Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி தமிழ் நூலகம்.

Featured Replies

சிட்னியில் ஒரு தமிழ் நூலகம் சில ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது. என்னைப் போன்ற பழசுகள் ஓசியில் பத்திரிகை படிக்க, அரட்டை அடிக்க, மனிசிமாற்றை தொல்லை தாங்காமல் ஒளிந்து இருக்க போன்ற நல்ல விசயங்களுக்காக இதை பயன் படுத்தி வருகிறோம். ஆனாலும் நாங்களும் பச்சத்தண்ணியில் பலகாரம் சுடுகிற படியால் நூலகத்துக்கு வருமானம் போதாது. இப்பவே அன்றாட செலவுகளை சாமாளிப்பது சிரமாக இருக்கிறது. இப்போழுகு ஒரு தமிழ் ஆர்வாளரின் வீட்டில் குறைந்த வாடகையில் நூலகம் இயங்கி வருகிறது. இன்றைய நிர்வாகம், சிறிய வளங்களை வைத்துக் கொண்டு, விரலுக்கு ஏற்ற வீக்கம் என்பது போல், முற்றிலும் தொண்டர்காளை வைத்துக் கொண்டு சிறப்பாக நூலகத்தை நடத்தி வருகிறது.

ஆனாலும் நீண்ட காலத்துக்கு இதை இப்படி நிர்வாகிக்க முடியாது என்று தொலை நோக்குள்ள சில நிர்வாக உறுப்பினர்கள் கருதிகிறார்கள்.

அவர்கள், சிட்னி முருகன் ஆலயத்தில் இயங்கி வரும் சமய் நூலகத்துடன் இதை இணைத்து பெரிய நூலகமாக நடத்தினால், வாசகர் எண்ணிக்கை அதிகரித்து, இளைய தலைமுறையிடம் தமிழ் ஆர்வத்தையும் வள்ர்க்காலம் என்பது அவர்களது கருத்து. அதில் ஒருளவுக்கு உண்மையும் இருக்கிறது.

ஆனால் இப்ப ஒரு இடியப்ப சிக்கல். இணைந்த் நூலகத்தை நடத்துவது யார்? கோயிலில் சமய நூலகத்தை நடத்தி வரும் உப குழு தமது அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்று மிகவும் சங்கட படுகிறார்கள். இவர்களுடைய விவாதம் என்ன வென்றால், புத்தங்களை தந்து விட்டு, நீங்க நடையை கட்டுங்கோ நாங்கள் எல்லாத்தையும் பாக்கிறம் என்பது தான். இவ்வளவு நாளும் நடத்தி வந்தவர்களின் அனுபவத்தை பயன் படுத்தோவோம்,அவர்களையும் ஒரு மனிதாரக நடத்துவோம் என்று, கோயில் நிர்வாகத்தில் ஒருவரும் சிந்திப்பதாக தெரியவில்லை. யாருக்கும் தமிழ் நூலகத்தையும், தமிழ் ஆர்வத்தையும் வளர்ப்பது பற்றி அக்கறையில்லை.தமது பதவி, அதிகாரம் தான் முக்கியாமாய் படுகிறது. உந்த சின்ன பிள்ளைத்தனத்தை விட்டு விட்டு, தமிழை வள்ர்க்க எல்லோரும் முன் வர வேண்டும் என்பதே என் ஆசை. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு, பதவி மோகிகளே!

Edited by பொன்னி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது தான் சரி, கோவில்காரங்களுக்கு தங்களைவிட்டால் ஆட்கள் இல்லை என்ற நினைப்பு.....

நூலகம் ஒரு பொது இடத்தில் இருப்பதுதான் நல்லது சமயம் சம்பந்தபட்டாத இடத்தில் இது இயங்கினால் சகலரும்(கிறிஸ்தவர்கள்,கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்) செல்வார்கள்

சிட்னியில் உள்ள தமிழ் பாடசாலைகள் இதற்கான முயற்சியில் ஈடுபடலாம்.

சிட்னி பழைய மாணவ சங்க அமைப்புக்கள் பண உதவி செய்ய முன்வரலாம்.

சிட்னி தமிழ் அறிவகத்தின் சேவையில் திரு லோகேந்திரன் - செ.பாஸ்கரன்

.

