Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு அகதிகளாக சென்று மீளவும் தாயகம் திரும்பியோர் காலூன்ற முடியாமல் தவிக்கின்றனர்

Featured Replies

சிறிலங்காவின் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த 36 வயதான கிருஸ்ணவேணி நக்கீரன் என்கின்ற நான்கு பிள்ளைகளின் தாயார் தனது நாட்டில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக இது வரை இரு தடவைகள் நாட்டை விட்டு வெளியேறி பின் மீண்டும் திரும்பி வந்துள்ளார். இவர் தனது பதினாறாவது வயதில் அதாவது 1990ல் முதன் முதலாக தனது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தார்.

µ

ஐந்து ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தமது நாட்டுக்கு திரும்புவது பாதுகாப்பனது என்ற தவறான நம்பிக்கையைக் கொண்டிருந்த இவரது குடும்பத்தவர்கள் இராண்டவது தடவையாக 1998ல் இந்தியாவுக்கு சென்றிருந்ததனர். இந்நிலையில் இவரது குடும்பத்தவர்கள் 2010ல் அதாவது விடுதலைப் புலிகள் யுத்தத்தின் போது தோற்கடிக்கப்பட்டு ஒரு ஆண்டின் பின்னர் மீண்டும் சிறிலங்காவுக்கு வந்தனர். சிறிலங்காத் தீவில் தொடரப்பட்ட யுத்தம் முடிவுற்றிருக்கலாம். ஆனால், பல ஆண்டுகள் வரை இந்தியாவில் அகதிகளாக இருந்து விட்டு மீண்டும் தமது நாட்டுக்குத் திரும்பியுள்ள நக்கீரன் போன்றவர்கள் தமது வாழ்வில் பல கடினங்களை எதிர்நோக்குகின்றனர். "வாழ்க்கை மிகக் கடினமாக, மிக மிகக் கடினமாக உள்ளது. நாங்கள் இந்தியாவில் செய்த தொழிலைப் போல் இரு மடங்கு தொழில் செய்து சம்பாதிக்க வேண்டிய நிலையிலுள்ளோம்" என கிருஸ்ணவேணி நக்கீரன் கூறுகின்றார்.

சிறுபான்மைத் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பல பத்தாயிரக்கணக்கான சிறிலங்கர்கள், சிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் போது தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தனர். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையராலயத்தின் மதிப்பீட்டு அறிக்கையின் படி, இந்தியாவில் 100,000 வரையான சிறிலங்கா அகதிகள் வாழ்கின்றனர். இவர்களில் 68,000 சிறிலங்கர்கள் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 112 முகாங்களில் வாழ்கின்றனர்.

மே 20099ல் யுத்தம் முடிவுற்றதன் பின்னர், இந்தியாவின் அகதி முகாங்களில் வாழ்ந்த மக்களில் சிலர் மீண்டும் தமது நாட்டுக்கு திரும்பியுள்ளனர். கடந்த ஆண்டில் இந்தியாவில் வாழ்ந்த 1700 வரையான சிறிலங்காத் தமிழர்கள் மீண்டும் தமது நாட்டுக்கு திரும்பி வருவதில் UNHCR நிறுவனம் அனுசரணை வழங்கியுள்ளது.

ஆனால் இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிறிலங்காவுக்கு மீளத் திரும்பிய தமிழர்களின் எண்ணிக்கை 30 சதவீதமாகக் குறைவடைந்துள்ளதாக ஐ.நா அகதிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 597 பேர் சிறிலங்காவுக்கு திரும்பி வந்ததாகவும், ஆனால் இவ்வாண்டின் முதல் காலாண்டில் 408 பேர் மட்டுமே இந்தியாவிலிருந்து மீளவும் தமது சொந்த நாடான சிறிலங்காவுக்கு திரும்பி வந்துள்ளதாகவும் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அகதி முகாங்களில் தங்கியுள்ள சிறிலங்கர்கள் தமது நாட்டுக்கு திரும்புவதில் தயக்கம் காட்டுவதற்கு, சிறிலங்காவுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையே தொடரப்பட்ட படகுச் சேவை இடைநிறுத்தப்பட்டதே காரணம் என சிறிலங்காவில் செயற்படும் UNHCR செயலகம் தெரிவித்துள்ளது. இந்தப் படகுச்சேவையானது ஒப்பீட்டளவில் குறைந்த போக்குவரத்துச் செலவைக் கொண்டிருந்ததுடன், இதன் மூலம் மேலும் வீட்டுப் பொருட்களைக் கொண்டுவருவதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

