Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்டபரம்பரை என வீரம் பேசும் பே :::::::::::::தமிழன் இலங்கையில் நான்காவது சிறுபான்மை…

Featured Replies

ltte-in-swiss-150x150.jpgஇங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள அதேநேரம், முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மை சமூகமாக வியாப்பகம் பெற்றுள்ளனர். இரண்டாம் நிலையில் இருந்த தமிழர்கள் நான்காம் நிலைக்கு பின்தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றதொரு நிலையில் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி அதிகரித்து வருகிறது. 1881 ஆம் ஆண்டு முதலாவது சனத்தொகை கணக்கெடுப்பின் படி சிங்களவர்கள் 66.91வீதமாகவும், தமிழர்கள் 24.90வீதமாகவும், முஸ்லீம்கள் 6.60வீதமாகவும் இருந்தனர்.

இலங்கையில் இதற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் கடந்த 1981 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது. அப்போது நாட்டில் சிங்களவர் பெரும்பான்மையினராகவும், தமிழர் இரண்டாவது நிலையிலும், முஸ்லிம்கள் மூன்றாவது நிலையிலும் காணப்பட்டனர்.

தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் 2011ல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் இலங்கையின் சனத்தொகை 2கோடியே 12 இலட்சத்து 83ஆயிரத்து 913 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி; தரும் தகவல் வெளியாகியுள்ளது. சிங்களவர்கள் 73.8வீதமாகவும், முஸ்லீம்கள் 7.2வீதமாகவும், இந்திய வம்சாவழி தமிழர்கள் 4.6வீதமாகவும், இலங்கை தமிழர்கள் 3.9வீதம் எனவும் இலங்கை புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இரண்டாவது பெரும்பான்மை இனமாக முஸ்லீம்கள் உயர்ந்துள்ள அதேவேளை இரண்டாவது பெரும்பான்மை இனமான (24.90வீதமாக இருந்த) இலங்கை தமிழர்கள் நான்காவது நிலையில் உள்ள சிறுபான்மை இனமாக 3.9வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளனர்.

மதரீதியாக புத்த மதத்தினர் 69.7வீதமாகவும், முஸ்லீம்கள் 7.6வீதத்தினராகவும், இந்துக்கள் 7.1வீதமாகவும், கிறிஸ்தவர்கள் 6.1வீதமாகவும் உள்ளனர். இலங்கையில் இந்துக்களை கிறிஸ்தவர்களாக, முஸ்லீம்களாக மதமாற்றம் வேகமாக நடைபெறுவதால் இந்துக்கள் நான்காவது இடத்திற்கு தள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த அழிவுகள், பெருந்தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டமை, கொல்லப்பட்டவர்களில் 99வீதத்தினர் இளைஞர்கள், அதிகமான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தமை, முஸ்லீம்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் சனத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களினால் தற்போது இலங்கையில் முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மையினராக விளங்குவதாக நம்பப்படுகிறது.

சனத்தொகை கணக்கெடுப்பு நேர்மையாக நடைபெறுமாயின் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடியுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியிருக்கிறார்.

முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீனும் இலங்கையில் முஸ்லிம்கள் இரண்டாவது பெரும்பான்மையினர் என்ற தகவல் தமக்கும் கிடைத்ததாகவும், அதற்கு சாத்தியமிருப்பதாகவும் சுட்டிக்காடடினார்.

தற்போது இலங்கையில் முஸ்லிம்கள்தான் இரண்டாவது பெரும்பான்மையினர் என்கிற செய்தி மகிழ்வுக்குரியதே என முஸ்லீம் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

முஸ்லீம்கள் இரண்டாவது பெரும்பான்மையாக வந்ததன் காரணமாகதான் சிங்கள கடும்போக்காளர்களின் பார்வை இலங்கை முஸ்லிம் உம்மா மீது திரும்பியிருப்பதாக யாழ். முஸ்லீம் இணையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவுதான் ஆளடையாள அட்டைக்கு தொப்பி அணிந்து படம் பிடித்தல் பற்றிய சர்ச்சை, குர்பான் கொடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட தடைகள், அநுராதபுர தர்கா தகர்ப்பு, சிங்கள மொழிமூல பாடசாலைகளில் முஸ்லிம் பிள்ளைகள் எதிர்கொள்ளும் திட்டமிட்ட சவால்கள் மற்றும் தம்புள்ள பள்ளிவாசலை சேதப்படுத்தியமை என பட்டியல் நீளமானது.

