Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றையாட்சி முறைக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முடக்கும் கூட்டமைப்பின் செயற்பாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]kajendran%20ponnampalam.jpg[/size]

[size=3][size=4][size=5]2009[/size]ம்[/size][/size][size=3][size=4] ஆண்டு மே மாதத்தின் பின்னர் தமிழர்களுடைய உரிமைக்கான போராட்டம் 30வருட ங்களின்பின்னர் மீண்டும் ஒரு வடிவமாற்றத்தை கண்டது நாம் அனைவரும் அறிந்தவொரு விடயம். இந்த வடிவமாற்றத்துடன் கூடிய பயணத்தில் கடந்த 3வருடங்களில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி தவிர்க்க முடியாதவொரு பங்குதாரராக தன்னையும் இணைத்திருக்கின்றது.

அந்தவகையில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந் திரகுமார் பொன்னம்பலம் தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியின் தொகுப்பு இங்கே தரப்படு கின்றது.

01:- வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை தொடக்கம் இன்று நிமலரூபன் படுகொலை வரை படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அவ்வப்போது இவற்றுக் கெதிராக எழுப்பப்படும் குரல் பின்னர் அடங்கிப் போகின்றதே?

காலம் காலமாக அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பங்களும், அரசியல் கைதிகளுக்கு இடம்பெற்றஅசம்பாவிதங்கள் ஒருபுறமிருக்க, இவர்கள் குறிவைக்கப்படக் காரணம் என்ன என்று பார்த்தால், இவர்கள் தமிழர்கள் என்பதாலும், அரசியல் ரீதியாக செயற்பட்டார்கள் என்பதற்குமாகவே. இதை அரசியல்ரீதியாக பார்க்கும்போது எமது இனத்திற்கும், தேசத்திற்கும் பல கோணங்களில் நெருக்குதல்கள்கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக பொருளாதார சிங்கள மயப்படுத்தல், கலாச்சார சிதைப்பு என பலவிடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

எனவே தனித்தனி விடயங்களுக்கு எதிர்ப்புக்காட்டுவதன் மூலம் நாங்கள் எதையும் சாதிக்கப்போவதில்லை.அதற்காக எதிர்ப்பு காட்ட கூடாது என்றில்லை. எமது எதிhப்பை தெரிவிக்கவேண்டும். இவை எல்லாவற்றையும்தொகுத்துப்பார்த்து இந்த பிரச்சினை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அந்த மையப்புள்ளியை நாம்தெரிவுசெய்யவேண்டும். அந்தப் புள்ளி என்னவென்றால் நாங்கள் தனித்துவமான தேசம், எமக்கு இறைமையுள்ளதுஎன்பதே. அது ஏற்றுக்கொள்ளப்படும் வரையில், இந்தப்பிரச்சினை களை நாம் தீர்க்கப்போவதில்லை,

அரசை பொறுத்தவரையில், இந்த அநியாயங்களுக்கு எதிராக போராடுவது அவர்களுக்கு பெரிய விடயமல்ல. இவைஅனைத்தையும் தொகுத்துப் பார்த்து இதற்குத் தீர்வு இதுதான் என்பதை அடையாளப்படுத்தி அந்த தீர்வுக்குப்பின்னால் அணிதிரள்வதே அவர்களுக்குப் பிரச்சினையாக இருக்கும். அதனையே நாம் தெரிவுசெய்யவேண்டும்.அல்லதுபோனால் எங்கள் மனங்களுக்குள் உள்ள கஸ்டங்களுக்கு அவ்வப்போது சமாதனம் சொல்வதாகவே இந்தபோராட்டங்கள் அமையும்.

02:-தமிழ்தேசம் அங்கீகரிக்கப்படுவது ஒன்றே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு எனகுறிப்பிட்டிருக்கின்றீர்கள். அந்த அங்கீகாரத்தை பெறுவதற்கான பாதை எவ்வாறிருக்க முடியும்?