சிட்னி தமிழ் அறிவகம் நீண்டகாலமாக சிட்னியில் இயங்கிவரும் ஒரு தமிழ் நூலகம் மாத்திரமல்ல ஒரு ஆவண காப்பகமாகவும் இயங்கிவருகிறது. சுழற்ச்சி முறையில் தலைவர் செயலாளர் செயற்குழு அங்கத்தவர்கள் என்று ஆட்கள் மாறிக்கொண்டிருப்பார்கள். அவர்களை அவ்வப்போது நடைபெறும் அறிவக ஆண்டுவிழாக்களில் காணக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் பெரும்பாலும் மாறாமல் இருப்பவர்கள் தொண்டர்களாக இந்த அறிவகத்தை திறந்து வைத்திருந்து புத்தகங்களை பரிவர்த்தனை செய்யும் சில நல்ல மனிதர்கள்தான். இவர்கள் வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரு நாட்களோ கடமைபுரிவார்கள். பெரும்பாலும் வயதில் மூத்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் சேவை பலருக்கு தெரியவராமலே இருந்துவிடுகின்றது. இவர்களில் சிலரோடு தமிழ்முரசிற்காக பேசவேண்டும் என்று பல நாட்கள் நினைத்திருந்தபோதும் நேரம் பொருந்திவருவது சிரமமாகவே இருந்தது. அண்மையில் ஒருவாறு நேரம் ஒதுக்கி அங்கு சென்றபோது அன்றய நாளின் தொண்டராக இருந்தவர். திரு சிவக்கொழுந்து லோகேந்திரன் அவர்கள்.

இணுவிலைப்பிறப்பிடமாகக் கொண்ட திரு லோகேந்திரன் அவர்கள் 1995 ம் ஆண்டு அவுஸ்ரேலியா வந்ததாகவும் 1998ம் ஆண்டிலிருந்து அறிவகத்தில் தொண்டராகவும் இரண்டு வருடங்கள் தலைவராகவும் (2007 – 2009) சேவை புரிந்ததாக கூறுகின்றார். புத்தகங்கள் பெற வருவோரை வரவேற்று அவர்களுக்கு தேவையான புத்தகங்களைக் கொடுப்பது. ஆட்கள் வராத வேளைகளில் புத்தகங்களை ஒழுங்குபடுத்தி அடுக்குதல் திரும்பவராத புத்தகங்களை கொண்டு சென்றவர்களோடு தொடர்பு கொண்டு அவற்றைப் பெறுவது போன்ற செயற்பாடுகளை செய்து கொண்டிருப்பதாகவும் தற்போது செவ்வாய் வியாழன் ஞாயிற்றுக்கிழமைகளில் சேவை புரிவதாகவும் குறிப்பிடுகின்றார். இதற்கான நோக்கம் என்ன என்று கேட்டபோது. பலர் வந்து புத்தகங்கள் வாசிக்கிறார்கள். பலர் இரவல் எடுத்துச் செல்கின்றார்கள் இளம் மாணவர்கள் வந்து பயன் படுத்துகின்றார்கள். அப்படியான இந்த அறிவகத்தை அதிக நேரம் திறந்து வைத்திருப்பதற்கு போதிய ஆட்கள் இல்லாமல் இருக்கின்றார்கள். என்னால் முடிந்த இந்த சேவையை செய்கின்றேன் அதில் மனத்திருப்தி அடைகின்றேன் என்று சிரித்துக்கொண்டு கூறுகின்றார்.

இலங்கையில் Trade Union- pharmacist Association of Srilanka வில் அ;ங்கத்தவராகவும் செயற்குழுவிலும் கடமைபுரிந்திருக்கிறார். கொக்குவில் இந்துக்கல்லூரியில் 1951 இல் இருந்து 1957 வரை கல்வி கற்றதினை பெருமையாககூறி தான் கொக்குவில் இந்துக்கல்லூரியின் பழைய மாணவன் என கூறிக்கொள்கிறார். தமிழ் மூத்த பிரஜைகள் சங்கம் நியூசவுத்வேல்சில் உப செயலாளராக இரண்டுவருடங்கள் செயலாற்றியிருக்கும் இவர் சிட்னி மக்களுக்காக த J.P பட்டம் பெற்று அந்த சேவையையும் வழங்கிக் கொண்டிருக்கிறார் திரு லோகேந்திரன் அவர்கள்.

வாசிக்கும் ஆர்வம் தனக்கு அதிகம் என்றுகூறும் இவர் அரசியல் phடைழளழிhல ஆன்மீகம் போன்றவற்றை அதிகம் வாசிப்பதாகவும் தமிழ் இலக்கியவரலாறுகளை வாசிப்பதில் ஆர்வம் அதிகம் என்றும் கூறுகிறார் Pசழகநளளழச பொன் பூலோகசிங்கம், இரா.சேதுப்பிள்ளை ஆகியோரின் எழுத்துக்கள் தனக்குப்பிடித்தவை என்றும் குறிப்பிடும் இவர். விவேகானந்தரின் தத்துவங்களும் போதனைகளும் தன்னை மிகவும் கவர்ந்தவை என்றும் குறிப்பிடுகின்றார்.

