Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் மீதான தடை நீட்டிப்பு ஏன்..? எதற்கு..? ஈழதேசம் பார்வையில்..!

Featured Replies

விடுதலைப் புலிகளின் மீதான தடை நீட்டிப்பு ஏன்..? எதற்கு..? ஈழதேசம் பார்வையில்..!

[size=3]

eeladhesam%20seythi%20aaivu.jpgமத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அதன் இணை செயலர் தர்மேந்திரா சர்மா வெளியுட்டுள்ள அறிக்கை அல்ல இவ்வாறு மிரட்டி உள்ளார் தமிழ் தேசியம் பேசும் அனைவரையும். " தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடு இந்திய இறையாண்மைக்கும் நாட்டின் ஒற்றுமைக்கும் மிகப் பெரும் சவாலாக இருக்கும் என்பதால் இந்த இயக்கத்தை தொடர்ந்து தடை செய்வது மிகவும் அவசியமாகிறது என்றார்.

எங்கே இருக்கிறார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள்..?புலிகள் தான் அழிக்கப்பட்டுவிட்டதாக தம்பட்டம் அடித்தீர்களே?அதென்ன இந்திய இறையாண்மை..? விடுதலைப் புலிகளுக்கு ஆயுதமும் பயிற்சியும் கொடுக்கும் பொழுது இல்லாத இறையாண்மை.. தற்பொழுது எப்படி உயிர்த்தெழுந்தது..?

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்திய மக்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளதால் இதன் மீதான தடை நீடிக்கப்படுவதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

அதெப்படி விடுதலைப் புலிகள் இந்திய மக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்..?

இங்கே தான் இருக்கிறது பார்ப்பனிய நரித்தனம். அதாவது விடுதலைப் புலிகள் தங்களது சொந்த மக்களின் நலனுக்காக இறுதி வரை போராடினார்கள். இந்திய அரசியல் தலைவர்களோ, நாளொரு வண்ணம் பொழுதொரு வண்ணம் எவ்வாறு இந்திய நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பது..? பிறகு தங்களது சொந்த வாரிசுகளை அரசியல் அதிகாரத்தில் அமர்த்துவது என்று இருக்கையில், விடுதலை புலிகளின் தலைவர்கள் எவ்வாறு இதிகாசங்களில் புராணங்களில் மட்டும் கேட்டு அறிந்த படி மிகச் சிறந்த ஒழுக்காற்றுகளை பின்பற்றுகிறார்கள் என்ற வயிற்று எரிச்சல் அல்ல. மாறாக இந்தப் பண்புகளை அறவே அழித்து, இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரையும் சோத்துப் பிண்டங்களாக, காசுக்காக கை ஏந்தும் மன நிலைக்கு கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், அறம்,கொடை, மக்கள் அரசு என்ற ஒன்றா..? இந்தக் கருத்துக்கள் மக்கள் அனைவரின் அடிமனதில் புதைந்து இருக்கையில், அதை மீண்டும் வெளிக்கொணரும் தமிழ் தேசியம் பேசுவோரை விடுதலை புலிகள் என்று புதிய முத்திரையை குத்துகிறது. அதாவது விடுதலைப் புலிகள் பற்றி பேசினாலே எழுதினாலே அவரும் விடுதலைப் புலிகள் தான் என்று புதிய வியாக்கியானம் செய்கிறது உள்துறை.

விடுதலைப் புலிகளின் இயக்கத்தினை தொடர்ந்து அதன் செயல்பாடுகளை கண்காணித்து அவற்றை அணைத்து வகையிலும் கட்டுப்படுத்துவது தேவை என்பதால் தடை விதிக்கபடுகிறது. மேலும் புலிகள் இயக்கமானது இந்திய எதிர்ப்புக் கொள்கையை வலுவாகக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கும் இந்திய மக்களின் பாதுகாப்புக்கும் மிகுந்த அச்சுறுத்தலான விசயமாகும் என்கிறார் சர்மா.

