Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடாநாட்டில் புதிய வருகை “தமிழ்நாதம்” தேசியத்திற்கானதா? – சரிதம் ஆசிரியர் பீடம்!

Featured Replies

குடாநாட்டில் புதிய வருகை “தமிழ்நாதம்” தேசியத்திற்கானதா? – சரிதம் ஆசிரியர் பீடம்!

thamilnaatham-3-100x100.jpg

தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு, கைதிகள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு நிகழ்வுகளின் எதிரொலிப்புக்கள் ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்ற நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் பேசும் மக்களின் எழுச்சிக்குரல் என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்திருக்கிறது தமிழ்நாதம் என்கின்ற நாளிதழ். பத்திரிகையின் பெயரும், மகுடவாசகமும் அந்தப் பத்திரிகை தொடர்பிலான மயக்கத்தினை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடலாம்.. குறித்த பத்திரிகையின் பின்னணி தொடர்பில் சில முன்வைப்புக்களை மேற்கொள்ள சரிதம் ஆசிரியர் பீடம் முற்படுகின்றது. சமாதான உடன்படிக்கை நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளின் நிர்வாக பீடங்களுக்கு சவால் விடும் வகையில் நமது ஈழநாடு என்றொரு பத்திரிகை வெளிவந்திருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். குறித்த பத்திரிகை யாழ்ப்பாணத்தில் நாவலர் வீதியில் இருந்து வெளிவந்திருந்தது. 2006ஆம் ஆண்டு போர் தொடங்கிய பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழல் ஏற்பட்டிருந்தது. நமது ஈழநாடு பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் சிவமகாராஜா சுட்டுக்கொல்லபட்டார். அதன் பின்னர் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி அந்தப் பத்திரிகையின் ஆசியர் பீடத்தினர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி வன்னியிலும், அயல் நாடுகளிலும் தஞ்சம் அடைந்தனர். ஆனாலும் அதன் அச்சுக்கூடம் அந்த இடத்திலேயே காணப்பட்டது. அதனை இடம்மாற்றுவதற்கான சூழல் அன்று இருக்கவில்லை. குறித்த பத்திரிகை நமது ஈழநாடு பத்திரிகை நிர்வாக இயக்குநர் சிவமகாராஜா (மாமனிதர் சிவமகாராஜா)வின் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் போர்ச் சூழல் உணரப்பட்ட போதும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறாமையால் அவர் தனது உயிரை இழக்க நேர்ந்தது. இருப்பினும் குறித்த பத்திரிகை அச்சுக்கூடத்தினை அவரது சகோதரன் தனது பொறுப்பிலேயே வைத்திருந்தார்.

போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த போதும், போர் நிறைவுக்கு வந்த பின்னரும் ஈபிடிபியினர் குறித்த அலுவலகத்தையும் அதன் இயந்திரங்களையும் தமக்கு வழங்கும்படியும் தாம் பத்திரிகை ஒன்றை வெளியிடப்போவதாக குறித்த நபரை நாடியிருக்கின்றனர். இருப்பினும் அதற்கு அவர் உடன்பட மறுத்திருக்கின்றார். இந் நிலையில் 2010ஆம் ஆண்டு குறித்த பத்திரிகை விடுதலைப்புலிகளுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்து அந்த அலுவலகத்திற்கு அதிகார வர்த்கத்தினரால் சீல் வைக்கப்பட்டு அதன் பராமரிப்பாளருக்கான உரிமை முற்றுமுழுதாக பறிக்கப்பட்டது.

