Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

வாசுதேவனுக்கும் தேவகிக்கும் பிறக்கும் எட்டாவதுதான் ஆபத்தானது. அந்த நாடகளில் ஸ்பேம் வங்கிகள் இருக்கபடியால், வேர் உன்றையும் பற்றி சிந்திதிருக்க வேண்டியத்தில்லை;  வாசுதேவனை மட்டும் கொன்றுவிட்டு  தங்கை தேவகியை சும்மா போக விட்டிருக்காலம். இல்லைஎன்றால் இன்னொரு நாட்டு அரசுனுக்கே மணம் செய்து கொடுத்திருக்கலாம். 

 

ஏன் கமசன் தன் வலிமை மீது அதீத நம்பிக்கை கொண்டு அப்படி ஒரு விபரீத செயலில் இறங்கினான் என்பது தெரியவில்லை. கம்சனுக்கு தன் எதிரியை யார் என்று நேராக கண்டு அவனை அழிப்பதுதான்  ஆசையாக இருந்ததுவோ தெரியாது.

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மோதிரம் அணிவது ஏன்?

----------------------------------

விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இரு தய நோய், வயிற்றுக் கோ ளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூ டாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது

நடு விரல் உங்களை குறிக்கிறது

மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது

சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள்,நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.

பெருவிரலை பளையபடி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிறோம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

நடு விரல் உங்களை குறிக்கிறது

 

அப்போது ஏன் அதை காட்டினால் கோபிக்கிறார்கள். ஆணவம் என்று பொருள்படுகிறதா? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹா இப்பிடி ஒரு கேள்விய அந்த ஜோசியர் கூட எதிர் பாத்திருக்க மாட்டார்...

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜவஹர்லால் நேரு எழுதுகிறார்:

நான் இங்கிலாந்திலிருந்து படிப்பு முடித்து இந்தியா திரும்பியதும், உயர் நீதிமன்ற வழக்கறிஞரானேன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, வாழ்க்கை எந்த நோக்கமும், பயனும் இன்றி, மந்தமான இயந்திர வாழ்க்கையாகப்பட்டது. வாழ்க்கை, தன் பொலிவை இழந்து விட்டது. அதன் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஒருவேளை, நான் பல துறையையும் பற்றி கற்ற என் கலப்புக் கல்வி தான், இதற்கு காரணமாக இருக்குமோ என்று நினைக்கிறேன்.

வீட்டில் இருந்த நேரம் போக, மற்ற நேரத்தை, நீதிமன்ற நூல் நிலையத்திலும், பொழுது போக்கு மன்றத்திலும் கழித்தேன். இந்த இரண்டு இடங்களிலும், தினம் தினம் பார்த்தவர்களையே தான், மீண்டும் மீண்டும் பார்க்க முடியும். ஒரே பொருளைப் பற்றி, அதுவும் வழக்கமாக வழக்குத் துறையைப் பற்றி, திரும்பத் திரும்ப பேசுவதைக் கேட்டு, காதும் புளித்து விட்டது. இப்படியான சூழ்நிலை, எவ்வாறு அறிவு வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமைய முடியும்?

வக்கீல் தொழிலிலும் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. அந்நிய ஆட்சியை வலிய எதிர்க்கும் வெறும் தேசியச் செயலாகத் தோன்றிய அரசியலும், எனக்கு ஏற்றதாக இல்லை. எனினும், காங்கிரசில் சேர்ந்தேன். அவ்வப்போது நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டேன்.

ஆனால், இவையெல்லாம் தற்காலிகமானது.

வேட்டையாடுதல் போன்ற செயல்களில் மனதைத் திருப்பினேன். விலங்கினங்களைக் கொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. வெறும் பொழுதுபோக்குக்காக காடுகளுக்குச் சென்றேன். "சுடத் தெரியாத வேட்டைக்காரன்' என்று எல்லாரும் என்னைக் கேலியாகக் குறிப்பிடுவர்.

ஒரு நாள் தற்செயலாக, என் துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு பாய்ந்ததில், ஒரு மான் குட்டி இறந்து விட்டது. ஒரு பாவமும் அறியாத மான் குட்டி அடிபட்டு, என் காலடியில் வீழ்ந்து இறந்தது.

