Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இந்தப் பறவையோட காலைப்

பார்த்து இது என்ன

பறவைன்னு சொல்லு"

"தெரியலை சார்"

"இது தெரியலியா? நீயெல்லாம்

உருப்படவா போற!! உன்

பேரு என்னடா?"

"என் காலைப்

பார்த்து நீங்களே சொல்லுங்க

சார்..

:D:(:D

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply

"இந்தப் பறவையோட காலைப்

பார்த்து இது என்ன

பறவைன்னு சொல்லு"

"தெரியலை சார்"

"இது தெரியலியா? நீயெல்லாம்

உருப்படவா போற!! உன்

பேரு என்னடா?"

"என் காலைப்

பார்த்து நீங்களே சொல்லுங்க

சார்..

:D:(:D

பாம்பின் காலை பாம்பறியும்.

 

ஆசிரியரும் மாணவனும் அப்பாவிகளாகும்.  :unsure:

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொண்டு வந்தோம்!

"நாம் பிறக்கும் போது என்ன கொண்டு வருகிறோம்?' என்ற கேள்விக்கு, "ஒன்றும் கொண்டு வருவதில்லை; ஒன்றையும் எடுத்துப் போவதில்லை...' என்று ஒரு வேதாந்தமான பதிலை சொல்லி வருகிறோம். இதில் சொல்லப்பட்டது, உடமைகளைப் பற்றிய விஷயம். ஆனால், நாம் பிறக்கும் போது பாவ, புண்ணியம் என்ற ஒரு மூட்டையை கொண்டு வருகிறோம். அது, பலனை கொடுக்க ஆரம்பிக்கிறது. இதை, "சஞ்சித கர்மா' என்றனர். இது, பல ஜென்மாக்களில் செய்த பாவ, புண்ணியங்களின் மூட்டை. மற்றவர் கண்களுக்கு தெரியாது; பிறரால் அபகரிக்கவும் முடியாது. இது நமக்கே நமக்கு உரிமையானது.இந்த மூட்டையிலுள்ள கர்ம பலனை, ஒரே ஜென்மாவில் அனுபவித்து விடவும் முடியாது. மூட்டையிலிருந்து ஒவ்வொரு ஜென்மாவிலும், கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து, பல ஜென்மாக்களுக்குப் பின் காலியாகும்.இந்த ஜென்மாவில் அந்த சஞ்சித கர்மாவின் ஒரு பாகம், பலனை கொடுக்கிறது. இதை, பிரார்த்த கர்மா என்றனர். "என்ன சார்... உங்க பையன் இப்படி இருக்கிறானே?' என்று கேட்டால், "என்ன சார் செய்றது? ஏதோ பிரார்த்தம்! இப்படி வந்திருக்கு...' என்று தலையிலடித்துக் கொள்கிறார். இதில் சுகம், துக்கம் எல்லாம் கலந்திருக்கும். எது வேண்டும் என்று பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியாது; அனுபவிக்க வேண்டும்.இந்த ஜென்மத்தில் நாம் சும்மாவா இருக்கிறோம். எத்தனையோ பாவ, புண்ணியங்களைச் செய்கிறோம். இதற்கு, "ஆகாமி கர்மா' என்று பெயர். இதனுடைய பலன்கள் கொஞ்சம் காலியாக இருக்கும் சஞ்சித கர்மா என்ற சஞ்சியில் (மூட்டையில்) போய் சேர்ந்து விடுகிறது. இதனாலேயே தான், நாம் இப்போது செய்யும் காரியத்தின் பலனை, உடனே அனுபவிக்க முடிவதில்லை.நாம் இப்போது அனுபவிப்பது, பிரார்த்த கர்மாவின் பலன். நாம் செய்யும் நல்ல காரியத்தின் பலன் சஞ்சித கர்மாவோடு சேர்ந்திருக்கிறது. அந்த பலனை, வரும் ஜென்மங்களில் அடையலாம். நாம் செய்யும் காரியத்துக்கும், அனுபவத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல் தோன்றலாம். அப்படியல்ல... சஞ்சித கர்மா, பிரார்த்த கர்மா இரண்டும் வேலை செய்யும்போது, இன்று நாம் செய்யும் கர்மாக்கள் ஒன்றும் செய்ய முடியாது.இன்று கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்யலாம். அபிஷேக ஆராதனை செய்யலாம். இதெல்லாம் இப்போது அனுபவிக்க வேண்டியவைகளை ஒன்றும் செய்யாது. நல்லது, கெட்டது எது செய்தாலும், அதன் பலன், "ஸ்டாக்' செய்யப்பட்டு விடுகிறது. காலம் வரும் போது பலன் தரும்.பூர்வ ஜென்ம கர்மாவின் பலனாக, நம் சித்தம் அழுக்கடைந்து விடுகிறது. கர்மத்தளைகளால் கட்டுப்பட்டிருக்கிறோம். இதை எப்படி அறுத்து தள்ளுவது? ஞானத்தால் தான் முடியும். சித்த சுத்தி ஏற்பட்டு ஞானத்தை அடைந்தவுடன் அந்த ஞானக் கனியானது, கர்மத்தளைகளை அறுத்து விடுகிறது. கர்மத் தளைகள் நீங்கி, ஞானம் பிரகாசிக்க ஆரம்பித்தால், பிரம்மத்தைக் காணலாம். அதிலேயே லயித்து விட்டால், பிரம்மத்தை அடையலாம். அதை அடைந்து விட்டால் மீண்டும் பிறவியே இராது. முடியுமா என்று பாருங்கள்.

