Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெசொ அழைப்பில் “தனிநாடு இல்லை” என்பதால் ஆராய்கிறோம் என்கிறார் சம்பந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]sampanthan-50-copy-100x100.jpg[/size]

[size=3][size=4]சென்னையில் ஓகஸ்ட் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள ‘டெசோ’ மாநாட்டில், பங்குபற்றுவதா இல்லையா என்பது குறித்து கவனமாக ஆராய்ந்துவருவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் ஏற்பாட்டில் இம்மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size][/size]

[size=3][size=4]இது தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கேட்டபோது, “இம்மாநாடு ஓகஸ்ட் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கு போதிய கால அவகாசம் உள்ளது. இதுகுறித்து நாம் கவனமாக ஆராய்கிறோம். நாம் அவசரப்பட்டு தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என பதிலளித்தார்[/size][/size]

[size=3][size=4]எனினும், தனக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழில், இம்மாநாடு இலங்கையில் தனிநாடொன்றை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடலென குறிப்பிடப்படவில்லை எனவும் இரா. சம்பந்தன் கூறினார். வடக்கு கிழக்கில் போதிய சுயாட்சியுடன் சுயமதிப்புடனும் சுயகௌரவத்துடனும் தமிழ் மக்கள் வாழ்வதற்கான உரிமைகள் குறித்த கலந்துரையாடல் என்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.[/size][/size]

[size=3][size=4]இதேவேளை, மு.கருணாநிதியின் நடவடிக்கையை தமிழர் விடுதலை கூட்டணி அபத்தமானது எனத் தெரிவித்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]“இரு நாடுகளும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கும்வேளையில், கருணாநிதி போன்ற சிரேஷ்ட அரசியல்வாதி இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்” என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறினார்.[/size][/size]

[size=3][size=4]http://www.saritham.com/?p=64488[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

உசாராக இருங்கப்பா.. அவன் கோவணம்தான் உங்கட உரிமை... என்றால் நீங்க கோவணம் கட்டி கொண்டு குச்சி மிட்டாய் சப்பிட்டு நிற்கணும்... :rolleyes: :rolleyes:

இதன் பின்னணியில் ஈழத்தமிழர் நலனிலும் பார்க்க தமிழ்நாட்டு அரசியல் இருப்பே முக்கியமாக உள்ளது தற்போது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது!

தமிழ்நாட்டு சட்டசபை தீர்மானத்தின் பின்னணியில் அமெரிக்காவின் அழுத்தத்தால் தமிழின விரோத இந்திய காட்டுமிராண்டி அரசு வேறு வழியில்லாமல் ஜெனீவாவில் வாக்களித்தது தம்மால் தான் என்று கொலைஞர் கும்பல் உளறி தமிழ் மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு தமிழக சஞ்சிகைகள் சிலவும் வக்காலத்து வாங்குவதாக தெரிகிறது! வேறு சில சஞ்சிகைகள் ஜெயலலிதா தமிழீழ மகாநாட்டை குழப்ப தமிழின விரோத இந்திய காட்டுமிராண்டி அரசுடன் சேர்ந்து சதி செய்ததாக உளறுகின்றன. இவ்வாறான சஞ்சிகைகளில் இந்திய பயங்கரவாதிகளின் கைகூலிகள் இருந்து தமிழின விரோத செயற்பாடுகளை அவ்வப்போது செய்தது மறக்க முடியாது!

மீண்டும் இந்தியப் பயங்கரவாதிகள் ஈழத் தமிழ் மக்களுக்கான ஆதரவு பெருகுவதை குழப்ப சதிகள் செய்வது தெளிவாக தெரிகிறது!

இதில் கலந்து கொள்ளும் ஈழத் தமிழ் பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் ஜெயலிதா, வைகோ முதலிய ஏனைய அரசியல் தலைவர்களையும் (காங்கிரஸ் பயங்கரவாதிகள் தவிர) சந்திப்பது அவசியம்.

வைகோ முதலியவர்கள் இந்த மகாநாட்டில் கலந்து கொள்ளாத பட்சத்தில் கூட்டமைப்பினர் இதில் கலந்து கொள்வதை தவிர்ப்பது மேலானது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.