Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திமுக குடும்ப அரசியல் படுத்தும்பாடு.

Featured Replies

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சரத்குமார் இன்று ஒரு கடிதம் எழுதி அனுப் பினார். அந்த கடிதம் கீழே

அன்புத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு.

நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நடிகர் சரத்குமார் எழுதும் கடிதம்.

சில நினைவுகள் மறக்க முடியாதவை. 1997-ஆம் ஆண்டு தமிழ்திரையுலகில் `சூரியவம்சம்' என்கிற மாபெரும் வெற்றியைத் தந்த நான் அரசியல் களத்தில் பிரசாரம் செய்ய இறங்குகிறேன்....

திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கோடு த.மா.கா.-தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கினேன். எந்த எதிர்பார்ப்போ, வேண்டுகோளோ இன்றி தங்களது கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனும் ஒரே குறிக்கோளோடு செயல் பட்டேன்.

எந்த ஒரு பிரதிபலனும் பாராமல், இரவு-பகல் பாராமல் எப்படி சூறாவளியாக பிரசாரம் செய்தேன் என்பதை தாங்களும் அறிவீர்கள். தங்களது இயக்க முன்னோடிகளும் அறிவார்கள்.

தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர உதவினேன் என்கிற ஒரே ஒரு மகிழ்வான உணர்வோடு இருந்தவன், தங்களால் ஈர்க்கப்பட்டு தங்களது இயக்கத்திலும் 1998-ஆம் ஆண்டு அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். நாடாளுமன்ற தேர்தலில் நெல்லையில் நிறுத்தப்பட்டேன்... இயக்கத்தில் சிலரின் ஒத்துழையாமையினால் தோற்கடிக்கவும்பட்டேன்.

நான் அன்று தங்கள் இயக்கத்தில் இணைந்ததை நான் சார்ந்திருக்கும் சமுதாயம் வரவேற்கவில்லை. காரணம் மெர்க்கண்டைல் வங்கி விவகாரத்தில் தாங்கள் பிரச்சினைக்கு சரிவர தீர்வு காணவில்லை என்ற உண்மை அனைவரையும் பாதித்ததால்.

இருப்பினும் நம் இயக்கத்தின் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டினை முழு மூச்சாக கொண்டு உண்மை உணர்வோடு மரபு மாறாமல் இயக்கத்திற்காக உழைத்து வந்திருக்கிறேன்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இயக்கத்திற்கு நான் ஊறு விளைவித்ததில்லை என்பதனை இவ்வுலகமே அறியும்.இது ஒருபுறம் இருக்க எத்தனையோ சந்தர்ப்பங்களில் தங்களை சார்ந்த சிலரே என்னை அவமானத்திற்கு உள் ளாக்கியிருக்கிறார்கள்.

அதனை தங்களுக்காகவும், இயக்கத்திற்காகவும், என் மனைவி ராதிகா சரத்குமாருக்காகவும் சில காலம் தாங்கிக் கொண்டிருந்தேன். அதையும் மீறி ஒரு கட்டத்தில் தங்களிடம் எனது உண்மையான உணர்வுகளை வெளிகாட்டியிருக்கிறேன்.

அப்பா என்று பாசத்தோடு தங்களிடம் வந்தேன். என்ன என்று கேட்டீர்கள்... சொன்னேன். எனது வேதனைகளுக் கும் நான் பட்ட காயங்களுக்கும் காரணம் தங்களது நெருங்கிய சொந்தங்களே என்பதை தெளிவாக உணர்ந்தீர்கள்.

எனினும் அவர்களை அழைத்து சுப்ரீம் ஸ்டார் தம்பி சரத்குமார் நமக்கு உண்மையானவன், உழைப்பவன், அவனது மனைவி ராதிகா நம் வீட்டுப் பெண் இருவரையும் எக்காரணம் கொண்டும் வேதனைப்படுத்தாதீர்கள் என தங்களால் சொல்ல இயலவில்லை. தங்களது சூழ்நிலை அதற்கு வழி வகுக்கவில்லை என்றே அதனை எடுத்துக் கொள்கிறேன்.