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு சுண்டல் காமசாத்திரம் படிக்கிற வயசில அர்த்தமுள்ள இந்துமதம் படிச்சு ஏன் காலத்தை வேஸ்ட் பண்ணிறியள் :D :D

அப்பு சுண்டல் காமசாத்திரம் படிக்கிற வயசில அர்த்தமுள்ள இந்துமதம் படிச்சு ஏன் காலத்தை வேஸ்ட் பண்ணிறியள் :D :D

ஆத்தாகடைசிக்கு அந்த நேரத்தில் கண்ணதாசனின் நல்ல இரண்டு காதல் பாடல்களை தன்னும் மனனம் செய்த்திருக்கலாம். :D ஒரு நேரம் தேவை வரும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசனின் பாட்ட பாட போக பாப்பா எழும்பி ஓடி போய்டும்.....:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் தனிமையை போக்குவதற்காக துணைக்கு ஒரு கிளியை வாங்கினாள்.

ஒரு வாரமாகியது, கிளி பேசவே இல்லை.

கவலையுற்று திரும்பவும் கடைக்கு சென்று ஒரு கண்ணாடி வாங்கி வந்து கூண்டில் வைத்தாள். அபோழுதும் அந்த கிளி பேசவில்லை.

ஒரு வாரம் கழித்து மறுபடியும் அந்த கடைக்கு சென்று ஒரு சிறிய ஏணி வாங்கி கொண்டு வந்து வைத்தாள். அப்பொழுதும் அந்த கிளி பேசவில்லை.

ஒரு வாரம் கழித்து மறுபடியும் கடைக்கு சென்று ஒரு சிறிய ஊஞ்சல் வங்கி வந்து கிளி கூண்டில் கட்டி விட்டாள். அப்பொழுதும் அந்த கிளி வாயை திறக்கவே இல்லை.

ஒரு வாரம் கழித்து அந்த கிளி கூண்டில் சாகும் தருவாயில் கிடப்பதை அந்த பெண் பார்த்தாள். தனது இறுதி மூச்சை இழுத்து பிடித்து கொண்டு கிளி பேசியது..

"இவ்வளவு வாங்கினியே, அந்த கடையில எனக்கு சாப்பிடறதுக்கு எதுவும் கிடைக்கலியா? "

கிளி உயிரை விட்டது. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ஜி : ஒரு மனிதன் உயிர் வாழ ஆக்ஸிஜன் மிகவும் அவசியம், அது 1773 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

டிக்கால் ஜி : அப்பாடா ! நல்லவேளை நான் 1773 க்கு முன்னாடி பிறக்கல.....

--------------------------------------------

இப்படித்தான் அம்புட்டு பேரும் போன் பண்றாங்க..!

ஆண் டூ ஆண் - 00:00:59

பையன் டூ அம்மா - 00:10:30

பையன் டூ அப்பா -00:02:36

பையன் டூ பெண் - 01:15:01

பெண் டூ பெண் - 00:29:59

பெண் டூ பையன் - 00:00:00

-----------------------------------------------

சர்தார்ஜி பில் கேட்சுக்கு எழுதிய கடிதம் ...!

புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில்:

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.

3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.