இன்று எம்மையாரும்குறைசொல்ல முடியாது. நாம் நூறு வீதம் ஜனநாயகத்தினை பின்பற்றுகின்றோம். இந்த இடத்தில் நாங்கள் எங்கள் நிலைப்பாடுகளை முன்வைக்கின்றபோது சர்வதேசத்திற்கும் ஒரு பொறுப்பிருக்கின்றது. சர்வதேசம் இந்தப்போராட்டத்தை அழிக்கும் போது ஆயுதப்போராட்டமேஅனைத்திற்கும் அடிப்படை என்றும், எங்கள் இனத்தின் விடுதலையை வலியுறுத்தி நடந்த போராட்டத்தை பயங்கரவாதம்என கொச்சைப்படுத்தி அழித்தது.

போராட்டத்தை அழித்த அதே தரப்புக்களுக்கு இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பும்இருக்கின்றது. அன்று ஆயுதரீதியாக போராடியபோது சுட்டிக்காட்டப்பட்ட விடயம் ஆயுதரீதியாக பேசுவதே பிரச்சினை என கூறப்பட்டது, தமிழர்கள் இன்று அந்த நிலையில் தமிழர்கள் நிற்கின்றார்கள். அதுபோக சர்வNதுசத்தின் பார்வை இன்று தமிழர் அரசியல் மீது இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம்.

கடந்த மார்ச் மாதம் ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்படது. அதில்குறிப்பிடப்பட்டிருப்பதுஅரசாங்கம் உருவாக்கிய நல்லிணக்க ஆணைக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்ப டுத்தவேண்டும் எனவும்,யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு ஒரு உள்ளக ரீதியான விசாரணை நடத்தப்படவேண்டும்என்பதும், இதற்கு ஜ.நா தனது ஒத்துழைப்பை வழங்கும் என்பதுமேயாகும். இது தமிழர்களுக்கு எந்த நன்மையும்பெற்றுக் கொடுக்கப்போவதில்லை. அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கும்போதே அதனால் தனக்குநெருக்கடி வரும் என்பதை அது புரியாமலில்லை.

அந்த நெருக்கடியை தீர்ப்பதற்காகவே ஆணைக்குழுவை நியமித்தது. அந்த ஆணைக்குழு எமது பிரச்சினைகளை தீர்க்கும்என்றால் எம்மைப்போல் ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது. மறுபுறம் குற்றம் செய்த தரப்பேகுற்றத்தை விசாரிக்கவேண்டும் என குறிப்பிடு வது இயற்கை நீதிக்கே முரணானது. அந்த இடத்தில் எங்கள் பெயரைபயன்படுத்தி தீர்மானத்தை கொண்டுவரும் தரப்புக்களிடம் இந்த தீர்மானத்தின் மூலம் தமிழருக்கு எந்தவிதமானபிரயோசனமும் இல்லை என்பதை கூறியிருக்கவேண்டும்.

அதனடிப்படையில் எங்கள் பெயரை பயன்படுத்தி வரும் அந்த தீர்மானத்தில் ஆக குறைந்தபட்சமாக தமிழர்முன்வைக்கும் தீர்மானத்தையாவது ஏற்பாட்டாளர்களுக்கு இடம்பெறச்செய்யவேண்டிய நெருக்கடி நிலைஏற்பட்டிருக்கும். இந்த இடத்தில் ஆகக்குறைந்த பட்ச கோரிக்கையாக ஜ.நா நிபுணர்குழு தீர்மானத்தையாவதுநிறைவேற்றுங்கள் என்பதை நாம் கேட்டிருக்கலாம். அப்படிச் சொல்லாத பட்சத்தில், சர்வதேசம் கொண்டுவந்ததீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால் இன்று மண்பறிப்பு முதற்கொண்டு நிமலரூபன் படுகொலைவரை பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது.இவற்றை தடுப்பதற்காகவே அந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அன்று சரியான தீர்மானத்தை நாம்எடுக்காத நிலையில் இன்று இன்னொரு சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலையேயுள்ளது.

