Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் என்றொரு விதை

Featured Replies

prabhakaran-a.jpg[size=3]பிரபாகரனின் தந்தை திருவேங்கிடம் வேலுப்பிள்ளை அரசாங்க உத்தியோகத்தில் இருந்தார். அவர் சிலோன் அரசாங்கத்தில் மாவட்ட காணி அதிகாரியாக ([/size]DISTRICT LAND OFFICER[size=3]) பல ஆண்டுகள் கடமையாற்றினார்.[/size]

[size=3]சராசரி நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்திற்கே உரித்தான அனைத்து அம்சங்களும் அந்தக் குடும்பத்துக்கு இருந்தன. நிலையான வேலை, நிம்மதியான வாழ்க்கை ஆகியவற்றை வாழ்க்கையின் ஆதாரத் தேவையாகக் கருதிய வேலுப்பிள்ளை தனது குழந்தைகள் நல்ல கல்வி கற்பதன் வாயிலாக மட்டுமே அந்த நிலையை எட்ட முடியும் என்று வெகுவாக நம்பினார்.[/size]

[size=3]பிரபாகரனின் அண்ணன் மனோகரன் அரசாங்க வேலையில் சேர்ந்தார். பிரபாகரனின் இரு தமக்கைகளும் அரசு ஊழியர்களை மணம் புரிந்தனர். (அதன் பிறகுதான் இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டு மேற்கு நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர்) பிரபாகரன் சிலோன் சிவில் சர்வீஸில் சேர வேண்டு வென்று வேலுப்பிள்ளை விரும்பினார். ஆனால், பிரபாகரனால் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. அவனது நோக்கம் அரசாங்கத்தில் சேர்வதல்ல. ஆனால் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடி தமிழருக்கென்று தனியாக அரசாங்கம் அமைப்பது.[/size]

[size=3]பிரபாகரனின் தாய் தந்தையர் இருவருமே கோயில் கட்டியெழுப்பிய பரம்பரையில் தோன்றியவர்கள். ஆகையால், அந்த வீட்டில் கடவுள் பக்தி மிகுந்திருந்தது. தாயார் பார்வதி அம்மா விசேஷ தினங்களில் விரதம் இருப்பார். அவர்கள் அடிக்கடி கோயிலுக்குச் சென்றாலும் வீட்டில் தனியான பூஜை அறையும் இருந்தது. அந்த அறையில் பெரியதொரு சிவன் சிலையும், அதை விடச் சிறிய உருவத்தில் பிள்ளையார், முருகன் சிலைகளும் இருந்தன. குழந்தைகள் நால்வரும் தினந்தோறும் காலையில் கடவுளை வழிபட வேண்டும். அவர்களும் விருப்பத்துடன் முறை வைத்து ஆளுக்கு ஒரு நாள் தேவாரம் பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.[/size]

[size=3]மற்ற கடவுள் படங்கள் சுவரில் தொங்கின. கடவுள் படங்கள் மட்டும் அந்த வீட்டு சுவரை அலங்கரிக்கவில்லை. கூடவே மகாத்மா காந்தி, பண்டித ஜவர்ஹர்லால் நேரு ஆகியோரின் படத்தையும் வேலுப்பிள்ளை அங்கே மாட்டியிருந்தார். அவர் தந்தை செல்வநாயகத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். செல்வநாயகம் காந்தியவாதி.[/size]

[size=3]மேலும் இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றை ஒதுக்கி விட்டு சிலோன் விடுதலையைக் கொண்டாட முடியாது என்பதால் ஆங்கில ஏகாதியத்தியத்திடம் இருந்து தம் நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த தியாகிகளாகவே காந்தியும், நேருவும் ஈழ மக்கள் மத்தியில் அறியப்பட்டனர். கலாசார ரீதியாகப் பார்த்தாலும் ஈழத் தமிழ் மக்களுக்கு சிங்களர்களைவிட இந்தியாவின் மீதுதான் கூடுதலான ஈடுபாடு இருந்தது.[/size]

