Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழக மக்களுக்காகவும் பலகாலம் களப்பணியாற்றிவரும் பெரியார் திக அமைப்பாளர் பழனிச்சாமி கொலை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரியார் திக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனிச்சாமி வெட்டிக்கொலை

Published By பெரியார்தளம் On Thursday, July 5th 2012. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ராயக்கோட்டை செல்லும் வழியில் உள்ள அலேசீபம் தாளே குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்ற பழனிசாமி (47). பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இன்று காலை 6.20 மணிக்கு இவரது வீட்டிற்கு டாடா சுமோ கார் மற்றும் 3 வாகனங்கள் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 20-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி, மற்றும் வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர். அவர்களை பார்த்ததும் பழனி தப்பி ஓடினார்.

ஆனால் காரில் வந்த கும்பல் அவரை விரட்டியது. அப்போது கும்பலை சேர்ந்தவர்கள் பழனியை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஆனால் குறி தவறி வீட்டின் ஜன்னல்கள் மற்றும் வீடுகளில் குண்டுகள் பட்டது. இதில் ஒரு குண்டு பழனியின் உடலை துளைத்தது. இதனால் நிலை குலைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். அப்போது 20 பேர் கொண்ட கும்பல் அவரை பல இடங்களில் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

pazhani05072012.jpg

கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனிச்சாமி

அதன் பிறகும் ஆத்திரம் தீராத அவர்கள் பழனியின் தலையை தனியாக துண்டித்து வீசினர். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் தீட்தித், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சுகாசினி மற்றும் உத்தனப்பள்ளி போலீசார் விரைந்து சென்றனர்.

பழனி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். வீட்டின் பல இடங்களில் குண்டு துளைத்து இருந்ததை போலீசார் பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். மேலும் மோப்ப நாய் மூலம் சோதிக்கப்பட்டது. ஆனால் அது தெருவரை சென்று அங்கேயே நின்று கொண்டது.

பெரியார் திராவிடர் கழக பிரமுகர் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அங்கு ஏராளமான கட்சியினர் திரண்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது.

இதையடுத்து தாளே குளம் கிராமத்துக்கு அதிகளவில் போலீசார் வரவழைக்கப்பட்டடு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட பழனியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே 6.4.2012 அன்று நீலகிரிக்கு அருகே கோவில் திருவிழா வில் ஏற்பட்ட தனி நபர்களின் சிறு சச்சரவைச் சாக்காக வைத்து, நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இந்திய பொதுவுடைமைக் கட்சி யின்

cpi_ramachandrans.jpg

இந்திய பொதுவுடைமைக் கட்சி யின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரன்

தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனின் உறவினரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் சந்திராம்மாவின் கணவர் வெங்கட் ராஜி மற்றும் அவரது மகனும், கழகத் தோழருமான மாருதி, அவரது இரு சகோதரர்களையும் இந்திய பொதுவுடைமைக் கட்சி யின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனின் அண்ணனும் அவரது அடியாட்களும் நான்கைந்து வாகனங்களில் வந்து கடுமையாக தாக்கியுள்ளனர். ஊர்ப் பொது மக்களும், கழகத் தோழர் களும் அந்த வன்முறைக் கும்பலை விரட்டி யடித் துள்ளனர். அதன் பின்னர் தாக்குதலுக் குள்ளானவர் களை ஓசூர் மருத்துவ மனையில் சேர்க்கச் சென்ற போது விடியற்காலை 3 மணியளவில் சட்ட மன்ற உறுப்பினர் இராமச் சந்திரனே நேரில் அடியாட் களுடன் வந்து மீண்டும் தாக்கினர். இதில் மேலும் மூன்று பேருக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக தங்கள் வன்முறையால் அந்த வட்டா ரத்தையே மிரட்டி வந்த அந்த வன் முறையாளர்களின் செயல்பாடுகளை யும், அவர்களுக்கு உடந்தையாக வழக்குகளைத் திரித்து பதிவு செய் திருக்கிற காவல்துறை கருப்பு ஆடு களின் நடவடிக்கைகளையும் கண்டித்து பெரியார் திராவிடர் கழக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் 28.04.2012 அன்று நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் மிரட்டலுக்கு பயந்து கிடந்த அப்பகுதி மக்கள், அச்சத்தை உதறிவிட்டு, 1500-க்கும் அதிகமானோர் இந்திய பொதுவுடைமைக் கட்சி யின் தளி சட்ட மன்ற உறுப்பினர் இராமச்சந்திரனுக்கு எதிராக திரண்டிருந்தார்கள்.

http://www.periyarthalam.com/2012/07/05/periyar-dk-cadre-comrade-pazhanisamy-killed/

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் பழனிச்சாமியின் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.

பழனிச்சாமியின் மறைவு வருத்தத்தை தருகிறது. தமிழ்மக்கள் கவனமாக இருப்பதால் மட்டுமே இப்படி ரவுடி அரசியல் மூலம் தலைவர்கள் இறக்க மாட்டார்கள். கண்ணீர் அஞ்சலிகள்

[size=1]

[size=4]பழனிச்சாமியின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். [/size][/size]

[size=1]

[size=4]முன்னராக சீமானின் ஆதரவாளர் ஒருவரும் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தார்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.