அது குற்றுயிராக, கலங்கிய கண்களுடன் என்னை பார்த்த பார்வை, என் உள்ளத்தை ஊடுருவித் தைத்தது. கள்ளங்கபடமற்ற ஒரு உயிரைக் கொன்று விட்டோமே என்று கலங்கினேன்.

வேட்டையாடுவதில் எனக்கு இருந்த சிறிய ஆர்வம் கூட அன்றோடு ஒழிந்தது.

— நேருவின், "என் இளமை நாட்கள்' நூலிலிருந்து...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்க்லிஷ்காரன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ வேனும்ன எதாவது கேட்டு பாரு

தமிழன் : சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும் ?

அமெரிக்கன் : உங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா !

:( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓர் ஊரில் 3 இணை பிரியாத நண்பர்கள் இருந்தனர். நட்பு என்றால் இவர்களைப் போல் இருக்கவேண்டும் என்று சொல்லும் அளவிற்கு ஒற்றுமையாக இருந்தனர். அவர்களின் பெயர்களும் வித்தியாசமாக இருக்கும். ஒருவன் பெயர் 'வம்பு'. அடுத்தவன் பெயர் 'மரியாதை'. மூன்றாமவன் பெயர் 'உன் வேலையைப் பார்'. மிகவும் ஜாலியான நண்பர்கள்.

ஒரு நாள் 'வம்பு' காணாமல் போய் விட்டான். மற்ற இருவரும் துடித்து போய் விட்டார்கள். எங்கு தேடியும் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்றார்கள்.

'மரியாதை' வெளியவே நின்று விட்டான். 'உன் வேலையைப் பார்' காவல் நிலையத்திற்குள் சென்றான். பதட்டமாக இருந்ததால், எல்லோரையும் மோதிக் கொண்டு அவசர அவசரமாக உள்ளே சென்றான்.

அங்கு அமர்ந்திருந்த இன்ஸ்பெக்டருக்கு, கோபம் வந்தது. "எங்கேயடா உன் மரியாதை" என்று கேட்டார். "வெளியே நிற்கிறான் ஐயா" என்று பதிலளித்தான் இவன். ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் "உன் பெயர் என்ன" என்று கேட்டார். இவனும் பவ்யமாக 'உன் வேலையைப் பார்' என்று சொன்னான். இவன் பதிலில் வெகுண்டெழுந்த இன்ஸ்பெக்டர் "என்னடா வம்பு தேடி வந்தாயா?" என்று கேட்டார். இவனும் அதே பணிவான குரலில் "ஆமாம்" என்றான்..

பின் என்ன நடந்திருக்கும் என்பதை வார்த்தையில் வேறு விளக்கணுமா?

:( :( :D :d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று நபர்கள்... அவர்களுக்கு, "பீர்' சாப்பிட ஆசை; ஆனால், கையில் காசில்லை.

"எனக்கு ஒரு ஐடியா! அதை உபயோகித்துப் பார்க்கிறேன்...' என்று ஒருவன் கூறி, ஓட்டல், "பாரு'க்குச் சென்றான். நிறைய பீர் குடித்தான். நேராக வெளியில் வந்தான்.

வெயிட்டர் அவனிடம், "ஐயா... பீர் சாப்பிட்டதற்கு பணம் தரவில்லையே!' என்று கேட்டான்.

"என்னது... நான் பணம் கொடுத்துவிட்டுத் தான் வருகிறேன். குடிபோதையில் ஏமாந்து விடுவேன் என்று நினைத்தாயா?' என்று கூறிக் கொண்டே போய் விட்டான்.

விஷயத்தை மற்ற இருவரிடமும் சொன்னான்.

இரண்டாவது ஆசாமி அதே, "பாரு'க்குச் சென்றான். தாராளமாகக் குடித்துவிட்டு நடையைக் கட்டினான். வெயிட்டர் அவனிடம் பணம் கேட்டபோது, "நன்றாக இருக்கிறது! முதலில் பணத்தை வாங்கிக் கொண்டு தானே பீர் கொடுத்தாய். யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்?' என்று கோபமாகக் கேட்டுவிட்டு வெளியே வந்தான்.

வெயிட்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது மூன்றாவது ஆசாமி வந்தான். பீருக்கு ஆர்டர் கொடுத்தான். அவன் குடித்துக் கொண்டிருக்கும் போது அவனிடம் வந்தான் வெயிட்டர்...

