Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல லட்சம் மக்களை கொன்ற, பல லட்சம் மக்களை பிட்சைக்காரர்களாக மாற்றிய, இந்தியாவின் 13 வது ஜனாதிபதி ஆகிறார் - பிரணாப் முகர்ஜி..?! ஈழதேசம் செய்தி..!

Featured Replies

பல லட்சம் மக்களை கொன்ற, பல லட்சம் மக்களை பிட்சைக்காரர்களாக மாற்றிய, இந்தியாவின் 13 வது ஜனாதிபதி ஆகிறார் - பிரணாப் முகர்ஜி..?! ஈழதேசம் செய்தி..!

[size=3]

eeladhesam%20seythi%20aaivu.jpg1935 - ம் ஆண்டு பிறந்த பிரணாப் முகர்ஜி, 2009 - ம் ஆண்டு முடிந்த 4 - ம் கட்ட ஈழப் போரில் சுமார் 40,000 படுகாயம் அடைந்த மக்களை புல்டோசர் வைத்து மண்ணில் புதைத்த சிங்கள ராணுவத்தை வரவேற்று உச்சி முகர்ந்தவர். இலங்கையின் இறுதிக் கட்ட போரில் இலங்கை மக்கள் யாரும் அகதிகளாக இந்தியாவிற்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ சென்று விடக் கூடாது என்பதற்காக தனது கடற்படையை மூன்று அடுக்கு பாதுகாப்பு (வலையத்தை உருவாக்கி, பாதுகாப்பு என்று பொய் சொல்லி அல்ல, ஈழத்தில் தமிழர்களை ஒழித்தே ஆக வேண்டும் என்று தன் சொந்த விருப்பத்தின் காரணமாக ) என்று கூறி, சிறு சிறு படகுகளில் அகதிகளாக வெளியேறிய சுமார் 50,000 - க்கும் அதிகமான, போரில் தப்பி, படுகாயம் அடைந்து அடைக்கலம் தேடிச் சென்ற அப்பாவி பொது மக்களை நடுக் கடலிலேயே கொன்று அழிக்க ஐடியா கொடுத்தவர் என்று உங்களுக்கு தெரியுமா..? போரை நிறுத்தச் சொல்வது இந்திய அரசின் வேலை அல்ல என்று மிகத் தைரியமாக தமிழ் நாட்டில் நின்று கொண்டு சொன்னவர். குஜராத் மாநிலத்தில் குஜராத் மண்ணில் குஜராத் மக்களிடம் இவ்வாறு சொல்ல முடியுமா..? என்ன. மராட்டிய மக்களிடம் மும்பையில் நின்று கொண்டு இவ்வாறு தெனாவட்டாக மராட்டிய மக்களுக்கு எதிராக சொல்ல முடியுமா என்ன..? இந்த பிரணாப் முகர்ஜி அவர்களைத் தான், தி.மு.க.வின் தலைவர் மு.கருணாநிதி முதன் முதலாக ஜனாதிபதி பதவிக்கு முன் மொழிந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா..?

76 வயது ஆகும் பிரணாப் முகர்ஜி, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் சுமார் 5.58 லட்சம் வாக்குகள் பெற்று, தனக்கு போட்டியாக தேர்தலில் நின்ற சங்மா அவர்களை பின்னுக்குத் தள்ளி, ஒரு தேர்ந்த அரசியல்வாதி முதன் முறையாக இந்திய ஜனாதிபதி ஆகிறார். அரசு அலுவலகத்தில், தொலைபேசி நிறுவனத்தில் ஒரு சாதாரண குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்த பிரணாப், இந்திய அரசின் அதி உயர்ந்த பதவியான ஜனாதிபதி பதவிக்கு உயர்ந்துள்ளார் என்று கூற முடியுமா..? ஆம் என்றால், தற்போதைய ஜனாதிபதியும் பதவி முடிவு பெற்று வெளியே கிளம்பும் பிரதீபா பாட்டில் அவர்களை என்ன சொல்வீர்கள். ஒரு சாதாரண சமையல் வேலை பார்த்தார். ஆனால் எங்கு சமையல் வேலை பார்த்தார்..? இந்திரா காந்தி தொடர்ந்து சோனியா அம்மையார் வரை சிறப்பாக சமையல் வேலை பார்த்ததால் மிக உயர்ந்த பதவியான ஜனாதிபதி பரிசாக கிடைத்தன. ஜனாதிபதி தேர்தலில் கூட ஊழல் மற்றும் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. உ.பி.மற்றும் பீகார் மாநிலங்களில் வாக்குகளைப் பெற அதிக நிதி ஒதுக்கப்பட்டு வாக்குகள் வாங்கப்பட்டுள்ளன.கிடக்கட்டும் இவையெல்லாம்.

திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் தனது கிளார்க் வேலையை தூக்கி எறிந்து விட்டு பத்திரிக்கைகளில் வேலை பார்த்தார். பின்பு அப்படியே அரசியலில் நுழைந்து, தனிக் கட்சி துவங்கும் அளவிற்கு வளர்ந்தார். இந்திரா காந்தி அம்மையார் இறந்த பிறகு தனக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்றவுடன் 'ராஸ்ட்ரிய சமாஜ்வாதி காங்கிரஸ்' என்ற கட்சியை துவங்கி, கட்சி நடத்த முடியாமல் தோல்வி அடைந்து, நேராக நரசிம்ம ராவ் அவர்களிடம் சாஸ்டாங்கமாக காலு கைகளில் விழுந்தவுடன், நரசிம்ம ராவ் போனால் போகிறது என்று அமைச்சர் பதவியை, கட்சி அரசியலில் என்று புதிய வாழ்கையை வழங்கினார்.நரசிம்ம ராவ் அவர்கள் ஏன் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு இவ்வளவு பெரிய இடத்தை கொடுத்தார்..? பிரிதொரு சமயங்களில் பார்ப்போம்.

அன்று தனது அரசியல் வாழ்வின் அஸ்தமனத்தில் இருந்து சுதாரித்து, நேற்று வரை முக்கிய அமைச்சராக, காங்கிரஸ் கட்சியின் தவிர்க்க முடியாத அரசியல்வாதியாக இருந்தார். 1982 - ல் இந்திய அரசின் நிதி அமைச்சராக இருந்த பொழுது தான், டாக்டர் மன்மோகன் சிங் ஆர்.பி.ஐ - .ன் தலைவராக நியமிக்கப்பட்டார். அதாவது மன்மோகன் சிங் கைகட்டி வாய்பொத்தி வேலை பார்த்தார் நிதி அமைச்சரின் கீழ், அந்தக் கடுப்பு தான் நீண்ட நெடு நாளைக்கு பிரணாப் வயிற்றில் பெரும் கட்டியாக, கரைக்கவே முடியாத கட்டியாக, அணைக்கவே முடியாத பெரும் நெருப்பாக நேற்றுவரை இருந்தன என்றால் யாராவது நம்புவீர்களா..? அதுபோலவே தான் முக்கிய அமைச்சராக இருந்து வரும் காலத்தில் மத்திய துணை அமைச்சராக மு.கருணாநிதியால் இந்திய அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சியில் அரசியல் பள்ளிப்பருவத்தை அடைந்தார்.

கடந்த ஒரு வருடங்களாக என்றும் சொல்லலாம்.இந்திய அரசில், காங்கிரஸ் கட்சியில் நடந்த குழப்பங்கள் அனைத்துக்கும் மூல காரணமாக இருந்தவர் பிரணாப் முகர்ஜி அவர்கள். தனக்கு மிக மிக ஜூனியர் ஆன ப.சிதம்பரம் முக்கிய பதவியில், மிக நெருக்கமாக காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியாவின் அரசியல் வட்டத்தில். தனக்கு கீழ் வேலை பார்த்த மன்மோகன் சிங் அவர்களுக்கு, பிரணாப் எழுந்து நின்று பதில் சொல்லியவை, எந்த அளவிற்கு மன அழுத்தத்தை கொடுத்திருக்கும் என்பதை அனுபவித்தால் தான் தெரியும் அந்த வலியை, அரசியல் தோல்வியை. என்றாலும் மு.கருணாநிதியின் அரசியல் யோசனைக்குப் பின், இந்தியாவின் ஜனாதிபதி வேட்பாளாராக தவிர்க்கவே முடியாத படி, அன்னை சோனியாவின் ஒப்புதலுடன் தேர்தலில் நின்று, நாளை முதல் இந்தியப் பேரரசின் ஜனாதிபதி ஆகிறார்.

இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் மிக தந்திரமான, மு.கவின் சீடருமான ஒரு தேர்ந்த அரசியல்வாதி காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி உள்ளார். தற்போதைய காங்கிரஸ் கட்சியின் தேர்ந்த அரசியல்வாதிகள் என்றால் ப.சிதம்பரம் மற்றும் அந்தோணி, கபில் சிபில் என்ற ஜோக்கர் இவர்கள் தவிர காங்கிரஸ் கட்சியின் அரசியல் யுத்த தந்திரங்களை அறிந்தவர்கள், பிரச்சனைகளை தீர்ப்பவர்கள் என்று வேறு யாரும் இல்லை. மேற்கண்ட மூவரும் மு.க.வின் அரசியல் பள்ளிக்கூடத்தில் எல்.கே.ஜி மற்றும் ஒண்ணாம் வகுப்பு மாணவர்கள் தான். எனவே மீண்டும் தி.மு.க என்ற கட்சி இந்திய அரசியலில் மிக பலமுள்ளதாகவும், தேசிய அரசியலில் தவிர்க்க முடியாத கட்சியாகவும் உருவெடுத்து வருகின்றன.( இதன் பின்னணியில் தான் மு.க.,வின் டெசோ மாநாட்டை பார்க்க வேண்டும், பிறிதொருசமயங்களில் இது பற்றி எழுதுவோம்.)

பிரணாப் முகர்ஜி அவர்கள் வரலாறு மற்றும் சட்டம் படித்தவர் என்று சொல்கிறார்கள். அவையெல்லாம் கல்லூரிகளில் பகுதி நேர படிப்பாக இருந்திருக்கலாம். ஆனால் தனது வாழ்கையை கிளார்க்காக ஆரம்பித்தவர் தான் நாளைய இந்திய ஜனாதிபதி அவர்கள். என்றாலும் தனது நீண்ட நெடுங்காலமாக வற்றாத வடுவாக, எப்பொழுதும் தூங்கா இரவாக, அரசியலில் ஒரு தோற்றுப்போன மன நிலையை உருவாக்கிய அந்த மன்மோகன் சிங் - ம், இந்த ப.சிதம்பரம் - மும் ஏற்படுத்திய அரசியல் களத்தில் அவர்களை வென்று, தான் இவர்களையெல்லாம் விட உயர் பதவி வகிப்பதின் மூலம் அரசியல் வெற்றி அடைந்துள்ளார் என்றே கூறலாம், இவை தவிர, தலைப்பு தவிர, வேறு என்ன இருக்கிறது..? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

மாயாண்டிக்கருப்பு

[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தமிழ் நாட்டுத் தலைவர்களிடம், இந்தப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தும் பலம் இருந்தும், தமது சுயநலத் தேவைகளுக்காக, அவர்கள் பின்னுக்கு நின்றார்கள்! நான் தமிழக உறவுகளைக் குறிப்பிடவில்லை! அவர்களின் தலைவர்களையே குறிப்பிடுகின்றேன்!

நாங்கள், அலங்கரிக்கப் பட்ட வேள்விக் கிடாய்கள் ஆக்கப் பட்டோம் என்பதே உண்மையாகும்!

இவரது நியமனத்தை, முன் மொழிந்தவரும், எமது தன்னிகரில்லாத நடிகன், கருணாநிதியே என்பதையும் நான் மறந்து விடக் கூடாது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.