Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணையாளர்களிடம் கல்வியை வேண்டும் வன்னி மாணவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணையாளர்களிடம் கல்வியை வேண்டும் வன்னி மாணவி

யுத்தம் பலரது கைகளையும் கால்களையும் பறித்ததோடு விட்டுவிடாமல் அவர்களது கல்வியை அவர்களது வாழ்வையும் தின்று முடித்துப் போயிருக்கிறது. கல்வியை மட்டுமே நம்பிய ஒரு குடும்பத்தின் மகள் எறிகணை வீச்சில் கையும் பாதித்து காலும் பாதித்து நம்பிய கல்வியையும் இழந்து நிற்கிறாள். தனது எதிர்காலத்தை மேம்படுத்த இவளது எதிர்காலமே தங்களை காப்பாற்றுமென நம்புகிற இவளது அம்மாவும் தங்கையும் வாழ தனது கல்வியைத் தொடர விரும்புகிறாள்.

கல்வியில் முன்னேற வேண்டுமென்ற கனவோடு இருக்கிற இவளுக்கு தொடர்ந்து கற்க பொருளாதாரம் இல்லை. அயல் பிள்ளைகளிடம் பாடநூல்களைப் பெற்றுப்படிக்கிறாள். 2013ம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் போகும் கனவோடு இருக்கிற இந்த மாணவிக்கான கல்வியைக் கொடுங்கள்.

வயது கூடிவிட்டதால் சேர்க்கப்படாத பள்ளிகளை விட்டு தனியார் கல்விநிலையத்தில் கற்று சாதாரண தரத்தில் சித்தியடைந்துள்ள இந்த 23வயது யுவதியின் கல்விக் கனவை நிறைவேற்ற கருணையுள்ளம் கொண்டவர்களே நேசக்கரம் கொடுத்து உதவுங்கள்.

ஆயிரம் கோவில்கள் சென்று புண்ணியம் தேடுவதைவிட ஒரு குழந்தைக்கு கல்வி கொடுத்தல் பல்லாயிரமாண்டுப் புண்ணியத்தைத் கொண்டு வரும்.

மதுரா எழுதிய கடிதம் :-

mathura.jpg

உதவ விரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உங்கள் உதவியை வழங்கலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-

விபரங்களைப் பெற்றுக் கொள்ள :-

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களது பிள்ளைகள் பாடசாலை போக எங்கள் பிள்ளைகள் சிறந்த கல்வியைப் பெற்றுக் கொள்ள எங்கள் இனத்தை நேசித்து களம் போனவள் இந்த மதுரா.

பாடசாலையில் கற்கும் பருவம் தாண்டி எமக்காக தனது அங்கத்தையும் இழந்து ஊனமாகி கல்விக்கனவோடு காத்திருக்கிறாள். இவளுக்கு மாதம் 3ஆயிரம் ரூபா கல்விக்கான உதவி தேவைப்படுகிறது. கருணையாளர்களே எங்களுக்காக தனது கல்விக்கனவுகளைத் துறந்து காவலரணிலில் இருந்தவளுக்கு கல்வி கொடுங்கள்.

ஊனமான மதுராவுக்கு உறவுகளும் துணையில்லை. அம்மாவும் தங்கையுமே தைரியம். தனது எதிர்காலம்பற்றி அதிகம் அச்சப்படுகிற மதுராவின் வாழ்வில் நம்பிக்கை த(து)ளிர்க்க நேசக்கரம் கொடுத்துத் தூக்கிவிடுங்கள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்காக தனது கல்விக்கனவுகளைத் துறந்து காவலரணிலில் கனவுகளோடு தாயக விடுதலையை எதிர்பார்த்திருந்து ஊனமான மதுராவுக்கு கல்வி கொடுங்கள்.

தனது எதிர்காலம்பற்றி அதிகம் அச்சப்படுகிற மதுராவின் வாழ்வில் நம்பிக்கை த(து)ளிர்க்க நேசக்கரம் கொடுத்துத் தூக்கிவிடுங்கள்.

மாதம் 20€ இருந்தால் இவள் கல்வியால் உயர்ந்திடுவாள்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவி மதுராவிற்கான உடனடி அவசர உதவியினை வழங்கியமைக்கு மதுரா எழுதிய நன்றிக்கடிதம். மேற்கொண்டு மதுராவின் கல்விக்கான உதவியை வழங்க கனடாவிலிருந்து ஒரு உறவு முன்வந்துள்ளார். உதவ முன்வந்தவருக்கான மதுராவின் தொடர்புகள் எற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

mathuras-thanks-letter-1.jpg

mathurathanks-letter-2.jpg

mathura-letter-3.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.