Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூரில் தமிழ் இளையோர் நடத்திய அனைத்துலக தமிழ் இளையோர் மாநாடு பற்றிய ஆய்வு! செண்பகத்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3][size=4]senpagathaar.jpg[/size][/size]

[size=3][size=4]ஒரு வித்தியாசமான கருத்தியல் மாநாடு யூலை 20 வெள்ளிக்கிழமை தொடக்கம் 22 ஞாயிற்றுக்கிழமை வரை சிங்கப்பூரின் தேசிய பல்கலைக் கழக பேரவையால் நடத்தப்பட்டது. 1975ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பேரவை முதன் முறையாக இந்த வருடம் உலகப் பல்கலைக் கழகத் தமிழ் இளையோர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.[/size][/size]

[size=3][size=4]வேற்று மொழி கலவாத பேச்சுத் தமிழில் அமைந்த மாநாடாக இது அமைந்தது. தமிழினப் பெருமையைப் போற்ற வேண்டும் என்ற பிரதான நோக்கில் மாநாட்டை நடத்தாமல் இன்றைய உலகத் தமிழ் இளையோர்கள் தமிழ் அடையாளத்தை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்று பார்வையிடும் மாநாடாக இடம் பெற்றது.[/size][/size]

[size=3][size=4]தமிழ் அடையாளப் பரிமாணங்கள் அனைத்துலக மட்டத்தில் எவ்வாறு செயற்படுகின்றன, இளையோர் வாழ்வியலும் தமிழ் மொழிப் பயன்பாடும் எந்த நிலையில் உள்ளன என்ற சுவையான அலசலை இளையோர் வாயால் கேட்கும் போது புதிய அனுபவத்தைச் செவிமடுத்த வாய்ப்பு கிடைத்தது.[/size][/size]

[size=3][size=4]கல்வியினூடே கலாச்சார அடிப்படையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகவும் தமிழ் மாணவர்களின் திறமைத் தரத்தை உயர்த்துவதை சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரவை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]கடந்த கால் நூற்றாண்டில் தமிழ் பேசும் நாடுகளில் எத்தனையோ இலக்கியம், கல்வி, பண்பாடு, சமூகவியல், தேசியம், விடுதலை தொடர்பான மாநாடுகள், பட்டறைகள், கருத்தரங்குகள் நடந்தேறியுள்ளன. அவற்றுள் தமிழீழத்தின் வன்னிப் பிரதேசத்தில் அனைத்துலக தமிழ் இளையோர் பயிற்சி பட்டறைகள் 2006ம் ஆண்டு வரை நடைபெற்றது.[/size][/size]

[size=3][size=4]விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகம் நடத்திய இந்தக் கூடுகை வித்தியாசமானது. முதலாவதாக அது ஈழத் தமிழர்களின் பாராம்பரிய வாழ்வு முறைகளுக்கு மேற்கு நாடுகளில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையினரை அறிமுகஞ் செய்தது.[/size][/size]

[size=3][size=4]இரண்டாவதாக போர்ச் சூழலுக்கு பழக்கப்பட்ட அந்த மக்கள் தேசிய வளங்களை எப்படிப் பயன்படுத்துகிறார்கள், கெடுபிடிகளற்ற விடுதலையை எப்படி அனுபவிக்கிறார்கள் என்ற நேர்முக விவரணமாகவும் செய்முறை விளக்கமாகவும் அமைந்தது.[/size][/size]

[size=3][size=4]மூன்றாவதாக தமிழீழம் எப்படித் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது என்பதை நேரடியாகக் கற்றுக் கொள்ள இந்த இளையோர்ருக்கு ஒரு அரிய சந்தர்ப்பத்தை இந்தச் சந்திப்புக்கள் ஏற்படுத்தின.[/size][/size]

