Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கே முஸ்லிம் தலைவர்களுடம் இருந்து இப்பிடி ஒரு அறிக்கை வரும்

எமது சகோதரர்களும் நாமும் போடுகின்ற சகோதர சண்டையை பயன்படுத்தி தமிழ் மக்கள் எங்களை பிரிக்கலாம் என்று கனவு கண்டால் அது வெறும் பகல் கனவாகவே இருக்கும்.... இன்பத்திலும் துன்பத்திலும் நாங்கள் எங்கள் சகோதர்களுக்கு தோள் கொடுப்போம் ஆகவே தமிழர்களே கொஞ்சம் அங்கால தள்ளி நில்லுங்க என்று....

  • Replies 3.2k
  • Views 177.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிஷோர் சுவாமி தி மு க வை மூஞ்சி புத்தகத்தில் நக்கல் அடிச்சிட்டு இருக்க தினமலரோ அ தி மு கவை இப்பிடி சொல்லுகின்றது....,

அ.தி.மு.க.,வினர் கலக்கம்: சசிகலா கை ஓங்குகிறதா?

அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவுச் செயலர் பொறுப்பில் இருந்து, ராஜ்யசபா எம்.பி., மனோஜ் பாண்டியன் விடுவிக்கப்பட்டது, கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,யும், மூத்த தலைவருமான பி.எச்.பாண்டியன் மகன் மனோஜ் பாண்டியன், ராஜ்ய சபா எம்.பி.,யாக உள்ளார். அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலராகப் பணியாற்றி வந்தார். இவர் நேற்று, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, அந்த பொறுப்பில், முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர், நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அ.தி.மு.க.,வில் இருந்து சசிகலா நீக்கப்பட்ட பின், நடந்த பொதுக்குழு கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் முனுசாமி, பி.எச்.பாண்டியன் ஆகியோர், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்தனர்; தற்போது நிலை மாறியுள்ளது. முனுசாமியிடமிருந்த அமைச்சர் பதவி, மாவட்டச் செயலர் பதவி, கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் பதவி ஆகியவை பறிக்கப்பட்டன. சசிகலாவை கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் பலரின், கட்சிப் பதவிகள் வரிசையாக பிடுங்கப்படுவது, கட்சியில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, ஏற்கனவே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சசிகலா ஆதரவாளர்களுக்கு, மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அப்போதே, அடுத்து மனோஜ் பாண்டியன் பதவி பறிக்கப்படும் என, கட்சியினரிடம் பேச்சு பரவியது. அதற்கேற்ப, தற்போது மனோஜ் பாண்டியன் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலில், பி.எச்.பாண்டியன், 'சீட்' கிடைக்கும் என, எதிர்பார்த்து காத்திருந்தார்; ஆனால், கிடைக்கவில்லை. தற்போது, மனோஜ் பாண்டியனின் கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டு உள்ளதால், பாண்டியன் ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்திருக்கின்றனர். அ.தி.மு.க.,வில் சசிகலா கை ஓங்குவதால், மேலும் பலருடைய பதவி பறிக்கப்படும் என, தகவல் பரவி உள்ளது. இது, கட்சியினரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் தான் உலகின் மிகப்பெரிய தூதரகமாம் சுமார் 600 மில்லியன் டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டு 1000 பேர் வேலை செய்யும் அளவுக்கான இட வசதியும் வருடாந்தம் 1.2 பில்லியன் டாலர்கள் அதன் தூதரக செலவுகளுக்காகவும் ஒதுக்கப்படுகின்றதாம் .......

#எல்லாம் எண்ணெய் வளம் செய்யும் மாயம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் தாக்குதலை அடுத்து தப்பியோடிய சதாமின் படைகளும் ஆதரவாளர்களும் இவளவு காலமும் அமைதியாக இருந்து தங்களை பலப்படுத்தி தங்களுடன் ஒத்த கருத்து கொண்டவர்களுடன் கூட்டணி அமைத்து சந்தர்பத்துக்காக காத்திருந்து இன்று மீண்டும் அந்த நாட்டை கைப்பற்றும் நிலைக்கு வந்து இருகின்றார்கள்....... இன்று அவர்களை வழி நடாத்த சதாம் இல்லை....ஆனால் அவர்விட்டு சென்ற அந்த வீரமும் அவர் உருவாக்கிய போர் வீரர்களும் மீண்டெழுந்து போராட்டத்தை ஒழுங்கமைத்து முன்னேரிவருகின்றார்கள்

ஆகவே தோல்விய கண்டு துவண்டு விடாதே தமிழா.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன் உயிரோடு

உனதாக வேண்டும்

என்று ஆசைப் பட்டேன்

உன் நினைவோடு

நிழலாகி விட்டேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா தூக்கமே வரல ஒரு கதை சொல்லுமா...