[size=3]காணி அதிகாரியாகப் பணியாற்றிய காரணத்தினால் தமிழர் பகுதியின் பாரம்பரிய நிலங்களை சிலோன் அரசு சிங்களக் குடியேற்றம் மூலம் படிப்படியாக ஆக்கிரமிப்பதை வேலுப்பிள்ளை கவனித்து வந்தார். தமது பாரம்பரிய நிலங்கள் சிங்களமயமாவது தமிழ் இனத்தின் தனித்துவ அடையாளத்தையே ஒழித்து விடும் என்று அவருக்குத் தெரியும்.[/size]

[size=3]’சுவரில்லாமல் சித்திரம் வரைய முடியாது’ என்று அதைக் குறித்து தந்தை செல்வா எச்சரிப்பது பற்றியும், அப்பாவித் தமிழர்கள் மீது நடைபெறும் கொலைவெறித் தாக்குதல் பற்றியும் மாலை வேளைகளில் வேலுப்பிள்ளை தன் நண்பர்களோடு விவாதிப்பது வழக்கம். அப்போதெல்லாம் பிரபாகரன் அமைதியாக உட்கார்ந்து கூர்ந்து கவனிப்பான். பெரியவர்கள் பேசும் போது குறிக்கிட மாட்டான். அந்த விவாதங்களிம் பார்வையாளனாக இருந்ததன் மூலம் அந்தச் சிறுவனின் அரசியல் சமூக அறிவும், விழிப்புணர்வும் மேம்பட்டது.[/size]

[size=3]ஆனால், அவர்கள் வெறுமனே பேசிக்கொண்டிருப்பதாக மட்டுமே பிரபாகரனுக்குப் பட்டது. தமிழினம் குட்டக் குட்டக் குனிந்து கொண்டே இருக்கிறதென்று நினைத்தான். ஒடுக்கப் படுகிறோம் என்ற ஆதங்கம் அவர்களுக்கு இருக்கிறதே ஒழிய சரியான போராட்ட முறையைத் தேர்ந்தெடுக்கவில்லையோ என்ற ஜயம் அவனுக்கு இருந்தது. காந்தியும், நேருவும் வேண்டாம். நமக்கு ஆயுத அடக்கு முறையை ஆயுதத்தால் எதிர் கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத் சீங் போன்றவரே தேவை என்று கருதினான். அவனது தந்தை காந்தி, நேரு படத்தை மாட்டிப் போற்றிய அதே சமயம் சிறுவன் பிரபாகரன் புரட்சிக்காரர்களான நேதாஜி மற்றும் பகத்சிங் படங்களை மாட்டி மகிழ்ந்தான்.[/size]

[size=3]வீட்டில் அனைவருக்குமே கடைக் குட்டி பிரபாகரன் செல்லப் பிள்ளை. அவனை ‘தம்பி’ அல்லது ‘துரை’ என்று கூப்பிடுவார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சின்னச் சின்ன ஒத்தாசை வேலைகளில் ஈடுபடுவான். அவனது தாத்தாவின் ஞாபகார்த்தமாக அவன் குடும்பம் ஆண்டுதோறும் விமரிசையான விருந்து உபசாரம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தது. அந்த வைபவத்தில் பங்கு பெறத் தவறியவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை எடுத்துச் சென்று கொடுப்பான். கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடக்கும் போது வினியோகிக்கப் படும் பிரசாதத்தை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு எடுத்துச் சென்று தருவான்.[/size]

[size=3]எனினும் அவனது உலகம் மிகச் சிறியதாக இருந்தது. 1994-ம் ஆண்டு வெளிச்சம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவரே இதை ஒப்புக்கொண்டிருந்தார். ’குடும்பத்தில் எல்லோருக்கும் நான் செல்லம்: பாசத்துக்கு உரியவன். அதனால் வீட்டிலே எனக்கு நிறையக் கட்டுப்பாடுகள் உண்டு. பக்கத்து வீட்டுப் பையன்களே என் விளையாட்டுத் தோழர்கள். எனது உலகம் எங்கள் வீடும். அண்டை வீடுகளும் மட்டுமே.’[/size]

