Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனையையும் ஏற்பேன்: ரிஷாத் பதியுதீன்

Featured Replies

[size=5]குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனையையும் ஏற்பேன்: ரிஷாத் பதியுதீன்[/size]

[size=4]மன்னார் ஆர்ப்பாட்டத்திற்கும் நீதிமன்ற கட்டிடம் தாக்கப்பட்டமைக்கும் ௭னக்கும் ௭வ்வித தொடர்புகளுமில்லை. இது ௭ன் மீது சுமத்தப்பட்டுள்ள வீண் பழி. விசாரணையொன்று நடத்தப்பட்டு நான் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை ௭ன்றாலும் நான் மனமுவந்து ஏற்றுக் கொள்வேன் ௭ன்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அமைச்சர் கேசரிக்கு வழங்கிய விஷேட பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், நான் வடமாகாண முஸ்லிம்களுக்கு செய்யும் சேவைகளைப் பொறுக்கவியலாத சிலர் வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்களைத் துரத்துவதற்கு செய்யும் சதி முயற்சிகளில் ஒன்றே இந்தச் சம்பவமாகும். புலிகளுக்கு ஆதரவான சக்திகளே ௭ன் மீது சேறுபூச முயற்சிகள் மேற்கொள்கின்றன. நாட்டில் ௭த்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

நீதிமன்றங்களுக்கு முன்னால் தலைநகரில் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆர்ப்பாட்டங்கள் படித்தவர்களால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மன்னாரிலே அமைதியான முறையில் படிப்பறிவில்லாத மீனவர்கள் தங்களுக்கான உரிமைகளுக்காகவே ஒன்று கூடி அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணித்தியாலங்களாக நீதிமன்றிலிருந்தும் தூரத்திலேயே இந்தப் போராட்டம் நடந்தது. இறுதியில் அவர்கள் ஒரு உத்தரவினை அடுத்து கண்ணீர்ப்புகை பிரயோகித்து அடித்து துரத்தப்பட்டார்கள்.

இதனையடுத்தே கலகம் மூண்டதாக ௭னக்குத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த பின்பே அரசிடமிருந்து ஹெலிகொப்டரைப் பெற்று நான் ஸ்தலத்துக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தேன். இந்நிலையில் இச்சம்பவத்தின் பின்னணியில் நான் இருந்தேன் ௭ன்பது சோடிக்கப்பட்ட கதையாகும். தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி 11 வருட காலமாக கோரிக்கைகள் விடுத்தும் தீர்வுகள் கிடைக்காத நிலையிலே அம்மக்கள், மீனவர்கள் கௌரவமாக அமைதியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நான் தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்தை நேர்மையான முறையில் செய்தவன். இனரீதியான வேறுபாடுகளை ௭திர்ப்பவன். நான் இப்போது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்காக ஈடுபடும் போதே இவ்வாறான குற்றச்சாட்டுகள் ௭ன் மீது சுமத்தப்படுகின்றன. ௭ந்தவொரு விசாரணைக்கும் நான் தயார். ஏனென்றால் நான் தவறு செய்யாதவன். விசாரணைகளின் பின் நான் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் ௭ந்தத் தண்டனை அது மரணதண்டனை ௭ன்றாலும் ஏற்றுக் கொள்ளத் தயார். ௭ன் மீது வீண் பழி சுமத்தி மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள் வீணானவை. அவை நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும் ௭ன்றார்.[/size]

ஒரு முஸ்லிம் ஈனனின் போலிப் புலம்பல்!

பொய் பேசுவதில் சிங்களப் பயங்கரவாதிகளை வெண்டவன்!

  • தொடங்கியவர்

[size=5]அமைச்சர் ரிஷாத்தை பாதுகாக்கிறதா அரசு?; மன்னார் நீதிபதி மீதான அச்சுறுத்தல் குறித்துக் கேள்வியயழுப்புகிறது ஐ.தே.க.[/size]

[size=2][size=4]மன்னார் நீதிபதிக்கு அமைச்சர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் நாட்டின் நீதித்துறைக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது எனச் சுட் டிக்காட்டிய ஐக்கிய தேசியக் கட்சி, இந்த விடயம் தொடர்பில் அரசு ஏன் இது வரையில் நடவடிக்கை எடுக்காதுள்ளது எனவும் கேள்வி எழுப்பியது.[/size][/size]

[size=2][size=4]வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் தேவையில்லை என்ற நிலை நாட்டில் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. அத்து டன், அமைச்சர்கள் வழக்குகளில் தீர்ப்பு மட்டுமே வழங்காதுள்ளனர் எனத் தெரிவித்த ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மன்னார் சம்பவம் மட்டுமல்லாது, நாட்டில் இடம் பெற்ற அனைத்துக் குற்றச் செயல்கள் தொடர்பிலும் அரசு சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும். அது அரசின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.[/size][/size]

[size=2][size=4]எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.[/size][/size]

[size=2][size=4]அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:[/size][/size]

