Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றவாளிகளுடன் கைகுலுக்குவதா? அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சரின் இலங்கை பயணத்தை எதிர்த்து மெல்பேர்ணில் ஆர்ப்பாட்டம்(காணொலி)

Featured Replies

அவுஸ்திரேலியா குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சரின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை(04-05-20112) மெல்பேர்ண் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. Refugee Action Collective (RAC) அமைப்பினரால் ஒழுங்குபடுத்தப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் அகதிகளுக்காக குரல்கொடுக்கும் பல செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

அவுஸ்திரேலியாவுக்கு கடல்வழியாக வரும், இலங்கைக் குடிமக்கள் தொடர்பிலான விவகாரம் குறித்து, சிறிலங்கா அரச தரப்புடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவென

அவுஸ்திரேலியா குடியேற்ற விவகாரங்களுக்கான அமைச்சர் Chris Bowen, இரண்டு நாள் பயணமாக கடந்த புதன்கிழமை சிறிலங்காவுக்கு சென்றுள்ளார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போர்க்குற்றவாளியான ராஜபக்சவுடன் Chris Bowen சந்திப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த ஆர்பாட்டக்காரர்கள், அவுஸ்திரேலியா அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் தஞ்சமடையும் தமிழ் மக்களுக்கு புகலிடம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவுஸ்திரேலியாவின் பல தடுப்பு முகாம்களில் 56 புகலிடம்கோரிய தமிழர்கள் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்று பிரகடனப்படுத்தி தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தின் இத்தகையை போக்கைக் கண்டித்த ஆர்ப்பாட்டக்காரர்கள். இத்தகையை நடைமுறைகளிலிருந்து தமிழர்களுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இரு செயற்பாட்டளார்களின் உரை

http://youtu.be/Q0zLgxIta1o

http://youtu.be/d3jPyODpUi0

http://www.pooraayam.com/mukiaya/3903-2012-05-05-10-23-40.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.