[size=3]பிரபாகரன் தாயார் பார்வதி மிக அருமையாகச் சமைப்பாராம் பிரபாகரனுக்கும் சமையல் செய்வதில் ஏகப்பட்ட விருப்பம். சின்ன வயதில் விநோதினிக்கும், பிரபாகரனுக்குச் சமையல் செய்வதில் போட்டியே நடக்கும். சகோதரர் மனோகரன் இந்த விளையாட்டில் சேர்ந்து கொள்ளமாட்டார். ஆசைத் தம்பியோடு எந்த விஷயத்திலும் போட்டிக்குப் போவது அவருக்குப் பிடிக்காது.[/size]

[size=3]மனோகரன் இப்போது டென்மார்க் நாட்டில் வசிக்கிறார். பெரிய அக்கா ஜெகதீஸ்வரிக்கும் டென்மார்க்தான். வினோதினிக்கு கனடா. புலம்பெயர்ந்து மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்த லட்சக் கணக்கான ஈழத் தமிழ் அகதியில் இவர்களும் அடக்கம்.[/size]

Valvettithurai_Urban_Council_logo.jpg[size=3]பிரபாகரனுக்கு அப்போது ஆறு வயது. 1961-ல் தமிழ்ப் பகுதிகளில் சிங்களம் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதை எதிர்த்து தந்தை செல்வா அறவழிச் சத்தியகிரகப் போராட்டம் நடத்தியதையும், சிறீமாவோ நிர்வாகம் ராணுவத்தை அனுப்பி அந்த அமைதிப் போராளிகளைத் தாக்கியது. அப்போது ராணுவம் அப்பாவி மக்கள்மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. ஏப்ரல் 19-ம் தேதி வல்வேட்டித் துறையில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் மூன்று இளைஞர்கள் காயமடைந்தனர்; ஒருவர் உயிரிழந்தார். பருத்தித் துறையில் இருவர் காயமடைந்தனர். இது இளைஞர்களை வெகுவாக ஆத்திரமூட்டியது. வல்வெட்டித் துறையில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்தவர்களில் ஆறு வயதுப் பொடியன் பிரபாகரனும் ஒருவன்.[/size]

[size=3]சின்ன வயதிலேயே சிங்கள ராணுவத்தின் அடாவடித்தனத்தை வல்வெட்டித்துறை நகரில் பிரபாகரன் கண்டிருக்கிறான். ராணுவ அடக்குமுறை, அத்து மீறல் சுற்றி வளைப்பு, கைது, சித்திரவதை, பெண்களிடம் வரம்பு மீறல் ஆகியவை அங்கே அன்றாட நிகழ்வுகள். அப்பகுதி மக்கள் ராணுவத்தை வெறுத்தனர்.[/size]

[size=3]தந்தையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிங்களக் காவற்துறையினர் அப்பாவித் தமிழர்களை அடித்து இம்சிப்பதையும் உதைப்பதையும் கண்டதினால் சிறுவனாக இருந்த பிரபாகரனின் பிஞ்சு உள்ளத்தில் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்பட்டதுடன் அவையே ஆழமான வடுவையும் ஏற்படுத்தி விட்டன. ராணுவத்தின் மீதான வெறுப்புணர்வு பரவலாக இருந்த சூழ்நிலையில் வளர்ந்ததாக பின்னாளில் ஒரு பேட்டியின் போது தெரிவித்தார். கடல் மூலமாக நடக்கும் கள்ளக் கடத்தலைக் கண்டுபிடிப்பதற்காகவே விசாரனை செய்வதாக ராணுவச் சித்திரவதைக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.[/size]