"உங்களிடம் ஒரு யோசனை கேட்க வேண்டும். இதற்கு முன் இரண்டு பேர் வந்து பீர் சாப்பிட்டனர். பணம் கொடுக்காமல் போய் விட்டனர். கேட்டால், முதலிலேயே கொடுத்து விட்டதாகச் சொன்னார்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது...'

"அதென்னவோ எனக்குத் தெரியாது. மீதிச் சில்லரையைக் கொடு. நான் போக வேண்டும்...' என்றானே பார்க்கணும் மூன்றாவது ஆசாமி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவனின் தந்தை:என் மகன் கணக்கிலே புலியாய் இருப்பானே!

ஆசிரியர்:நீங்க வேறே,அவனுக்கு ஐந்தும் நான்கும் கூட்டினால் என்ன விடை என்பதே தெரியவில்லை.

தந்தை:நீங்கள் வேண்டுமானால் ஒரு புலியிடம் இதே கணக்கைப் போட்டுப் பாருங்கள்!அதுவும் பதில் தெரியாமல் முழிக்கத்தான் செய்யும்.

சம்பந்தி சண்டையா?

சட்டமன்றத்தில் வினாயகம் என்பவர் எழுந்து, மிருகக்காட்சி சாலையில் நான் கொடுத்த ஆண் புலிக்குட்டியை சரியாகக் கண்காணிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறதே!” என்று புகார் கூறினார்.

உடனே அண்ணா, ”சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்” என்று பதில் கூறினார். புகார் கூறியவர் உட்பட அனைவரும் சிரித்தனர்.

:D :d

புளியமரத்தின் சாதனை

பேரறிஞர் அண்ணா தமிழக மக்களின் நல்லாதரவைப் பெற்று, முதல்வராக வீற்றிருந்த சமயம், ”விலைவாசி குறைந்துள்ளது” என்று அண்ணாவும் உறுப்பினர்களும் கூறியதைக் கேட்ட எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் கேலியாக – புளி விலை குறைந்துள்ளதே அது யார் சாதனை? என்று கேட்கிறார்.

அண்ணா அமைதியாக எழுந்து ”அது புளியமரத்தின் சாதனை” என்றார். அவை சிரிப்பில் முழ்குகிறது! கேட்பவருக்கு எப்படி இருந்திருக்கும்?

:(:D

ஒரு முறை அறிஞர் அண்ணாவைப் பார்க்க சிலம்புச் செல்வர் ம.பொ.சி அண்ணா இல்லத்துக்கு வந்தார். அண்ணா ம.பொ.சி.க்கு விருந்தளிக்க எண்ணி அசைவ உணவுக்குச் சொல்லி அனுப்பினார்.

உடனே ம.பொ.சி “ஆட்டு இறைச்சி மட்டும் வேண்டாம்.” என்றார்.

“எதற்கு? ” என்றார் அண்ணா. “டாக்டர் கொலஸ்ட்ரல் (கொழுப்பு) ஜாஸ்த்தியா இருக்குன்னுட்டார்” என்றார் சிலம்பு செல்வர்.

உடனே அண்ணா நகைச்சுவையாக ”அடடே, அந்த விஷயம் அவருக்கும் தெரிஞ்சு போச்சா? ” என்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?"

"ஐந்து வருஷமா இருக்கேங்க!"

"நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை"

"தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள 'நியூரோசைக்யட்ரிக்' நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?"

"என்ன சார் சொல்றாங்க?"

"மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம். இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படிப்பட்டவங்க தான் அதிக நாள் ஆரோக்கியமா வாழுறாங்களாம். அதுமட்டுமில்ல...பொறாமை, ஆசை, கோபம் எல்லாத்தையும் கட்டுப்படுத்தினா, ஆயுள் இன்னும் கூடும்னு ஆய்வுகள் சொல்லுது. உயிர் போற நேரத்துல கூட பதட்டப்படக் கூடாது சார்"

"அடேங்கப்பா...இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கறதால தான் நீங்க எப்பவும் பதட்டப்படாம சிரிச்ச முகத்தோட வேலை செய்யிறீங்க போல!"

"ஆமாங்க!"

