Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 22 ஆவது தமிழர் உதைபந்தாட்டப் போட்டிக்கான கழகங்களுக்கிடையிலான சந்திப்பு லண்டனில் நடைபெற்றது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

tro2012sports-news-150seithy.jpg

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் இவ்வாண்டு பிரித்தானியாவில் நடாத்தப்படவுள்ள 22 ஆவது தமிழர் உதைபந்தாட்டப் போட்டிக்கான முக்கிய கலந்துரையாடல் லண்டனில் 20.05.2012 நேற்று இடம்பெற்றது.

எதிர் வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் 22 ஆவது உதைபந்தாட்டப் போட்டியில் பங்குகொள்ளும் கழகங்களுக்கான இக் கலந்துரையாடலை இவ் ஆண்டுக்கான விளையாட்டுக் குழுத் தலைவர் திரு.றஞ்சன் அவர்கள் தலைமைதாங்கி நடாத்தினார். இக் கலந்துரையாடலில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் (TRO) பிரித்தானியக் கிழை சார்பில் அதன் பிரதிநிதி திரு. கேதீஸ் அவர்களும், பல விளையாட்டுக் கழக பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர்.

வருடா வருடம் வங்கிவிடுமுறையில் நடைபெறும் தமிழர் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (TRO)முன்னின்று நடாத்தும் இவ் உதைபந்தாட்டப் போட்டியானது இவ்வருடம் பிரித்தானிய மகாராணியின் 60 ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு லண்டனில் நடைபெறவுள்ள நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு 27.05.2012 ஞாயிற்றுக்கிழமமை அன்று நடாத்துவது என ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

அத்தோடு கடந்தகால பட்டறிவுகளின் அடிப்படையில் இவ்வாண்டு நடைபெறும் 22 ஆவது உதைபந்தாட்டப் போட்டிகளின் கணக்கறிக்கை வெளிப்படையாக ஒரு மாதகாலப்பகுதிக்குள் விளையாட்டுக் கழகங்களகங்களின் பார்வைக்கு வைக்கப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) உத்தியோகபூர்வ விளையாட்டுப் போட்டி 27.05.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று RICHARD EVENS, Memorial Playing Fields, Roehamption Vale, London, SW15 3PQ எனும் முகவரியில் காலை 9:00 மணியிலிருந்து நடைபெறும் என்பதையும், வேறு எந்த நாளிலோ, அல்லது இடத்திலோ தமிழர் புனர்வாழ்வுக் கழகம் விளையாட்டுப் போட்டியை இவ்வாண்டு நடாத்தவில்லை என்பதையும் விளையாட்டுக் கழகங்களுக்கும், மக்களுக்கும் அறியத்தருகின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு கீழ்க்காணும் இலக்கங்களுடனோ அல்லது மின்னஞ்சல் முகவரியூடாகவோ தொடர்பு கொள்ளவும்.

அலுவலகம்: 02087338268

றஞ்சன்: 07896948892

கேதீஸ்: 07809667933

தீபன்: 07951900051

மின்னஞ்சல்: trosportsuk@gmail.com

TRO2012sports-uk-550778_001.jpg

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.