தங்களிடம் சொல்லி விட்டேன் என்பதற்காகவே என்னை எதிரியாக நடத்தத் தொடங்கினார்கள். எனது உண்மையான உழைப்பு கேலிக் கூத்தாக்கப்பட்டது.

நான் தங்களிடம் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் தங்களைச் சார்ந்தவர்களுக்கு மாற்றுக் கருத்தாகவே தெரிந்ததால் அதன் பாதிப்பும் தாக்கமும் என் மனைவி ராதிகா சரத்குமாருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தாங்கள் மகளாக பாவிக்கும் ராதிகா சரத்குமாரையும் தங்களால் பாதுகாக்க முடியவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. நாங்கள் சொல்கின்ற நியாயமான கருத்துக்களும் கோரிக்கைகளும் ஏற்கப்படக் கூடாதென எங்களுக்கெதிராக பலர் செயல்படும் போது இனியும் தங்களை வேதனைக் குள்ளாக்க நான் விரும்பவில்லை.

ஆனால் சுய மரியாதை உணர்வுகளோ, கருத்துச் சுதந்திரமோ இல்லாதவன் மனிதனே அல்ல என்பது என் கருத்து. தங்களது இயக்கத்திலோ தற்போது அவற்றுக்கு வரவேற்பு இல்லை. வாய்மையும் பேசாத, வாயும் பேசாத அடிமைகளே தேவைப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதுதான் எனக்கு ஒரே வழி.

இதுகாலம் வரை தங்களிடம் கற்ற அரசியல் பாடமும் என்னை வளர்த்த ரசிகர்களும் தாய்மார்களும் நண்பர்களும், கலை உலகத்தோழர்களும் என்னை சார்ந்த சமுதாயமும் தமிழக மக்களும் இனி எனது அரசியல் வாழ்க்கைக்கு துணை நிற்பர்.

தமிழக மக்கள் என்னை அவர்கள் மடியில் விழுந்த பிள்ளையை போல கருதி நான்பட்ட காயங்களுக்கு மருந்திட்டு விட்ட பணிகளை தொடர எனக்கு வழி காட்டுவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் எனக்கு உண்டு. எனவே இன்று முதல் என்னை தங்களது இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன். தாங்கள் செய்யவிருக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு எனது வாழ்த்துக்கள்.

இக்கடிதத்தையே எனது அடிப்படை உறுப்பினர் பதவிக்கான ராஜினாமாவாகவும் ஏற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சாதிமத மொழி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம்.

வணக்கத்து டன்,

ஆர்.சரத்குமார்.

நன்றி>இட்லிவடை

MUMBAI (Reuters) - Sun TV Ltd. has raised six billion rupees ($134.2 million) in the biggest initial public offering this year so far that valued the company at around $1.3 billion, a source close to the development said on Monday.

Sun, which sold 6.9 million shares, or 10 percent of the company, would become the second most valuable media company, after Zee Telefilms Ltd., valued at $2.3 billion.

Analysts said with Zee planning to split into as many as four separate entities, Sun has the potential to become the single largest media company.

But Sun's record for issue size could soon be surpassed by Reliance Petroleum Ltd., a unit of Reliance Industries Ltd. Reliance Petro is conducting roadshows to raise about $624 million this month.

Banking sources said the strong demand for Indian IPOs was reflected in the reception for Sun. The demand for Sun's shares stood at about 45 times the offer size, with most bids from institutions at the top end of the band.

Investment bankers expect Indian companies to raise more than $20 billion from public share sale in 2006, compared to about $15 billion in 2005.

Some of the major IPOs in 2006 could be from Hutchison Essar Ltd., the mobile phone operator, and construction group, DLF Ltd.

If DLF manages to raise about $2 billion being speculated in the banking circles, its issue could become the biggest ever IPO in the country, said Sanjeev Khandelwal, director at Prime Database, an IPO tracking firm.

"For Indian IPOs, 2006 could be the best-ever year," said Khandelwal adding, "there are many banks' and construction companies' IPOs which are in the pipeline."

Sun, founded by Kalanithi Maran -- brother of India's Telecommunications Minister Dayanidhi Maran -- is prominent in the southern Tamil Nadu state with four channels, including a 24-hour news channel. It also runs two Malayalam language channels.