"ஆனா உங்க கிட்ட இருக்குற இந்த நிதானம் உங்க டிரைவர் கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன்"

"ஏன் அப்படி சொல்றீங்க?"

"இப்ப இந்த பஸ் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு பாருங்களேன். தாறுமாறா தறிகெட்டு ஓடுற மாதிரி தெரியுது. நீங்களாவது முன் பக்கம் போய் பிரேக்-கிரேக் கழண்டு விழுந்துடுச்சான்னு பாத்துட்டு வாங்களேன், ப்ளீஸ்!"

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே போய் பாத்துட்டு வந்து தான் உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன். வர்ற வழியில தான் எங்கயோ விழுந்திருக்கணும்னு நினைக்கிறேன்!"

"எது...பிரேக்கா?"

"இல்ல...டிரைவர்!"

பயணி: ???

:D :d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கேள்விகளும் அதன் பதில்களும் படித்து நான் மண்டை காய்ந்தேன்....

நீங்க வேணா பாருங்க உங்களாலும் ஒரு கேள்விக்கு கூட சரியா பதில் சொல்ல முடியாது........

சரி கேள்விக்கு வருவோம்.....

ஒரு யானை இருக்கிறது,அதனிடம் ஐந்து வாழை பழங்கள் இருக்கிறது ஆனாலும் அதனால் அதை சாப்பிட முடியவில்லை,ஏன்?

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

விடை:பழங்கள் எல்லாம் பிளாஸ்டிக்

பொம்மைகள் ....

சரி சரி அடுத்த கேள்வி....

இந்த முறை பழங்கள் எல்லாம் உண்மையானவை ஆனாலும் யானையால் சாப்பிட முடியவில்லை ஏன்?

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

இந்த முறை யானை பொம்மை....

இதுக்கே கண்ணு கட்டுச்சுன்னா எப்படி இன்னும் வருது பாருங்க.....

இந்த முறை இரண்டுமே உண்மை ஆனாலும் யானையால் அந்த பழங்களை சாப்பிட முடியவில்லை ஏன்?

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

ஏன்னா பழங்கள் எல்லாம் tv channel ல

இருக்கு....

இந்த முறை இரண்டுமே உண்மை அப்புறம் இரண்டுமே டிவி சேனல்ல இருக்கு அப்படியும் அதால சாப்பிட முடியல ஏன்?

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

ஏன்னா இரண்டும் வேற வேற சேனல்ல இருக்கு......

இப்போ எல்லாம் ஒரே சேனல்ல இருக்கு, ஆனாலும் யானை சாப்பிடல ஏன்?

{}

{}

{}

{}

{}

{}

{}

{}

ஏன்னா கரண்ட் கட்.....

கடைசியா யானை எப்படியோ அந்த

பழத்தை சாப்பிட்டது அது எப்படி?

ஏன் ஏன் ஏங்க இப்படி பாவம் விடுங்க,அப்படியாச்சும் அந்த அப்பாவி மிருகம் சாப்பிட்டு விட்டு போகட்டுமே......

ஹைய்யோ ஹைய்யோ எனக்கும் இப்படி தான் இருந்தது....

முடியல ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.

'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப பொறுமையாக சர்தாரிடம், 'இந்த பாருங்க இங்க மட்டும் இல்லை, நீங்க எங்க போனாலும் கொலஸ்ட்ராலை வாங்க முடியாது' என்றதற்க்கு, சர்தார் உடனே சொன்னார், "அப்ப ஏன்யா இந்த பாட்டிலில் "Colestrol FREE" ன்னு எழுதியிருக்கு.."

:( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு டீச்சர்-; தம்பி உன்னோட அப்பா உனக்கு 10 சாக்லேட் வாங்கிட்டு வராரு உனக்கு 2 தர்றாரு,

பக்கத்து வீட்டு பையனுக்கு 6 தர்றாரு ...... அப்புடீண்ணா உங்க அம்மாவுக்கு என்ன வரும்?????

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

யையன்-; அப்பாமேல சந்தேகம் வரும்.................

டீச்சர்-: ......????