7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?

இப்படிக்கு,

சர்தார்ஜி.

3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

 

 

 

அதனால்த்தான் இப்போ வீட்டில் இல்லாததொன்று போட்டுக்கொடுத்திருகிருக்கிறாங்க போலை. 

 

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?

 

 

Gates அவருக்கு வேணும். இப்போதைக்கு அதையும் சேர்த்து விக்கிறதா  ஐடியா இல்லை.  :D

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சர்தார் சினிமா தியேட்டர்லே மூன்று சீட்டுகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தார்..

இந்தப் பக்கத்து சீட்டுல காலையும் அந்தப் பக்கத்து சீட்டுல தலைக்கு கீழே கையையும் வச்சுக்கிட்டு ஹாயா படுத்திருந்தார்..

பக்கத்து சீட்டுல உக்கார வேண்டியவன் இருட்டுல தட்டுத் தடுமாறிக்கிட்டு வந்து சீட்டைப் பார்த்து பயந்துட்டான்.. மெல்ல சர்தார்கிட்ட சொன்னான்..

"அய்யா.. இது என் சீட்டு.. ஏந்துக்கறீங்களா..? "

"ஹ்ம்ம்..?"

" கொஞ்சம் எழுந்துக்கங்க.. நான் உட்காரணும்."

"ஹும்ம்ம்ம்...!!!"

" இந்த மாதிரி கலாட்டா பண்ணா நான் மேனேஜரைக் கூப்பிடுவேன்.."

அதுக்கும் சர்தார் பதில் சொல்லாம உறுமியே மிரட்டி வெரட்டிட்டாரு.. மேலாளர் வந்தும் கதையாகல.. அவருக்கும் உறுமல்தான் பதில்.. அப்புறம் போன் பண்ண போலீஸ் வந்துடிச்சு..

"எலே.. ஏந்திரிடா..? எங்கேருந்துடா வந்துருக்கே..?"

சர்தார் வலியைப் பொறுத்துக்கொண்டு திணறியபடியே சொன்னார்...

"பால்கனியிலேருந்து....இருட்டுல தடுமாறி மேலேருந்து விழுந்துட்டேன்.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா...! "

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு ரகசியம் உங்ககிட்ட சொல்லப்போறேன்.

அதை யார்கிட்டயும் நீங்க சொல்லிடாதீங்க.

அடிச்சு கூட கேட்பாங்க.

அப்பகூட சொல்லிடாதீங்க.

சரி வாங்க சொல்றேன்.

அட பக்கத்துல வாங்க.

கொஞ்சம் காதை காட்டுங்க.

சரி சொல்லவா?

சொல்லீருவேன்.

ம் கேட்டுக்கங்க.

'ரகசியம்'

கண்டிப்பா இதை எவரிடமும் சொல்லிடாதீங்க.

:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nanthan Ji அவருடைய ஆட்டோவின் சக்கரங்களை மிக மும்முரமாக கழட்டுவதில் ஈடுபட்டிருந்தார். அவரைப்பார்த்து sundhal Ji ,"எதுக்கு ஆட்டோ சக்ககரத்தை கழட்டிக்கிட்டு இருக்கீங்க?"

Nanthan Ji : போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க.'Parking for Two Wheelers only!'.அதுக்குதான்

-----------------------------

Sundhal Ji : "உங்களுக்கு MS Office தெரியுமா?"

Nanthan Ji : "நீங்க அட்ரெஸ் குடுதீங்கனா கண்டிப்பா கண்டுபிடிச்சிடுவேன்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வகுப்பில் ஆசிரியர் மாணவர்களை "CRICKET MATCH" பற்றி ஒரு கட்டுரை எழுதச்சொன்னார். மாணவர்களும் உடனே எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வகுப்பில் இருந்த சர்தார்ஜி நீண்ட நேர யோசனைக்குப்பிறகு இப்படி எழுதினார் "DUE TO RAIN, NO MATCH!"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அண்ணா கண்ணை மூடிக்கொண்டு கண்ணாடி முன்பு நின்றுகொண்டிருந்தார்.

அவரைப்பார்த்து அவர் மனைவி " கண்ணாடி முன்னே கண்ண மூடிட்டு என்ன செய்றீங்க" என்று கேட்க, நந்தன் அண்ணா " நான் தூங்கறப்ப எப்படி இருப்பேன்னு பாத்துகிட்டிருக்கேன்" என்று பதிலளித்தார்!