மெளணம் காக்கும் புலிகளின் செயல்பாடுகளை எவ்வாறு தொடர்ந்து கண்காணிப்பார்கள்..? கட்டுப்படுத்துவார்கள்..? புரியவில்லை என்று யாரும் கவலை அடைய வேண்டியதில்லை. அங்கே புலிகள்...இங்கே புலிகள் என்று கூறி அதற்காக நிதி ஒதுக்கி அந்த நிதியை புலி பூச்சாண்டி காட்டி சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்காக இருக்குமோ..? இதற்காக இவர்களே ஒரு சில இடங்களில் ஆயுதங்களை அல்லது சிறு சிறு சம்பவங்களை ஏற்படுத்தி, தமிழகத்தில் விடுதலைப் புலிகள் அச்சம் உள்ளது என்று ஏற்பாடு செய்வார்கள். ஆனால் நேற்றைய தினமணி நாளிதழில் விடுதலைப் புலிகளின் மீதான தடை தேவையா என்ற சர்வேக்கு சுமார் 55 சதவீத மக்கள் தேவையில்லை என்று வாக்கு அளித்திருக்கிறார்கள். பெருவாரியான மக்கள் தேவையில்லை என்ற பொழுது, ஏன் உள்துறை தடை நீட்டிப்பு என்று அறிவிக்க வேண்டும். நாம் மேற்சொன்ன காரணங்கள் தவிர.

விடுதலைப் புலிகள் இயக்கமானது இந்திய எதிர்ப்புக் கொள்கையை வலுவாகக் கொண்டுள்ளது என்கிறது அந்த மிரட்டல் அறிக்கை..! உள்துறை சொல்லும் விடுதலை புலிகள் இயக்கம் என்பது இந்த இடத்தில் விடுதலைப் புலிகளை அவர்களின் லட்சியமான தமிழ் ஈழம் என்று சொல்லப்படுவர்களை குறிக்கிறது. தமிழ் ஈழம் வேண்டும் என்பவர்கள் அனைவரும் இந்திய எதிர்ப்புக் கொள்கையை வலுவாகக் கொண்டுள்ளார்கள் என்கிறது இந்த அறிக்கை.

இந்திய எதிர்ப்புக் கொள்கையை அல்ல. பார்ப்பனிய கொள்கையை காங்கிரஸ் கட்சியின் கொள்கையை எதிர்ப்பதை எவ்வளவு நயவஞ்சகமாக கூறுகிறார்கள், இந்திய அரசு எதிர்ப்பு என்று. பார்ப்பனிய காங்கிரஸ் கட்சிகளின் எதிர்ப்பு என்பது இந்தியாவின் எதிர்ப்பு, இந்திய மக்களின் பாதுக்காப்பு அச்சுறுத்தல் என்று மிக விசமத்தனமாக கூறுகிறது இந்த தடை நீட்டிப்பு.

விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கம் மூலமாக..? ( முதலில் விடுதலைப் புலிகள் என்றார்கள், தற்பொழுது ஆதரவு இயக்கம் என்கிறது அறிக்கை. ) இந்தியாவின் ஆதரவை திரட்ட இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் முயல்கின்றனர். இணைய தளம் மூலமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் பெரும்பாலும், புலிகள் இயக்கம் போரில் தோற்றதற்கு இந்தியாவிலுள்ள அரசியல் தலைவர்களும், உயர் அதிகாரிகளும் காரணம் என்பதைப் போல சித்திரிக்கப்பட்டுள்ளது. இது போன்று இணையதள மூலம் தொடர்ந்து பறப்பட்டு வருகிறது என்கிறது தடை நீட்டிப்பு காரணங்கள்.