:(:D

அமெரிக்காவென்றால் அப்பா எதோ சுத்துமாத்துக்குள் (pedophile)  இறங்கிறார் என்று நினைத்து பொலிசுதான் வீட்டை வரும். :D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Nanthan Anna ; கவலை , மனக்குழப்பம், போனால் போகட்டும் என்ற மன நிலை.. இவை மூன்றுக்கும் விளக்கம் சொல்ல முடியுமா..?

Sundal ; முடியும்

உங்க மனைவியை பிரசவத்துக்காக மருத்துவ மனையில் சேர்த்திருந்தீங்கன்னா நல்லபடியா ஆகணுமேன்னு கவலையா இருப்பீங்க..

காதலியை சேர்த்திருந்தீங்கன்னா நாமதானான்னு மனக்குழப்பத்திலே இருப்பீங்க.

ரெண்டு பேரையும் ஒரே நேரத்திலே ஒரே மருத்துவ மனையிலே சேர்க்கறாப்பல ஆயிருச்சுன்னா, தலைக்கு மேல் ஜான் என்ன.. முழம் என்ன.. போனால் போகட்டும் போடாங்கற முடிவுக்கு வந்துடுவீங்க..

:D :d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் செய்யும் போது எல்லோரும் சொல்லும் பழமொழி "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கலியாணத்தப் பண்ணனும்"

ஆனால் அந்தப் பழமொழி தவறு உண்மையான பழமொழியும் அதன் விளக்கமும் கீழே.

ஆயிரம் முறை போய் ஒரு கலியாணத்த பண்ணனும்.

இந்த பழமொழி ‘ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கலியாணத்த பண்ணனும்’ என்று தவறாக கூறப்பட்டு வருகிறது.

ஒரு திருமணம் செய்வதற்கு முன்பு மாப்பிள்ளையோ பெண்ணோ எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆயிரம் முறை அவர்கள் வீட்டிற்கு போய் அலசி ஆராய்ந்து பிறகு திருமணத்தை நடத்த வேண்டும் என்பதே உண்மையான இந்த பழமொழியின் அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணம் செய்யும் போது எல்லோரும் சொல்லும் பழமொழி "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கலியாணத்தப் பண்ணனும்"

ஆனால் அந்தப் பழமொழி தவறு உண்மையான பழமொழியும் அதன் விளக்கமும் கீழே.

ஆயிரம் முறை போய் ஒரு கலியாணத்த பண்ணனும்.

இந்த பழமொழி ‘ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கலியாணத்த பண்ணனும்’ என்று தவறாக கூறப்பட்டு வருகிறது.

ஒரு திருமணம் செய்வதற்கு முன்பு மாப்பிள்ளையோ பெண்ணோ எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆயிரம் முறை அவர்கள் வீட்டிற்கு போய் அலசி ஆராய்ந்து பிறகு திருமணத்தை நடத்த வேண்டும் என்பதே உண்மையான இந்த பழமொழியின் அர்த்தம்.

 

நித்தம் போனால், முத்தமும் சலிக்கும் எண்டு ஒரு பழமொழியும் இருக்குது, சுண்டு!

 

சில வேளைகளில் மணப்பெண்ணும் சலிச்சுப் போற சான்சும் இருக்கு!

 

பிறகு சீவிய காலம், முழுமைக்கும்.......................... :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தாராளமா பொய் சொல்லலாம் என்றீங்க...:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணம் பண்ணிக்க சொல்லி உன் பின்னாடி பொண்ணுங்களா அலையுதுன்னு சொல்லி ஏதோ பயங்கரமா பில்டப் கொடுக்கிறீயே.. அதில ஏதாவது 2 பொண்ண பத்தி சொல்லு...

ஒண்ணு எங்க அம்மா.. இன்னொன்னு எங்க பாட்டி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சர்தாஜி முதல் தடவை விமானத்தில் பயணம் செய்யதிர்மாணித்தர், அவர் விமானத்தில் ஏறியதும் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் வேறு இருக்கையில் அமர்ந்துகொண்டு லந்து செய்து கொண்டிருந்தார் .

