Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் ஈழக் கனவோடுதான் இன்னும் வாழ்கின்றார்கள்; விக்ரமபாகு கருணாரத்ண தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் ஈழக் கனவோடுதான் இன்னும் வாழ்கின்றார்கள்; விக்ரமபாகு கருணாரத்ண தெரிவிப்பு

தமிழ் ஈழம் அழியவில்லை. அது அங்கேதான் உள்ளது. அது தற்போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது எனவும் இப்போதும் தமிழ் மக்கள் தமிழ் ஈழக் கனவோடுதான் இன்னமும் வாழ்கின்றனர் என புதிய இடதுசாரி முன்னணியின்

தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ட தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கான சுய உரிமையோடு ஒன்றி வாழலாம் என்றுதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் விருப்பப்பட்டார். ஆனால், சிங்கள இன வெறியர்கள் அதனை ஏற்கவில்லை. வருங்காலங்களில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் இணைந்து வாழலாம் என்று தமிழ் மக்கள் எண்ணினால் வாழலாம்.

இல்லாவிட்டால், அவர்களுக்கான சுய உரிமை கொண்ட தேசத்தை உருவாக்கிக் கொள்ளலாம். தமிழ் மக்களுக்கான விடுதலையில் ஐ.நா-வால் எதுவும் செய்ய முடியாது.

ஆனால் இந்தியாவும்,அமெரிக்காவும் நினைத்தால், தமிழ் மக்களுக்கான தீர்வை உடனே கொண்டு வரலாம். என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரபாகரன் சிறந்த போராளி, மாவீரன். ஆனால், அவர் ஓர் நல்ல அரசியல்வாதி அல்ல. அவர் தன் மண் மீதும் மக்கள் மீதும் பாசம்கொண்டவர். ராஜபக்‌ச இன வெறியர். அவர் ஒருபோதும் தமிழ் மக்களுக்கான தீர்வை ஏற்படுத்தும் நன்மை செய்ய மாட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் சஞ்சிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்

நன்றி - பதிவு இணையம்

http://www.pathivu.com/news/21712/57/.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

[size=4]

ஆனால் இந்தியாவும்,அமெரிக்காவும் நினைத்தால், தமிழ் மக்களுக்கான தீர்வை உடனே கொண்டு வரலாம். என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
[/size]

[size=4]கருணாரத்தின சொல்வதில் உண்மை உள்ளது. எனவே, நாம் இந்த இரண்டு நாடுகள் ஊடாக தொடர்ச்சியாக பரப்புரைகளை, அழுத்தங்களை மேற்கொள்ளல் வேண்டும். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.