எனினும், இந்தியாவிலிருந்து ஏற்கனவே சிறிலங்கா சென்றவர்கள் அனுபவிக்கும் கடின வாழ்வே இவ்வாறு எண்ணிக்கை குறைவதற்கான காரணம் என மனித உரிமைகள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. சிறிலங்காவின் வடக்கில், யுத்தம் இடம்பெற்று, உடைமைகள் அழிக்கப்பட்ட வன்னிப் பிரதேசத்துக்கு மீள்குடியேறிச் செல்பவர்களின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

"வன்னிப் பிரதேசத்துக்கு திரும்பி வருவோர் மீண்டும் தமது வாழ்வை ஆம்பத்திலிருந்து கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இவர்கள் இந்தியாவில் இருந்த போது சிறிலங்காவில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. உண்மையில் அவர்கள் புதிய நாடொன்றில் புதிய வாழ்க்கை தேடி வந்துள்ளனர். இதனால் அவர்கள் எல்லாவற்றையும் தாமே உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது" என 1983 இலிருந்து சிறிலங்காவிலும், இந்தியாவிலும் செயற்பட்டு வரும் ஈழ அகதிகள் புனர்வாழ்வு நிறுவனத்தின் [Organisation for Eelam Refugee Rehabilitation - OfERR] சிறிலங்காவுக்கான இயக்குனர் சின்னத்தம்பி சூரியகுமாரி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீளவும் வன்னிப் பிரதேசத்தில், அதாவது யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் மீளக் குடியேற்றப்படும் மக்களுக்கு உதவி புரிவதை நோக்காகக் கொண்டு பல நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், இந்தியாவிலிருந்து சிறிலங்காவுக்கு திரும்பி வந்தவர்களுக்கு உதவி புரிவதற்கான குறிப்பிடக் கூடிய எந்தவொரு நிகழ்ச்சித் திட்டமும் காணப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"இந்நிலையில் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதால் குறிப்பாக ஏற்கனவே சிறிலங்காவில் நெருங்கிய உறவுகள் இல்லாதோர் தாம் தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோம் எனக் கருதுகிறார்கள். எனவே இவர்கள் சிறிலங்காவுக்கு திரும்புவதில் தயக்கம் காட்டுகின்றனர்" என சூரியகுமாரி மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்குத் திரும்பும் தமிழர்கள் தமக்கான அடையாள அட்டைகள், காணி உறுதிகள், பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் போன்ற முக்கிய ஆவணங்களை சிறிலங்காவில் யுத்தம் தொடரப்பட்ட காலத்தில் அதிலிருந்து தப்பி இந்தியாவுக்கு சென்ற வேளையில் தொலைத்து விட்டார்கள் எனவும், இவ்வாறான ஆவணங்கள் சிறிலங்காவில் இன்றியமையாத ஒன்றாக காணப்படுவதாகவும் சிறிலங்காவுக்கான UNHCR வதிவிடப் பிரதிநிதி மைக்கல் ஸ்வாக் [Michael Zwack] தெரிவித்துள்ளார்.

"இதனை விட தங்குமிடம் என்பது இவர்களுக்கு பெரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது. இவர்கள் தமக்கான சொந்த வீடுகளைக் கட்டிக் கொள்வதற்கும், அல்லது பழுதுபட்ட தமது வீடுகளைத் திருத்திக் கொள்வதற்கும் உதவிகளை எதிர்பார்த்து நிற்கின்றனர்" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அழிக்கப்பட்ட 100,000 வரையான வீடுகளில் 16,000 வீடுகள் மட்டுமே மீளப் புனரமைக்கப்பட்டுள்ளதாக பெப்ரவரி 2012ல் ஐ.நா வால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விட 35,000 வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான அல்லது திருத்துவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில், யுத்தம் இடம்பெற்ற வடக்கு கிழக்கில் 40,000 வீடுகளை வரை கட்டிக் கொடுப்பதற்கான உத்தரவாதத்தை இந்திய அரசாங்கம் வழங்கியுள்ளது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்து அல்லது இந்தியாவிலிருந்து மீளவும் வன்னிப் பிரதேசத்துக்கு திரும்பியுள்ள மக்கள் தற்போது காணிப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.

