Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மீனவர் வெளியேறும் வரை எமக்கு விடிவு கிட்டப்போவதில்லை கடற்றொழில் சமாசத் தலைவர் விசனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

fishermen-1-150x150.jpg

[size=1][size=4]மீன்பிடி அமைச்சர் குறிப்பிட்டதைப் போன்று முல்லைத்தீவிலிருந்து சிங்கள மீனவர்கள் வெளியேறினால் மட்டுமே அந்தப் பகுதி மீனவர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்வதாகக் கருதமுடியும் அத்துடன் முல்லைத்தீவுக் கடல் பிராந்தியத்தில் இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி தென்னிலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதையும் அவதானிக்க முடிகிறது.[/size][/size]

[size=1][size=4]இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் சென்ற வடமாகாணக் கடற்தொழில் அமைப்பின் தலைவர் சி.தவரட்ணம் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டக் கடற்தொழில் சங்கங்கள், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ஆகியோரை வடமாகாண கடற்தொழிலாளர் அமைப்பின் பிரதிநிதிகள் கடந்த வாரம் சந்தித்துக் கலந்துரையாடினர்.[/size][/size]

[size=1][size=4]இந்தச் சந்திப்புக்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த வடமாகாண கடற் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் மேலும் தெரிவித்ததாவது;

முல்லைத்தீவு மாவட்டத்தில் 22 சங்கங்கள் பதிவு செய்யப்பட்ட போதும் தற்போது 18 சங்கங்கள் வரையிலேயே இயங்கி வருகின்றன. இருப்பினும் சங்கங்களால் தெரிவு செய்யப்பட்ட சமாசம் இல்லாதது அங்கு குறையாக உள்ளது.[/size][/size]

[size=1][size=4]மேலும் நியமனத்தின் மூலம் உறுப்பினர்களைக் கொண்ட சமாசத்தினால் மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்க முடியாது. மேலும் அங்கு பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் அங்குள்ள சமாசங்கள் செயற்படுவதை உணரக்கூடியதாக உள்ளது.[/size][/size]

[size=1][size=4]அத்துடன் கடந்த காலங்களில் முல்லைத்தீவு சமாசங்களினால் சேமித்து வைக் கப்பட்டிருந்த பெருமளவான நிதி தற்போதைய சமாசத்தினால் வீணடிக்கப்படுகின்றது.

மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சுதந்திரமாக இயங்கக் கூடிய சமாசத்தை உருவாக்க முயற்சி செய்வதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் எம்மிடம் தெரிவித்தார்.[/size][/size]

[size=1][size=4]மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தின முல்லைத்தீவுக்கு வந்த போது 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் அந்தப் பகுதிகளில் மீன் பிடித்தவர்கள் மாத்திரமே தற்போதும் தொழிலில் ஈடுபடலாம் என்று தெரிவித்திருந்தார். இது காலப் போக்கில் நடைமுறைப் படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.[/size][/size]

[size=1][size=4]இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே முல்லைத் தீவு மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடித் தொழில் செய்வதாக கருதமுடியும். மேலும் முல்லைத்தீவில் தங்கியுள்ள தென்னிலங்கை மீனவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளான வெளிச்சம் போட்டு மீன்பிடித்தல், சுருக்கு வலை பாவித்து மீன்பிடித்தல், சிலிண்டர் மூலம் மீன் பிடித்தல் ஆகியவற்றின் மூலம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்கின்றனர்.[/size][/size]

[size=1][size=4]இதன் காரணமாக காலம் காலமாக இந்தப் பகுதிகளில் கரைவலையைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.[/size][/size]

[size=4]http://www.tamilthai...ewsite/?p=11558[/size]

[size=4]சிங்கள மீனவர்கள் சிங்கள இராணுவம் இருக்கும் வரை வெளியேறப்போவதில்லை. [/size]

[size=1]

[size=4]எனவே எவ்வாறு எமது மீனவ சமூகம் வாழ்வாதாரத்தை தக்கவைப்பது? [/size][/size]

[size=1]

[size=4]- கூட்டுறவு அடிப்படை மூலம் பலமான ஒரு அமைப்பை கட்டி எழுப்புவது உதவுமா? [/size][/size][size=1]

[size=4]- கூட்டுறவு அடிப்படை மூலம் பலமான சந்தைப்படுத்தலை உருவாக்க முடியுமா? [/size][/size]

[size=1]

[size=4]- பிடிக்கும் மீன்களை குளிரூட்டும் வசதிகளை பெற புலம்பெயர் சமூகம் உதவ முடியுமா? [/size][/size][size=1]

[size=4]- தரங்களில் அடைத்து பிற இடங்களுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய வாய்ப்புகளை உருவாக்க முடியுமா? [/size][/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பல கஸ்ரங்களை அனுபவித்து வந்த தமிழ் மீனவர்கள் இன்றும் சிங்களவனின் அத்துமீறிய அடாவடித்தனமான மீன்பிடிப்பினால் தமிழ்மக்கள் மேலும் கஸ்ரப்படுகின்றார்கள் மேலும் இந்த சிங்களவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை உபயோகித்து மீன் பிடியில் ஈடுபடுவதால் கடலில் மீன் இனம் குறைந்து வருகின்றது இதனால் தமிழீழ மீன்வளம் முற்றாக பாதிக்கப்படுகின்றது இவற்றை தடுப்பதற்கு தமிழரசியல் வாதிகள் ஏதாவது முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.

ஏற்கனவே பல கஸ்ரங்களை அனுபவித்து வந்த தமிழ் மீனவர்கள் இன்றும் சிங்களவனின் அத்துமீறிய அடாவடித்தனமான மீன்பிடிப்பினால் தமிழ்மக்கள் மேலும் கஸ்ரப்படுகின்றார்கள் மேலும் இந்த சிங்களவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை உபயோகித்து மீன் பிடியில் ஈடுபடுவதால் கடலில் மீன் இனம் குறைந்து வருகின்றது இதனால் தமிழீழ மீன்வளம் முற்றாக பாதிக்கப்படுகின்றது இவற்றை தடுப்பதற்கு தமிழரசியல் வாதிகள் ஏதாவது முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.

[size=5]அரசியல்வாதிகளை நம்பி நடக்காது. அவர்களையும்குறை சொல்லமுடியாது. [/size]

[size=1]

[size=5]தேவை மக்களை பலப்படுத்துவது. சட்ட, பொருளாதார, தகவல் ஆலோசனைகளை முடிந்தவர்கள் வழங்கி மக்களை தாமே தமது வாழ்வாதாரத்தை வளர்க்க, பேண,பாதுகாக்க உதவவேண்டும். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.