Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெனிசுவெலா கேராகஸ் விமான நிலையத்தில் 4 மாதம் தங்கியிருந்த இலங்கை தமிழ் இளைஞர் மாயம் (video in)

Featured Replies

வெனிசுவெலா – கேராகஸ் சர்வதேச விமான நிலையத்தில் நான்கு மாத காலமாக வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

விசா எதுவும் இன்றி வெனிசுவெலா சென்ற குறித்த இலங்கையரை நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை எனவும் அதற்குக் காரணம் வெனிசுவெலாவில் இலங்கை தூதரகமோ அலுவலகமோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமேஸ்வரன் என்ற பெயருடைய குறித்த இலங்கை இளைஞன் கையில் இவ்வித ஆவணங்களும் இல்லாததால் விமான நிலைய கட்டடத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது என பணிக்கப்பட்டிருந்தார்.

கையில் பணம் எதுவும் இல்லாமல் விமான நிலைய தொழிலாளர்களின் உதவியில் இருந்து வந்த பரமேஸ்வரன், விமான நிலைய கட்டடப் பகுதி ஒன்றில் உறங்கியதாகவும் பொது மலசலக்கூடத்தை கடந்த நான்கு மாதங்களாக பயன்படுத்தி வந்ததாகவும் வெனிசுவெலா தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மெக்சிகோ செல்லும் வழியில் பரமேஸ்வரன் தவறுதலாக வெனிசுவெலா விமான நிலையத்தில் இறங்கிவிட்டதாக வெனிசுவெலாவின் சில ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் காணாமல் போயுள்ள பரமேஸ்வரன் இலங்கை சென்றுவிட்டாரா அல்லது வெனிசுவெலாவில் தங்கியுள்ளாரா என தகவல் கூற முடியாதுள்ளதென வெனிசுவெலா அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

http://thaaitamil.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.