Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ள யாரு?

வெளிய நாங்க

வெளிய நாங்க ....உள்ள நீங்க?

ஆனா யாரு நீங்க...?

நாங்க நாங்க தான்.....நீங்க நீங்க தான்

தூ

இன்னைக்கு டீ குடிச்ச மாதிரி தான் டா.....

கவுண்டமணியின் இந்த டயலாக்க அடிச்சிக்க சான்சே இல்லைபா

  • Replies 3.2k
  • Views 177.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த சமூகத்தின் பெரும் நோயாக மாறிவிட்ட தனியார் மருத்துவமனைகளை மீண்டும் தைரியமாகத் தோலுரித்திருக்கிறது சலீம்.

சலீம் என்ற பெயரைக் கேட்டதும், காவல் அதிகாரி நீ எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன்.. அல்கொய்தாவா.. லஷ்கர் இ தொய்பாவா என பட்டியல் போட, அவரை இடைமறிக்கும் சலீம்... 'என் பேரை வைச்சு இப்படி முடிவெடுக்காதீங்க ஸார்.. வேணும்னா என் பேரை விஜய்ன்னோ ஆண்டனின்னோ வைச்சுக்குங்க.." -என நிறுத்தும் இடம், போலீசாரின் இன்றைய மனப்போக்கின் மீது விழுந்த சவுக்கடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூட்டை பூச்சிகளால் அவதிப்படும் பிரான்ஸ்

எதுக்கும் யோகத்தார் தலைமையில தான் தனிப்படை அமைக்கணும்........

மூட்டை பூச்சிகளை வேட்டையாடி விளையாடி பிடித்து அதை நசுக்கி கொல்வதில் ஆள் கில்லாடி என்பதாலும்.....வாழ் நாளில் பல மூட்டைப்பூச்சிகளை பார்த்த முன் அனுபவம் உள்ளதாலும் ......மூட்டை பூச்சிகளின் மேல் என்னவிதமான தாக்குதல்களை எப்பிடி எந்த நேரம் நடாத்த வேண்டும் என்ற பாடத்திட்டத்தையே தன்னிடம் வைத்திருப்பதாலும்

France அரசிடம் அண்ணனை பரிந்துரைக்கிறேன்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று 4 வாரமாக விடுமுறைக்கு யாழ்ப்பாணம் போயிட்டு வந்த ஒரு அண்ணா சொன்னது.....

வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிங்களவன் என்ன செய்யணும் எண்டு நினைச்சானோ அதை செம்மையா செய்திட்டு வாறான்.....

சிங்கள குடியேற்றம்.....

தமிழ் இளைஞர்களுக்கு இடையில் குழு மோதல்கள்.....

இனிமேல் என்ற வரலாற்றில் இல்லாத மிக மோசமான கலாச்சார சீரழிவு.....

கொஞ்சம் கொஞ்சமாக சமுக சீரழிவுகள் மூலம் தமிழ், தமிழினம் என்ற உணர்வையே மழுங்கடித்து வருகின்றான்........

.இனி மேல் தயவு செய்து தமிழர்களின் கலாச்சார தலைநகரம் யாழ்ப்பாணம் என்று சொல்லாதீர்கள் என்று......

என்ன செய்ய வெறும் தமிழ், தமிழீழம், விடுதலை , பண்பாடு என்று ஒரு பகுதி மக்கள் மட்டும் சிந்தித்து ஒரு பகுதி மக்கள் மட்டும் பேசி என்ன ஆகபோகுது?

பாவம் இதுகள நம்பி உயிர்விட்ட 50000 க்கும் அதிகமான மாவீரர்கள் ......

  • கருத்துக்கள உறவுகள்

மூட்டை பூச்சிகளால் அவதிப்படும் பிரான்ஸ்

எதுக்கும் யோகத்தார் தலைமையில தான் தனிப்படை அமைக்கணும்........