பணிப்பெண்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. விஷயம் விமானிக்கு சென்றது அவர் நேராக சர்தாஜியிடம் சென்று "நீங்கள் எங்கு செல்ல வேண்டும்" என்றார் ,

அதற்கு சர்தாஜி "டெல்லிக்கு "என்றார். அதற்கு விமானி "இந்த இருக்கை சென்னைக்கு செல்கிறது ,அந்த இருக்கைதான்

(சர்தாஜிக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை காட்டி)டெல்லி செல்லும் "என்றதும் சர்தாஜி அவசர அவசரமாக தன இருக்கைக்கு நடையை கட்டினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சர்தாஜி (ஜக்கு சிங்) கண்னாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதில் தெரிந்த முகத்தை அவரால் ஞாபகப் படுத்த முடியவில்லை.

எனவே பக்கத்தில் நின்ற மற்றொரு சர்தாஜி (பானர் சிங்) யிடம் இது யாராயிருக்கும் என்று கேட்டார். பானர் சிங்கும் கண்ணாடியை வாங்கிப் பார்த்து விட்டு "அடச்சீ... அது நான் தான். இது கூடத் தெரியவில்லையா " என்றாரே பார்க்கலாம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தத்துவஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ''பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது? தங்கக் கரண்டியா... மர அகப்பையா?"

"எது பயனுள்ளதாக இருக் கிறதோ, அதுவே அழகு!'' என்றார்.

#பயனுள்ளதாக வாழும் வாழ்க்கையே அழகானது. அமைதி தரவல்லது.

ஒரு சர்தாஜி (ஜக்கு சிங்) கண்னாடியைப் பார்த்துக் கொண்டிருந்தாராம். அதில் தெரிந்த முகத்தை அவரால் ஞாபகப் படுத்த முடியவில்லை.

எனவே பக்கத்தில் நின்ற மற்றொரு சர்தாஜி (பானர் சிங்) யிடம் இது யாராயிருக்கும் என்று கேட்டார். பானர் சிங்கும் கண்ணாடியை வாங்கிப் பார்த்து விட்டு "அடச்சீ... அது நான் தான். இது கூடத் தெரியவில்லையா " என்றாரே பார்க்கலாம்..

 

இப்பதான் புரியுது; நம்ம "நந்த சிங்கும்" பஞ்சாப்தான் போயிருந்தார் போலிருக்கு. அந்த பக்கம் பண்ணும் கண்ணாடி எல்லாமே இந்த மாதிரித்தான் எதாவது ஒரு வம்பு பண்ணிக்கிறது......அதே கஸ்டம்தான். :lol:

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை நம்ம சர்தார் டி.வி. வாங்க ஒரு கடைக்கு சென்றார். கடை முழுவதையும் சுற்றி பார்த்துவிட்டு தனக்கு பிடித்த ஒரு டி.வியை காண்பித்து தனக்கு வேண்டுமென கேட்டார்.

அதற்கு கடைக்காரர் பானர்சிங்கிடம் சர்தாருக்கு எல்லாம் நான் டி.வி விற்பதில்லை என்று சொல்லிவிட்டார் அதிர்ச்சியுடனும் ஆத்திரத்துடனும் வீடு திரும்பிய பானர்சிங் எப்படியாவது அந்த டி-வியை வாங்கி விடுவது என்ற முடிவுடன் சிங்குகளுடைய சின்னமான தாடியையும் தலைப்பாகையையும் எடுத்துவிட்டு அதே கடைக்கு சென்று அதே டி.வியை கேட்டார்.

அதற்கு கடைக்காரர் சிங்குகளுக்கு டி.வி. விற்பதில்லை என்று மறுத்துவிட்டார்.

சர்தார் சளைக்கவில்லை. அடுத்தநாள் மாறுவேடத்தில் தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு சென்று அதே டி.வியை கேட்டபோது கடைக்காரர் சர்தார்களுக்கு டி.வி விற்பதில்லை என்ற பழைய பதிலை சொன்னார். சர்தாருக்கு ஒரே ஆச்சரியம்.

கடைக்காரரிடம் கேட்டார் நான் சார்தார் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?

அதற்கு கடைக்காரர் ரொம்ப சுலபம் ஒவ்வொரு முறையும் நீ காட்டிக் கேட்டது டி.வி அல்ல வாசிங்மிசின் என்றார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன் பின் அறிமுகம் இல்லாத நபரோட பழகக்கூடாது என்று பெண்பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லிவிட்டு, பின் அறிமுகம் இல்லாதவனுக்கு திருமணம் செய்து வைப்பதுதான் நமது கலாச்சாரம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.