[size=2][size=4]கடந்த வாரத்தில் நாட்டின் சட்ட ஒழுங்குகளை மீறும் வகையில் குற்றச்செயல்கள் நடந்துள்ளன. மன்னார் நீதிபதிக்கு அமைச்சரொருவர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் நாட்டின் நீதித்துறைக்குப் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size]

[size=2][size=4]நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுத்த அந்த அமைச்சருக்கு எதிராக அரசு ஏன் இதுவரையில் நடவடிக்கை எடுக்காதுள்ளது? இந்த விடயத்தை அது அப்படியே மூடி மறைக்கத் திட்டமிடுகிறது. இதனைத் தவிர்த்து, இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டுமல்லாது, நாட்டில் இடம்பெறும் அனைத்து குற்றச் செயல்கள் தொடர்பிலும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். [/size][/size]

[size=2][size=4]மன்னார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்துள்ளார் எனக் கூறியுள்ளார். இதுபோன்ற பல குழுக்கள் நியமிக்கப்பட்டு அவற்றால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் நாம் நன்கு அறிந்துள்ளோம்.[/size][/size]

[size=2][size=4]கட்டுநாயக்க ஆர்ப்பாட்டத்தின்போது கொலை செய்யப்பட்ட ரொஷான் சானகவின் மரணம் குறித்து விசாரணைசெய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும் அச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோலவே நாட்டில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள் தொடர்பில் அரசு அசமந்தப் போக்குடன் செயற்படாமல் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.[/size][/size]

[size=2][size=4]கடந்த 5 வருடங்களுக்குள் 15 ஆயிரத்து 158 சிறுவர் துஷ்பிரயோகங்களும், 6 ஆயிரத்து 343 பெண்கள் துஷ்பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன. இது நாட்டின் வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத நிகழ்வாகும். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் இச்சம்பவம் வரலாற்றில் பதியப்படவேண்டும்.[/size][/size]

[size=2][size=4]மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்த பின்னர் நாட்டிலுள்ள அனைத்து சிறுவர்களும் பாதுகாக்கப்படுவார்கள் என உறுதிமொழி வழங்கினார். ஆனால், இதுவரையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகமாக நடந்துள்ளன.[/size][/size]

[size=2][size=4]அதுமட்டுமல்லாது, நாட்டில் தர்மராஜ்ஜியத்தை அமைப்பதாகக் கூறி 2005 ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமய அரசுடன் இணைந்தது. தாம் அமைப்போம் எனக் கூறிய தர்மராஜ்ஜியம் இன்று பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்களால் நிறைந்துள்ளது. சட்டம் முற்றுமுழுதாக சீர்குலைந்துள்ளது.[/size][/size]

[size=2][size=4]ஆரம்ப காலங்களில் குற்றச் செயல்கள் இடம்பெற்றபோது யுத்தம் இடம்பெற்றதாக அரசு கூறியது. யுத்தம் நிறைவுபெற்று 3 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் நாட்டில் ஏன் குற்றச் செயல்கள் இடம்பெறுகின்றன? நாட்டில் குற்றச் செயல்கள் இடம்பெறாது தடுக்கவேண்டியது அரசின் பொறுப்பு.[/size][/size]

[size=2][size=4]அதுமட்டுமல்லாது, நாட்டினுள் சுதந்திரமான சூழலை உருவாக்குவதுடன், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எவ்வித அரசியல் அழுத்தங்களும் ஏற்படாத வகையில் நீதித்துறை சுயநினைவாக இயங்குவதற்கும் வழிவகுக்கவேண்டியது அரசின் பொறுப்பாகும்.[/size][/size]

[size=2][size=4]நாட்டில் இடம்பெறுகின்ற குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான சட்டதிட்டங்கள் வெறும் கொள்கையளவில் இருப்பதில் எவ்வித பயனும் இல்லை. அவற்றை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்கள் சுதந்திரமாக வாழமுடியும் என்றார்.[/size][/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமா நடிக்கிறாங்கப்பா ......"குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனையையும் ஏற்பேன்"

அதுசரி அவர பாதுகாக்க அரசாங்கம் இருக்கக்குள்ள அவருக்கென்ன கவலை . இப்படியும் சொல்வார் இதுக்கு மேலயும் சொல்வார் ("குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் தற்கொலை செய்து கொள்வேன் ")

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]உண்மையில் அமைச்சர் தான் தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டும். [/size][/size]

[size=4]நீதித்துறையில் மட்டுமல்ல ஒரு சமூகத்தின் மிகவும் நேர்மையானவர்கள் வரிசையில் நீதிபதிகள் முதலிடம் பெறுகின்றனர். எமது நாடுகளில் அரசியல்வாதிகள் அவ்வாறான நீதிபதிகளையே கட்டுப்படுத்தி ஆட்சி செய்யும்பொழுது அது நிச்சயம் ஒரு அராஜக ஆட்சியே. இந்த ஆட்சி நீடிக்காது. [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.