மூட்டை பூச்சிகளை வேட்டையாடி விளையாடி பிடித்து அதை நசுக்கி கொல்வதில் ஆள் கில்லாடி என்பதாலும்.....வாழ் நாளில் பல மூட்டைப்பூச்சிகளை பார்த்த முன் அனுபவம் உள்ளதாலும் ......மூட்டை பூச்சிகளின் மேல் என்னவிதமான தாக்குதல்களை எப்பிடி எந்த நேரம் நடாத்த வேண்டும் என்ற பாடத்திட்டத்தையே தன்னிடம் வைத்திருப்பதாலும்

France அரசிடம் அண்ணனை பரிந்துரைக்கிறேன்.......

 

 

புல்லைத்தின்பதுடன் கழுதை  நிறுத்துவது தான் அதற்கு நல்லது

ஆடு

மாடு

மனிதர் என  புறப்பட்டு

ஆளைத்தெரியாது  ஆழம் தெரியாது  கால்வைத்து....

இதையும் குறித்து  வைத்துக்கொள்ளுங்கள்  சுண்டல்.. :(  :(  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிங்களா மெரினா திரைப்படத்தில் நடித்த ஒரு துணை நடிகர் இறந்ததுக்கு சிவகார்த்திகேயனுக்கே RIP போட்டிட்டீங்களே டா ..... படிக்கிற செய்திகள ஒழுங்கா படிக்கணும் வீண் குழப்பத்த ஏற்படுத்த கூடா......

உண்மையிலே உங்க செய்திய உண்மைன்னு நம்பி இருந்தா எத்தின பொண்ணுங்க இப்போ தீ குளிச்சி இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் சீனா இந்தியாவிற்கு எதிரா பாகிஸ்தான் போன்ற இந்தியாவிற்கு எதிரான நாடுகளுடன் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி வந்தது இப்பொழுது மோடி தலைமையிலான அரசு கொஞ்சம் கொஞ்சமாக சீனாவிற்கு எதிரான ஒரு வலைப்பின்னலை பின்ன தொடங்கி இருக்கு அதன் முதல் அங்கம் தான் நேபால் விஜயம் , இப்பொழுது சீனாவின் பரம எதிரியான ஜப்பான் விஜயம் ... அதன் போது பல இராணுவ ஒப்பந்தங்கள் என்று........

தமிழ் தேசிய கூட்டமைப்பையும் மோடி சந்தித்ததும் இலங்கைக்கு சீனாவிடம் இருந்து தள்ளி நிக்குமாறு ஒரு எச்சரிக்கை வழங்குவதற்கு இருக்கலாம்.....

ஆக மொத்தம் இந்தியாவின் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது இதில் இலங்கை ஆட்சியாளர்கள் தான் தலையை சொறிந்து கொள்ள போகின்றார்கள் முடிவெடுக்க முடியாமல் சீனாவா இந்தியாவா என்று இதை தமிழர் தரப்பு நன்கு பயன்படுத்த வேண்டும்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வில் ராஜபக்சேவை அனுமதிக்க எதிர்ப்பு- கருணாநிதி தலைமையில் "டெசோ" ஆர்ப்பாட்டம்!!

ஆமா போராட வேண்டிய நேரம் கொட்டாவி விட்டிட்டு இருந்திட்டு.....இப்போ எல்லாம் முடிஞ்சு 5 வருஷமும் ஆச்சு...இப்போ போராடுங்க.....விடிஞ்சிடும்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களுக்கு முதல் ஒரு செய்தி....

இலங்கையில் முதல் முதலாக இராணுவ ஆயுத தயாரிப்பு தொழிற்ச்சாலை.....ஆரம்பம் என்று நானும்.....அடடே....இலங்கை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை எல்லாம் செய்து உலக வல்லரசு ஆக போகுதாக்கும் என்று நினைச்சு செய்தியை மேலும் படிச்சா.....

இராணுவ ஆயுத தளபாட தயாரிப்பு தொழிற்ச்சாலையில் முதல்க்கட்டமாக 50 இரும்பு கட்டில்கள் தயாரிக்க ஏற்பாடு.....அப்பிடின்னு போட்டிருக்கு.....

ஒருவேளை எதிரிகளை கட்டிலால தூக்கி அடிக்க போறாங்களோ தெரியா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அணுசக்தி மூலம் இந்தியா அழிவை ஏற்படுத்தாது.. - மோடி

வெடிச்சா தானே.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று எமது நாட்டு பிரதமர் டோனி அபோட் அவர்கள் இந்தியாவை சென்று அடைந்திருக்கின்றார்......

