Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் முன்னாடி ஒரு பொண்ணு தன்னோட படிச்ச ஒரு நண்பிய ஒரு பையன் ஊரெல்லாம் சுத்திட்டு இப்போ ஏமாத்திட்டானாம்......அதனால தான் அட்வைஸ் பன்னதாம் பாய்ஸ்ச நம்பாத எண்டு

அதுக்கு நான் சொன்ன பதில்......

காதலிக்கிற பெண்ணையே கல்யாணம் கட்டிகிறது எல்லாம் ஓல்ட் பேஷன்

பேசிக்கா பொண்ணுங்க கழட்டி விடுறது தான் ஜாஸ்தி என்ன இந்த பையன் முந்திக்கிட்டான்

அதுக்கு அந்த பொண்ணு சொன்னா அவங்க ஊரெல்லாம் சுத்தினான்களே அதுக்கு என்ன சொல்றேன்னு......

அதுக்கு நான் சொன்னேன்.....

ஊர் சுத்தினதோட விட்டாங்களே எண்டு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான் எண்டு....

பொண்ணு ரொம்ப டென்ஷன் ஆகி செருப்ப தூக்காத குறை நான் எஸ்கேப்......

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பொண்ணுங்க என்னா தான் பசங்கள திட்டினாலும் கடைசில வாழ்க்கைப்பட போறது ஒரு பையன் கிட்ட தானே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனது பிள்ளை களுக்கென இருந்த பசுவின் பாலை அர்ச்சகர் தனது பிள்ளைகளுக்கென கவர்ந்துவிட, கோபமுற்ற பத்திரகாளியம்மை பிரம்மனிடம் சண்டையிட்டுப் பெற்ற கற்பக விருட்சமே பனைமரமும் அதன் பதநீரு மென்ற கிராமியக் கதை வழக்கு உண்டு.

பனையின் தாயகம் ஆப்பிரிக்கா எனப்படுகிறது. இந்தியாவில் எட்டுகோடி பனை மரங்கள் இருப்பதாகவும், அதில் 5 கோடி மரங்கள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் கணக்கிடப் பட்டுள்ளதாய் சொல்லப்படுகிறது. பல்லாயிரமாண்டு கால தமிழ் பாரம்பரியத்தின் அறிவுக் களஞ்சியத்தை ஓலைச் சுவடிகளில் சுமந்து காத்த பனை மரம்தான் இன்று வேகமாக வெட்டி அழித்து வேரறுக்கப்படும் மரங்களில் முதலிடம் பிடிப் பதாய் சொல்லப்படுகிறது.

இதமான பதநீர், இனிப்பிற்கு பனை வெல்லம், -பனங் கருப்பட்டி + பனஞ்சீனி -பனங்கற்கண்டு, கோடைக்கு நுங்கு, போதைக்கு கள், சுவைக்கப் பனம் பழம், பொங்கலுக்குப் பனங் கிழங்கு, பனங்கொட்டை சீம்பு, வீடுகள் வேய ஓலைகள், கூரைகள் தாங்கும் தூண்கள், உத்திரங்கள், சுண்ணாம்புக் காளவாய்க்கும் செங்கல்சூளைக்கும் எரிபொருள், இலை, தும்பு, ஈர்க்கு, எரிதுரும்பு, நார் -என பனை உண்மையில் ஓர் ஜீவ தரு.