It also runs FM radio stations in the cities of Chennai, Coimbatore and Tirunelveli.

The firm, which currently operates from a political party's premises, would use the IPO proceeds to launch three regional news channels and build its corporate headquarters, it had said in the offer document.

Sun reported a net profit of 614 million rupees and total income was 1.58 billion rupees for the first half year ended on Sept. 30, 2005.

The date of commencement of trading is yet to be decided, the source said.

Kotak Mahindra Capital Company Ltd. and DSP Merrill Lynch Ltd. were managers to the issue.

பிருந்தன்

உமது தனிப்பட்ட திமுக வெறுப்புக்களைக் காட்ட இப்படி தலையங்களை திரிபுபடுத்தி சம்மந்த சம்மந்தமில்லாமல் எழுதுவதைவிட பேசாமல் கருணாநிதி ஒழிக என்று திரும்பத் திரும்ப எழுதியே தீர்த்துக் கொள்ளலாமே. இதைவிட அது பறுவாயில்லை.

  • தொடங்கியவர்

ஏன் வசம்பு நீர் என்ன கருனாநிதிக்கு வலது கரமா? :D

இந்த கட்டுரைக்கு இந்த தலைப்பு ஏன் பொருத்தம் இல்லை என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?? :lol::lol::lol:

ஏன் பிருந்தன் கருணாநிதிக்கு இப்போ என்ன வலது கரம் இல்லாமலா இருக்கின்றார் அவருக்கு நான் வலது கரமாக இருக்க. இதே கேள்வியை நான் உம்மிடம் திருப்பிக் கேட்கவும் முடியும். ஒரு ஆக்கத்தை இன்னொரு இடத்திலிருந்து எடுத்து இங்கு பிரதியிடும் போது அதற்கு அங்கே ஒரு தலையங்கம் இருந்தது தானே அதனைத் திரிபுபடுத்திப் போடுவதே உமது வழமையான வேலை. தனது மனைவியை கருணாநிதி மகளாகவே கருதியதாக சரத்குமாரே சொல்லியிருக்கின்றார். கடிதத்தை எழுதிய சரத்குமாரே கருணாநிதியின் குடும்பத்தைப் பற்றி எந்த இடத்திலும் குறை சொல்லாத போது இப்படித் திரிவு படுத்தி நீர் எழுதிய நோக்கம் எவருக்கும் புரியும்.

ஏன் வசம்பு உமக்கு தமிழ் படிப்பதில் ஏதாவது பிரச்சனையா?

அப்பா என்று பாசத்தோடு தங்களிடம் வந்தேன். என்ன என்று கேட்டீர்கள்... சொன்னேன். எனது வேதனைகளுக் கும் நான் பட்ட காயங்களுக்கும் காரணம் தங்களது நெருங்கிய சொந்தங்களே என்பதை தெளிவாக உணர்ந்தீர்கள்.

இதன் பொருள் என்ன? இந்த விடயத்துக்கும் எனது தலைப்புக்கும் தொடர்பில்லையா? :wink:

அப்பு பிருந்தன் தமிழ் படிப்பதில் அப்படியொன்றும் எனக்குப் பிரைச்சினையில்லை. அங்கே சரத்குமார் கருணாநிதியின் நெருங்கிய சொந்தங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் தான். அதற்காக அவர் கருணாநிதியின் குடும்பத்தை குறை சொல்லவில்லை. அப்படி குறை சொல்வதாகவிருந்தால் கருணாநிதிக்கு இவ்வளவு மரியாதை கொடுத்து கடிதமெழுதியிருக்க மாட்டார். இவ்விடயம் சகல பத்திரிகைகளிலும் திமுக விலிருந்து சரத்முமார் விலகல் எனவே வந்த போது நீர் மட்டும் திரிபு படுத்திப் போட வேண்டிய நோக்கம் என்னவோ?? பொதுவாகவே நீர் எந்தச் செய்தியை களத்தில் இணைத்தாலும் அதன் தலையங்கத்தை திரிபுபடுத்தாமல் இணைப்பதில்லை. இதை உமக்கு ஏற்கனவே பலர் சுட்டிக் காட்டியும் நீர் திருந்தவில்லை. திருந்தப் போவதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வசம்பு

எப்ப பார்த்தாலும் மற்றவர்களுக்கு புத்தி மதியையே சொல்லுவதே தான் உமக்கு வேலையாக?? தலைப்பை போடுவது அவரவர் விருப்பம்.இங்கே வைகோவைப் பற்றி கண்டபாட்டுக்கு தலைப்பை போடும் போது எங்கு நீர் போனீர்??