03:- 13வது திருத்தத்தின் அடிப்படையிலமைந்த மாகாணசபைகளில் போட்டியிட்டு அவற்றை கைப்பற்றுவதன் மூலம் இருமாகாணசபைகளிலும் தீர்மானங்களை நிறைவேற்றி வடகிழக்கு மாகாணங்களின் இணைப்பைஏற்படுத்த முடியும் என்ற கருத்தை கூட்டமைப்பு கிழக்கு தேர் தல் களத்தில் முன்வைத்திருக்கின்றது இது எவ்வளவுக்கு சாத்தியம்?

சட்டத்திற்கு முரணான ஒரு கருத்தாகும். நாங்கள் கனவு காணலாம் ஆனால் உன்மையான உலகத்தில் சட்டங்களையே பின்பற்றவேண்டும். மாகாணசபை முறையில் அயல் மாகாணங்க ள் ஒன்றினைய சட்டம் இடம்கொடுக்கின்றதா?என்பது முதலாவது கேள்வி. இதற்கான பதில் ஆம். சட்டப்பிரகாரம் மகாணசபை சட்டத்தின் படி அயல்மாகாணங்கள் ஒன்றிணைய இடமுண்டு. இரண்டாவது கேள்வி அவ்வாறு இடமிருந்தால் அதை எப்படிக் கொண்டுவரலாம் என்றால் அதை இலங்கை பாராளுமன்றம் மட்டுமே கொண்டுவரமுடியும். கூட்டமைப்பு கூறுவதைப்போன்று,மாகாணசபைகளை கைப்பற்றி மாகாணசபைகளில் தீர்மானத்தை எடுப்பதன் மூலம் மாகாணங்களை இணைக்கலாம் என்பது சாத்தியமற்றதொன்று.

அவ்வாறு தீர்மானம் எடுத்தாலும் அதை நடைமுறைப்படுத்தவேண்டியது பாராளுமன்றமே. ஆனால் பாராளுமன்றம் அதை கடைசிவரையும் செய்யாது. 225 பாராளுமன்ற உறுப்பினர் களில் 13பாராளுமன்ற உறுப்பினர்களே கூட்டமைப்பினர். முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருந் தாலும் அது சாத்தியமற்றது. இணைப்பு குறித்தகருத்துக்கள் அப்பட்டமான பொய். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குச் சொல்லப்பட்டுள்ளது, யுத்தத்தின் பின்னர் தமிழ்தேசம், சுயநிர்ணயம், இறைமை போன்ற கோட்பாடுகளை கைவிட்டு, மாகாணசபை முறைமையை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கட்டளை போடப்பட்டுள்ளது. இதை மக்களுக்கு வெளிப்ப டையாக கூறமுடியாது. ஆகவே படிப்படியாக மக்களை அந்த இடத்திற்குள் கொண்டு வருகிறார்கள்.

மாகாணசபைகளை கைப்பற்றுவதன் மூலம் வடகிழக்கு இணைப்பை ஏற்படுத்த முடியும் எனில் கடந்தமுறை கிழக்கு மாகாணசபைதேர்தலில் ஏன் போட்டியிடவில்லை. எனவே இந்த கருத்துக்களை கூறி மக்களை வாக்களிக்கச் செய்து, அதன் மூலம்மக்கள் இந்த முறையினை ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேசத்திற்குக் காண்பித்து எங்கள் அரசியல் அபிலாசைகளை ஒற்றையாட்சி முறைக்குள் முடக்கும் நோக்கமேயன்றி வேறு ஒன்றுமில்லை.

04:- சமகாலத்தில் தமிழர் தாயகப்பிரதேசங்களில் இடம்பெற்றுவரும், நில ஆக்கிரமிப்புக்கள், திட்டமிட்டசிங்கள குடியேற்றங்கள் போன்ற அடிப்படை பிரச்சினைகளுக்கு மாகாணசபைகளை கைப்பற்றுவதன் மூலம் குறைத்துக்கொள்ளமுடியும் என்ற ஒருவாதமும் முன்வைக்கப் படுகின்றதே.

