Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் கொடூரம்! தமிழகம், தஞ்சாவூரில் உருவாகிறது ஈகியர் முற்றம்

Featured Replies

309189_272549126182340_2100398868_n.jpg

405220_272552569515329_1469962829_n.jpg

400505_272552799515306_1083824950_n.jpg

580799_272552922848627_1168178463_n.jpg

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுச் சின்னமாய் உண்மையை உலகிற்கு பறைசாற்ற சிற்பிகளின் ஒப்பற்ற படைப்பில் பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தலைமையில் உருவாகிறது ஈகியர் முற்றம்.

தமிழர்களை அழித்து தமிழர் வாழ்விடங்களை தம்வசப்படுத்தி எக்காளமிடும் சிங்களப் பேரினவாதம் ஈழமண்ணில் தமிழர்களின் அடையாளத்தை அகற்றி தவறான வரலாற்றை சித்தரிக்க முனையும் இவ்வேளையில், உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும் நீண்ட கால தமிழீழ ஆதரவாளரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உயர்ந்த அர்ப்பணிப்புக்களினூடாகவும் தியாகங்களினூடாகவும் முன்னெடுத்துவந்த விடுதலைப் புலிகளுக்கு பல உதவிகளை நல்கி வந்தவருமான பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தான் வாழும் தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் அவலம் தோய்ந்த வாழ்வை அழியாத் தடமாய் ஒரு வரலாற்றுப் படைப்பாய் உருவாக்கி வருகிறார்.

தமிழகத்தின் தஞ்சாவூரில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுவரும் இவ் ஈகியர் முற்றத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவின் கொடூரங்கள் மட்டுமன்றி அக் கொடிய போரில் இருந்து ஈழத் தமிழர்களைக் காக்கக் கோரி தம்மையே தீயிற்கு இரையாக்கிய தியாகிகளின் சிற்பங்களும் வடிக்கப்பட்டுள்ளது.

கல்லிலே கலைவண்ணம் கண்ட தமிழன் இன்று அதே கல்லினூடாக உலகிற்கு தமிழர்களின் புதிய செய்தியை சொல்லுகின்றான். உலகின் மாபெரும் அதிசயமாக அருங்காட்சியகமாக வரலாற்றுப் பொக்கிசமாக விளங்கப் போகும் இவ் ஈகியர் முற்றம் மிகவும் திறமை வாய்ந்த சிற்பிகளால் உருவாக்கம் பெற்று வருகிறது.

இதனை உருவாக்கும் பழ.நெடுமாறன் ஐயா அவர்களுக்கும், சிற்பிகளுக்கும் என்றும் உலகத் தமிழினம் தலைவணங்கி நன்றி சொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு நடவடிக்கை.. வருங்காலம் வரலாற்றை மறக்காதிருக்க உதவட்டும்..!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு தமிழன்.. இனசிக்கல் என்று வந்தால் என்ன செய்வான்...

ஓட்டு போடுவான்..

சாலை மறியல் செய்வான்..

சிறைக்கு போவான்..

களிதின்னுவான்..

ரொம்ப ஓவரா போச்சுன்னா .. ஏதாவது லெட்டர் எழுதி வச்சிட்டு தீக்குளிப்பான்..

Hansika-Motwani-Cleavage11.jpg

இந்த மாறி கோயில் கட்டுவான்.. (அவன் ஹன்சிகாவுக்கும் கோயில் கட்டுறான்)

ஏதாவது சிலோன் புரோடக்ட் என்று தெரிந்தால் அடித்து உடைப்பான்...

அதும் அந்த அந்த ரைமிங்க் பொறுத்து..

டிஸ்கி:

ஏதோ இதெல்லாம் செய்வதற்கு...ஏதோ ரத்த சொந்தம் என்று குரல் கொடுக்க இருக்கு என்று சந்தோச படுங்க..

மற்றபடி வெளிநாடுகளை போகஸ் பண்ணுங்க.... :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.