[size=3][size=4]அனைத்துலகத் தமிழ் இளையோர் வரலாற்றில் வன்னிச் சந்திப்புக்கள் புத்தம் புதிய நிகழ்வாக இடம்பெற்றன. இந்த இளையோர்கள் விசுவமடுவில் பாரிய அறிவியல் கழகக் கட்டிடத் தொகுதியையும் பாடத் திட்டங்களை நடத்தும் ஆதாரத்தையும் வழங்கியது.[/size][/size]

[size=3][size=4]இதே பாணியில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத் தமிழ் பேரவையின் மூன்று நாள் மாநாடு அமைந்தது. அதாவது முதியோர் தலையீடின்றி இந்த மாநாடு மிகவும் சிறப்பாக ஒப்பேறியது. மாநாட்டை மிகவும் சாமர்த்தியமாக வழிநடத்திய ஜெயசுதா சுமந்திரன் பாராட்டுக்குரியவர்.[/size][/size]

[size=3][size=4]தமிழர் அடையாளங்கள் பற்றிய கல்வியியல் விவாதங்களை உலகளவில் அரங்கேற்றுவதன் முன்னோடி முயற்சியே இந்த மாநாடு. மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஜெயசுதா சுமந்திரனின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர், மலேசியா, ஜக்கிய இராச்சியம், அமெரிக்கா, தமிழ்நாடு, இலங்கை, பிலிப்பீன்ஸ், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து இளம் பேராளர்கள் வருகை தந்தனர்.[/size][/size]

[size=3][size=4]இவர்கள் நல்கிய கருத்தாழமிக்க பேச்சுத் தமிழ் உரைகள் பல்சுவையும் வேறுபட்ட தலைப்புக்களுமாக இடம்பெற்றன. அமெரிக்க மசாட்சுசெட்ஸ் தொழில் நுட்பக் கழகத்தைச் சேர்ந்த மகேந்திரன் திருவரங்கரன் “தமிழ் இளையோர் நாடு கடந்த அடையாளமும்” என்று தலைப்பில் உரையாற்றினார்.[/size][/size]

[size=3][size=4]தமிழ் அடையாளம் என்றாலே விவாதத்திற்கு விடப்பட வேண்டிய, நாட்டிற்கு நாடு வேறு படும் பொருளாக மாறிவிட்டதை திருவரங்கன் சுட்டிக் காட்டினார். தமிழ் இளையோர் அடையாளம் என்பது உலகளாவிய கலந்துரையாடலுக்கு விடப்பட வேண்டிய அவசியத்தை இந்த உரை பதிவு செய்கிறது.[/size][/size]

[size=3][size=4]உலகத் தமிழ் இளையோர் மத்தியில் எங்கு வாழ்ந்தாலும் தாம் சிறுபான்மையினர் தானே என்ற வியாகுலம் பீடித்துள்ளது. இதை ஆங்கிலத்தில் Minority Syndrome என்று அழைக்கலாம். இந்த மனப்போக்கை எப்படி மாற்ற முடியும்? தமிழ்ப் பாரம்பரியத்தின் சிறப்பை வாயாரப் புகழலாம். ஆனால் புலம்பெயாந்து வாழும் தமிழ் இளையோர்கள் அனைவரும் சிறுபான்மையினர் தான் என்பதை மறுக்க முடியாது.[/size][/size]

[size=3][size=4]எனது, எங்களுடையது என்று சொல்வதற்கு தமிழினத்திற்கு ஒரு தனிநாடு இல்லாத பெருங்குறையின் வெளிப்பாடு தான் இந்த வியாகுலம். மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அவ்வளவாகப் பின்பற்றாமல் பெரும்பான்மை சமூகத்தைப் போல் புலம்பெயர் இளையோர் வாழ முற்படுகின்றனர். இதைத் தவிர்க்க முடியாத விளைவு எனலாம்.[/size][/size]

