Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதயங்களை வென்ற மேரி கோம்!

Featured Replies

இதயங்களை வென்ற மேரி கோம்!

அரையிறுதியில் தோல்வியுற்றாலும், தன் அர்ப்பணிப்பாலும் முயற்சியாலும் இந்தியர்களின் ஒட்டுமொத்த இதயங்களை வென்றிருக்கிறார், மேரி கோம். ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ள மேரி கோம் கடந்து வந்த பாதை வியக்கத்தக்கது.

குத்துச்சண்டை 48 கிலோ பிரிவில் நிகரற்ற வீராங்கனையாகத் திகழ்ந்த மேரி கோம், ஐந்து முறை உலகச் சாம்பியன் பட்ட...

த்தைக் கைப்பற்றி, இந்திய மகளிர் குத்துச்சண்டை விளையாட்டுக்கு கௌரவம் சேர்த்தவர்.

ஒலிம்பிக்கில் முதன் முதலாக மகளிர் குத்துச்சண்டை போட்டி சேர்க்கப்பட்டதுஎன்ற அறிவிப்பு வெளியானதில் தொடங்கி, அதற்காக தன்னை முழு அர்ப்பணிப்புடன் தயார் செய்துகொண்டவர்.

லண்டன் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டையைப் பொருத்தவரை, 51 கிலோ, 60 கிலோ மற்றும் 75 கிலோ ஆகிய மூன்று பிரிவுகள் மட்டுமே சேர்க்கப்பட்டன.

ஒலிம்பிக்கில் பங்கேற்று நாட்டுக்கு புகழ்சேர்க்க வேண்டும் என்பதற்காகவே, 48 கிலோ பிரிவில் தன்னிகரற்ற வீராங்கனையாகத் திகழ்ந்துவந்த மேரி கோம், 51 கிலோ எடைப்பிரிவுக்காக தன்னை மாற்றிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டார்.

தன் உடல் எடையைக் கூட்டினார். இனி இதுவரைச் சந்திக்காத வீராங்கனைகளையே எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டார்.

தன்னைவிட உயரம் மிகுந்தவர்களையே பெரும்பாலும் சந்திக்க வேண்டும் என்பதால், உயரம் மிகுந்தவர்களைக் கொண்டே பயிற்சியில் ஈடுபட்டார்.

இந்த அர்ப்பணிப்புக்குப் பலனாக, ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த இரண்டு குழந்தைகளுக்குத் தாயான மணிப்பூர் வீராங்கனை மேரி கோமை வாழ்த்துவோம் வாருங்கள்!

ஒலிம்பிக் மகளிர் ஃப்ளை (51 கிலோ) குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வியுற்றார்.

எனினும், அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை அவர் ஏற்கெனவே உறுதி செய்தார்.

இதன்மூலம், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற முதல் குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார்.

மேரி கோம் தனது அரையிறுதிச் சுற்றில், தரநிலையில் இரண்டாம் இடத்தில் உள்ள பிரிட்டனின் ஆடம்ஸ் நிக்கோலாவிடம் 6-11 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவினார்

Chutti Vikatan

https://www.facebook.com/#!/photo.php?fbid=251017168334166&set=a.129489993820218.16063.127040440731840&type=1&theater

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.