கண்ணா எனக்கும் தூக்கமே வரல, உங்க அப்பா இன்னும் வரல, வரட்டும் ஏன் லேட்டுனு கேப்போம், அபபுறம் பாரு உங்க அப்பன் எத்தன

கதை சொல்றார்னு....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடன் இணக்க அரசியல் செய்தால் சகலதும் கிடைக்கும் தேனாறும் பாலாரும் பாய்ந்து வளைந்து நெளிந்து ஓடும்..... ரெயிலு விடுறாக .... கார்பெட்டு ரோடு போடுறாக அதில உருண்டு பிரண்டு சறுக்கிகிட்டே போகலாம்...... வேற என்ன வேணும் உங்களுக்கு என்று கேட்டவர்களுக்கு

அண்மையில் முஸ்லிம் மக்களை மீதான தாக்குதல் சம்பவங்கள் சமர்ப்பணம்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திமுகவுக்கு புதுமுகங்களைப் போட்டு புதுரத்தம் பாய்ச்சினால்தான் வண்டி கரைசேரும் என்பதை அக்கட்சி மேலிடம் உணர்ந்தாக வேண்டும் என்பதே தொண்டர்களின் கருத்தாக இருக்கிற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திமுகவுக்கு புதுமுகங்களைப் போட்டு புதுரத்தம் பாய்ச்சினால்தான் வண்டி கரைசேரும் என்பதை அக்கட்சி மேலிடம் உணர்ந்தாக வேண்டும் என்பதே தொண்டர்களின் கருத்தாக இருக்கிற

 

திமுகவுக்கு இனி புதுமுகங்கள்  எண்டால் கேஆர் விஜயா,சரோஜாதேவி ஆக்களை சொல்ல வாறியளோ? ஏனெண்டால்.........படத்திலை இருக்கிறவவும் பழையகாய்...  :D  :lol:

 

12-namitha-hot1-600.jpg

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவுக்கு இனி புதுமுகங்கள்  எண்டால் கேஆர் விஜயா,சரோஜாதேவி ஆக்களை சொல்ல வாறியளோ? ஏனெண்டால்.........படத்திலை இருக்கிறவவும் பழையகாய்...  :D  :lol:

 

12-namitha-hot1-600.jpg

 

குஸ்பு....

தி.மு. க. வில் சேரும் போதே... கருணாநிதிக்கு 85 வயசு தாண்டியாச்சு.

இதில்...ஏமாறியவர் யார்? ஏமாற்றியவர் யார்?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குஸ்பு....

தி.மு. க. வில் சேரும் போதே... கருணாநிதிக்கு 85 வயசு தாண்டியாச்சு.

இதில்...ஏமாறியவர் யார்? ஏமாற்றியவர் யார்?

 

 

இரண்டு பேரும் பழம் தின்று கொட்டை போட்டவையள்......உதுக்கை நீதவான் வேலை பாக்கிறது சிரமம் புடிச்சவேலை......இருந்தாலும் சிறித்தம்பி கதை இப்ப இப்பிடி போகுது... :D

 

 

kus_zps6472e3ed.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரும் பழம் தின்று கொட்டை போட்டவையள்......உதுக்கை நீதவான் வேலை பாக்கிறது சிரமம் புடிச்சவேலை......இருந்தாலும் சிறித்தம்பி கதை இப்ப இப்பிடி போகுது... :D

 

 

kus_zps6472e3ed.jpg

 

இந்தி பேசத் தெரிந்தால்... மட்டும், போதுமாய்யா....

குஸ்புவுக்கு,  கட்சியின் சூச்சுமவும் தெரிந்திருக்கணும்யா...... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தி பேசத் தெரிந்தால்... மட்டும், போதுமாய்யா....

