Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்: இன்று நான்காவது நாள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இனப்படுகொலை புரியும் சிறிலங்காவின் தேசிய விளையாட்டு அணியை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டாம் என்பது உட்பட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திரு. சிவந்தன் கோபி மேற்கொண்டுவரும் உண்ணா நிலைப் போராட்டம் இன்று நான்காவது நாளாகத் தொடர்ந்து வருகிறது.[/size]

[size=4]

DSC_0026.jpg

லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் பகுதியில், ஸ்ரற்போர்ட் தொடருந்து நிலையத்துக்கு (Stratford High Sreet DLR) அருகில் திரு. சிவந்தன் நடாத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு செலுத்துவதற்காக அவ்விடத்திற்கு பெருமளவு மக்கள் இரவு பகல் பாராமல் சென்று வருகிறார்கள். காலை வேளைகளில் பெரும்பாலும் பெண்களே வருகின்ற போதிலும், மாலையில் அதிகளவு மக்கள் திரண்டிருப்பதைக் அவதானிக்க முடிந்தது.

இன்று ABP News எனும் இந்திய தொலைக்காட்சி திரு. சிவந்தனின் கோரிக்கைகள் தொடர்பாக அவரை நேர்காணல் செய்தது. மனிதவுரிமை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலரும் நேரில் வந்து தமது ஆதரவினை வெளிப்படுத்தினர்.

DSC_0027.jpg

இதனிடையே, வரும் 27ம் திகதி வெள்ளியன்று, ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் மாலை ஐந்து மணியிலிருந்து இரவு ஒன்பது மணிவரை, உலகத் தலைவர்கள் ஆரம்பவிழாவுக்கு செல்லும் பாதையில் Aspen Way, London E14 5ST எனும் முகவரியில் (Billingsgate மீன் சந்தைக்கு முன்பாக) கண்டன ஒன்றுகூடலினை நடாத்துவதற்கு காவற்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவும் ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளதாக பிரித்தானிய மைய ஊடகமான The Independent பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழ் மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என தமிழர் ஒருங்கிணைப்புக் குழு வேண்டிக் கொள்கிறது.[/size]

Edited by தமிழரசு

[size=4]சிவந்தனின் உண்ணாநிலைப் [/size][size=4]போராட்டம் வெற்றிபெற வேண்டும். [/size]

[size=1]

[size=4]உலகத்திற்கு தாயகத்தில் நடக்கும் கொடூர ஆட்சி பற்றி தெரியப்படுத்தப்பட வேண்டும். தொடர் பரப்புரைகள் மூலம் மக்களின் விடுதலைக்கு பலம் சேர்க்கப்படல் வேண்டும்.[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.