  • கருத்துக்கள உறவுகள்

செய்திக்கும் எமக்கான நேரத்துக்கும்  நன்றியப்பா..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அழுக்கும், எச்சிலும் கவிந்த, ஓலைக் கீற்றுகளால் மறைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தின் கள்ளுக்கடைகளில் மட்டும் சாதீயக் கட்டமைப்பின் இறுக்கங்கள் தற்காலிகமாய் தகர்ந்து கரைந்து சிறு நேர சமத்துவம் கோலோச்சும்

அடேல் பாலசிங்கம்

ஹா ஹா ஒரு வெள்ளைக்காரிக்கு தெரிஞ்சிருக்கு நம்ம சமத்துவம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜதந்திரத்தில் விட்டு கொடுத்தலும் ஒரு வியூகம் ,பின் வாங்கி முறுக்குதலும் ஒரு வியூகம் , இப்போதய சூழலில் பாகிஸ்தானை விட்டுபிடிப்பதில் தவறில்லை.....தி ஹிந்து//////////////

ஆமாம் அதையும் மீறி பாகிஸ்தான் படையெடுத்தால் சிறப்புத்தளபதி ராம் தலைமையிலான ஹிந்து நிருபர்களை கொண்ட விஷேட படையணி அதனை முறியடிக்கும்.......

போன முறை பிஜேபி ஆட்சியில் இருந்த பொழுது தான் இந்த நவாஸ் ஷெரிப் வால ஆட்டினவர் இந்த முறையும் அதே நிலைமை போல ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி லைக்கா யாராச்சும் ஒரு நலிந்த தயரிப்பாளர பிடிச்சி அவர பினாமியா வைச்சு கத்திய வெளியிடுவானுங்க......

  • கருத்துக்கள உறவுகள்

இனி லைக்கா யாராச்சும் ஒரு நலிந்த தயரிப்பாளர பிடிச்சி அவர பினாமியா வைச்சு கத்திய வெளியிடுவானுங்க......

 

 

இது  நம்மையே  நாம் தாழ்த்துவது போலிருக்கு சுண்டல்.. :(  :(  :(

தமிழகத்தில்  எமது சொந்தங்கள் உசாராகவே உள்ளார்கள்

பார்த்துக்கொள்வார்கள்...

அவர்களை  நாம் இவ்வாறு கொச்சைப்படுத்தக்கூடாது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ பெங்களூர் வழக்கில ஜெயலலிதாவ சிக்க வைச்சிட்டு பிஜேபி ரஜினிய 2016 இல் களம் இறக்க போகுது போல தான் இருக்கு......

சுப்ரமணிய சுவாமி தீயாய் வேலை செய்வதாக கேள்வி .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை நான் இயக்கியதில்,என்

னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ktvi தான்.

இதய வாசலில் 'housefull'போட்டும் அந்த போர்டில்

தொங்கிக்கொண்டு இருக்கிறது ஆயிரம்

பாராட்டு பத்திரங்கள்-நான் மிக நேசிக்கும் இளம்

இயக்குனர்களிடம் இருந்து!

பொறுப்பு அதிகமாகி மீண்டும்

தூக்கங்கெட்டு இப்படியாகி...

நடிகர் , இயக்குனர் பார்த்தீபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று எது உலகின் மிகப்பெரிய முதலாவது இராணுவம் என்ற பகிரப்பட்ட தகவலோடு இன்று எது உலகின் இரண்டாவது பலமிக்க நாடு என்பதை பார்ப்போம்

ரஷ்யா USSR காலத்தை விட தற்போதைய ரஷ்ய ராணுவம் தான் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. தன் செலவுகளை வருடந்தோறும் அதிகரித்து கொண்டே வரும் ரஷ்யா, தன் கவனத்தை உச்ச சிறப்புமிக்க ராணுவ தொழிநுட்ப ஆராய்ச்சியில் செலுத்தியுள்ளது. உலகத்தில் உள்ள மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது ரஷ்யா. அதே போல மிகப்பெரிய பீரங்கி படையை கொண்டுள்ளது - கிட்டத்தட்ட 15,500 பீரங்கிகளை வைத்துள்ளது. முனைப்புடன் செயல்படும் அதன் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 7,60,000 பேர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே கத்தி ,புலிப்பார்வை என்று தினமும் எழுதி இணையத்தளங்களையும் முகப்புத்தகங்களையும் நிரப்பிக்கொண்டு ( நான் உற்பட ) அங்கே ஐக்கியநாடுகள் என்ற ஓன்று நடாத்தி வரும் யுத்த குற்ற விசாரணைகளின் செய்திகளை பின் தள்ளுவோம்......சிங்களத்தின் எதிர்பார்ப்பும் அது தானே........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் தோல்விக்குப் பின்னர் அழகிரியின் முக்கியத்துவம், அவர் மீண்டும் கட்சிக்கு வர வேண்டியதன் அவசியத்தை அவரது குடும்பத்தினர் கட்சித் தலைமையிடம் வலியுறுத்த ஆரம்பித்தனர். ஸ்டாலினை மட்டும் நம்பியிருந்தால் திமுகவின் நிலை கவலைக்கிடமாகி விடும் என்றும் கருணாநிதிக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்காம்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துளசி, கார்த்திகா, லட்சுமிமேனன் நடிக்க தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்

