Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னரில் 5210 ஏக்கர் நிலப் பரப்பு படையினரால் ஆக்கிரமிப்பு.

Featured Replies

மன்னார் மாவட்டத்தில் 5210 ஏக்கர் நிலப்பரப்பினை படையினர் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ளதாக பிரதேச செயலாளர் பிரிவு ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடந்த 07 ஆம் திகதி மன்னாரில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த காணி அபகரிப்புக்கான சாத்வீக போராட்டத்தின் போது வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட சன்னர் கிராமத்தில் மட்டும் 3500 ஏக்கர் நிலப்பரப்பினை படையினர் தம்வசப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலம் படையினரின் பயிற்சிக்கல்லூரிக்கென அறிவிக்கப்பட்டு எல்லைக்கற்கள் போடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

காற்றலை மின்உற்பத்திக்கென வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டு மன்னார் தாழ்வுப்பாடு கடற்கரை தொடக்கம் கட்டுக்காரன் குடியிருப்பு வரை 300 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டுள்ளது.

விமானப்படைத்தளத்திற்கென தள்ளாடிக்கு வடக்கே திருக்கேதீஸ்வரம் வரையில் 275 ஏக்கர் நிலப்பரப்பினை படையினர் கையகப்படுத்தியுள்ளார்கள்.

பறவைகள் சரணாலயத்திற்கென 150 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 3500 ஏக்கர் நிலப்பரப்பு படைப்பயிற்சித் தளத்திற்காக எல்லைபோடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதியினைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்பமுடியாமல் முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும்,காடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவு,மாந்தைமேற்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 4799 ஏக்கர் நிலப்பரப்பினை படையினர் தம்வசப்படுத்தியுள்ளனர்.

மன்னார்மாவட்டத்தின் நானாட்டான்,மடு,முசலி போன்ற பகுதிகளிலும் படையினரும், கடற்படையினரும் மக்களின் வாழ்விடங்களை அபகரித்துள்ளார்கள்.

முள்ளிவாய்க்கால் போரின் பின்னரே தமிழ்மக்களின் காணிகள் பெருமளவு படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5210-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.