Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒபாமாவின் ஊடகப் பேச்சாளராக பொன்சேகா செயற்படுகிறார்.

Featured Replies

சரத் பொன்சேகா தெரிவித்து வரும் கருத்துகளைப் பார்க்கும் போது அவர் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இலங்கை பேச்சாளர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார் போல் தெரிகிறதென தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.பிரித்தானிய ஊடகவியலாளரிடம் வழங்கிய செவ்வியில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ள தேச விரோத கருத்துக்கள் குறித்து தேசிய விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு கருத்து வெளியிட்ட முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க,

சிலர் அரசை வீட்டுக்கு அனுப்பும் நோக்கில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஐதேக, ஜேவிபி, ததேகூ, அரச சார்பற்ற நிறுவனங்கள் அவ்வாறு கூறும் பிரிவில் உள்ளனர். அரசுக்குள் உள்ள பொருளாதாரக் கொலை அதிகாரிகளும் இதில் ஒரு பிரிவினராகும்.

அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறும் அனைத்து பிரிவினரும் அதிகாரத்தைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்பவர்கள். அந்தச் சூழ்ச்சியை அமெரிக்கா முன்னின்று நடத்துகிறது. இந்தச் சூழ்ச்சியின் பின்னணியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் ஊடகப் பேச்சாளராக சரத் பொன்சேகா செயற்படுகிறார். பிரித்தானிய ஊடகவியலாளருக்கு அவர் வழங்கிய செவ்வியில் இது உறுதியாகிறது.

புலி ஆதரவாளர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது சரத் பொன்சேகா 20,10 18 வாக்குகளையே பெற்றார். ஜனாதிபதியுடன் தனிப்பட்ட குரோதங்கள் இருக்கலாம். ஆனால் அதற்காக நாட்டு மக்களைப் பழிவாங்க வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.

நாட்டில் கிளர்ச்சி ஏற்பட வேண்டும் என சரத் பொன்சேகா கூறியிருப்பதை கேட்டுக் கொண்டு நாட்டை நேசிக்கும் எவரும் அமைதியாக இருக்க மாட்டார்கள். அராபியா போன்று இலங்கையில் மக்கள் அரசுக்கு எதிராக போராட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

லிபியாவில் கிளர்ச்சி ஏற்பட்டதால் அமெரிக்க படைகள் விமான தாக்குதல் நடத்தினர். இலங்கையை இந்த நிலைக்கு மாற்ற அமெரிக்கா விரும்புகிறது. பிரபாகரன் மூலம் அதனைச் செய்ய முடியாது போனது. இன்று சரத் பொன்சேகாவை அனுப்பி அதனை செய்ய முனைகின்றனர். பொன்சேகாவும் அக்கனவை காண்கிறார். இலங்கைக்கும் அராபிய வசந்தத்தைக் கொண்டுவர பார்க்கின்றனர். அமெரிக்காவின் கை பொம்மையாக மாறியுள்ள சரத் பொன்சேகாவிற்கு அரசியல் செய்ய இலங்கையர் எவரும் அனுமதிக்க மாட்டார்கள்.

http://thaaitamil.com/%E0%AE%92%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.