இந் நிலையில் அதே அலுவலகத்தில் அதே இயந்திரங்களின் துணையுடன் வெளிவந்திருக்கிறது ‘தமிழ்நாதம்’ என்கின்ற புதிய பத்திரிகை. யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகள் வெளிவருவதாக இருந்தால் அவை தமிழ்த் தேசியத்தினை வைத்துக் கொண்டே பிழைப்பு நடத்த முடியும் என்பது எழுதாத விதியாக இருப்பதனை ஏற்கனவே வெளிவந்து சோர்ந்து போன தேசியத்திற்கு எதிரான பத்திரிகைகள் வெளிப்படுத்தியிருந்தன., விற்பனைக்காக கொண்டு செல்கின்ற பத்திரிகைகளை மீளவும் திரும்பி பெற்றுவந்து அலுவலகத்தின் பின்பகுதியில் கொட்டுவது போன்ற செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக குறித்த பத்திரிகைக்கான கொள்கைவகுப்புப்பீடம் தீர்மானித்திருக்கிறது. எனவே தமிழ் மக்களின் மனங்களை ஈர்க்கவல்ல ஒரு பெயராக ஈழநாதத்திற்கு ஒத்ததான தமிழ் நாதம் என்ற பெயரினைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனாலும் முதல் நாளிலேயே அதன் முகமூடியைக் கிழிப்பதற்கான வழிவகைகளை அவர்களே ஏற்படுத்திவிட்டார்கள்.

காலங்காலமாக தமிழினத்தின் அழிவுப்பாதைக்கு பிரதான நபர்களாக அமைந்தவர்கள் வேற்றினத்தவர்கள் அல்ல எமது இனத்தினரே என்ற உண்மையை நிருபிக்கும் வகையில் செயற்பட்டுவருகின்ற ஒரு நபருடைய கருத்தினை பிரதான செய்தியாக வெளியிட்டு வந்த வேகத்திலேயே கவிழ்ந்திருக்கிறது தமிழ்நாதம்.

north.jpgவிடுதலைப்புலிகள் வலுவாக இருந்த காலத்தில் விடுதலைப்புலிகளே தமது தலைவர்கள் எனக் கூறிக்கொள்வர். விடுதலைப்புலிகளின் வலிமை குறைவடைந்து அரச தரப்பு ஆதிகம் தலைதூக்கினால் அவர்கள் தான் தமது மீட்பர்கள் என்று சொல்லிக்கொள்வர். இவ்வாறான பிழைப்பு நடத்தும் பெருமளவிலான உயர் (கல்வி) வர்க்கத்தினரை நாம் இன்று கண்கூடாகப் பார்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இந்த வர்க்கத்தினரில் முன் வரிசையில் வைத்துப் பார்க்கக்கூடியவராக விளங்குபவர் யாழ்.பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம். ‘மூவாயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது வட இலங்கைப் பகுதி’ – பேராசிரியர் புஸ்பரட்ணம் என்ற தலைப்புச் செய்தியுடன் தமிழ் நாதம் வெளிவந்திருக்கின்றது.

தமிழ்நாதத்துடன் சம்பந்தப்படாத ஆனாலும் அந்தப் பத்திரிகை முதலாவது இதழில் முக்கியத்துவப்படுத்தப்பட்ட நபர் தமிழ்த் தேசியத்திற்காக ஆற்றிவருகின்ற ஆரோக்கியமான கைங்கரியங்கள் பற்றிய வெளிவராத வெளிவரவேண்டிய சில முக்கிய விடயங்களை முன்வைக்கின்றோம்.

வடமாகாண ஆளுநர் சந்திரசிறீ வெகுவிரைவில் வடக்கு தொடர்பிலான ஆய்வு தொகுப்பு நூல் ஒன்றினை வெளியிடுவதற்கான முழு மூச்சிலான செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றார். அந்த நூலில் வட பகுதி சிங்களவர்களுக்குச் சொந்தமானது என்ற முடிவுடன் வெளிவருவதற்கான முனைப்புக்கள் இடம்பெற்றுவருவதாக தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த நடவடிக்கைகளுக்குத் துணை நிற்கும் முக்கியஸ்தர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தின் அதி உயர் பதவிகளில் இருந்த தற்போதும் இருந்து வருகின்ற நபர்கள் என்ற கசப்பான உண்மைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்மித்த மாவட்டங்களில் காணப்படுகின்ற தொல்லியல் சான்றுகளுக்கு சிங்கள முத்திரை குத்துவதற்கான முனைப்புக்களில் பேராசிரியர் புஸ்பரட்ணத்தினைப் பயன்படுத்திவருவதாக அவருக்கு தொண்டாற்றி வருகின்ற சில முக்கியஸ்தர் தமது ஆற்றாமையினை தமக்கு நெருக்கமானவர்களிடம் கொட்டித்தீர்த்திருக்கின்றனர்.