நீதியை நேர்மையான முறையில் வழங்கி எங்கள் நெஞ்சங்களில் பால் வார்த்த உயர்நீதிமன்றத்தை கோவிலாக நினைத்து வணங்குகின்றோம்.........

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே கத்தி ,புலிப்பார்வை என்று தினமும் எழுதி இணையத்தளங்களையும் முகப்புத்தகங்களையும் நிரப்பிக்கொண்டு ( நான் உற்பட ) அங்கே ஐக்கியநாடுகள் என்ற ஓன்று நடாத்தி வரும் யுத்த குற்ற விசாரணைகளின் செய்திகளை பின் தள்ளுவோம்......சிங்களத்தின் எதிர்பார்ப்பும் அது தானே........

 

ஆரம்பத்திலேயே

இதை நான் குறிப்பிட்டேன்

 

இப்ப பாருங்கள்

ஆளுக்கொருவர் மாறி  மாறி  பதிலளித்து

இதே கதையைக்கட்டி  காசு பறிப்பவர்களுக்கு பேட்டி கொடுத்து

எல்லா நேரமும் மண்ணாகிப்போகுது.........

சிறீலங்கா அரசுக்கு எல்லாம் சுலபமாகுது... :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லூர் முருகனோட அதிசியம் யாழ்ப்பாணத்தில நல்ல மழை பெய்யுதாம் பல மாதங்களுக்கு பிறகு

அரோகரா....

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா.... 

நான்  அவன் பக்தன்..... :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடி சக்கை அம்மன் கோயில் புக்கை எண்டானாம்...

என்ற வாரத்தையை பயன்படுத்திய கடைசித்தலைமுறை நாங்க தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லை பெரியாறு பிரச்சினை உருவானதே 1979-ம் ஆண்டு அதிமுக அரசால்தான்: ஜெ.வுக்கு திமுக பதிலடி......

சரி தலிவரே......நீங்களும் மதுரைக்கு போய் பஞ்சாயத்த கூட்டினா.......பைய்சல் பண்ணி வைக்க நமக்கு வசதியா இருக்கும்.....

டேய் தம்பி எட்றா அந்த செம்ப....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரதிராஜாவின் அடுத்த படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா..........

அப்பிடியே வைரமுத்துவும் பாட்டெழுதினா புரியாணி விருந்தொட ஜோதில ஐக்கியமாகிடலாம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது புலிகள் இருக்கும்வரை சோறு போட்டார்கள் இப்பொழுது இல்லை அதனால் அவர்களை தூற்றி எழுதுவதன் மூலம் மூன்று வேளையும் சோறு கிடைக்கின்றது ஆகவே பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே கருணாகரன் போன்றார்களை மன்னித்து அருள்வீராகா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனை பார்த்தீபன் தன்னுடைய பட வெற்றி விழாவிற்கு அழைத்தது சில அ தி மு க நலன் விரும்பிகள் விரும்பவில்லை என்பது அவர்களுடைய முகப்புத்தக கருத்துகளில் இருந்து அறிய கூடியதாக இருக்கின்றது ஆனால்

