Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விவகாரமாகியுள்ள தமிழ்க் கைதிகள் பிரச்சினை! (செய்தி ஆய்வு)

Featured Replies

விசாரணைகளின்றித் தடுப்பக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினை இப்போது சர்வதேச விவகாரமாகியிருக்கின்றது. சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் உண்ணாவிரதப் போரரட்டத்தையடுத்து வவுனியாவிலும், கொழும்பிலும் மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனைவிட ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் கைதிகள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இதன்மூலம் தடுப்புக்காவலில் உள்ளவர்கள் தொடர்பில் சர்வதேசத்துக்கும் பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மகிந்த ராஜபக்‌ஷ அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் சென்றுள்ள போதிலும் காணாமல்போனவர்கள் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்படும் போது, நிலைமைகளைச் சமாளிப்பதற்காக சில வாக்குறுதிகளை அரசாங்கம் வழங்குவதுதான் வழமையாக உள்ளதே தவிர பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதில்லை. காலத்தைக் கடத்தும் வகையில் சில வாக்குறுதிகளை வழங்குவது என்பது அரசுக்குக் கைவந்த கலையாகவே இருந்துவருகின்றது.

கைதிகளின் விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் சர்ச்சையைக் கிளப்பினார். கைதிகளின் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர் அங்கு வலியுறுத்தியிருந்தார். மறுதினம் இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அரசியல் கைதிகள் என இந்த நாட்டில் யாரும் இல்லை எனக் கூறியதுடன் சிறைக்கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்காக மூன்று விஷேட நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இருந்தபோதிலும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்வுத் திட்டம் தொடர்பாக தடுப்புக் காவலில் உள்ள கைதிகள் திருப்தியடைந்திருப்பதாகத் தெரியவில்லை. இது தொடர்பாக வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தெரிவிக்கையில், இது தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு திட்டம் எனவும் இது சாத்தியமான ஒன்றல்ல எனவும் தெரிவித்தார். இருந்தபோதிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் இதற்காக ஒரு மாத கால அவகாசத்தைக் கொடுத்துப்பார்ப்போமே என்ற நலைப்பாட்டில் இருக்கின்றது!

அரசாங்கத்தினால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள யோசனை ஒன்றும் புதிதல்ல எனக் குறிப்பிடும் கைதிகள் விவகாரத்தைக் கையாளும் சட்டத்தரணி ஒருவர், மூன்று வருடங்களுக்கு முன்னரும் இதேபோன்ற ஒரு யோசனை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டபோதிலும் அது நிறைவேற்றப்படவில்லை எனக் குறிப்பிடுகின்றார். கைதிகள் உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுக்கும் போது அதனை நிறுத்துவதற்கான ஒரு உபாயமாக இவ்வாறான வாக்குறுதிகளை அரசாங்கம் கொடுப்பதும், பின்னர் எதனையும் செய்யாதிருப்பதும் வழமையானதாகவே இருந்துள்ளது என்பதையும் அவர் சட்டிக்காட்டுகின்றார்.

2009 ஆம் ஆண்டு நீதி அமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடைதான் இந்த யோசனையை முதலில் முன்வைத்தார். 2009 அக்டோபர் மாதம் தமது விடுதலையை வலியுறுத்தி கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்திய போது அமைச்சர் மொரகொடையின் தலையின் கீழ் இதேபோன்ற குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட பலர் இருப்பதார்கள் எனவும். இதன் அடிப்படையில் வடக்கு, கிழக்கில் விஷேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விசாரணைகளைத் துரிதப்படுத்தப்படும் எனவும் அப்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அப்போது அந்தச் செய்தியைச் சிறைச்சாலைக்குக் காவிக்கொண்டுவந்தவர் மிலிந்தவின் ஆலோசரகராக இருந்த ராஜன் ஆசீர்வாதம். அவர் உண்ணாவிரதம் இருந்த கைதிகளிடம் இந்த யோசனையை முன்வைத்து உண்ணாவிரததத்தைக் கைவிடுமாறு கோரினார். கைதிகளும் விஷேட நீதிமன்றங்களின் மூலம் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்கள். ஆனால் அதன் பின்னர் எதுவும் நடைபெறவில்லை. அரசாங்கம் தன்னுடைய வேலைகளில் மூழ்கிவிட்டது.