pusparadnam-2.jpgஇரண்டாவது சங்கிலியன் யார்? என்பது அநேக தமிழ் மக்களுக்குத் தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. ஆனால் இரண்டாவது சங்கிலியன் டக்ளஸ் தேவானந்தா என்று கண்டறிந்திருந்தவர் வரலாற்றுத்துறைப் பேராசிரியராவார். சங்கிலிய மன்னின் சிலையை உடைத்து அதனை சீரமைப்பு மீளத் திறத்தல் என்ற போர்வையில் அந்தச் சிலைக்கான கல்வெட்டில் மாண்புமிகு அமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது என்ற விடயத்திற்கான பிரதான ஆலோசராகவும் புஸ்பரட்ணம் விளங்கியிருந்தார். குறித்த சிலை திறப்பு நிகழ்விலேயே அவர் அமைச்சரை இரண்டாவது சங்கிலியன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் புதிதாக வெளிவரவிருக்கின்ற ஒரு பத்திரிகைக்கான பிரதான செய்தியாக வடக்கு 3000 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது என்று உரையாற்றத் தெரிந்த அவருக்கு அது யாருக்குச் சொந்தமானது என்பதைக் குறிப்பிட வரலாற்று ஆதாரம் இல்லையா? அல்லது வரலாற்று ஆதாயம் தேடுகிறாரா? என்ற கேள்விகள் எழுவதனைத் தவிர்க்க முடியவில்லை.

ஆக இவ்வாறானவர்களின் கூட்டுமுயற்சியில் அரச லேக்கவுஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நபர் ஒருவரை ஆசிரியராகக் கொண்டே தமிழ்நாதம் நமது ஈழநாடு அலுவலத்தில் அத்துமீறி உள் நுழைந்து ஈழநாதத்தின் பாதியினை தன்னகத்தே சொருகிக்கொண்டு அரசியல் செய்யத் தலைப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியம் என்ற பாணியில் பயணித்து தமிழ்த் தேசியத்தினை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு அது திட்டமிட்டிருக்கலாம். ஆனாலும் அந்தப் பத்திரிகை முதலாவது இதழில் வரலாற்றுத் தவறுகளைப் பதிவாக்கவிருக்கின்ற ஒரு பேராசிரியரின் செய்தியினை பிரதானமான செய்தியாக வெளியிட்டதுடன் மட்டுமல்லாமல் அதன் முதலாவது பிரதியினை ஆளுநரிடம் கையளித்திருந்தமையும் அதன் எதிர்காலம் குறித்த அதன் ஆரோக்கியமான பயணத்தினை முன்கொண்டு நகரும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம் இந்த வார்த்தைப் பிரயோகங்களை வெறுப்பாகக் கொண்ட ஒரு அணி தமது பிழைப்பிற்காக தமிழ் சார்ந்த பெயர்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்யத் தலைப்பட்டுள்ளமையை தமிழ் மக்கள் அங்கீகரிப்பார்களா? அவர்களில் தமிழ்த் தேசியத்தின் ஊடான பத்திரிகை விற்பனையில் ஆதாயம் கிட்டுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சரிதம் ஆசிரியர் பீடம்.

ஆசிரியர் குறிப்பு - ஈழநாடு பத்திரிகை செயற்படாமல் இடைநிறுத்தப்பட்டமை தொடர்பிலான திருத்தத்தினை மேற்குறித்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றோம். சுட்டிக்காட்டிய நமது ஈழநாடு பத்திரிகையின் நண்பர்களுக்கு நன்றி

thamilnaatham-1024x811.jpg

சரிதம் ஆசிரியர் பீடம்.

இனத்தை விற்பவர்கள் விற்றுக் கொண்டே இருப்பார்கள். நாம் தான் கவனமாக இதை கையாள வேண்டும், அப்பாவி மக்களுக்கும் இந்த நரிகளை அடையாளம் காட்ட வேண்டும். நன்றி சரிதம் ,நன்றி ப்ளுபேர்ட்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.