[size=3]பிரபாகரனின் பிறந்த ஊர் என்ற காரணத்துக்காக பிரபலம் அடைந்த வல்வெட்டித் துறையை ’கடத்தல்காரர்களின் சொர்க்கம்’ என்று தென்னிலங்கையின் அறிவுஜீவிகள் வர்ணிப்பது வழக்கம். இந்த வர்ணனை இந்தியா உள்ளிட்ட சில தேசங்களிலும் பரவியுள்ளது. சிலோன் சுதந்திரம் அடைந்த பிறகுதான் இத்தகைய கெளரவம்(!) அந்த ஊருக்குக் கிடைத்தது.[/size]

[size=3]பாரம்பரியமாக கடற்பயணம் மேற்கொண்டு கடல் வாணிகம் செய்தவர்கள் அப்பகுதி மக்கள். அவர்களைப் பொறுத்த வரை பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவும், சிலோனும் தனித்தனி தேசங்களாக இருக்கவில்லை. இந்தியாவும், சிலோனும் இடையில் இருந்த பாக் ஜலசந்தியின் உதவியால் மிக இசகுவாக கடல் கடக்க முடிந்தது. இந்தியாவில் இருந்து பொருட்கள் வாங்கி வருவதும், அங்கே எடுத்துச் சென்று விற்பதும் அன்றாட வாழ்வில் வெகு சாதாரணமாக நடைபெறும்.[/size]

ValvettithuraiApril1961.jpg[size=3]ஜரோப்பிய காலனியாதிக்கம் வருவதற்கு முன்னர் அவர்களுக்கென்று தனி ராஜ்ஜியம் இருந்தது. தெற்கே கோட்டி சிங்கள அரசனும், கண்டி அரசனும் அவர்களது கடலோடும் வேலையை மறித்தது கிடையாது. அதற்கு ‘கடத்தல்’ என்ற பெயரும் இருந்தது கிடையாது. ஆனால் 1948-ம் வருடம் சிலோனுக்கு சுதந்திரம் கிடைத்த போது காலங்காலமாக அவர்கள் செய்து வரும் கடல் வர்த்தகம் ’கடத்தல்’ என்று அறியப்பட்டது.[/size]

[size=3]குழந்தைகளின் கல்வியில் வேலுப்பிள்ளை சிறப்புக் கவனம் செலுத்தினார். பிரபாகரன் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள மட்டக்களப்பு நகரில் ஆரம்பக் கல்வி கற்றான். அப்போது அவனுடைய தந்தை அங்கு பணியாற்றினார். அதன் பிறகு சொந்த ஊருக்கே மாற்றலாகி வந்தார். அங்கே ஆலடி சிவகுரு வித்யாலயத்தில் தொடக்கக் கல்வி பயின்றான். வல்வெட்டித்துறையில் ஊரிக்காடு எனும் இடத்திலுள்ள சிதம்பரம் கல்லூரியில் பிரகாகரனைச் சேர்த்தார். அங்கு பிரபாகரன் பத்தாம் வகுப்பு வரை பயின்றான். (ஆனால் பொதுத் தேர்வு எழுதவில்லை) படிப்பில் பிரபாகரன் சுமார் ரகம். அவனுக்கு பள்ளிப் பாடத்தை விட அரசியல் நிகழ்வுகளில் ஆர்வம் அதிகம் இருந்தது.[/size]

[size=3]கெளரவமான வேலைக்குச் செல்வதற்கு நன்றாகப் படிக்க வேண்டிய அவசியத்தைத் தன் குழந்தைகளிடம் திரும்பத் திரும்ப வலியுறித்திய வேலுப்பிள்ளைக்கு பிரபாகரன் படிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்தது அவருக்குக் கவலை தந்தது. அதனால் மாலை நேர டியூஷனுக்கு அனுப்பி வைத்தார். அதுவும் வேணுகோபால் மாஸ்டரிடமா அனுப்ப வேண்டும்![/size]

