Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதியுத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களின் உதிரிப்பாகங்களை கடத்தும் தென் இலங்கை வியாபாரிகள். - இராணுவத்தினரின் அனுமதியுடன் தான் இது நடைபெறுகிறதாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

iron_seithy_3812_0.jpg

[size=4]முல்லைத்தீவு மாவட்டத்தில் இறுதியுத்தின் போது பொதுமக்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் இராணுவத்தினரின் உதவியுடனும், கண்காணிப்புடனும் அறுத்து எடுத்துச் செல்லப்படுவது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் பரவலாக எழுந்திருந்த நிலையில், இது தொடர்பான ஆதாரங்கள் சிக்கியிருக்கின்றன.[/size]

[size=4]இந்த இரும்புகளை அனுமதி பெற்றே வெட்டி எழுப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ள போதும், அவ்வாறான அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார். முல்லைத்தீவில் 2009 ஆம் ஆண்டு இறுதியுத்த காலப்பகுதியில் பெருமளவு வாகனங்கள், மற்றும் தொழில் உபகரணங்கள் கைவிடப்பட்டிருந்தன.[/size]

[size=4]இந்நிலையில் யுத்ததின் பின்னர் அவற்றில் பெரும்பாலானவை உரிமையாளர்களால் மீட்கப்படாத நிலையில் இருந்தன. மேலும் ஒரு பகுதி வாகனங்கள் உதிரிப்பாகங்கள் இல்லாமலும், இயந்திரப்பகுதி அபகரிக்கப்பட்ட நிலையிலுமே மீட்கப்பட்டன. இதனோடு உரிமைகோரப்படாத பெருமளவு வாகனங்கள் பல இடங்களில் உரிமைகோரலுக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான இடங்களிலிருந்து இராணுவத்தினரின் உதவியுடன் பெருமளவு இரும்பு தென்னிலங்கை வர்த்தகர்களால் வெட்டி எடுத்துச் செல்லப்படுகின்றன.[/size]

[size=4]இது தொடர்பில் பல்வேறு தரப்புக்களும், பொதுமக்களும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருந்தனர். இந்நிலையில் இராணுவத்தினரின் மேற்பார்வையுடன், பொதுமக்களுக்குச் சொந்தமான வாகனங்கள் இரும்புக்காக எடுத்துச் செல்லப்படுவது. ஆதரங்களுடன் அம்பல மாகியுள்ளது. ஏ-35 பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் இறுதியுத்தம் இடம்பெற்ற பகுதியான இரட்டை வாய்க்கால் - முள்ளிவாய்க்கால் இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் வீதியோரத்தில் போடப்பட்டுள்ள பெருமளவு வாகனங்களிலிருந்து இரும்பு, இராணுவத்தினரின் அனுமதியுடன் தென்னிலங்கை வர்த்தகர்களால் அறுத்து எடுத்துச் செல்லப்படுகின்றது.[/size]

[size=4]மிகவும் பகிரங்கமான முறையில், தொழிலாளர்கள் பலரை வைத்து இரும்பு அறுக்கப்படுகின்றது. இவ்வாறு அறுக்கப்படும் இடத்திற்கு இருபுறமும் இராணுவத்தினர் தமது காவலரண்களை அமைத்துக் கொண்டு அவர்களுக்கான பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். இந்த விடயத்தை யாரும் அவதானித்தாலோ, புகைப்படம் எடுத்தாலோ, அவர்களை இராணுவத்தினர் பகிரங்கமாக அச்சுறுத்துகின்றனர். மேலும் அந்த இடத்தில் தொடர்ந்தும் நிற்க கூடாதெனவும் துரத்துகின்றனர்.[/size]

[size=4]

iron_seithy_3812_1.jpg[/size]

[size=4]

iron_seithy_3812_2.jpg[/size]

[size=4]இதேவளை இவ்வாறான இரும்பு வர்த்தகர்களே பொதுமக்களின் வாகனங்களிலிருந்து இயந்திரப்பகுதிகளை எடுத்துச் செல்கின்றனர். குறிப்பாக முள்ளிவாய்கால் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும், பெருமளவு வாகனங்களுக்கு அவற்றின் இயந்திரப்பகுதி இல்லாமலேயே உள்ளன. இதேவேளை அதிகளவான வாகனங்கள் முழுமையான முறையில் தென்னிலங்கைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.[/size]

[size=4]அண்மையில் கிளிநொச்சி கன்னிகாஸ்திரிகள் மடத்திற்குச் சொந்தமான வாகனமொன்று தென்னிலங்கையில் பாவனையிலிருந்தபோது கண்டு பிடிக்கப்பட்டு, நீதிமன்றத்தின் ஊடாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திறந்துவிடப்பட்ட ஏ-35 வீதியில் இன்னமும் விடுவிக்கப்படாத பகுதிகளிலும் சிங்கள வர்த்தகர்கள் சுதந்திரமாகச் சென்று வர சகல உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.[/size]

[size=4]மேலும் இவர்கள் தொழிலில் ஈடுபட இராணுவத்தினர் சகல உதவிகளையும் வழங்கி வருகின்றனர். குறிப்பாக முள்ளிவாய்க்கால் மேற்கில் அண்மையில் 19 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் தங்கள் வீட்டு வளவிற்குள் உள்ள இரும்புப் பொருட்கள் அனைத்தையும் இராணுவத்தினர் சோதனையிட வரும்போது வீதியில் கொண்டுவந்து போட்டுவிடவேண்டும்.[/size]

[size=4]இதற்கான அறிவுறுத்தலை இராணுவமே வாகனங்களில் வந்து பொதுமக்களுக்கு வழங்கிவிட்டுச் செல்கின்றது. இதேவேளை இறுதி யுத்தத்தின்போது கைவிடப்பட்ட பெருமளவு வாகனங்கள் விடுவிக்கப்படாத பகுதிக்குள் உள்ளதால், அவற்றை சென்று பார்வையிடுவதற்கு படையினர் இன்னமும் அனுமதிக்கவில்லை. ஆனால் இரும்பு வர்த்தகர்களும், வாகனத்தரகர்களும் தாரளமாகச் சென்று பார்வையிட்டு வர படையினர் சகல அனுமதியினையும் வழங்கியிருக்கின்றனர். இதேவேளை நேற்றய தினம் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன். இந்த வியாபார நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.[/size]

[size=4]இதன்போது தாம் அனுமதி பெற்றே இரும்பை எடுத்துச் செல்வதாக அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டச் செயலருடன் தொடர்புகொண்டு கேட்டபோது அவ்வாறான அனுமதி எதனையும் அவர்கள் எடுத்திருக்கவில்லை என மாவட்டச் செயலர் தெரிவித்தார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின் மூலமும் அதன்பின்னரும் பல மில்லியன் ரூபாய்களை சம்பாதித்தது முஸ்லிம்களும் சிங்களவரும்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.