Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தசாமியும் கலக்ஸியும்! - முகவுரை!

Featured Replies

இன்னும் சரியாக மூன்று மணித்தியாலங்களில் பூமி தூள் தூளாக வெடித்து அழியப்போகிறது என்று காலை ஐந்து மணிக்கு எழும்பி சுருட்டை பற்றவைக்கும் கந்தசாமிக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை. கந்தசாமிக்கென்ன? நல்லூர் கந்தசாமிக்கு கூட தெரியாது. அவன் கோயிலுக்கு மேலாக மெல்ல மெல்ல உதித்துக்கொண்டு இருக்கும் சூரியனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மூன்று மணிநேரமே அவகாசம் இருந்தாலும் கந்தசாமி பற்றி தெரியாமல் கலக்ஸி பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. ஸோ இரத்தின சுருக்கம்! யாழ்ப்பாணம், வைமன் றோட்டு சந்தியில் இருக்கும் பாரதியார் சிலையிலிருந்து கந்தர்மடம் நோக்கி போகும் அரசடி வீதியில், ஒரு ஐந்து ஆறு வீடுகள் தள்ளிப்போனால் ஒரு இராணுவ முகாம் வரும். அந்த முகாமுக்கு பக்கத்து வீட்டில் தான் கந்தசாமி வசிக்கிறார். மூத்த மகன், 87ல் ஈபிஆர்எல்எப் அரசடி கிளை துணைப்பொறுப்பாளர் ஈசன் கன்னத்தை பொத்தி அடித்து, மறுநாளே கனடா சென்றுவிட்டான். இரண்டாண்டு இடைவெளியில் ஏனைய பெடியங்களையும் கந்தசாமி கனடாவுக்கும் சுவிஸுக்குமாய் அனுப்பிவிட்டார். மனிசி செல்வராணி மூன்றாவது மருமகளின் பிள்ளைப்பேறு பார்க்கப்போன நேரத்தில் கேஸ் போட்டு அங்கேயே செட்டில். கந்தசாமிக்கு வெளிநாடு போகும் எண்ணம் துளியும் இல்லை. என்ன ஆனாலும் இங்கேயே தான். அதுவும், தான் போனால் ஆர்மி தன்னுடைய காணியை எடுத்துவிடுமோ என்ற பயம். கந்தசாமி கச்சேரியில் காணிப்பதிவு பிரிவிலே கிளார்க்காக இருந்து ஓய்வுபெற்றவர். மாசி கழிந்தால் வயது ஐம்பத்தாறு; சமாதான நீதவான், இன்றைக்கு கோண்டாவில் RCTMS வருடாந்த விளையாட்டுபோட்டிக்கு பிரதமவிருந்தினர். பேசவேண்டிய உரையை மனசுக்குள் கொஞ்சம் மீட்டிக்கொண்டே, கப்பிக்கிணற்றில் தண்ணி அள்ளி முகம் அலம்பிவிட்டு, முகத்தை துடைத்துகொண்டே நேரே குசினிக்கு போகிறார். நிற்க! இந்த இடத்தில் பூமியில் வசிக்காத உயிரனங்களுக்காக சில பின்னணி தகவல்களை கொடுக்கவேண்டியிருக்கிறது. எங்கோ ஒரு மூலையில், நவநாகரிகத்தின் சுவடே தெரியாத, பிரபஞ்சத்தின் மேற்கு பகுதியில், அதிகம் கவனிக்கபடாத கலக்ஸி ஒன்று இருக்கிறது. பால்வீதி என்று அதற்கு ஒரு பெயர் இருப்பது கூட உங்களுக்கு தெரிந்திருக்காது. அதிலே ஒரு குட்டி மஞ்சள் நிற நெருப்புக்கல், தன் பாட்டுக்கு அனிச்சையாக அசைந்து திரிந்தபடி; டெலஸ்கோப்பால் பார்க்கும்போது கூட அதிகம் சுவாரசியம் கொடுக்காத, அந்த நெருப்புக்கல்லில் இருந்து சிதறிய குறுணிக்கல் ஒன்று, சுமார் 98மில்லியன் மைல்கள் தூரத்தில் அந்த நெருப்புக்கல்லையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கிறது. நீலமும் பச்சையுமாய் இருந்த கல்லுக்கு ஒரு பெயரை கூட பிரபஞ்சத்தின் வழிகாட்டி நூலான “பிரகராதி” குறிப்பிடவில்லை. அவ்வளவுக்கு எந்த பிரயோசனமுமற்ற புறக்கணிக்கப்பட்ட இந்த கிரகத்திலும் உயிரினங்கள் இருக்கிறது. அதிலும் குரங்கில் இருந்து கூர்ப்படைந்த, மனிதர்களை ஒத்த சாயல் கொண்ட வெறும் ஆறறிவு மட்டுமே கொண்ட உயிரனங்கள். தாமே முதன்மையான உயிரிகள் என்று