குஸ்புவுக்கு,  கட்சியின் சூச்சுமவும் தெரிந்திருக்கணும்யா...... :D

 

 

குஸ்புவுக்கு கோயில் கட்டவும் குஸ்புவை வைச்சு பாட்டு எழுதுற அளவுக்கு சூட்சுமம் அவவிட்டை எக்கச்சக்கமாய் இருக்கு. :D

விஜய்காந்த் நாக்கை மடிச்சு கோபம் காட்டினாலும்.....நாக்கை நீட்டி கோபத்தை அடக்க குஸ்புவாலை ஏலும்... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவுரவமான முறையில் சிறப்பாக ஆடி 2-3 என்ற கணக்கில் கால்பந்தின் மிகச்சிறந்த அணியாக கருதப்படும் நெதர்லாந்திடம்.....வளர்ந்து வரும் Australia தோல்வியடைந்து இருக்கின்றது வாழ்த்துக்கள் கங்காருகளுக்கு........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடிச்சிக்கிட்ட அண்ணன் தம்பிங்க ஒண்டாகிட்டாங்க.... நல்ல காலமோய் நாம அதுக்குள்ளே போகல்ல......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் டிவி என்ன தான் புதுசு புதுசா தினுசு தினுசா நிகழ்ச்சிகள் போட்டாலும் சன் டிவி அளவுக்கு அதால் நேயர்களை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன ஐக்கியத்திற்காக முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்!- மேர்வின் சில்வா

முஸ்லிம் பெண்ணை தான் திருமணம் செய்தால், முஸ்லிம்களும் சிங்களவர்களும் இரத்த சொந்தங்களாக மாறுவார்கள் எனவும் இதனை முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம்கள் எமது இரத்த சொந்தங்கள், அவர்கள் எமக்கு பெண்களை மணம் முடித்து கொடுப்பதில்லை. ஆனால் சிங்கள பெண்களை மணந்துள்ளனர்.

முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கும் பெண்களை மணமுடித்து கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

அப்படி பெண்ணை தருவதாக இருந்தால், எனது மனைவி மற்றும் பிள்ளைகள் என்னை திட்டினாலும் பரவாயில்லை தேசிய ஒற்றுமைக்காக நான் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருக்கின்றேன்.

Sundhal: இதுக்கு அரசாங்கத்தின் தீவிர விசுவாசியும் அமைச்சர் மேர்வினின் நண்பருமாகிய நம்ம அஸ்வர் MP தான் நல்ல பதிலைக்கூற வேண்டும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா இதோ வந்துவிட்டார் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இரண்டாம் புலிகேசி அஸ்வர் அவர்கள்,

எம்புட்டு தான் கூவினாலும் ஒரு அமைச்சர் பதவி கிடைக்கிதில்லையே .....

அளுத்கம சம்பவத்தை சர்வதேச மயப்படுத்தி மஹிந்த அரசை வீழ்த்த சதி; இதில் இருந்து ஜனாதிபதியை பாதுகாப்போம்! - அஸ்வர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் பிரபல பெண் தமிழ் எழுத்தாளர் ஒருவர் கவிதை என்ற பெயரில் எழுதி வரும் சிறுவர் பாடல்களுக்கு இசையமைக்க ஒரு இசையமைப்பாளர் தேவை.... ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழை தமிழனே நினைத்தாலும் அழிக்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

19-1403153098-41copy.jpg

 

இப்படியும்... பழிவாங்கலாமா....
சிறுநீர் கழிக்கும் இடத்தில், புட்டின் படம். :D

  • கருத்துக்கள உறவுகள்

19-1403153123-58copy.jpg

 

பாவம் யா இங்கிலாந்து...

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலம் கற்று தேர்ச்சி பெறுவது உலகத்தை நீங்கள் புரிந்துக் கொள்ள உதவிடும்

தமிழ் கற்பது என்பது உங்களுக்கான தனிப் பட்ட தரத்தை உயர்த்திடவே , அது ஒரு உணர்வு , பொருள் ஈட்டுவதற்கும் , முன்னிலை படுத்திக் கொள்வதற்கும் என்பதையும் தாண்டியது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழப்பர்- ஹக்கீம்

ஆமா ஆனா நான் தொடர்ந்து சட்ட அமைச்சரா தான் இருப்பன்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் ”உபரி” மின்சாரத்தை கேரளாவிற்கு வழங்குங்கள்- ஜெயலலிதாவிற்கு உம்மன் சாண்டி கடிதம்

உம்மன் சாண்டி கடிதம் என்றதுக்கு பதிலா உம்மன் சாண்டி காமடி எண்டு வந்திருக்கணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.