உங்கள் சனநாயகம் உங்களின் சார்பற்ற நிலையில் தான் உயிர் பெறுமா??

  • தொடங்கியவர்

வசம்பு நீர் எந்த பள்ளிக்கூடம் அப்பு?

முதலில் சொன்னீர் சரத்குமார் கருனாநிதியின் குடும்பத்தை பற்றி சொல்லவில்லை என்று, பின்னர் சொல்லுறீர் கருனாநிதியின் உறவினரைபற்றி சொல்லி இருக்கிறார், குறை கூறவில்லை எண்டுறீர், ஏன் இப்படி மாற்றி மாற்றி கதைக்கிறீர்? நீரும் மாற்றிக்கருத்துகாறராய்வர முயற்சி செய்யிறீரா?

உங்கள் உறவினர்கள், எங்கள்விடயத்தில் தலையிடுகிறீர்கள் அதனால் எமது குடும்பம் மனரீதியில் பாதிக்கபட்டிருக்கிறது, தலையிட வேண்டாம் என்று சொல்லுங்கள் என்பது குறை இல்லாமல் நிறையா? அல்லது உமது கண்ணோட்டத்தில் சுகம் விசாரிப்பா?

நீர் கூறியதுக்கு மேற்கோள்கள் தேவையெனில் கூறவும் போடுகிறேன். :P

மற்றது நாம் ஒரு கட்டுரையை இங்கு கொண்டு வந்து போடுகிறோம், அந்த கட்டுரைக்கு நன்றி கூறுகிறோம், அந்த காட்டுரைக்கு பொருந்தக்கூடிய தலைப்பை இங்கு இடுகிறோம் இதில் என்ன தவறு இருக்கிறது? தலைப்பிடும் சுதந்திரம் எமக்கு வழங்கப்பட்டிருக்கிறது, தலைப்பு காட்டுரைக்கு பொருந்தவில்லை என்று நிருபியும் மாத்துகிறோம், அல்லது கட்டுரை எடுத்த இடத்தை போடவில்லை என்றால் சுட்டிக்காட்டும், போடுகிறோம். நாம் போடும் தலைப்பே உமக்கு சுடுகிறது என்றால், கட்டுரையை சொல்லத்தேவை இல்லை, நாம்படித்த விடயங்களை கள உறவுகளும், அக்கருத்துக்கு எதிரான உம்மை போன்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதுக்காகத்தான் நாம் கட்டுரைகளை இங்கு போடுகிறோம், நீர் பொய் உரைப்பது போன்று கட்டுரைகளை நாம் திரிபு படுத்துவதில்லை, அப்படி கட்டுரைகளை திரிபு படுத்தியிருந்தால், முடிந்தால் நிருபியும். :P :P :P

மார்ச் 5ம் தேதி அன்று திமுக மாநாட்டில் சரத்குமார் சாகும்போதும் திமுக காரனாவே சாவேன் என்றார்... இந்த ஒரு மாதத்தில் அவர் என்ன அவமானங்களைச் சந்தித்தார் என்று அதிமுக கொ.ப.செ.வாக தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் நண்பர் பிருந்தன் விளக்குவாரா?

  • தொடங்கியவர்

லக்கிலுக் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும், நான் எந்த கட்சியின் கொள்கைபரப்பு செய்லாலராகவும் நினைத்துக்கொண்டிருக்கவில்ல

இங்கு ஈழத்தமிழர் என்ற வார்த்தையையே நான் பயன்படுத்தவில்லையே... மற்ற களங்களில் எல்லாம் நான் ஈழத்தமிழரையும், பிரபாகரனையும் உயர்த்தி தான் கருத்துகள் வைத்திருக்கிறேன்..... பதிலுக்கு பதில் என்ற அடிப்படையிலேயே யாரோ ஒரு இந்தியத் தலைவன் செய்த தவறுக்கு இந்தியர்கள் அனைவரையும் நீங்கள் ஒட்டு மொத்தமாக போட்டுத் தாக்கும் போது தான் நான் கருத்தெழுதி இருக்கிறேன்.... இது இந்தக் களத்தில் இருந்த ஆருரானுக்கு நன்றாகவே தெரியும்....

