்)

Featured Replies

தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையை கண்டித்து சென்னையில் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கை மாத்தாளை மாவட்டம் தம்புள்ளை என்னும் ஊரில் 60 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை சிங்கள புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இடித்து சேதப்படுத்தி உள்ளதை கண்டித்து, சென்னை டி.டி.கே.சாலை பிரிவில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்களால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில துணைத்தலைவர் முகமது முனீர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மகிந்தவை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.

இதில், மாநில செயலாளர் அபுபைசர், துணை பொதுச் செயலாளர் செய்யது இக்பால், பொருளாளர் அபுபக்கர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த மகிந்த ராஜபக்சேவின் கொடும்பாவியை எடுத்து வந்து, நடு வீதியில் வைத்து தீ வைத்து எரித்து கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள்.

பின்னர் பதாகையில் பொறிக்கப்பட்டு இருந்த இலங்கை தேசிய கொடியின் மீது செருப்பை வீசி கோஷம் போட்டுக்கொண்டு இலங்கை தூதரகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்றனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பொலிஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். 40 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மகிந்த ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

thaaitamil.com_3.jpg

http://thaaitamil.com/?p=17393

ராசபக்சாவின் கொடும்பாவி எரிப்பதால் ஒன்றும் பிழை போகாது. ஆனால் அதைமட்டும் செய்வதால் புதிய முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியாது. தமிழ் நாட்டு முஸ்லீம் உறவுகள் விளங்கிக்கொள்ள வேண்டியது இங்கே நடப்பதெல்லாம் நாடகம் என்பது. எப்படி கருணாநிதி காங்கிரசுடன் சேர்ந்து நாடகமாடிக்கொண்டு கடல்க்கரையில் காற்றுவாங்க படுத்தெழும்புகிறாரோ அதே மாதிரி இலங்கை முஸ்லீம் மந்திரிகள் அகில உலக முஸ்லீம் சமூகத்தையும் கைவிட்டுவிட்டு தமது பொக்கெட்டை நிரப்பும் நிகழ்ச்சியே இங்கே நடக்கிறது. எப்படி கருணநிதி தமிழ் ஈழம் அழிந்து போகும்வரை தான் ஒரு பிரதிநிதியை கூட மத்திய அரசிலிருந்து விலக்க மறுத்தாரோ, அதேமாதிரியே சகல முஸ்லீம் மந்திரிகளும் தமது பதவிகளை விலகிக் கொள்ளப்போவதில்லை என்று ராச பக்சாவுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டு வந்துதான் பள்ளிவாசல் போராட்டம் நடத்துகிறார்கள். பள்ளி வாசல் இடிப்பு பிரதமரால் பத்திரிகைகளில் போடும்வரை இந்த சக முஸ்லீம் மந்திரிகளுக்கு எதுவும் தெரியாது என்றால் இந்த மந்திகளுக்கு மந்திரிப் பதவி ஒருகேடா என்றுதான் நீங்கள் கேட்கவேண்டும்.

1.ஆயிரத்துக்கும் மேற்பட்ட காடைகள் பள்ளிவாசலுக்கு சென்றார்கள்.

2.படித்த பிக்குகள் திட்டங்களுடன் கதிரைகளை போட்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

3. இராணுவமும், பொலிசும் அவர்களை பாதுகாத்துக்கொண்டிருந்தது.

அப்படியாயின் இந்த பள்ளிவாசல் இன்னமும் எப்படி அங்கே தப்பி இருக்கென்ற ஒரு கேள்வியை தமிழ் நாட்டு முஸ்லீம் உறவுகள் தமக்குள் கேட்க வேண்டும். அந்த ஆயிரம் காடைகளும் நகத்தால் சுரண்ட ஆரம்பித்திருந்தாலும் அந்த பள்ளவாசல் இருந்த இடத்தில் இப்போ ஒரு பிடி மண் அள்ள சந்தர்ப்பம் இருக்காது. டெல்கியில் காடைகள் தேடிசென்ற பாவர் மசூதி எங்கே இப்பொழுது? ஆனால் இலங்கையில் எதற்காக அவ்வளவு பாதுகாப்புடன் மசூதி இடிக்க சென்ற அந்த பெரிய கூட்டம் மசூதியை பூட்டிவைத்துவிட்டு வீடு திரும்பி சென்றது? இது நாடகத்தின் காட்சி ஒன்று மட்டுமே. நடிகர்கள் ஒருவரும் வீடு செல்லவில்லை. வில்லன் நடிகனான சிங்கள காடைகளும், கதாநாயக நடிகனான முஸ்லீம் மந்திரிகளும் மகிந்தாவின் கூடாரத்திற்குள் தான் இருக்கிறார்கள். இவர்கள் ஆடைகள் மாற்றி வந்து காட்சி இரண்டை ஆரம்பிப்பார்கள். இலங்கையின் இந்த நாடகங்களில் முஸ்லீம் மந்திரிகள் தான் கதாநாயகர்கள். என்வே நீங்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் இவற்றை விளங்கிக்கொண்டதாக இருக்க வேண்டும்.