:( :( :D

cat-sees-lion-in-mirror-2.gif?w=519

 

அட இப்பாடியா தூங்குவாங்க? புதுமையாய் இருக்கு. :D  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு பிறந்த வீடு புகுந்த வீடு என்று இரண்டு வீடுகள் இருக்கும் போது ஆண்களுக்கு பெரிய வீடு சின்ன வீடு என்று இரண்டு வீடுகள்இருக்க கூடாதா? அதில என்னங்க தப்பு? நீங்களே பஞ்சயாத்து பண்ணி ஒரு தீர்ப்ப சொல்லுங்க....:( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்தார்ஜி: மிஸ் , நீங்கள் எனக்கு கால் பண்ணி இருந்தீங்களா?

டீச்சர் : நானா? , இல்லையே ஏன்?

சர்தார்ஜி: நேற்று என்னுடைய மொபைல் ஃபோனில் " 1 மிஸ் கால்" என்று இருந்தது

*****************************

சர்தார்ஜிக்கு.............

அவருடைய நண்பியிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது.

"I MISS YOU "

சர்தார்ஜி

பதில்

"I MR YOU"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ட்ரெய்னியாக ஒரு பெரிய கம்பெனியில் நம்ம இசை அண்ணா வேலைக்கு சேர்ந்தார்.....சேர்ந்ததும் மிதப்பு தாங்காமல் இண்டர்காமில் டயல் செய்து “ஹலோ யாரது? எனக்கு ஒரு காபி உடனே வேண்டும்”

“என்னது காபியா? நீ தவறான நம்பர் டயல் செய்திருக்கிறாய்?”

“சரி சரியான நம்பர் எது?”

“ஹலோ நீ யார் கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?”

“யாரு கிட்ட?”

“நான் தான் இந்த கம்பெனியோட CEO”

“நீ யார்கிட்ட பேசிக்கிட்டிருக்க தெரியுமா?”

“தெரியாது,யார் கிட்ட?”

“தெரியாதா அப்பாடா…ரொம்ப நல்லது”

டொக்…

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கணவன் ரொம்பத் தாமதமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

மனைவி ரொம்பவும் வருத்தப்பட்டுச் சொன்னாள்:

“”ரொம்ப சாரிங்க… உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி வச்சேன்.

அதை நம்ம நாய் தின்னுட்டுப் போயிட்டுது”

கணவன் நிதானமாகச் சொன்னான்:

“”கவலைப்படாதே… வேறு நாய் வாங்கிக்கலாம்”

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆக்சிடெண்ட்ல அடிபட்டுக் கிடந்தப்போ , எங்க சொந்தக் காரர் ஒருத்தர்(actor prasanth father) .. அவரும் சினிமாகாரர் தான் ... இனிமே நீ எங்க சினிமால நடிக்க போற ? உனக்குன்னு ஏதாவது நொண்டி காரெக்டர் கிடைக்கும்ல'ன்னு சொன்னார்.... எவ்ளோ வக்கிரமான வார்த்தை ...நாம ஜெயிக்கணும் பாலா ....

"பழி வாங்கறதுன்னா ... அடிக்கறது, உதைக்கிறது , அவமானப் படுத்தறது , மட்டுமில்லையே .... அவங்க கண்ணு முன்னாலேயே ஜெயிக்கணும் ..."

அப்போ நான் தனியா இருந்தேன் . இப்போ கூட நீங்க இருக்கீங்க .. சேது .இருக்கான் ..நாம ஜெயிப்போம் பாலா .... ப்ராமிஸ் பாலா ! " என்ற விக்ரமின் வார்த்தைகளை வாழ்க்கை முழுக்க நினைவில் .வைத்திருப்பேன் ...

- பாலாவின் இவன்தான் பாலா புத்தகத்திலிருந்து...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் ஜி: கோவிலில் அழகான ஆண்டி தனியா நின்னா கொஞ்சம் பொறுமையா தேடுங்க,அவங்க பொண்ணும் பக்கத்தில் தான் எங்கயாவது தான் நிக்கும்.

சுண்டல் ஜி: கிடைக்கலனா விட்ருங்க,ரொம்ப நேரம் தேடதிங்க அவங்க புருசனும் அங்க தான் நிப்பாரு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலை அக்கா : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?

டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..!

” கொழுப்பு”..

:(:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.