இலங்கைப் போரில் விடுதலைப் புலிகள் அவர்களாவே கை காலுகளை கட்டிக் கொண்டு சிங்கள ராணுவம் முன் நின்றது போல கூறுகிறது உள்துறை. போகட்டும். இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் அதி உயர் அதிகாரிகள் அன்றி சப்பாத்தி சுட்டுப் போடும் சிப்பாயும், வட்ட சதுர செயலாளர்களுமா காரணம் புலிகள் போரில் தோற்றதற்கு..? முதலில் மிக மிக தந்திரமாக சர்வதேச புகழ் பெற்ற அரசியல் தலைவர் தமிழ் செல்வனை ஏன் கிளஸ்டர் குண்டு போட்டு கொல்ல வேண்டும்..? ஆயுதங்கள், தொழில் நுட்ப ஆலோசனைகள், நவீன ஆயுதங்கள் போதாக்குறைக்கு பல ஆயிரம் ராணுவ வீரர்கள் என்று விடுதலை புலிகளை கொன்று அழித்தது மட்டும் அல்ல, போரில் பல லட்சம் மக்கள் எங்குமே அகதிகளாக சென்று விடக் கூடாது என்று கடலிலும் முள்ளி வாய்க்காலிலும் வைத்தே கொன்றது போன்ற மாபாதக செயல்களை இலங்கையும் இந்தியாவும் சேர்ந்தே செய்தன என்கிறார்கள் போர்க்குற்ற ஆய்வாளர்கள்.

தனி நாடு கோரிக்கையானது இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது. இது இந்தியாவுக்கு மிகுந்த அச்சுறுத்தலான விசயம் என்கிறது அந்த அறிக்கை. ஆம். இலங்கையில் தனி ஈழம் அமைந்து விட்டால், இந்தியாவில் காஷ்மீர் தனி நாடு கேட்கும் உரிமையை அடைந்து விடுவார்கள். பிறகு வட கிழக்கு மாநிலங்கள் தனி நாடுகள் கேட்கும் உரிமையைப் பெறுவார்கள். எனவே இலங்கையின் இறையாண்மை என்று சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகி விடும், அப்படியே இந்தியாவிற்கு மேற்கண்ட காரணத்தால் அச்சுறுத்தல் இருக்கிறது என்று சொல்லாமல் பொத்தம் பொதுவில் அச்சுறுத்தல் என்றால் சரியாயிற்று என்கிறது அறிக்கை.

ஆக, தனி ஈழம் வேண்டும் என்ற கருத்துக்களை யார் ஒருவர் உயர்த்திப் பிடித்து பேசினாலும் எழுதினாலும் அது குற்றம். அவர்கள் விடுதலைப் புலிகள் தவிர வேறு யாரும் கிடையாது. எனவே இந்தக் கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்று சொல்கிறது இந்த தடை நீட்டிப்பு காரணம். என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

சங்கிலிக்கருப்பு

[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் வளர்ச்சியும்.....பிரமிக்கத்தக்க முன்னெடுப்புகளும் இந்தியனின் வயிற்றில் புளியை கரைத்திருக்கும்.

இந்தியாவிடம் இருப்பது இறையாண்மை அல்ல இயலாண்மை.....குருவி கூடு கட்டுவதுபோல் கட்டி வளர்த்த தேசத்தை கலைத்த நாதாரிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் வளர்ச்சியும்.....பிரமிக்கத்தக்க முன்னெடுப்புகளும் இந்தியனின் வயிற்றில் புளியை கரைத்திருக்கும்.

இந்தியாவிடம் இருப்பது இறையாண்மை அல்ல இயலாண்மை.....குருவி கூடு கட்டுவதுபோல் கட்டி வளர்த்த தேசத்தை கலைத்த நாதாரிகள்.

இத்தாலிச் சனியாள் !!!!!

இத்தாலிச் சனியாள்

[size=5]இத்தாலியில் பிறந்து

இங்கிலாந்தில் பிழைத்து

இந்தியாவில் புகுந்து

இலங்கையில் தமிழரை

அழித்த சனியே![/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.