மகிந்தாவுக்கு எதிராக நீங்கள் கொடும்பாவி எரித்து அது காணாது. இலங்கை பிரதமர் புத்த சாசன மந்திரி. இவர் இலங்கையை புனித நகரமாக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்த நியமிக்கப் பட்டிருக்கிறார். இதில் எதையும் அறியாத அப்பாவிகள் தான் இலங்கை முஸ்லீம் மந்திரிகள் என்று நம்பாதீர்கள். இங்கேதான் தமிழ்மந்திரிகள் தேவானந்தா, கருணா, தொண்டமான் எல்லோரும் இருக்கிறார்கள். அதே மாதிரித்தான் எல்லா முஸ்லீம் மந்திரிகளும்.

இலங்கைத்துரோகித் தமிழ் மந்திரிகளும் இலங்கைத் துரோகி முஸ்லீம் மந்திரிகளும், இந்திய கங்கிரசும் கூட்டாகத்தான் சர்வாதிகார இலங்கை அரசின் பல்லக்குத் தூக்கிகள். காங்கிரஸ் இலங்கை, இந்திய பொதுமக்களின் பொது எதிரி. சரித்திரம் காணத இலங்கைக்கொலைக்கும்பலின் ஆருயிர் நண்பன்.

உங்கள் மதச் சுதந்திரம் இலங்கையில் காப்பாற்றப்பட வேணடுமாயின் இலங்கையில் நீதி நிலை நிறுத்தப்பட வேண்டும். அதற்கு ராசபக்சா அரசு போக வேண்டும். அதற்கு தமிழ், முஸ்லீம் மந்திரிகளும், காங்கிரசும் போகவேண்டும்.

சீமான், வைகோ, நெடுமாறனிடம் உங்கள் பாடங்களை கற்றுகொள்ளுங்கள். அதாவது அவர்களுக்கு இலங்கை தமிழர்களை அழிக்க துணை போன காங்கிரசை பதவியிறக்க வேண்டும். அதற்கு அவர்களின் முதல்ப்படி கருணாநிதியை தமிழ் நாட்டில் பதவி இறக்கியது. முசோலினி காங்கிரசை இந்தியாவிலிருந்து அகற்றி அங்கு நீங்கள் காந்தியத்தை உருவாக்க வேண்டும். இது இலங்கையின் கொடும்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டும். அதில் இலங்கை தமிழரும், முஸ்லீம்களும் விடுதலை காண்பார்கள். முஸ்லீம் சமுதாயத்திற்கு முன் உதாரணமான திகழும் சமுதாயம் தமிழ் நாட்டு முஸ்லீம்கள் சமுதாயம். உலகின் முதல் பெண்கள் பள்ளியை நிறுவியவர்கள் நீங்கள். உங்களால் இது முடியும்.

வாழ்த்துக்கள்

Edited by மல்லையூரான்

இலங்கையில் முஸ்லீம் அரசியில் வாதிகள் தமிழினப் படுகொலை நடந்தபோது மௌனம் காத்ததோடு சிங்கள அரசு சார்பாக அதனை மறைக்க முயற்சி செய்தவர்கள். தமிழனை அடக்கியபின்னர் தங்களுக்கு இந்நிலை ஏற்படும் என்பதை அறியாத அப்பாவிகளாக இருந்தார்களா என்பது தான் கேள்வி. எப்படியும் முஸ்லீம் மக்களுக்காகத் தமிழ் மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.