Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல்கலைக்கழக மாணவர்களைக் கண்காணிக்க புலனாய்வுப் பிரிவு: ஐ.தே.க தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக மாணவர்களை கண்காணிப்பதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை அரசாங்கம் பல்கலைக்கழகங்களுக்குள் அனுப்பி வைத்துள்ளதாக ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் குற்றம் சாட்டினார்.

இஸட் புள்ளிகள் பிரச்சினையில் நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அகிலவிராஜ் ௭ம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசாங்கம் இன்று கல்வித்துறையையும் இராணுவ மயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இராணுவத்திலுள்ள 18, 25 வயதிற்கிடைப்பட்ட பெண்கள், ஆண்களென 80 பேரைத் தெரிவுசெய்து அவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் உளவு பார்ப்பதற்காக பத்தரமுல்லையிலுள்ள படை முகாமில் பயிற்சியளிக்கப்படுகின்றது.

இவ்வாறு பயிற்சியளிக்கப்படுபவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் மாணவர்களைப் போன்று அனுப்பி வைக்கப்படுகின்றனர். மாணவர் சங்கங்களின் தலைவர்களைக் காதலிக்குமாறும் தகவல்களை பெறுமாறும் பெண் படையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதோர் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்த போது இராணுவத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்ட பின்னர் இத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இவ்வாறு பயிற்சியளிக்கப்பட்ட 80 படையினர் வீதம் மாணவர்களைப் போன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இஸட் புள்ளிகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் நியாயம் கிடைத்திருக்கும் ௭ன்றும் அகிலவிராஜ் காரியவசம் ௭ம்.பி. தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=196

மாணவர்களை கண்காணிக்க - புலனாய்வு

முன்னாள் போராளிகளை கண்காணிக்க - புலனாய்வு

புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கையை கவனிக்க - புலனாய்வு

கூட்டமைப்பு ஆதரவாளர்களை கண்காணிக்க - புலனாய்வு

பொன்சேகாவின் ஆட்களை கவனிக்க - புலனாய்வு

......................

புலனாய்வு - இலங்கையில் இராணுவத்திற்கு அடுத்த பெரிய வேலைவாய்ப்பு நிறுவனம்!

இராணுவத்தை மட்டுமல்ல புலனாய்வையே புலனாய்கிறது இலங்கையின் புலனாய்வு.

மகிந்தாவையே கண்காணித்து அழகிகளுடன் இந்த புலானாய்வு படமெடுக்கிறது.(கோபத்தபையா அண்மையில் மகிந்தாவுக்கு போட்டு காட்டியதாக கூறப்படும் வீடியோ)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.