[size=3][size=4]இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட இருபது வரையான இளையோர்கள் தாமே தெரிவு செய்த தலைப்புகளில் உரையாற்றினார்கள். கண்ணோட்ட வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது. மாநாட்டு ஒழுங்கமைப்பாளர் ஜெயசுதா சுமந்திரன் தெரிவு செய்த தலைப்பு “கறுப்பா இருந்தாலும் களையா இருக்கீங்க”. ஒரு பானைக்கு ஒரு சோறு பதம். என்ன விறுவிறுப்பு, என்ன இலாவகம்![/size][/size]

[size=3][size=4]பிலிப்பீன்சின் ஆசிய நிர்வாகக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த பழனியப்பன் வைரம் சாரதி சற்று எடை கூடிய தலைப்பைத் தெரிவு செய்து “சங்க இலக்கியத்தை மறுவடிவமைத்து தமிழ் அடையாளத்தை இளையோர் மத்தியில் ஊக்குவித்தல்” என்பது பற்றிப் பேசினார். எட்டாக் கனிக்கு ஏங்குபவன் போல் இருந்தது அவருடைய சிறப்புரை.[/size][/size]

[size=3][size=4]இலங்கை களனிப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சிவகவுரி சிவகுருநாதன் கயிற்றில் நடப்பது போல் மிகவும் அவதானமாக “ இலக்கியம் மூலம் இலங்கைத் தமிழ் இளையோர் அடையாள வெளிப்பாடு” என்ற தலைப்பில் பேசினார். எதை மனதில் வைத்துப் பேசுகிறார் என்ற மயக்கம் கேட்போர் மனதில் இருந்தது.[/size][/size]

[size=3][size=4]இது பேஸ்புக் டுவிற்றர் யுகம் என்பதால் “சமூக வலைத்தளங்களில் தமிழ் அடையாளங்கள்” என்ற துணிச்சலான தலைப்பை தமிழ் நாடு வேலூர் தொழில் நுட்பக் கல்லூரி, அஷ்வின் ராஜதேசிங்கன் தனதாக்கினார். இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவதில் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னோடிகள் என்ற தகவலை அவர் தொட்டுக் காட்டாமல் விட்டதைச் சீரணிக்க முடியவில்லை.[/size][/size]

[size=3][size=4]முழுக்க முழுக்க இணையத் தமிழ் வழியிலேயே தங்களுக் கிடையேயும் உலகத் தமிழரோடும் தொடர்புகளை வைத்திருந்த விடுதலைப் புலிகளின் தமிழ்ப் பங்களிப்பு அளப்பரியது. இன்றும் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் கணினித் தமிழ்ப் பயன்பாடும் பங்களிப்பும் போற்றத் தக்கவை மதிக்கத் தக்கவை. கணினித் தமிழ் பயன்பாட்டில் அவர்களே உலகத் தமிழர்களுக்கு முன்னோடிகள்.[/size][/size]

[size=3][size=4]தமிழ் அடையாளம் என்பது தமிழ் மொழிக்கு அப்பாற்பட்ட ஒன்று என்பது மாநாட்டில் உரையாற்றிய இளம் பேராளர்களில் கூடுதலானோரின் கருத்து. இது எப்படி என்று தான் புரியவில்லை. மொழி இன்றி இனம் இல்லை. இனம் இன்றி மொழி இல்லை. இது தான் யதார்த்தம்.[/size][/size]

[size=3][size=4]இன்றைய நவீன உலகில் உலகளாவிய தமிழ் இளையோர்களால் தமிழ் மொழிக்கு அப்பால் தமிழ் இனத்தவர்களாக வாழ இயலாது. எந்தெந்த வழிகளில் தம்மைத் தமிழ் மொழிப் பாவனையோடு இணைத்துக் கொள்ளலாம் என்ற ஆராய்ச்சியில் இளையோர் இறங்க வேண்டும். இந்த முயற்சியை சிங்கப்பூர் மாநாட்டில் கண்ணுற்றோம்.[/size][/size]

[size=3][size=4]senpagam@hotmail.com[/size][/size]

[size=3][size=4]http://eelampresse.com/?p=4705[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.