சிட்னி தமிழ் அறிவகத்தைப்பற்றிக் கேட்டபோது புத்தகங்கள் அதிகமாக வாங்கப்படவேண்டும் என்றும் அண்மைக்காலமாக வாசிப்போர்தொகை குறைந்துள்ளதாகவும். வுhசிப்பவர்கள் நாவல் சிறுகதை போன்றவற்றைத்தான் அதிகமாக எடுக்கின்றார்கள் என்றும் ர்ளுஊ உயர்தர வகுப்பில் தமிழை பாடமாக எடுக்கும் மாணவர்கள் வந்து படிக்கின்றார்கள் என்றும் குறிப்பிடுகின்றார். மொழிபெயர்ப்பு புத்தகங்களும் இருக்கின்றது அவற்றையும் பலர் பாவிக்கின்றார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். அறிவகத்திற்கு இடப்பற்றாக்குறை இருக்கின்றது மட்டுமல்ல இருக்கும் இடத்தில் இருந்தும் மாறவேண்டி வந்துள்ளது அதுபற்றி யோசித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்றும் கவலையோடு குறிப்பிடுகின்றார்.

குடும்பத்தைபற்றி கூறுங்களேன் என்று கேட்கின்றேன். ஒரு மனைவி என்று ஆரம்பிக்கும்போது நாம் எல்லோரும் சிரிக்க அவரும் சிரித்துக்கொண்டு இரண்டு ஆண்கள் ஒரு பெண் என்கின்றார். பெயர்களைக் கேட்கின்றேன் டொக்டர் கௌரிகாந்தன் என்று கூற ரட்ணகுமாரின் மருமகனா என்று இடைமறித்து கேட்கின்றேன் சிரித்துக்கொண்டே ஆம் என்கின்றார். ஆச்சரியத்தோடு உங்களை பலமுறை பார்த்திருக்கின்றேன் நீங்கள்தான் கௌரியின் அப்பா என்று எனக்கு தெரியாது என்று கூறுகின்றேன். அத்தோடு கௌரி எங்களோடு சேர்ந்து நாடகங்கள் செய்திருக்கின்றார் என்றபோது அதே சிரிப்போடு தெரியும் என்கிறார். கௌரி நல்ல துடிப்பான இளைஞன் நாடகபிரதியில் இருக்கின்ற அத்தனை பாத்திரங்களின் வசனங்களும் அவருக்கு பாடமாக இருக்கும். நாங்கள் வசனங்களை யோசித்தால் உடனேயே அவர் சொல்லுவார். சிரித்துக்கொண்டே மற்றவர்கள் என்கின்றேன். மற்ரவர் கௌரிசங்கர் மகள் சாந்தினி என்று கூறுகின்றார்.

பலர் குடும்பத்தை பார்க்கின்றார்கள் சிலர் சமூகத்தையும் சேர்த்துப் பார்க்கின்றார்கள். இவர் அந்தவகையில் தான்சார்ந்த சமூகத்திற்காக இலைமறைகாயாக இருந்து அறிவகத்தினூடாகவும் சேவையாற்றிக்கொண்டிருக்கின்றார். இந்த அறிவகத்தில் இவரைப்போன்று இன்னும் எத்தனையோ பேர் தன்னலம் கருதாது சேவைபுரிகின்றார்கள் அவர்களையும் இந்த வேளையில் பாராட்டுகின்றேன் அவர்கள் சேவை அளப்பரியது. இவரோடு உரையாடும்போது இன்னும் இரண்டு சேவையாளர்கள் அருகே இருக்கின்றார்கள். ஒருவர் எல்லோராலும் அறியப்பட்ட திரு.ந.கருணாகரன் அவர்கள் தலைவராக செயலாளராக குழு உறுப்பினராக என்று மாறிமாறி அறிவகத்தோடு இருந்து செயல் படுபவர். இன்னொருவர் யாரும் அறியாமல் உதவிக்கொண்டிருக்கும் திரு.சோதிராஜா ரட்ணராஜா அவர்கள். இவர்களையும் இந்தவேளையில் பாராட்டி அறிவகத்தில் இருந்து வெளியேறுகின்றேன். இந்த அறிவகத்தின் வழற்சிசியிலும் செயற்பாட்டிலும் எனது பங்கும் நிறையவே இருந்திருக்கிறது இவர்களில் பலரோடு சேர்ந்து வேலைசெய்த அந்த நாட்கள் இனியநாட்கள் என்று என்ணி அந்தநாட்களை நினைவுகூர்ந்துகொண்டு செல்கின்றேன்

நன்றிகள் தமிழ்முரசு

.http://www.tamilmurasuaustralia.com/2012/05/blog-post_6499.html#more

  • தொடங்கியவர்

நன்றி புத்தன், விவாதத்திற்கு வலு சேர்க்கும் ஒரு இணைப்பு..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.