இந்தியாவிற்கு சில கட்டுப்பாடுகளுடன் ஆஸ்திரேலியா யுரேனியம் வழங்க இருக்கின்றது.......

மற்றும் சீனாவின் முத்துமாலை திட்டத்துக்கு போட்டியாக....

அமெரிக்கா , இந்தியா , ஜப்பான் , ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளும் இணைந்து ஒரு திட்டத்தை வகுக்க இருக்கின்றார்கள்......அது தொடர்பான பேச்சுவார்த்தை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தளிலும் டோனி அபோட் ஈடுபடுவார்.....

சுருக்கமா சொன்னா சீனாவிற்கு போட்டியாக இந்தியாவை வளர்த்துவிடுவதில் மேற்குலகம் இப்பொழுது ஈடுபட்டிருக்கின்றது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கைக்கடிகாரம் கட்டி வந்த தலித் மாணவரின் மணிக்கட்டு துண்டிப்பு.. மாணவர்கள் வெறிச் செயல்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் தலித் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைக்கடிகாரம் கட்டி வந்ததற்காக அவரை தலித் அல்லாத பிற சமூக மாணவர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கி, மணிக்கட்டையும் வெட்டி விட்டனர். இந்த செயலால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

தமிழ் நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கு?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுடனான சண்டையை

முடிவுக்கு கொண்டு வர

'பசிக்குதும்மா'என்ற ஒரு

வார்த்தையே போதுமானது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசி, வாசி ,வாசி வாசிப்பு ஒன்றே வாழ்கையில் உனக்கு பலதை கற்றுத்தரும் என்று என்னை வாசிப்பின் பால் தூண்டிய அத்தனை ஆசிரியர்களையும் இந்த ஆசிரியர் தினத்தில் நினைவுகூருகின்றேன்........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிமுகவின் ஜனநாயக விரோத காட்டு தர்பாரை வன்மையாக கண்டிக்கிறோம்: தா. பாண்டியன்

ஹய்யா ஜாலி பாண்டியன் சார் கோமால இருந்து எழுந்திட்டாறு.....இனி தினமும் இப்பிடி காமடி அறிக்கைகளை எதிர் பாக்கலாம்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை பிரபாகரன்.....///////

அது தான் தலைவர்.....எந்த பெரிய பலமான நாட்டையோ..... பலமான தலைவர்களையோ..... அவர்களின் மிரட்டல்களையோ..... கண்டு அஞ்சியது கிடையாது..... மக்களும் போராளிகளும் தான் கொண்ட துணிவும் இருக்கும் வரை யாரைக்கண்டு பயந்ததும் கிடையாது...... இப்பிடியான ஒரு தலைவருக்கு கீழ் சிலது காலமாவது வாழ்ந்தோம் என்பது தான் எனது வாழ்கையின் இறுதிவரை இருக்க கூடிய சந்தோசம்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் வடிவேலுவும் இணைஞ்சா பழைய ஜோக்கை எல்லாம் பீட் பண்ணிடுவோம்! - தம்பி ராமையா

.............

வடிவேலுவும் சிங்கமுத்துவும் தான்........என்னை கேட்டால் பெஸ்ட்டு.......காலத்தால் அழியாத நகைச்சுவைகளை கொடுத்தது அந்த ஜோடி.......

குறிப்பா "நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே......."

இன்று வரைக்கும் எதுக்குன்னு .....தலைய பிச்சிக்கிட்டு இருக்கவங்க இருக்காங்க......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களே தமிழர்களே......

ஆசிரியர்கள் என்ற சொல்லில் இருந்து "சி" என்றதை எடுத்து விட்டால் ஆரியர்கள் ஆகி விடும்......என்று பேரறியர் அண்ணா அவர்கள் நேற்று எனது கனவில் வந்து சொன்னதால் .....ஆரியர்களை வாழ்த்துவது திராவிடர்களின் பண்புக்கு இழுக்கு என்பதாலும் நான் நேற்று சொன்ன வாழ்த்தை வாபஸ் வாங்கி கொள்கிறேன் ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்கொய்தா அச்சுறுத்தலை சந்திக்க இந்தியா தயாராக உள்ளது! விமானப்படை தளபதி அதிரடி

எலே வாய வைச்சிட்டு சும்மா இருங்க லே.....இப்பிடி சவுண்டு விட்டு சவுண்டு விட்டே அவிங்கள உசுப்பேத்தாதீங்க லே.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அமைச்சரவையின் இந்த மாத நிலவரம்.....