[size=3]பதினான்கு வயது பிரபாகரனுக்குள் ஏற்கனவே இருந்த விடுதலை வேட்கையை வேணுகோபால் மாஸ்டர் தூண்டினார். பிரபாகரன் தேர்ந்தெடுக்கும் பாதையை 1967 முதல் 1972 வரை தீர்மானிக்க உதவியதில் அவருக்கு மறுக்க முடியாத பங்களிப்பு உண்டு.[/size]

[size=3]மூன்று முக்கியக் கருத்துக்களை அவர் ஆழமாக நட்டு வைத்தார். தமிழருக்கென்று தனியாக நாடு, அரசு, கலாசாரம். வரலாறு இருந்தது; சிங்களப் பெரும்பான்மை, தமிழ் சிறுபான்மை, சிலோன் தேசியம் எல்லாம் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியது என்பது முதல் கருத்து. சிங்கள அடக்குமுறைக்குக் கீழ்ப்படிந்து அடிக்கும் போதெல்லாம் வாங்கிக்கொண்டிருக்கும் தமிழர் தலைமை ஒரு தலைமுறைக் கால இடைவெளியில் தமிழ் இனத்தை அதன் அழிவுக்கு இட்டுச் செல்கிறது என்பது இரண்டாவது கருத்து.[/size]

thiruvengadam-prabha.jpg[size=3]மேலும் உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் நாடாளுமன்ற ஜனநாயகம் மூலம் இன பேதம் தீர்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்பார். சிங்கள ராணுவ வலிமையை ராணுவ வலிமை மூலமாக எதிர்கொள்வதால் மட்டுமே நமது மக்களுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தர முடியும் என்பது மூன்றாவது முக்கியக் கருத்து. ஆக மொத்தத்தில் தமிழ்ப் பெருமித உணர்வையும், தமிழ்த் தேசிய உணர்வையும் அந்த டீன்ஏஜ் சிறுவன் உள்ளத்தில் விதைத்தார் வேணுகோபால் மாஸ்டர்.[/size]

[size=3]நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களுக்கெதிராக ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும் இனவெறி அமைப்பினை ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ள முடியும் என்று ஆழமாக உறுதியாக நம்பியவர் அவர். மேலும் சிங்களவரோடு ஒத்துழைக்கும் தமிழரசுக் கட்சியின் வழிமுறையைத் தவிர்த்து சுதந்திர ஈழம் அமைப்பதே சரியான தீர்வாக இருக்குமென்று போதித்தார். அதற்குக் காரணம் சுந்திரலிங்கமும், நவரத்தினமும், தமிழ்ப் பொதுமக்கள் மத்தியில் அவர்களது பிரசாரம் எடுபடாமல் போனாலும் வேணுகோபால் போன்ற சில துடிப்பான இளைய தலைமுறையினர் நெஞ்சில் சுதந்திர வேட்கையைத் தோற்றுவித்தது.[/size]

[size=3]’பிரபாகரா, உன் வயதில் நான் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் பணியாற்றியிருக்கிறேன். மூத்த தலைவர்களைச் சிரம் தாழ்த்தி வணங்கி அவர்கள் அருளும் உபதேசங்களை மூலை முடுக்குகளில் எல்லாம் விதைத்திருக்கிறேன். மாற்றம் வரும், மாற்றம் வரும் என்று கண்களை அகல விரித்துக் காத்துக் கொண்டிருந்தவன்தான் நான். ஒரு கட்டத்தில் எல்லாமே வெறுத்து விட்டது எனக்கு. வறட்டுச் சித்தாந்தங்களை உதறித் தள்ளிய பிறகுதான் இலகுவாக உணர முடிகிறது.[/size]

[size=3]மாலை 6:15-க்கு ஆரம்பித்து மூன்று மணி நேரம் நடக்கும் டியூஷனில் மாஸ்டர் அடிக்கடி சொல்வது இதுதான். ஈழ விடுதலையை முன்னிறுத்தி நவரத்தினம் ஆரம்பித்த ‘சுயாட்சி கழகத்தில்’ வேணுகோபால் மாஸ்டர் தன்னை இணைத்துக் கொண்டு இருந்தார்.[/size]

