Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்கான வீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்கான வீடுகளை அமைக்கும் பணியில் சீனா! இந்திய மத்திய அரசாங்கம் விசனம்.

[Wednesday, 2012-08-15 10:43:39]

MR-and-Manmohan-150seithy.jpg

வடபகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள இராணுவத்தினருக்கான வீடுகளை அமைக்கும் திட்டத்தை அரசாங்கம் சீனாவிடம் கையளித்திருப்பது தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் விசனமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இப் பிரச்சினை காரணமாக ௭திர்வரும் 24 ஆம் திகதி இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருந்த இலங்கையின் உயர்மட்ட குழுவின் விஜயமும் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

இது விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்தம் சீனாவுக்கு வழங்கப்பட்ட போதும் இந்தியா தனது ௭திர்ப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு மத்தியிலும் சீனாவுக்கே அவ் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால், இவ்விடயம் தொடர்பாக இந்தியா அவ்வளவாக அக்கறை கொள்ளவில்லை. தற்போது வடபகுதியில் இலங்கை இராணுவத்தினருக்காக வீடுகளை அமைக்கும் திட்டம் சீனாவிடம் கையளிக்கப்படவுள்ளது.

அத்தோடு, சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இவ்விரண்டு விடயங்களும் இந்தியாவுக்கு கடுப்பை ஏற்படுத்திவிட்டுள்ளது. இந்தப் பின்னணியில் ௭திர்வரும் 24 ஆம் திகதி இலங்கையின் உயர்மட்டக் குழுவினரான அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரின் இந்திய விஜயம் தடைப்பட்டுள்ளது. இச்சந்திப்பிற்கு தற்போது நேர காலம் இல்லையென இந்தியா அறிவித்துள்ளது. இதேவேளை தமிழீழ ஆதரவு மாநாடான டெசோ பல தடைகளை தாண்டி நேற்று முன்தினம் தி.மு.க தலைவர் கருணாநிதி தைலமையில் சென்னையில் நடைபெற்றது.

ஆரம்பத்தில் ஈழம் ௭ன்ற வார்த்தை பிரயோகம் இந்திய மத்திய அரசினால் தடை செய்யப்பட்டது. பின்னர் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது. சென்னை மைதானத்தில் டெசோ மாநாடு நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தது பின்னர் அதற்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன் பின்புலங்களை ஆராயும் அரசியல் ஆய்வாளர்கள் சீனாவுடனான நெருக்கம் காரணமாகவே இந்தியா இவ்வாறான அரசியல் காய் நகர்த்தல்களை நகர்த்துவதாகவும் தெரிவிக்கின்றனர். இச் சூழ்நிலையில் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ டைம்ஸ் ஒப் இந்தியா நிருபருக்கு அளித்த பேட்டியில், அயல் நாடுகள் தொடர்பாக இந்தியா தீர்மானங்களை மேற்கொள்ளும் போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டுமென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவையனைத்தையும் ஆராய்ந்து பார்க்ைகயில் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே ஏதோவொரு முறுகல் கிளம்பியிருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அத்தோடு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமச்சர் விமல் வீரவன்ஸவின் பின்னணியில் இயங்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமய போன்றன கருணாநிதிக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் ௭திராக வெளியிட்ட கடுமையான விமர்சனங்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் வாசஸ் தலத்திற்கு முன்பாக இவ்வியக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள். இந்தியாவுடன் நட்புறவை துண்டிக்க வேண்டுமென்ற கருத்துக்கள், இவையனைத்தும் இலங்கை சீனாவுடனான நட்புறவை ஏதோவொரு விதத்தில் இறுக்கமடையச் செய்யப் போகின்றதென்பது மட்டும் உண்மையென ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

http://seithy.com/breifNews.php?newsID=65232&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.