அவற்றுக்கு ஒரு பெருமை. “சிந்திக்கும் விலங்கு” என்றெல்லாம் டாக் லைன் கொடுக்கும் ஆராய்ச்சியாளர்களை கொண்ட இனம். இன்றைய தேதிக்கு ஐபாடை(iPad) கூட தங்களின் கண்டுபிடிப்புக்களின் பெருமையாக சொல்லக்கூடிய பின்தங்கிய விலங்கினம். தமக்கு தாமே பெயர், பட்டம் வைத்துக்கொள்ளும் நடிகர்கள்; உலக நாயகன், சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சொல்லுபவர்களுக்கு, இரண்டு வீடுகள் தள்ளி இருக்கும் இன்னொரு கிரகத்துக்கு போவதற்குள் தாவு தீர்ந்துவிடும். இந்த புத்திஜீவிகள் தம் கிரகத்துக்கு பூமி என்றும், தாம் சுற்றிவரும் நட்சத்திர நெருப்புக்கல்லுக்கு சூரியன் என்றும், தமக்கு தாமே மனிதர்கள் என்று அழைத்துகொள்வார்கள். இந்த பூமியில் இரண்டு வகையான புத்திசாலிகள் இருக்கிறார்கள். முதலாமவர் கவிஞர்கள், “வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா?” என்று காதலிக்கு அதிகம் செலவில்லாத பரிசுகளே கொடுப்பார்கள். அவர்களில் ஒரு சிலர் விஞ்ஞானிகளும் கூட. வைரமுத்து என்ற ஒரு விஞ்ஞானி கவிஞர், “காலங்கள் எங்கு செல்லும், அதுவரை செல்வோமா? காலங்கள் தீரும் இடத்தில் புது ஜென்மம் கொள்வோமா?” என்ற சிந்தனையை ஒரு முறை கக்க, அதை எப்படியோ “ஓரியன்” சேர்ச் என்ஜினில் கண்டுபிடித்து, அதை அடிப்படையாக கொண்டே காலத்தத்துவத்தை, பிரபஞ்சம் போற்றும் விஞ்ஞானியான துரைராஜா “சொர்க்கம் ஆராய்ச்சி கழகத்தில்” சில வருடங்களுக்கு முன்னர் கண்டுபிடித்தார். பூமியில் இருக்கும் இரண்டாவது வகை புத்திசாலிகள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். இவர்கள் ஐடியாக்களை கொடுப்பது மட்டுமல்லாமல் பரப்புவதிலும் திறமைசாலிகள். ஒரு இனம் அடிமைப்பட்டு கிடந்தால், “உடனே புறப்படு, பொங்கியெழு, புரட்சி” என்று கோபாவேசத்தோடு Facebook என்னும், பூமியில் குப்பைகள் போடுவதற்காக அமைப்பட்ட தொட்டிலில் எழுதி போடுவார்கள். அந்த குப்பையை கிளற வரும் இன்னொடு புத்திசாலிக்கு பார்த்தவுடன் கோபம் இன்னமும் தலைக்கேறி அதே குப்பையை தன் தொட்டிலில் திருப்பி போடுவார். இப்படி குப்பை வீட்டுக்கு வீடு பரவி விடும். புரட்சி எல்லா குப்பை தொட்டிகளிலும் வெடிக்க, இன்னொரு புத்திசாலி அது குப்பையே இல்லை, அப்படி போட்டது தவறு என்பான். அவன் குப்பையும் பரவி, குப்பைகளை போட்டவர்கள் குழாயடி சண்டையில் இறங்குவார்கள். ஒரு கட்டத்தில் வேறொரு புத்திசாலி புதிதாக இன்னொரு குப்பையை போட, பழைய குப்பையை எல்லோரும் மறந்துவிடுவார்கள். இப்படி குப்பைகள் எல்லா இடமும் பறந்து, குப்பைகளுக்கு மத்தியிலேயே வாழும் இனமாக பூமியின் மனித இனம் மாறிவிட்டது. ஆக பிரபஞ்சங்களில் ஒரு சில ஆய்வுகளுக்கு ஐடியா கொடுக்கும் அதி புத்திசாலி கவிஞர்களும், புரட்ச்சிகளை நாளாந்தாம் உருவாக்கும் Facebook போராளிகளும் இருந்தாலும், இந்த இரண்டையும் பார்த்து “விரும்பும்” பூமி மனிதர்களே இங்கே அதிகம். இப்போது புரிகிறதா? பிரபஞ்சத்தின் கவனத்தை ஏன் இந்த பூமி கிரகம் அதிகம் ஈர்க்கவில்லை என்று? பூமியில் எப்போதுமே ஒரு பிரச்சனை இருக்கிறது. யாருமே இங்கே சந்தோஷமாக இருந்ததில்லை. பிறந்ததிலிருந்து இறக்கும்வரை .. ஆ இறக்கும் வரை என்று சொல்லும்போது தான் ஞாபகம் வருகிறது. இந்த பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு வித "இறப்பு” என்ற வியாதி இருக்கிறது. மண்டையில் படாரென்று ஒன்று போட்டாலோ, அணுகுண்டு ஒன்றை தூக்கி போட்டாலோ தங்கள் சிந்தனை சக்தியை இழந்து நீர்த்துபோயவிடுவார்கள். பிரபஞ்சம் முழுதும் வசந்த காலங்களில் ஜலதொஷத்தொடு வரும், காதல் என்ற சின்ன வியாதிக்கு கூட இறந்துவிடுபவர்கள் இருக்கும் கிரகம் இது. அதில் தப்பினாலும் ஒரு எண்பது வயதில் மூப்பு என்ற வியாதி இறப்பை ஏற்படுத்திவிடும். இந்த சின்ன வியாதிக்கு வைத்தியம் கண்டுபிடிக்காமல் இன்னமும் திணறிக்கொண்டு இருப்பதால், எல்லோருக்கும் தாம் எப்படியும் இறந்துவிடுவோம் என்று தெரிந்தாலும் அது எப்போது என்று பெரும் குழப்பம். எல்லாவற்றையும் அதற்குள் அனுபவிக்கவேண்டுமே என்ற ஏக்கம். விளைவு? அவசரம், தேடல் என சந்தோஷத்தை தேடி தேடி அலைவார்கள். இடைக்கால தீர்வாக வெறும் பச்சை தாள்களை இடம்மாற்றி கூட சந்தோசம் அடையும் விசித்திர ஐந்துகள் இவை. ஆனால் அதிலும் யாருக்கு அதிகம் தாள்கள் கிடைக்கின்றன என்ற போட்டியில் அந்த அற்ப சந்தோஷமும் பறிபோய்விடும். அதனால் இந்த “கவலை” என்ற விஷயம் கடைசி நிமிடம் வரை இருந்தது. பூமியின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பான ஐபாடை(iPad) வைத்திருப்பவர்களுக்கு கூட அந்த கவலை. சிலர் தாமேல்லாம் மரத்திலேயே தொங்கிக்கொண்டு இருந்திருந்தால் இவ்வளவு பிரச்சனை இல்லை என்பார்கள். இன்னும் சிலர், தரைக்கு வராமல் கடலிலேயே இருந்திருக்கலாம் என்பார்கள். ஆ.. இவர்கள் செய்த ஆராய்ச்சியில் தாம் எல்லோருமே ஆரம்பத்தில் கடல் உயிரிகளாக இருந்து தான் கூர்ப்படைந்து இப்படி மாறியிருக்கிறார்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் கண்டுபிடித்தவரை கல்லால் அடித்து கொன்றுபோட்டிருந்தார்கள்! கிரேசி பீபிள்ஸ்! இன்று வியாழக்கிழமை! “ஒரு மாறுதலுக்கு நீ சக மனிதனிடம் நல்லவனாக இருந்து பாரேன். எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்” என்று சொன்னவனை இவர்கள் சிலுவையில் அறைந்து தொங்கவிட்டு சரியாக ரெண்டாயிரம் வருஷம்! யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இருக்கும் “அபிராமி விலாசில்” கிழங்கு ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது தான் மைதிலிக்கு இந்த விஷயம் உறைத்தது. பதில் கிடைத்துவிட்டது. ஏன் மனிதர்கள் சந்தோசம் இல்லாமல் அலைகிறார்கள் என்ற கேள்விக்கான பதில்; உலகை சந்தோஷமாக வைத்திருக்கக்கூடிய சூட்சுமம். ரொட்டியில் முழுசாக கிடந்த பச்சைமிளகாய் கடிபட்ட தருணத்தில் கிடைத்த ஞானோதயம். “ச்சா .. என்ன ஒரு ஐடியா, இன்றைக்கே Facebook இல் போடவேண்டும்” என்று மைதிலி நினைத்து கையில் இருந்த சாம்சங் கலக்ஸி போனில் Facebook அப்ளிகேஷனை ஒன் பண்ணினாள். “பயமில்லாமல் இதை போடலாமா? என்னையும் சிலுவையில் அறையமாட்டார்கள் தானே? கோத்தாவுக்கு பிடிக்குமா?, ம்கூம் .. இது தான் சரியான தருணம் .. சந்தோசம் எவ்வளவு ஈசியாக கிடைக்ககூடிய விஷயம் .. அதுக்கேன் இவ்வளவு குத்துப்பாடு?”. மைதிலி யோசித்துக்கொண்டே எழுதும்போது தான், எங்கிருந்தோ வந்த ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி … பூமியை தாக்கி … பூமி வெடித்து சிதறி சுக்கல் நூறானது!- நன்றி JK