[size=3]பதினான்கு வயதுப் பிரபாகரனுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்த மாஸ்டருக்கு இருபத்தி நான்கு வயதுதான். 1944இல் பிறந்த வேணுகோபால் மாஸ்டரின் தந்தையார் பெயர் பொன்னுசாமி சாஸ்திரிகள். புரட்சிக்கரக் கருத்துக்களைக் கொண்டிருந்த வேணு கோபால் தன்னிடம் மாலை நேரப்பாடம் படிக்கும் பையன்களிடமும் அதைப் பரப்பினார். அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் ஆயுதம் தாங்கிய போராட்டமே அம்மக்களை ஆக்கிரமிப்புச் சக்திகளிடம் இருந்து விடுவித்து சுதந்திரம் பெற்றுத் தந்தது என்பதை விவரிப்பார்.[/size]

[size=3]உலகிலேயே அகிம்சை முறையில் போராடி விடுதலை அடைந்த நாடு இந்தியா, நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பாய்வது போல இந்திய விடுதலையின் போது பிரிட்டிஷ்காரன் ‘இந்தா பிடி’ என்று சொல்லி இலங்கைக்கும் விடுதலை கொடுத்தான். இந்த இரு தேசத்து விடுதலை வரலாறுகளை மட்டும் தெரிந்திருந்த ஈழத்து இளம் மாணவர்களுக்கு உலகத்தில் அநேக நாடுகள் ஆயுதப் போராட்டம் மூலம் தங்களை விடுவித்துக் கொண்டதை வேணுகோபால் மாஸ்டர் எடுத்துரைப்பார்.[/size]

[size=3]பிரபாகரன் இளம் வயதிலேயே புத்தகங்களில் காதலனாக இருந்தார். அந்த இளம் புரட்சிக்காரனுக்கு அதுதான் முக்கியமான பொழுதுபோக்கு. அதிலும் வரலாற்று நூல்களும், மாவீரர்களின் வாழ்க்கை வரலாறும் அவனுக்குப் பிடித்தமானவை. புத்தகம் வாயிலாகத்தான் அலெக்சாண்டர், நெப்போலியன் ஆகியோரின் சாகசங்களைப் பற்றித் தெரிந்து கொண்டார்.[/size]

[size=3]இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றியும் புரிதல் உருவானது. அதில் சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங், பாலகங்காதர திலகர் போன்றவர்கள் மீது அவனுக்குப் பற்றுதல் ஏற்பட்டது. குறிப்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்த சமயத்தில் அதை ராணுவ சக்தி மூலமாகவே எதிர்க்கவேண்டும் என்ற அவரது வாதம் அவனை ஈர்த்தது. வீரன் என்றால் நேதாஜி. நேதாஜி என்றால் வீரன்.[/size]

[size=3]பிற்கலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கிய பின்னரும் கூட பிரபாகரனின் வாசிக்கும் ஆர்வம் குறைய வில்லை. 1980-களில் பிரபலமாக இருந்து ஜந்து ஆயுதப் போராட்டக் குழுக்களில் ஒன்றாக ஈரோஸ் அமைப்பின் சங்கர் ராஜி அதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.[/size]

[size=3]தென்னமெரிக்கப் போராளி சே குவேரா, தொடர்ச்சியாகப் பல அமெரிக்க அதிபர்களுக்குத் தண்ணி காட்டிய கியூபா அதிபர் ஃபிடல் கேஸ்ட்ரோ, அயுதப் போராட்டம் மூலம் புரட்சிக்காரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை பிரபாகரனின் இருப்பிடத்தில் அவர் கண்டிருக்கிறார். மேலும் சுயமாக துப்பாக்கி சுட்டுப் பழகுவது எப்படி என்ற புத்தகமும் சங்கர் ராஜியின் கண்ணில் பட்டது.[/size]