மகாணசபை என்பது ஒற்றையாட்சி முறைக்குள் உள்ள ஒரு விடயம். ஓற்றையாட்சி முறைi ய உடைக்காமலிருக்கமாகாணசபையை எவ்வாறு அனுகுகிறார்கள் என்றால். மாகாணத்திலு ள்ள மக்கள் தேர்தல் மூலம் முதலமைச்சரையும்,உறுப்பினர்களையும் தெரிவு செய்ய முடியு ம். ஆனால் அந்த மாகாசபை அதிகாரங்கள் அனைத்தும்,ஜனாதிபதியால் தெரிவுசெய்யப் படும் ஆளுநருக்கே உரியவையாகின்றன. குறிப்பாக பொலிஸ்,காணிஅதிகாரங்கள் மாகாணத்தில் இருக்கின்றன. இருந்தும் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமைக்கு காரணம்என்னவென்றால் ஆளுநரின் அனுமதியின்றி எதையுமே சாதிக்க முடியாது.

மாகாணசபையில் ஒரு ஆளுநர் சட்டத்தை நிறைவேற்றினாலும், அது சட்டமாக இயங்குவதற்கு அனுமதிக்கவேண்டும். இதுவே யதார்த்தமான நிலைப்பாடு. இன்று நாம் ஒரு தேசமாக இருப்பதை கட்டம்கட்டமாக இல்லாமல் செய்கின்றார்கள். சிங்கள குடியேற்றங்கள், நிலப்பறிப்புக்கள், பொருளாதாரத்தை சிங்கள மயமாக்குவது,கலாச்சாரச் சிதைப்பு என பலவடிவங்களில் அவை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே இன்றுள்ளநிலையில் இவற்றை நிறுத்த வேண்டும் அல்லது தீர்வு காணவேண்டும்.

ஆனால் அதை மாகாணசபையினால் செய்ய முடியாது என்கிறபோது, அந்த மாகாணசபைக்குள் நாம் எதற்காகச்

செல்கின்றோம்? உன்மையில் இந்தப் பிரச்சினைகளை தீர்வு காண முடியுமென்றால் வரதராஜப்பெருமாள் இந்தியாவின் ஆதரவுடன், வடகிழக்கு இணைப்பிலிருந்தபோது ஏன்தமிழீழ பிரகடனம் செய்துவிட்டு ஓடினார். சம்மந்தன் ஜயா 1980களில் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்தபோது ஏன் மாகாணசபையை புறக்கணித்தி ருந்தார்?எனவே இந்த அடிப்படைகளை மக்கள் சரியான முறையில் புரிந்துகொள்ள வேண்டும்.

05:- 13 வது திருத்தத்தை நிராகரிப்பதாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பு, மறுபுறத்தில் அதனடி ப்படையிலமைந்தமாகாணசபை முறைமையினை ஏற்றுக்கொண்டு அந்த தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது. இந்த நிலையில் தமிழர்களுடைய அரசியல் எதிர்காலம் எவ்வாறிருக்கும்?

இது எமக்குள்ள மிகப்பெரிய சவாலாகும், கடந்தமாதம் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தி எமது இருப்பிலிருந்து கீழ் இறங்கிவந்து கூட்டமைப்பிடம் கெஞ்சியிருந்தோம். அதாவது பிழையான இந்தக்களத்தின்அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியான கூட்டமைப்பு களமிறங்கி பிழையானதோற்றப்பாட்டை சர்வதேசத்திற்கு காட்டவேண்டாம் என கேட்டிருந்தோம்.அதை பொருட்படுத்தாமல் தன்னுடைய சொந்தப்பெயரில் போட்டியிடுவது மாத்திரமல்லாமல், கட்சி யின் தலைவர் திருகோணமலையில் வேட்பாளர் கூட்டத்தில் கூறியிருந்தார் மாகாண சபை முறையை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என இந்த தேர்தல் மூலம் காண்பிக்கவேண்டும் என்று.