மாதவரம் மூர்த்தி வெளிய

ரமணா உள்ள.....

இது இந்த மாதத்துக்கான நிலவரம்.....

மீண்டும் அடுத்த மாதம் யாரு உள்ளே யாரு வெளியே என்ற நிலவரங்களை பாக்கலாம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி கலைஞரே பிள்ளையார் ஆரிய கடவுளாக இருக்கட்டும் நீங்க வாழ்த்து சொல்லும் மற்றை பண்டிகைகளுக்கு சொந்தமான கடவுள்கள் எல்லாம் என்ன பச்சைத்தமிழ் கடவுள்களா? 1960 ஆம் ஆண்டுகளில் செய்த அரசியலை நீங்கள் இப்பொழுதும் செய்ய நினைக்கின்றீர்கள் இந்த face book உலகில் அதெல்லாம் எடுபட போவதில்லை கலைஞரே..... காலங்களுக்கு ஏற்ற மாதிரி கொள்கைளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தி மக்கள் முன் எடுபடுகின்ற அரசியல் செய்தால் தான் உங்களால் நிலைத்து நிற்க முடியும் இல்லது உங்கள் கட்சி காணாமல் போய்விடும்.... காரணம் எப்பொழுதுமே தமிழ் நாட்டு மக்களை முட்டாள்கள் என்று தப்புக்கணக்கு போட கூடாது......இப்பொழுது எல்லாவற்றையும் மாற்றி அமைக்க கூடிய ஒரு இளைஞர் ஷக்தி உருவாகி விட்டது.... சமுக வலைத்தளங்கள் ஊடாக செய்திகள் வேகமாக பரப்பப்பட்டு மக்களை சென்றடைகின்றது..... காலத்துகேற்ப மாறாத பல அரசியல் கட்சிகள் காணாமல் போன வரலாறு நிறையவே உண்டு......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தி.க.-வும் ,திமுக-வும் இரட்டை குழல் துப்பாக்கிப்போல் செயல்படும் - கருணாநிதி

ஆமாம் பட் உள்ள போட்டு சுட்டு விளையாட தான் குண்டுகள்(கொள்கைகள்) இல்ல.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐநா சபையில் ராஜபக்சே பேசக் கூடாது... செப்.26ந்தேதி சென்னையில் எழுச்சிமிகு தமிழர் பேரணி!

அவன் குண்டு போட்டு ஒட்டு மொத்தமா அழிக்கும் போது வீதிக்கு வராம வீட்டுக்குள்ள படுத்து கிடந்திட்டு இப்போ ஐக்கிய நாடுகள் சபையில் பேசக்கூடாது என்று பொங்கி எழுந்து எழிச்சி மிகு ஆர்ப்பாட்டமாம் முடியல்ல....

நான் அடுத்த தல படத்துக்கு போய் விசில் அடிக்கணும்.... அப்போ நான் வட்டா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போலாம் குழந்தைங்க வளர்க்க ஆயா தேவை இல்ல வெறும் IPhone , IPad காணும்.....

‪#‎அவதானிப்பு‬....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர்: சில விடையங்களை எழுதப்போனால் சிலர் கோபித்து கொள்வார்கள் அதனால் பேசாமல் இருக்க வேண்டி இருக்கு

நான்:

முகபுத்தகம் என்பதே மனதில் தோன்றுவதை எழுதவும் பகிரவும் தானே ...... கண்கள் ஊடாக காண்பவற்றை எழுதுவதில் தப்பில்லை தானே .... மற்றவர்கள் கோபித்து கொள்வார்களே என்றால் எதையும் எழுத முடியாது எல்லாவற்றாலும் எல்லோரையும் திருப்த்தி படுத்த முடியாது சோ தைரியமா எழுதுங்கள்.....அதை படிப்பவர்கள் சரி பிழைகளை தீர்மானித்து கொள்வார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.