அதே ஆரூராந்தான் நீங்கள் அவித்த பப்பை எமக்கு அறிமுகம் செய்தவர், தற்ஸ்தமிழில் நீங்கள் எழுதியதை பார்க்கமுடிந்தது, நீங்கள் உயர்த்தி வைத்ததையும் பார்த்தோம். :( ஈழத்தமிழர்பற்றி எனது பொதுவான கருத்தே இது. :wink:

ஆம்... ஆருரானுக்கு எப்போதும் அனைவரும் ஜால்ரா அடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்....

தூயவன்

உமது சொந்த ஆக்கங்களுக்கு எப்படி வேண்டுமனலும் தலையங்கம் அமைக்கலாம். ஆனால் இன்னெருவரின் ஆக்கத்தை பிரதியிடும் போது அதன் தலையங்கத்தை மாற்றும் அதிகாரம் மற்றவர்களுக்குக் கிடையாது. உம்போன்றவர்களுக்கு அடிப்படை விடயங்கள் தெரியாமல் இருப்பதில் ஆச்சரியமுமில்லை.

பிருந்தன்

எனது பள்ளிக்கூடம் இருக்கட்டும். நீர் உமது பள்ளிக்கூடத்தை கேவலப்படுத்தாமல் நடக்கப் பாரும். எனது குடும்பமென நான் குறிப்பிட்டால் அது எனது தாய் தந்தை சகோதரங்களையே முன்னிலைப் படுத்தும். பெரியப்பா சித்தப்பா பெரியம்மா சின்னம்மா மாமா மாமி அவர்கள் பிள்ளைகள் என வரும் போது இரத்த உருத்து உறவினராகவே பார்க்க முடியும். உமது நோக்கம் எப்படியும் கருணாநிதியை இழிவு படுத்த வேண்டும். அதற்காக எப்படியும் ஞாயப்படுத்த முயல்வீர்.

முன்பு கோபாலன் தனது தனிப்பட்ட நடவடிக்கையாக செய்ததை பி பி சி செய்ததாக எழுதி மூக்குடைபட்டதை அதற்குள் மறந்து விட்டீரா?? அது தவறுதான் என்று திருமகள் சுட்டிக் காட்டியும் ஏற்றுக் கொண்டீரா?? உம்மைப் பொறுத்தவரை நீர் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான் எப்போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவரின் செய்தியை பிரதியிரும் போது உதாரணத்துக்கு யாழின் முற்பக்க செய்தியாக போடும் போது தான் தேவை எழுமே தவிர, ஒரு விவாதபக்கம் ஒன்றில் கட்டாயம் விதி இல்லை. ஒரே செய்தியை வௌ;வேறு தளங்களில் இருந்து எடுத்துப் போடும் போது என்ன ஒவ்வொன்றுக்கும் தலைப்பை ஆரம்பிக்கவா முடியும்?

அது உங்களுக்கு எப்படி புரியப்போகுது. விமர்சனங்களை மட்டும் தானே வைத்திருக்கின்றீர்கள்? ஏதாவது தலைப்பை தொடங்கினால் தானே தெரியும்?? இல்லையா??

தூயவன் உங்களுடைய 2,500 கருத்துகளில் எத்தனை தலைப்புகளை தொடங்கி இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? அடுத்தவனை சுட்டிக் காட்டும் போது 4 விரல்களும் நம்மை தான் சுட்டிக் காட்டுகிறது என்று உணருங்கள்....

ஐயோ ஐயோ யாழ். களம் எப்பதான் தனி நபர் தாக்குதலிலிருந்து விடுபடப்போகிறதோ???

