Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கணவரை கொல்ல விமானிக்கு பணம் கொடுத்த லண்டன் மனைவி! இருவர் கைது!!

Featured Replies

திருகோணமலை ஐயனார்கேணி வீதியில் 2012-04-18ம் திகதி அன்று இரவு 09.30 மணியளவில் 28 வயதுடைய கிரிக்கெட் வீரரான ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரன் என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் இன்று (06) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

26 மற்றும் 30 வயதுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 30 வயதுடைய சந்தேகநபர் விமானி என தெரியவந்துள்ளது.

குறித்த விமானி இங்கிலாந்து சென்றிருந்த போது ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரன் என்பவரின் மனைவியுடன் கள்ளத் தொடர்பை பேணி வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண் இலங்கயைில் உள்ள தனது கணவரான ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரனை கொலை செய்ய சந்தேகநபரான விமானிக்கு 1750 பவுன் பணம் கொடுத்துள்ளார்.

இதன் பின்னணியிலேயே ஈஸ்வரதாஸன் கேதீஸ்வரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை குற்ற விசாரணை திணைக்களத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பைச் சேர்ந்த சிங்களவர்களாவர்.

மேலும் பிரித்தானியாவில் உள்ள குறித்த பெண்ணை கைது செய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிக்கை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

http://thaaitamil.com/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA/

  • கருத்துக்கள உறவுகள்

28 வயது உடையவரை, 1750 பவுண்ஸுக்கு கொலை.

சிங்களவனுடன் கள்ளத்தொடர்பு.

பிறகு என்னத்துக்கு அந்த தமிழ் கிரிக்கெட்வீரரை திருமணம் செய்தவர் அந்தப் பெண்.

பேசாமல் சிங்களவனுக்கே... கழுத்தை நீட்டியிருக்கலாமே.

  • கருத்துக்கள உறவுகள்

28 வயது உடையவரை, 1750 பவுண்ஸுக்கு கொலை.

சிங்களவனுடன் கள்ளத்தொடர்பு.

.

கள்ளத்தொடர்பு விடயத்தில் மட்டும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்... ...No இனவாதம்

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளத்தொடர்பு விடயத்தில் மட்டும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்... ...No இனவாதம்

சிலரின் செய்கைகளை நினைக்க, வாழ்க்கையே... வெறுக்கும் புத்தன்.

சிங்களவன், தமிழனை கொல்வது காணாது என்று... இவர்கள் காசு கொடுத்து கொல்கிறார்கள். :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.