எம்மை பொறுத்தவரை மாகாணசபை முறை எங்கள் அரசியல் அபிலாசைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஒரு அபாயகரமான முறையாகும். அதே சமயம் கூட்டமைப்பு இவ்வாறு செயற்படுகின்றது, நாம் புறக்கணிக்கச்சொன்னால் பிழையான தரப்புக்கள் வந்து விடும் என எங்கள் மீது குற்றம்சாட்டப்படுகின்றது. மக்களுக்கு பலவிடயங்கள் புரியவில்லை. ஆனால் மக்கள் விளங்கிக் கொள்ள முடியாமைக்கு பல காரணங்கள் உள்ளன. இதற்குஊடகங்கள் முக்கிய காரணம். உன்மையில் ஊடகம் சமு கத்தில் ஒரு விவாதத்திற்கு களம் கொடுக்கவேண்டும். ஆனால்அதற்கு இங்கு இடமில்லை. எங்களுடைய சொந்த தமிழ் ஊடகங்களே அந்தக் களத்தை மறுக்கின்றன.

நாம் இன்று பிரச்சினைகளை மக்களுக்கு இனங்காட்ட சந்தர்ப்பமற்ற நிலையில் உள்ளோம். சரியானசெய்தியை கொடுக்க முடியாத நிலையிலுள்ளோம். ஏனெனில் மக்கள் குழம்புவார்கள், எங்கள் நோக்கம்மக்களை குழப்புவதல்ல, தேர்தல் காலம் இந்த தேர்தலில் மக்கள் முழு ஆதரவை தெரிவித்தால் எங்கள் அரசியல்எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும். எனவே இதை எவ்வாறு சமாளித்துக் கொள்வது என்பதே மிகவும் தர் ம சங்கடமானநிலையாக மாறியிருக்கின்றது.இவை அனைத்திற்கும், மாகாணசபையை புறக்கணிக்காமல், பிழையான தரப்புக்கள் வருவ தையும் தடுக்க கூட்டமைப்புசுயேட்சையாக போட்டியிட்டிருக்கலாம். ஆனால் அந்த நிலை கைமீறிப்போயிருக்கின்றது. மாறாகஎங்கள் இனத்திற்காக வீரப்பேச்சு பேசிய தரப்புக்கள் மா காணசபை முறையினை ஏற்றுக்கொள்கின்றோம்என கூறும் நிலைக்கு அந்தத் தரப்புக்கள் போகின்றதென்றால் எங்கள் அரசியல் அபிலாசைகளுக்கு வைக்கும்ஆப்பு. இதற்கு மேல் எவ்வாறு இருக்கும் என்பதை மக்கள்தான் சிந்திக்கவேண்டும்.

06:- தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அடுத்தகட்ட பயணங்கள் எவ்வாறு அமையப்போகின்றது?

நாங்கள் கிழக்கு மாகாணத்திற்கும், சென்றிருக்கின்றோம், கிழக்கில் எங்கள் மக்களுக்குள்ள பிரச்சினைகள்அதிகம். அங்குள்ள மக்கள் தலைவர்கள் எந்த ஆதரவையும் அவர்களுக்கு வழங்கவில்லை. இந்நிலையில் கிழக்கில்சிவில் சமுகத்தினருடனும், மக்களுடனும் பேசியிருக்கின்றோம். தமிழ்தேசிய மக்கள் முன்னணி என நாம்பேசிக்கொண்டாலும் இதையொரு அரசியல் கட்சியாக வளர்க்கும் நோக்கம் எமக்கில்லை. இதையொரு மக்கள்அமைப்பாக மாற்றவேண்டும் அந்தவகையில் எமதுசெயற்பாடுகள் அமைகின்றன.தேர்தல் காலத்தில் நாங்கள் கூறிய விடயங்கள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும், எங்களுக்கு ஒரு மேடைகிடைத்தது. ஆவணப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்தது. அன்று அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தியமையினால் தான் 3வருடத்தின் பின்னர் மக்களுக்கு கணிசமானளவு விழிப்புணர் ஏற்பட்டுள்ளது. நாம் நேர்மையான வழியில்செல்கின்றோம். எங்கள் கருத்துக்களை மக்களுக்குச் சொல்கின்றோம் அதற்கு மேல் மக்களுடைய விருப்பம்.தேர்தலுக்காக கருத்துக் களைச் சொல்லும் தரப்புக்கள் கிடையது. அசைக்க முடியாத நம்பிக்கை எமக்குள்ளது உன்மையில் நிச்சயமாக ஒருநாள் வெல்லும்.

நன்றி தினக்குரல்[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.