முஸ்லிம்கள் அதிகமான பிள்ளை பெறுகின்றனர், எனவே சிங்களத் தாய்களும் அதிகமான பிள்ளைகளை பெற்று தாய் நாட்டை பாதுகாக்க முன்வாருங்கள் என சிங்கள வீரவிதான மற்றும் மற்றும் ஜாதிக்கஹெல உறுமய மேற்கொண்ட பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர். சிங்களத் தாய்மார்கள் அதிகம் பிள்ளைகள் பெறும்போது அவர்களுக்கு விருது வழங்கப்படும் சம்பவங்கள் இன்றும் தொடரவே செய்கிறது.

இவ்வாறான நிலையில் இலங்கை சனத்தொகையில் முஸ்லிம்கள் இரண்டாவது நிலையில் காணப்படுகின்றனர் என்ற செய்தியை சிங்கள கடும்போக்காளர்களினால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே எதிர்காலங்களிலும் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைகள், பாரபட்சங்கள், சீண்டல்கள், தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் என சிங்கள கடும்போக்காளர்கள் நெருக்குவாரங்கள் அதிகரிக்கலாம் என யாழ். முஸ்லீம் இணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே இவ்விடயத்தில் உடனடியானதும், காலத்திற்கு பொருந்தக்கூடியதுமான வேலைத்திட்டங்கள் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது என்றும் இதுவிடயத்தில் அகில இலங்கை உலமா சபை, சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் அரசியல் தலைமைகள், முஸ்லிம் அமைப்புக்கள், முஸ்லிம் சார்பு ஊடகங்கள் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தின் உயர் நலனுக்காக செயற்படுவது அவசியமானது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம் யாழ் முஸ்லிம் வலைத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

தனது இனம்சார்ந்து யாழ். முஸ்லீம் வலைத்தளம் சிந்தித்திருப்பதும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியது.

ஆனால் ஆண்டபரம்பரை, பே………………பரம்பரை என வீராப்பு பேசிக்கொண்டு தங்களுக்குள் மோதி அழிந்து கொண்டிருக்கும் பே………தமிழன் என்ன செய்யப்போகிறான்?

Sri Lanka Demographics Profile 2012

Population 21,283,913 (July 2011 est.)

Age structure 0-14 years: 24.9% (male 2,705,953/female 2,599,717) 15-64 years: 67.2% (male 6,993,668/female 7,313,440) 65 years and over: 7.9% (male 720,219/female 950,916) (2011 est.)

Median age total: 30.8 years male: 29.7 years female: 31.8 years (2011 est.) Population growth rate 0.934% (2011 est.)

Birth rate 17.42 births/1,000 population (2011 est.) Death rate 5.92 deaths/1,000 population (July 2011 est.) Net migration rate -2.16 migrant(s)/1,000 population (2011 est.)

Urbanization urban population: 14% of total population (2010) rate of urbanization: 1.1% annual rate of change (2010-15 est.)

Sex ratio at birth: 1.04 male(s)/female under 15 years: 1.04 male(s)/female 15-64 years: 0.96 male(s)/female 65 years and over: 0.86 male(s)/female total population: 0.97 male(s)/female (2011 est.)

Ethnic groups Sinhalese 73.8%, Sri Lankan Moors 7.2%, Indian Tamil 4.6%, Sri Lankan Tamil 3.9%, other 0.5%, unspecified 10% (2001 census provisional data)

Religions Buddhist 69.1%, Muslim 7.6%, Hindu 7.1%, Christian 6.2%, unspecified 10% (2001 census provisional data) Languages Sinhala (official and national language) 74%, Tamil (national language) 18%, other 8% note: English is commonly used in government and is spoken competently by about 10% of the population Literacy

definition: age 15 and over can read and write total population: 90.7% male: 92.3% female: 89.1% (2001 census) School life expectancy (primary to tertiary education) total: 13 years male: 12 years female: 13 years (2004)

Education expenditures NA Maternal mortality rate 39 deaths/100,000 live births (2008) Children under the age of 5 years underweight 21.1% (2007) Health expenditures 4% of GDP (2009) Physicians density 0.492 physicians/1,000 population (2006) Hospital bed density 3.1 beds/1,000 population (2004)

www.Thinakkathir.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.