:cry: :cry: :cry: :cry:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

தூயவன் எழுதியது:

இன்னுமொருவரின் செய்தியை பிரதியிரும் போது உதாரணத்துக்கு யாழின் முற்பக்க செய்தியாக போடும் போது தான் தேவை எழுமே தவிர, ஒரு விவாதபக்கம் ஒன்றில் கட்டாயம் விதி இல்லை. ஒரே செய்தியை வௌ;வேறு தளங்களில் இருந்து எடுத்துப் போடும் போது என்ன ஒவ்வொன்றுக்கும் தலைப்பை ஆரம்பிக்கவா முடியும்?

இது விவாதப் பக்கமா செய்திப் பக்கமா என்று கூட தெரியாமல் புலம்பும் உம்மை என்ன சொல்வது. விவாதத்தில் ஒரு செய்தியை எடுத்துக் காட்டாகத் தான் பயன் படுத்தவார்கள் என்பது கூடவா தெரியாது. ஐயா மீண்டும் சொல்கின்றேன் தெரியாத விடயங்களைப் பற்றி தயவு செய்து புலம்ப வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன் உங்களுடைய 2,500 கருத்துகளில் எத்தனை தலைப்புகளை தொடங்கி இருக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? அடுத்தவனை சுட்டிக் காட்டும் போது 4 விரல்களும் நம்மை தான் சுட்டிக் காட்டுகிறது என்று உணருங்கள்....

எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு!!

அப்துல் கலாமிற்கு அடுத்த நிலையில் உள்ள விஞ்ஞானியாக இவரை பரிந்துரை செய்கின்றேன்!! (இதாலே பாருங்கோ சிதம்பரம் 3ம் இடத்திற்கு போய்விட்டார் :wink: )

  • கருத்துக்கள உறவுகள்

இது விவாதப் பக்கமா செய்திப் பக்கமா என்று கூட தெரியாமல் புலம்பும் உம்மை என்ன சொல்வது. விவாதத்தில் ஒரு செய்தியை எடுத்துக் காட்டாகத் தான் பயன் படுத்தவார்கள் என்பது கூடவா தெரியாது. ஐயா மீண்டும் சொல்கின்றேன் தெரியாத விடயங்களைப் பற்றி தயவு செய்து புலம்ப வேண்டாம்.

அப்படி என்றால் எனி மேல் யாரும் செய்திகள் குறித்து விவாதிக்க கூடாது. ஆமா!!!! :evil: :evil:

எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு!!

அப்துல் கலாமிற்கு அடுத்த நிலையில் உள்ள விஞ்ஞானியாக இவரை பரிந்துரை செய்கின்றேன்!! (இதாலே பாருங்கோ சிதம்பரம் 3ம் இடத்திற்கு போய்விட்டார் :wink: )

இதனால் தான் தூயவன் உருப்படாமல் இருக்கிறார்.... :lol: களத்தில் இருக்கும் நடுநிலை நண்பர்கள் தூயவனின் எல்லாக் கருத்துகளையும் புரட்டிப் பாருங்கள்.... ஏதாவது உருப்படியாக இருக்கிறதா என்று தெரியும்... :lol: யாரையாவது குறை சொல்லுவது... யார் கருத்தையாவது வீம்புக்கு எதிர்ப்பது.... "செய்தி வந்ததே" என்று இவரே கற்பனை கதை எழுதுவது... இப்படித்தான் இவர் இங்கு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்.... என்ன செய்வது சிலருக்கு பொழைப்பே இப்படித்தான்..... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நியுூட்டன் எப்படி அப்பிள் விழுவதை வைத்து புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்பது போல 4விரலை வைத்து லக்கிலுக் ஏதும் கண்டு பிடித்து விட்டாராக்கும் என்று மதிப்பு கொடுத்தால் வசை பாடுகின்றீர்கள்.

நான் எப்படிப்பட்டவன் என்பதைப் பற்றி நடுநிலமை உறுப்பினரிடம் என்று கேட்கின்றீர்கள்? உங்களின் பார்வையில் அதன் பதம் எப்படி என்று எமக்குத் தெரியாதோ!! வசம்பு அண்ணாச்சியைத் தானே சொல்லுகின்றீர்கள்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.