அவருடைய அரசியல் கருத்துக்களை தாண்டி அவரை ஒரு படைப்பாளியாக ஒரு எழுத்தாளனாக பார்த்தீபன் அழைத்தது தப்பில்லை தானே....இவை எல்லாவற்றுக்கும் மேலாக மனுஷ் அவர்கள் பார்த்தீபனுடைய ஒரு நண்பராக நலன் விரும்பியாக பல சந்தர்பங்களில் உதவி செய்தவராக இருக்கலாம் தானே... தோல்விகளை தழுவும் போது ஓடாமல் கூட இருப்பவர்களை வெற்றி விழாக்களில் மேடை ஏற்றி அழகுபடுத்துவதாக கூட இருக்கலாம் இல்லியா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு நல்லூர் முருகன் கோயில் தேர் எல்லாம் வல்ல முருகப்பெருமானோட அருளால நம்ம பசங்க எத நினைச்சு இம்புட்டு நாளும் பய பக்தியோட கோயில சுத்தி சுத்தி வந்தாங்களோ அதெல்லாம் நிறைவேறனும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எத்துனை ஆறுச்சாமி அன்புச்செல்வன் ஷக்தி தொரைசிங்கம் மற்றும் விநாயக்குகள் வந்தாலும் கேப்டனை போலீஸ் வேடத்தில் மிஞ்சுவதற்கில்லை. அதனால்தான்யா அவர் கேப்டன். அவர் போலீஸாக நடித்த படங்கள் மட்டும் மொத்தம் எத்தனை என்று எண்ணிக்கொள்ளுங்கள்.

நியாயமாகப் பார்த்தால் காவலர்களை கௌரவப்படுத்தும் வகையில் இவ்வளவு படங்கள் தொடர்ந்து நடித்த கேப்டனுக்கு போலீஸ் தரப்பிலிருந்து ஒரு பெரிய பாராட்டுவிழாவே நடத்தி முடித்திருக்கவெண்டும். ஆங்கிலம்தான் கேப்டனுக்கு வராதே தவிர அவர் தமிழ் டயலாக் டெலிவரியில் ஒரு குறையுமில்லை. யூட்யூபில் சகட்டுமேனிக்கு கிண்டலடிக்கப்படும் விஷயகாந்த்தும் தெலுங்கு பாலகிருஷ்ணாவும் டயலாக் டெலிவரியில் மற்ற ஹீரோக்களை மிஞ்சியிருக்கிறார்கள். நிறுத்தி நிதானமாக வசனத்தை தெளிவாக இயல்பாக இம்மி பிசகாமல் உச்சரிப்பதில் இவர்கள் வல்லவர்கள். அதனால்தான் அவர்கள் இவ்வளவு பிரபலமடைந்திருக்கிறார்கள். அதை மதிப்பாரில்லை.

மூப்புதான் ஒருவரை சமகாலத்திற்கு பொருந்தாதவராய் கிண்டலுக்குரியவராய் மாற்றுகிறதே தவிர்த்து ஒருவர் இளவயதில் ஏற்படுத்திச் சென்றிருக்கும் அவரது பிம்பம் காலதிற்கும் அழியாமல் கம்பீரமாய் நிற்கிறது. இது கேப்டனுக்கு மட்டுமின்றி சாதித்தவர்கள் பலருக்கும் பொருந்தும்.

இன்றுவரை காவலர் உடை தமிழ்ப்படங்களில் விஜயகாந்துக்காக மட்டும்தான் கனகச்சிதமாக தைக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கு அது தொளதொளவென்று பொருந்தாமல் தொக்கிநிற்கிறது.

தேங்க்ஸ் டு

Sivakumar Venkatachalam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள படத்திற்கு சில காட்டுப் பகுதிகளை தேர்வு செய்துள்ளார்களாம்

..........

அப்பிடியே காட்டுக்குள்ளையே விட்டிட்டு வந்திடுங்க சிம்பு சார்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.