Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.ஈழநாடு பாலசுப்பிரமணியம் சிவானந்தன் மறைவு!

Featured Replies

யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை நிறுவனத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான பாலசுப்பிரமணியம் சிவானந்தன் அவர்கள் தமது 80-வது வயதில் கனடாவில் காலமானார். யாழ். ஈழநாடு பத்திரிகையின் ஆரம்பத்துக்கும் வளர்ச்சிக்கும் பாரிய பணியாற்றியவர்களில் ஒருவரான சிவானந்தன் அவர்கள், நீண்ட காலமாக பத்திரிகையின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். 1981ம் ஆண்டு யாழ் நூலகம், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமைக் காரியாலம், யாழ். ஏம்.பி. வே. யோகேஸ்வரனின் இல்லம் ஆகியவற்றுடன், ஈழநாடு நிறுவனமும் இலங்கை அரசாங்கத்தின் காடையர்களினால் தீக்கிரையாக்கப்பட்டவேளையில், அலுவலகப் பணியில் ஈடுபட்டிருந்த சிவானந்தன் அவர்களுக்கு, பலத்த தீக்காயங்கள் ஏற்ட்டபோதிலும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கலாநிலையம் பதிப்பகத்தின் முகாமையாளராகவும் இருந்த சிவானந்தன் அவர்கள் ‘கமலம்’ சஞ்சிகையின் வெளியீட்டாளராகவும் ; “Saturday Review” வாரப் பத்திரிகையின் ஆரம்ப கால அச்சேற்றத்துக்கும் பொறுப்பாக இருந்தார்.

“London College of Printing” நிறுவனத்தில் அச்சுத்துறையில் பட்டம் பெற்ற பின்னர் ஈழநாடு நிறுவனத்தின் நிர்வாகத்தைப் பொறுப்பேற்றுக் கொண்ட சிவானந்தன் அவர்கள், ஈழநாடு பத்திரிகையின் ஸ்தாபர்கள் கே.சி.தங்கராசா, டாக்டர் கே.சி. சண்முரத்தினம் ஆகியோரின் மருமகனும் ஆவார்.

சிறிது காலம் நோயுற்றிருந்த சிவானந்தன் அவர்களின் இறுதிச் சடங்குகள் இன்று 25-07-2012 புதன்கிழமை கனடா ரொறன்ரோ நகரில் இடம்பெற்றன.

http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.