"வன்னியிலுள்ள பெரும்பாலான காணி உரிமையாளர்கள் தமது காணி மீதான தமது உரிமையை உறுதிப்படுத்துவதற்கான உறுதிச் சான்றைப் பெற்றுக் கொள்வதில் கடினங்களை எதிர்கொள்கின்றனர். காணிப் பிரச்சினை என்பது இங்கு பெரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது" என யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டியங்கும் பெண்கள் மற்றும் அபிவிருத்திக்கான மையத்தின் தலைவி சறோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தனியாட்களாக இந்தியாவுக்கு சென்றவர்கள் தற்போது குடும்பத்தவர்களாக மீளவும் திரும்பி வந்து கொண்டிருப்பதால் காணி மற்றும் வீட்டுத் திட்டப் பிரச்சினைகள் தற்போதும் தொடர்வதாக சூரியகுமாரி குறிப்பிட்டுள்ளார்.

1980 களில் ஐந்து பிள்ளைகளுடன் இந்தியாவுக்கு தப்பிச் சென்று தற்போது சிறிலங்காவுக்கு திரும்பி வருபவர்கள் ஐந்து தனித் தனிக் குடும்பங்களைக் கொண்டுள்ளனர். "இவ்வாறு சென்ற ஐந்து பிள்ளைகளும் தற்போது ஐந்து குடும்பங்களைக் கொண்டுள்ள நிலையில், இவர்கள் தொடர்ந்தும் தமக்குச் சொந்தமான மிகச் சிறிய காணித் துண்டிலேயே வாழவேண்டிய நிலை காணப்படுகின்றது" என சூரியகுமாரி மேலும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு திரும்பியுள்ள நக்கீரன் போன்றவர்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். அத்துடன் இவர்கள் விட்டுச் சென்ற நிலங்கள் தற்போது வேறு ஆட்களால் உரிமை கோரப்பட்டுள்ளதால், இவர்கள் தமது சொந்த நிலத்திலேயே காணியற்றவர்களாக வாழ வேண்டிய நிலைக்கு உட்பட்டுள்ளனர்.

"தற்போது இங்கே எமது சொந்த நிலத்தை எம்மால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. நாங்கள் எமது சொந்ந நிலத்தில் வேறு ஆட்களுடன் சேர்ந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்" என நக்கீரன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் வடக்கு மாகாணத்துக்கு மீளவும் குடியமர்கின்ற மக்கள் வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு முகங்கொடுக்கின்றனர்.

இவ்வாறு திரும்பி வருபவர்களுக்கு UNHCR நிறுவனம் மீள்குடியேற்ற உதவிக் கொடுப்பனவாக 200 அமெரிக்க டொலர்களை வழங்குகின்றது. "அவர்கள் இக் கொடுப்பனவைக் கொண்டு தாம் விரும்பியபடி தமது வாழ்வை மீள ஆரம்பிப்பதற்குத் தேவையான எதனையும் வாங்கிக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக, வீட்டுப் பாவனைப் பொருட்கள், துவிச்சக்கரவண்டிகள், பயிர் விதைகள் போன்ற எதனையாவது வாங்கிக் கொள்ள முடியும். அல்லது தமது வீட்டைத் திருத்திக் கொள்ள முடியும்" என ஸ்வாக் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தடைகளைத் தாண்டி தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியவர்கள் தாம் சரியான தெரிவையே எடுத்துள்ளதாக நம்பிக்கை கொள்கின்றனர்.

"இது அவர்களுக்கு கிடைத்த சந்தர்ப்பமாக, நம்பிக்கையை பெற்றுக் கொடுக்கின்றது. இதனாலேயே அவர்கள் நம்பிக்கையுடன் மீளவும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி வந்துள்ளனர்" என சூரியகுமாரி தெரிவித்துள்ளார்.

செய்தி வழிமூலம் : IPS - by Amantha Perera

மொழியாக்கம் : நித்தியபாரதி

http://www.puthinappalakai.com/view.php?20120505106137

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.