பின்னர் 2010 இல் மீண்டும் கைதிகள் உண்ணாவிரததத்தை ஆரம்பித்த போது, சிறைச்சாலைக்குச் சென்ற அரச தரப்பினர் மீண்டும் சில வாக்குறுதிகளை வழங்கினார்கள். அதாவது போர் முடிவடைந்து இன்னும் ஒரு வருடம் முடிவடையவில்லை. உடனடியாக அனைத்தையும் செய்ய முடியாது. ஆனால் உங்களை பிணையில் விடுவிப்பதற்கான ஏற்பாடுகளை நாம் செய்திருக்கின்றோம். கொஞ்ச நாட்களில் உங்களை விடுதலை செய்துவிடுவோம் என்று வாக்குறுதியளித்தார்கள். இந்த வாக்குறுதியை கைதிகள் ஏற்கமறுத்தபோது, சட்டமா அதிபர் இந்தப் பிரச்சினையை மூன்று மாத காலத்துக்குள் தீர்ப்பதாக வாக்குறுதியளித்துள்ளார். விஷேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு உங்கள் மீதான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் எனக் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடச் செய்வதில் அரச தரப்பு வெற்றி பெற்றது.

ஆனால், விஷேட நீதிமன்றம் அமைக்கப்படவும் இல்லை. விசாரணைகள் துரிதப்படுத்தப்படவும் இல்லை!

ஆக, விஷேட நீதிமன்றம் என்ற வாக்குறுதி வழங்கப்படுவது இதுதான் முதன் முறையல்ல. உண்மையில் இப்போது மூன்றாவது முறையாக அந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

கைதிகள் விவகாரம் தொடர்பில் சம்பந்தன் கிளப்பிய பிரச்சினைக்கு அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கொடுத்துள்ள தீர்வுத்திட்டமானது 2009 அக்டோர் மாதம் அமைச்சர் மிலிந்த மொரகொடையினால் முன்வைக்கப்பட்ட அதேதீர்மானம்தான் என இக்கட்டுரையாளருக்குச் சுட்டிக்காட்டின கைதிகளின் விவகாரத்தை கையாளும் குறிப்பிட்ட சட்டத்தரணி, அன்று நிறைவேற்ற முடியாது போன இந்த யோசனையை இன்று அரசாங்கம் எவ்வாறு நிறைவேற்றப்போகின்றது எனவும் கேள்வி எழுப்புகின்றார்.

இருந்தபோதிலும் அப்போதிருந்த சூழ்நிலைக்கும் இப்போதுள்ள சூழ்நிலைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசத்தைக் கருத்திற்கொண்டுதான் தாம் உண்ணாவிரதத்தைக் கைவிட இணங்கியதாக வெலிக்கடையிலுள்ள தமிழ்க் கைதி ஒருவா தெரிவிக்கின்றார். முன்னர் சர்வதேசத்தின் கவனம் இந்தப் பிரச்சினை தொடர்பாக பெருமளவுக்கு இருக்கவில்லை. இப்போது சர்வதேசத்தின் கவனம் கைதிகள் விடயத்தில் அதிகளவுக்குக் குவிந்திருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கை புலப்படுத்துகின்றது. அதனைவிட அமெரிக்காவும் இப்பிரச்சினை தொடர்பில் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.

இந்த வகையில், நீண்டகாலமாகத் தடுப்புக் காவலில் உள்ள தமிழ் இளைஞர்கள், சரணடைந்த விடுதலைப் புலிகள் விவகாரத்தில் ஆக்கபூர்வமான முறையில் செயற்படாவிட்டால் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அரசு நெருக்கடிகளை எதிர்கொள்வது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்!

- தமிழ் லீடருக்காக கொழும்பிலிருந்து பார்த்தீபன்.

http://tamilleader.c...0-07-53-15.html

Edited by ஊர்பூராயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.