Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை நிராகரித்து விட்டு மீண்டும் சீனா பக்கம் சாய்கிறது சிறிலங்கா

Featured Replies

சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு சீனாவிடம் மீண்டும் 1.5 பில்லியன் டொலரை கடனாகப் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

post-6010-0-94366300-1336059944.jpg

http://www.puthinapp...?20120503106125

  • தொடங்கியவர்

இலங்கை அரசு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள சீனாவிடம் மீண்டும் 1.5 பில்லியன் டொலரை கடனாகப் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்காவின் திறைசேரிப் பணிப்பாளர் பி.பி.ஜெயசுந்தர தலைமையிலான அதிகாரிகள் அண்மையில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அங்குள்ள அரச வங்கி ஒன்றின் மூலம் 1.5 பில்லியன் ரூபாவைக் கடனாகப் பெறுவதற்கான உறுதிமொழியைப் பெற்றுள்ளது.

இந்த நிதியில் இருந்தே, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மறுசீரமைப்பும், மொறகஹகந்தை திட்டமும் மேற்கொள்ளப்படவுள்ளன. சிறிலங்காவுக்கு கடன் வழங்கவுள்ள சீன அரச வங்கி எது என்பது பற்றிய தகவல்கள் வெளிப்படுத்தப்படவில்லை.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தற்போதைய சுத்திகரிப்புத் திறனான – நாளொன்று 50 ஆயிரம் பரல் என்ற அளவை இரட்டிப்பாக தரமுயர்த்துவது குறித்த சாத்திய வள ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த ஆலையை 2 பில்லியன் டொலர் செலவில் மறுசீரமைப்பதற்கு, இந்திய அரசுத்துறை நிறுவனமான இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் விருப்பம் வெளியிட்டிருந்தது. ஆனால், சிறிலங்கா அதனை நிராகரித்து விட்டது.

எனினும், இது குறித்து சீனா, ரஸ்யா, செக் குடியரசு, தென்கொரியா போன்ற நாடுகளுடன் சிறிலங்கா கலந்துரையாடியுள்ளது. இந்தியாவின் விருப்பத்தை நிராகரித்து விட்ட சிறிலங்கா அரசாங்கம் இந்த வாய்ப்பை சீனாவுக்கே வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேற்குலகுடனான மோதல் போக்கினாலும், சீன வங்கிகளிடம் இருந்து குறைந்த வட்டிக்கும், நிபந்தனைகள் அதிகமின்றியும் கடன் பெற முடியும் என்பதாலும், சீனாவின் உதவியைப் பெறவே சிறிலங்கா விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://nilavaram.com/index.php?option=com_content&view=article&id=9719:2012-05-03-16-46-29&catid=3:sri-lanka&Itemid=459

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.