Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர் நீதிமன்ற நீதியரசர்களைப் பிளவுபடுத்தும் மகிந்த ராஜபக்‌ஷ

Featured Replies

தனது விருப்பத்திற்கு அழுத்தம் கொடுக்கும் கட்சி, அமைப்புக்கள், வர்த்தகர்கள் மட்டுமன்றி நீதிமன்றக் கட்டமைப்பையும் குடும்ப ஆட்சிக்காக மகிந்த ராஜபக்‌ஷ பிளவுபடுத்தியுள்ளார்.

தற்போதைய பிரதம நீதியரசர் கலாநிதி ஷிரானி பண்டாரநாயக்க இன்னும் 09 வருடங்களுக்கு அந்தப் பதவியில் நீடிப்பதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவரது அதிகாரத்தைப் பலவீனப்படுத்துவதற்காக மகிந்தர் தற்போது சதித் திட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் 11 வருடங்களுக்கு மேல் பிரதம நீதியரசர் பதவி வகித்த சரத் என்ற சில்வா, ஓய்வுபெறும் இறுதித் தருவாய் வரை அவரது சுயகௌரவத்தையும், அதிகாரத்தையும் முழுமையாகக் கொண்டிருந்தார்.

எனினும், தற்போதைய பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க, பதவியேற்று குறுகிய காலத்திற்குள் உயர் நீதிமன்ற நீதியரசர்கள், சிரேஷ்ட்ட சட்டத்தரணிகளின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு உயர் நீதிமன்றத்தில் பிளவை ஏற்படுத்துவதில் மகிந்தர் தனிக் கவனம் செலுத்தி செயல்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையைப் பேணும் வகையிலும், மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையிலும் தீர்ப்புக்களை வழங்க வேண்டும் என நீதியரசர்கள் சிலரும், சிரேஷ்ட்ட சட்டத்தரணிகள் சிலரும் பிரதம நீதியரசரிடம் இதற்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், இதற்கு பிரதம நீதியரசர் சாதகமான பதிலை வெளியிட்டிருந்ததாக நாம் இதற்கு முன்னர் தகவல் வெளியிட்டிருந்தோம்.

அத்துடன், இந்தச் சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள் குறித்த விபரங்களை மகிந்தர் அறிந்துகொண்டதாகவும் நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

பிரதம நீதியரசரின் கணவரான, தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம், ‘பினான்ஸ் நிறுவனத்தின்’ பங்குகளை கொள்வனவு மோசடியில் மகிந்தர் சிக்கவைத்திருந்தார். பிரதம நீதியரசருக்கும், சக நீதியரசர்கள் சட்டத்தரணிகள், ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி இந்த சூழ்ச்சியை செய்திருந்தார்.

இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தின் போது பிரதம நீதியரசர் மீது மகிந்த ராஜபக்‌ஷவினால் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இந்த நிலையில், பிரதம நீதியரசர் அந்தப் பதவியில் நீடிப்பதற்கு தகுதியற்றவர் என சக நீதியரசர்கள் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், பிரதம நீதியரசர் தனது வரையறைகளுக்கு அப்பால் சென்று செயல்பட்டாலோ, தனக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட முயற்சித்தாலோ இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்றைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளதாக மகிந்தர் அண்மையில் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் சிலரிடம் தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/

[size=4]எந்த நாடுகளில் அரசியல்வாதிகள் நீதித்துறையில் தலையிட்டாலும் அந்த நாடுகள் உருப்பட்டதாக வரலாறு இல்லை.[/size]

[size=4]இலங்கையில் நீதித்துறை மட்டுமல்ல சமயம் உட்பட சகல துறைகளிலும் அரச தலையீடு உள்ளது.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.