prabhakaran-c-.jpg[size=3]சிலோன் கல்வி அமைச்சர் I.M.R.A. இரியகோலா 1969-ம் மே மாதம் ஆதி திராவிடத் தமிழ் மாணவர்களுக்கான மூன்று பள்ளிக்கூடங்களை (அன்றைக்கு யாழ்பாணத்தில் இப்படிப் பட்ட தனிப்பள்ளிக்கூடங்கள் இருந்தன) சிங்கள பவுத்தப் பள்ளியாக மாற்றப் போவதாக அறிவித்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் நேரடியாகக் கலந்து கொண்டு பரப்பரபை ஏற்படுத்துவார் என்றும் செய்திகள் பரவின. இளைஞர்கள் இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டனர். அமைச்சர் பங்குபெறும் அந்த நிகழ்ச்சியின் போது மாபெரும் சத்தியாகிரக மறியலில் ஈடுபடும் நோக்கத்தில் அவர்கள பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்.[/size]

[size=3]தமிழரசுக் கட்சியின் தலைமை இளைஞர்களை அமைதிப்படுத்த முனைந்தது. ஆனாலும் அக்கட்சியின் இளைஞர் அணி நிர்வாகிகள் என்ன நடந்தாலும் சிங்கள அமைச்சருக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதில் உறுதியாக இருந்தனர். அந்த ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை. கோபத்தின் உச்சியில் இருந்த இளைஞர் பட்டாளம் தடையை மீறுவதென்று முடிவு செய்திருந்தது. சிலோன் அரசு வழக்கமான போலீஸ் பந்தோபஸ்த்துடன் கடற்படை வீரர்களையும் கொண்டு வந்து இறுக்கியது. அந்த மூன்று பள்ளிக்கூடங்களுக்கும் பலமான பாதுகாப்புத் தரப்பட்டது. எதற்கு வம்பு என்று கருதிய தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் இளைஞர்களைச் சமாதானம் செய்து அவர்களது முயற்சியைக் கைவிடத் தூண்டியது.[/size]

[size=3]வாழவும் விடாமல், சாகவும் விடாமல் தடுக்கும் இவர்கள் எதைத்தான் சாதிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி அந்த இளைஞர்களுக்கு எழுந்தது. அது இயற்கை. கட்சியின் இளைஞர் பிரிவில் இருது சிறுசிறு குழுக்களாக வெளியேறினர். அவற்றில் ஒன்று குட்டிமணி-தங்கதுரை குழு. இந்த இருவருமே வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1969ஆம் வருடம் இக்குழு யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. செல்வநாயகத்தின் தலைமையிலான தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகளில் வெறுத்துப் போனதால் அடுத்த கட்டமாக ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு நகர்வது என்று அந்தக் கூட்டத்தில் தீர்மானமானது.[/size]

[size=3]இதில் தங்கதுரை பாலஸ்தீன விடுதலை வீர்ர் யாசர் அராபத்தின் மீது ஈடுபாடு உடையவர். எனவே பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைப் ([/size]Palestine Liberation Organization-PLO[size=3]) போல தமிழ் விடுதலை இயக்கம் ([/size]Tamil Liberationn Organation –TLO[size=3]) என்று தமது இயக்கத்துக்குப் பெயரிட நினைத்தார். இருந்தாலும் அதிகாரப் பூர்வமாக அவர்கள் எதையும் முடிவு செய்யவில்லை. எனினும் ஈழ மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டப் பயணத்தின் மூலம் அடியை எடுத்து வைத்த வரலாறு முக்கியத்துவம் இந்தச் சிறிய குழுவுக்கே உரியது.[/size]

[size=3]நன்றி: செல்லமுத்து குப்புசாமி (பிரபாகரன் ஒரு வாழ்க்கை)[/size]

ஆக்கம் - தமிழ்லீடர்

உலகமே வியக்கும் வகையில் தலைவரின் வரலாறு எழுதப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.