தொடருங்கோ ஜேகே .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதி இருக்கிறார்...பாராட்டுக்கள்...

நன்றாக இருக்கிறது. :)

(பந்தி பிரித்து இணைத்தால் வாசிக்க இலகுவாக இருக்கும். :) )

பூமியில் இருக்கும் இரண்டாவது வகை புத்திசாலிகள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். இவர்கள் ஐடியாக்களை கொடுப்பது மட்டுமல்லாமல் பரப்புவதிலும் திறமைசாலிகள். ஒரு இனம் அடிமைப்பட்டு கிடந்தால், “உடனே புறப்படு, பொங்கியெழு, புரட்சி” என்று கோபாவேசத்தோடு Facebook என்னும், பூமியில் குப்பைகள் போடுவதற்காக அமைப்பட்ட தொட்டிலில் எழுதி போடுவார்கள். அந்த குப்பையை கிளற வரும் இன்னொடு புத்திசாலிக்கு பார்த்தவுடன் கோபம் இன்னமும் தலைக்கேறி அதே குப்பையை தன் தொட்டிலில் திருப்பி போடுவார். இப்படி குப்பை வீட்டுக்கு வீடு பரவி விடும். புரட்சி எல்லா குப்பை தொட்டிகளிலும் வெடிக்க, இன்னொரு புத்திசாலி அது குப்பையே இல்லை, அப்படி போட்டது தவறு என்பான். அவன் குப்பையும் பரவி, குப்பைகளை போட்டவர்கள் குழாயடி சண்டையில் இறங்குவார்கள். ஒரு கட்டத்தில் வேறொரு புத்திசாலி புதிதாக இன்னொரு குப்பையை போட, பழைய குப்பையை எல்லோரும் மறந்துவிடுவார்கள். இப்படி குப்பைகள் எல்லா இடமும் பறந்து, குப்பைகளுக்கு மத்தியிலேயே வாழும் இனமாக பூமியின் மனித இனம் மாறிவிட்டது.

:lol: :lol: :lol:

Edited by துளசி

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நண்பர்களே ..

உதயம் அவர்களே .. என் பதிவு எனக்கு குழந்தை போல .. நீங்கள் நகலெடுத்து பகிர்வதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் பதியும் பொது நேர்த்தியுடன் சரியான பந்தி பிரிப்புகளுடன் போடவேண்டும் ... அல்லது ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானே செய்திருப்பேன்.

http://www.padalay.com/2012/06/blog-post_25.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.