Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வருவானாம் ராஜபக்சே- பகைவிரட்ட வா தமிழா!!!-ஆதித்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

news_20101221_1789117773.jpg

அடிமைப்பட மறுத்து அகதியென்ற இழிச்சொல்லுடனும் மறுக்கப்பட்டஉரிமைக்காய் பயங்கரவாதி என்ற பழிச்சொல்லுடனும் இன்று உலகம் முழுதும் விடியலுக்காய் காத்திருக்கும் என் தமிழ் சொந்தங்களே!!

உலகம் உருண்டை என்பதை ஊர் ஊராய் அலைந்து நிரூபித்துக்கொண்டிருப்பவர்கள் நாங்கள் "சொந்தமண்' 'வீடு' 'வாசல்' எல்லாம் அங்கே விருந்தாளிகள் ஆக்கிரமிப்புக்குள் அலறித்துடித்துக்கொண்டிருக்கின்றது.விடுதலை கேட்ட ஓரே காரணத்தால் விரட்டியடிக்கப்பட்டோம்.சுதந்திரம் கேட்டபோது சுட்டுத்தள்ளப்பட்டோம்.உரிமைகள் கேட்டபோது உருட்டுக்கட்டைகளால் தாக்கப்பட்டு இருட்டு அறைகளில் அடைக்கப்பட்டோம்.இலங்கைத்தீவினில் இனியும் வாழமுடியாது என அகதியாகி காற்றிலும் நீரிலும் உயிரைக்கூட பணயம் வைத்து பயணித்து இன்று அகதிகளாக வாழ்ந்துகொண்டிருந்தாலும் நாங்கள் யாருக்கும் அடிமைகளாக எங்கும் வாழவில்லை வாழப்போவதும் இல்லை.

வந்தாரை வாழவைப்பதுவே தமிழன் பண்பாடாக இருந்தாலும் சொன்ற இடத்தையும் செழிப்படையவைத்து தமிழ் இனத்தின் தனித்துவத்தை பறைசாற்றி நிற்கின்றோம்.இலங்கைத்தீவிலே இன்று நேற்றல்ல அன்றுமுதல் தமிழர்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.பல வருடங்களாக நாங்கள் சிங்கள பேரினவாதிகளால் பயங்கரவாதிகளாக உலகிற்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள்.ஆனால் இன்று உகலம் எங்களது போராட்டம் நியாயமானது என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு எத்தணித்து வருகின்றது.மாற்றம் ஒன்றுதான் உலகில் மாற்றமில்லாத ஒன்று அந்த மாற்றத்தை செய்யவேண்டியது தமிழர்களாகிய எங்களது கடமை.

இன்று கனத்த இதயத்துடன் உலகிலே அலைந்தவண்ணம் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் இருக்கின்றோம் ஆனால் மானிடமே மௌனித்துப்போக மாபெரும் இன அழிப்பை செய்து மிருகங்கள் கூட செய்யத்துணியாத கொலைகளை செய்து மனிதத்தையே கொன்று புதைத்து கொக்கரிக்கும் சிங்களவன் இன்று உகலம் முழுவதும் சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருப்பது மட்டுமல்லாது தம்மை மாவீரர்களாகவும் அகிம்சாவாதிகளாகவும் அடையாளப்படுத்தி அதே நேரத்தில் தமிழர்களாகிய எம்மீது பயங்கரவாதம் என்ற முத்திரையினை பதித்து வருகின்றது .உண்மையிலே வேதனையான விடயம் குற்றமற்ற தமிழர்கள் தண்டனைகள் அனுபவித்து வரும் நிலையிலே!! குற்றவாளிகள் சுற்றவாளிகள் போல் நடமாடுவது உலகத்தில் மனிதம் மரணித்துப்போனதாகவே ஊகித்துக்கொள்ள முடிகின்றது.

எதிர்வரும் பிரித்தானிய அரசி முடிசூட்டிய அறுபதாவது வருட நிறைவுவிழாவே களங்கம் சூழப்போகிறது. இதனை தடுத்து நிறுத்தி விழாவுக்கு சிங்கள தேசத்தின் அதிபரும் பெரும் இனஅழிப்பு ஒன்றின் பிரதான குற்றவாளியுமான மகிந்தராஜபக்ச வருவதற்கு எதிர்ப்பினை தெரிவிப்பது மட்டுமல்லாது பிரித்தானிய மக்களையும் இணைத்து ஒரு போர்க்குற்றவாளி பிரித்தானிய மண்ணுக்குள் பிரவேசிப்பதை தடுப்போம் லட்சக்கணக்கான தமிழ்மக்களை கொன்று குவித்து தமிழர்பிரதேசங்களில் இன்றும் இராணுவ ஆட்சியை நடாத்திவரும் மகிந்த ராஜபக்ச இந்த விழாவில் கலந்து கொள்வது உலக மானுட பண்புகளுக்கும் மனித உரிமைகளுக்கும் பெருத்த அவமானம் ஆகும். அத்துடன் பாரம்பரியம் மிக்க பிரித்தானிய முடியாட்சிக்கும் இது மிகப்பெரும் களங்கத்தையும் வரலாற்று அவமானத்தையும் தந்துவிடும்.

மனித உரிமைகளையும் சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டு மிதித்து அதன்மீது ஏறிநின்று கொடும் ஆட்சி புரியும் மகிந்த ராஜபக்சவை பிரித்தானியாவிற்குள் இனி எந்த சந்தர்ப்பத்திலும் வரமுடியாத அளவுக்கு எமது எதிர்ப்பினை காட்டுவோம்.

வேடந்தாங்கள் பறவைகளாய் வாழ்கின்ற போதும் அக்கினிப்பறவைகளாய் சிறகுகளை விரிப்போம் -பத்து இலட்சம் தமிழனை அகதிகளாக்கி பிருத்தானியாவிற்குள் விரட்டிய சிங்களம் எப்படி துனிச்சலாக பிரித்தாணியா வருவதற்கு ஆயத்தமாகும் ஈழத்தமிழனை இழிவாக நினைத்தானா தரங்கெட்ட தமிழன் எண்று தவறாக நினைத்தானா வரவிட்டு அடிப்பது வீரத்தமிழனின் போரியல் மரபு .கொலைவெறியர்கூட்டம் பிரித்தானியாவில் காலடி வைக்கும்போது மறத்தமிழா சுற்றிவளைத்து முற்றுகையிட்டு பின்னங்கால் புடரியில் அடிக்க ஓடவைப்போம்.

அடம்பன் கொடிகளாய் ஆங்காங்கே அலைகின்ற தமிழனெல்லாம் ஒன்றாய் திரண்டு பகைவனுக்கு எம் பலத்தினை காட்டுவோம்.இலங்கைத்தீவுக்குள்ளே சிங்களபௌத்த பேரினவாதம் சிறைப்பட்டுக்கிடக்கட்டும் .வீறுகொண்டெழு தமிழா வேட்டை நாய்களை துரத்திவிட.

http://www.eeladhesa...chten&Itemid=50

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.